Monday, 11 November 2013

கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன்

நம்பிக்கை = குருடு - ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் பலவாறு திரட்டப்பட்டவை. விக்கிப்பீடியா இணையதளமுவம் உதவியுள்ளது. மேலும் டி.டி.கோசாம்பி அவர்களின் இந்திய வரலாறு ஓர் அறிமுகம் தமிழ் நூலில் உள்ள தகவல்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் கவுதமிபுத்ர சதகர்னி என்பவனே பலபெயர்களில்; புஸ்யமித்திரன், அசோகன், வஜ்ரகரன், இந்திரன், அலெக்சான்டனின் மகன் மகததேசன்- மாதேசன்- மாதேவன்- மஹாதேவன்- மாடோபா- மாடப்பன்- முசிக- முகடி- முக்கண்டி- முகரி- முக்கண்ணன், அரசன் முசுகுந்தன், பரசுராமன், மாறீசன், மாபாரதத்தின் கவுரவர் தலைவன் துர்யோதனன், என மேலும் பல பெயர்களில் இடம்பெற்றவன். பழந்தமிழ்ச் சங்கப்பாடல்களில் மேலும் பல பெயர்களில் இடம்பெற்றுள்ளான். இவனது மகனே செங்குட்டுவன். செங்குட்டுவனது பெயர்களும் பலவாறு இடம்பெற்றுள்ளது. கரவேலனின் கல்வெட்டுக்களில் குடபஸ்ரீ -குட்திசையான மேற்கே அமைந்துள்ள குடகு- அன்றைய சேரநாட்டுப் பகுதியைத் தனது தாய்வழி உரிமையாகப் பெற்றவன். அவனது தாயே கரவேலனின் தந்தையான சந்திரகுப்தனின் தங்கையான பிரிதாவின் மகள். பிரிதா ரிக்வேத்த்தில் குறிப்பிடப்படுகிறாள். பிரிதாவை மணந்தவனே சேதி குலத்தின் சேத்சென்னி எனத் தொல்தமிழ்ச் சங்கப்பாடல்களில் இடம்பெற்றவன். சேத்சென்னியே கரிகால்சோழனின் தந்தை என்பதும் குறிப்பிடத் தக்கது. அசோகன் எனப்பட்ட செங்குட்டுவனின் தந்தையான மேலே குறிப்பிடப்பட்டவனே கரவேலனால் வெல்லப்பட்டவன். கரவேலனே புராணங்களில் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவாக வசிட்ட அலெக்சாண்டனால் தண்டிக்கப்பட்டு நாடுகட்த்தப்பட்டவன். அவனுக்கு முன்னர் விசுவா மித்திரனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகடத்தப்பட்டான். இவ்விருக்கும் முன்னதாக சந்திரகுப்தனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகட்த்தப்பட்டு இன்றைய பஞ்சாப் -குருத்வாராவில் வாழ்ந்தவன். பின்னர் சிரமண பெலுகொள என்னும் வெள்ளைக் குன்றில் வாழ்ந்தவன். செங்குட்டுவனின் தந்தையை அடக்கி அவனிடமிருந்து மகத நாட்டின் ஆட்சி யுரிமைக்கான முடியையும் ஆரங்களையும் மதிப்புமிக்க பொன்நகைகளையும் கைப்பற்றிணான். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதமே அலெக்சாண்டனுக்கும் அவனது அடிமைப்படைத்தளபதி செல்யுகஸ்நிகேடார்- செல்யுக்கஸ் நக்கந்தனின் மனைவிக்கும் பிறந்த ஹெலனின் காலமாக்க் கருதப்பட்ட்து. காரணம் இந்த ஹெலன் என்னும் சத்திய வதியையே சந்திரகுப்தனைக் கெடுத்துக் கர்ப்பமுற்றுத் தனது மக்களுக்கு ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் எனத் தனது தந்தை அலெக்சாண்டனின் உதவியுடன் தனது மக்களுக்கு; பிந்துசாரனுக்கும் பிம்பிசாரனுக்குமாக ஆட்சியைக் கைப்பற்றிச் சந்திரகுப்தனையும் அவனது புதல்வர்களான விசுவ ஆமித்திரனையும் கரவேலனையும் நாடுகடத்தக் காரணமானவள். ஹெலனே மாபாரதத்தில் சத்தியவதியாகவும் மச்சகந்தியாகவும் தீஸ்சாவாகவும் கங்காதேவியாகவும் பலவாறு இடம்பெற்றாள். சந்திரகுப்தன் மவுரியன் அல்ல; சூரியச்சோழர் குடியின்ன். அவனுக்கும் ஹெலனுக்கும் பிறந்தோரே மவுரியர் எனப்பட்டனர். ஹெலனது புதல்வர்களே சித்ராங்கதனும் விச்சித்ரவீர்யனும். வரலாற்றில் இடம்பெறும் பிம்பிசாரனே விச்சித்ரவீர்யன். மஹாவீர் எனவும் அமணத்தைக் கைப்பற்றித் தீர்த்தங்கரனானான். .பிம்பிசாரனே அசோகனாகவும் மாற்றப்பட்டான். இந்த அசோகனே சேத் கரவேலனின் கலிங்கத்தையும் வேங்கடமலையையும் தாக்கிச் சந்திரகுப்தனின் படிமத்தைக் கைப்பற்றிச் சென்ற புஸ்யமித்ரனாகவும் காட்டப்படுகிறான். அவனது மகனான செங் குட்டுவனே; ஆஜாதச்சத்ரு, ருத்ரதாமன், பர்வதகன், குடபஸ்ரீ எனவும் இடம்பெற்ற குடதிசையின் குட்டுவன். அந்நியனான வசிட்ட அலெக்சாண்டனுக்குப் பிறந்த மகளான ஹெலன் வழியில் பிறந்ததால் செந்நிறமாக இருந்தான். அதனாலேயே செங்குட்டுவன் எனப்பட்டான். அசோகனின் கல்வெட்டுக்கள் எனக் குறிப்பிடப்படும் செங்குட்டுவனது கட்டளைப்படியும் கரவேலன் மற்றும் கரிகாலன் ஆகியோரின் ஆணைப்படியும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 14ஆவது கல்வெட்டைக் காண்போம். 14th Major Rock Edict This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. Inscription of Dhamma என்பது தருமனான திருமாவளவனே; தருமபுத்திரன் எனச் சங்கப்பாடல்களில் கரிகால் உள்ளான். Command of the beloved of Gods என்பதில் கடவுளராகக் கரவேலன்- கண்ணனும், கரிகாலன்- திருமாவலளவன்- திருமாலும், கடவுளரால் நேசிக்கப்பட்டவன் எனச் செங்குட்டுவனும் இடம்பெற்றனர்; The king Piyathassi என செங்குட்டுவனே அரசன் பியதசி எனவும் குறிக்கப்பட்டுள்ளான் The engraver என்பது கல்வெட்டை வெட்டுவிக்கச் செய்த செங்குட்டுவனின் தந்தையான அசோகனைக் குறிக்கும். ஒடிஸ்சாவில் கரவேலின் கலிங்க புவனேஸ்வரில் உதயகிரிமலை ஹாதுகும்பா - அகத்தியர் குகையில், இரு பகுதிகளைக் கொண்ட பிரமி எழுத்து, பிரகிருத மொழியில் சிதைந்தநிலைக் கல்வெட்டு ஒன்றில் 17 அடிகள் உள்ளன; பிற பகுதிகளிலும் கந்தகிரியிலும் ராணிகும்பாவிலும் உள்ள அனைத்துத் தகவல்களும் கொண்ட கல்வெட்டில் அரசனின் பெயர் [AIRA அல்ல] சிதைக்கப்பட்டு கரவேலா எனக் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். கரவேலனின் பெயரைச் சிதைக்கும் முயற்சி செய்யப்பட்டதைக் காண்கிறோம். கரவேலன் குறித்து அவனது கல்வெட்டுக்களில் பிறருக்காகவும் தனக்காகவும் அந்நியருக்கெதிராகவும் போரிட்டுள்ளான். யாருக்காக மற்றும் என்ன காரணங்களுக்காகப் போரிட்டான்; விரிவான தகவல்கள் இல்லை. சீரான வரலாற்றைப் பிற சான்றுகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இடங்கள் மற்றும் சில மாந்தரின் பெயர்களை அடையாளம் காண்பது எளிதல்ல. (இந்தியநாடு யாருக்கானது?) ப/பாரதவர்சம் என்னும் சொல் முதன்முதலில் இக்கல்வெட்டில்தான் காணப்படுகிறது. கரவேலனின் கல்வெட்டுக்கு எதிர்த்திசையில் 6 மைல் தொலைவில் அசோகனின் கல்வெட்டும் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களும் ஒருவருக் கொருவரை எதிரிகளாகக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாதாபியை வென்ற நரசிம்மவர்மபல்லவனின் கல்வெட்டு ஒன்றில் அகத்தியர் இடம்பெற்றுள்ளார். "வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர்போன்றவன்” என அக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மேலும் சில வரலாற்றுத்தகவல் இடம்பெற்ற பகுதி சிதைக்கப்பட்டு, வாதாபி என்னும் எழுத்துக்களும் நரசிம்மவர்மனின் பெயரும் மட்டுமே தெளிவாக அறியத்தக்கனவாக உள்ளன. கரவேலனால் அவனது 7ஆம் ஆண்டு நடவடிக்கையாக இந்திரனான வஜ்ரகரனுக்கும் கரவேலனின் அத்தை மகளான கரிகால்சோழனின் தங்கைக்கும் பிறந்த குழந்தை செங்குட்டுவனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறான். இந்தச் செங்குட்டுவனே கரவேலனின் உதயகிரியமலையில் அகத்தியர்குகையில் கரவேலன் வாழ்ந்தபோது இராமாயணத்தில் அனுமனாக இந்திரனின் வஜ்ராயுத்த்தால் அடிக்கப்பட்டுத் தாடை எலும்பு உடைந்து அறுபட்ட முகம் மீண்டும் ஒன்றுகூட்டப்பட்டு அறுமுகன் அனுமன் ஸ்கந்தன் கார்த்திகேயன் எனவும் குறிக்கப்பட்டான். செங்குட்டுவனின் பிறப்புக்கு எதிராகச் செயல்பட்டவனே அவனது தந்தை அசோகன் எனப்பட்ட பிம்பிசாரன். கரவேலன்= கண்ணன், கரிகாலன்=திருமால், செங்குட்டுவன்= கார்த்திகேயன் என மூவரும் சேர்ந்தே அசோகனை அடக்கினர். பத்து ஆண்டுகளுக்கு பாரத நாட்டின் பாசரைக் காப்பாளனாக அடங்கிக்கிடந்து பின்னர் இறந்துவிட்டான். இவற்றுக்கான சான்றுகள் பல மொழிகளிலும் வேத இதிகாச புராணங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. சில கல்வெட்டுக்களையும் விளக்கங்களையும் காண்போம். கரவேலனின் கல்வெட்டுக்களில் காணப்படும் எகிப்திய கிரேக்க மற்றும் பிற மொழிச்சொற்களைக் காணும் நாம் உணரும் தகவல்கள்ளையும் சில சொற்களுக்கான விளக்கங்களையும் அறிந்து தெளிவுகாண்பது அவசியமாகிறது: பாடலிபுத்தரம் = மலர்- பூ நகரம்; மலர்கள் நிறந்த நகரம் - KUSUMUDHVAJA என மாபாரதம் குறிப்பிடுகிறது. யோனா - பாலிமொழிச் சொல்; பொருள்: கிரேக்கச்சொல்: YOna - I ONIAN - அயோனியன். அலெக்சாண்ற்றியா - யோனர்களின் நகரம் என மஹாவம்சம் குறிக்கிறது. அவுனர் யவனர் யானர் என்னும் சொற்கள் தொல்தமிழ்ப் பாடல்களிலும் காப்பியங்களிலும் காணப்படுகின்றான. ஹீப்ரு மொழியில் யாவான் - யோவான் என்றேல்லாம் உள்ளன. அரபி, துருக்கி, பெர்சி மொழிகளில் YUNAN - ஊனன் - ஊணன். சீனாவிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது. பௌத்த நூல்களான தீபவம்சம், சசன வம்சம் போன்றவை; மகரகிதன் யோனாவுக்கும்- அலெக்சாண்றியாவுக்கும், கம்போசத்துக்கும் சென்று புத்தநெறிகளைப் போதிக்கச்செய்தான் எனக் குறிப்பிடுகின்றன. மகரம் யாளிமீனைக் குறிக்கும். முந்தர ராட்சசா எனும் பௌத்த நாடகத்தில் யவனர் கம்போசர் சகர் போன்றோர் இமாலயராசா பர்வதகனுடன் சேர்ந்து அலெக்சாண்டனைத் தோற்கடித்ததாகக் காணப்படுகிறது. யவனர், கம்போசர், சகர், பஹ்லவர் போன்றோர் கலியுக மிலேச்ச-MLECCA-ஆட்சியர். மினாண்டன் ஒரு அயோனியன்; மீனுடன் தொரடர்புடைய செல்யுக்கஸ்நகந்தன் எனத் தெரிகிறது. இவனது படையினர் முதல் அலெக்சாண்டனுக்கு உதவியாகப் போரிட்டு; கங்கைநதியைக் கடக்க மறுத்து விலகிவிட்டவர்கள். திரும்பிச்செல்லும் வழியில் பாபிலோனில் முதல் அலெக்சாண்டன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. VIMAKADH PHISES - ஒரேசொல்லாகக் காணப்பட்டுள்ளது; மீனுடன் தொடர்புடைய இரண்டு சொற்களில்; முதற் சொல்லின் முதல் எழுத்து H சிதக்கப்பட்டு V ஆகியிருக்கலாம்; கிழக்கு மேற்காக இமையத்துக்கு அப்பால் மேற்கிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; நீரின்பயன், பயிர்விளைச்சல், உழவுத்தொழிலும் அறியாதோருடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இவர்கள்ளும் இராமாயணம் பாலகாண்டத்தில் இடம்பெற்று; வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரனை எதிர்த்தனர். அலெக்சாண்டனால் மகதம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவனது புதல்வன்; மகத தேசன் - மாதேசன்; மகத அப்பன் - மாடப்பன் - மாடோபா - மாசோபா - மகாதேவன் என்றெல்லாம் பல பெயர்களில் காணப்படுகிறான். மாபாரதம் உத்யோக பருவத்தில் சுதக்சினன் தலைமையில் காம்போச ராசன் செயல்பட்டான். அலெக்சாண்டனின் பெயர் பலவாறு இடம்பெற்றுள்ளது; சதகர்னியரைச் சதவாகனர் எனவும் குறிப்பிடலாம்; சதம் = 100; நூற்றுவர் கன்னர், ஈரைம்பதின்மர், ஐ இருபதின்மர் என்றெல்லாம் தொல்தமிழ்ப் பாடல்களில் உள்ளனர். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதம் அலெக்சாண்டனின் மகள் ஹெலனின் காலத்ததாகக் குறிக்கப்பட்டது. கரவேலனின் மகதமும் பிறவும்; சதகர்னி மற்றும் இரண்டாம் சதகர்னி- புலுமாயி கூட்டத்தால் கைப்பற்றப்பட்டன. கரவேலனின் ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிநோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது. 1. கலிங்கநாட்டுக்குச் சென்றான்; 2. சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படைகொண்டு தாக்கினான்; 3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று 'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது. 4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன; 5. ராடச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்; 6. நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன; 7. பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப்பட்டன; கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது. 8. மகதத்தின் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் நந்தனும் சதகர்னியரும் கைப்பற்றிச் சென்ற தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சிசெய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்; 9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்; 10. வட இந்தியப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்; 11. தமிழ்மன்னர்களை வென்று கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்; 12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன; 13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI உள்ளான். தொல்தமிழ்ப் பாடல்களில் இடம்பெறும் படிமமான குதிரை; படைத்தலைவன் -சேனா அதிபதியையே குறிக்கும்; இதனைத் தொல்காப்பிய இலக்கணமும் உறுதிசெய்துள்ளது. அச்சடங்கில் அனைத்துப்படைகளும் போரின் தலைமைப் பதவியும் குதிரை எனக் குறிக்கப்படும் சேனாபதியிடமே ஒப்படைக்கப்படும். ரிக்வேதம்: 3.53.11: சுதாசனின் குதிரையான குஷிகாசை அணுகுங்கள்; அவனைச் செயல்படத்தூண்டுங்கள்; ராஜாவுக்காகச் செல்வங்களைப் பெற்றுத் தரவும், வெற்றிபெறவும் அதனை அவிழ்த்து விடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னான அவன் கிழக்கு, மேற்கு, வடக்கிலும் விருத்திரனைத் துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபடவும் செயல் படவும் சூதாசனை அனுமதியுங்கள்" எனக் குறிப்பிடுகிறது. கரிகால்சோழன் -சுதாசனின் சேனாதிபதியான குஷிகாஸ் -செங்குட்டுவன்- சேனாபதியாக- குதிரையாக; மகதம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் வென்றபின் அசுவமேத யாகம் நட்த்தப்பட்டதை ரிக்வேதம் தெளிவாக்குகிறது. படிமங்களை உடைத்துத்தான் சரியான பொருளையும் விளக்கங்களையும் காணவேண்டும்; விருத்திரனால் வெல்லப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மாபாரதப்போரில் வென்றெடுக்கப்பட்டதையும் போர் நடந்த பகுதி தெற்கல்ல; போருக்குப் பின்னரும் தெற்குப்பகுதி இடம்பெறவில்லை என்பதையும் உணரவேண்டும். மஹாவகம் 10.2; ஜாதகம் -428: பனாரஸ் மன்னன் பிரமதத்தன் கோசலத்தில் கொஞ்சம்வெற்றிபெற்றுக் கோசல ராசா தீகீயை, ராணியுடன் தீர்த்துவிட்டான், தப்பியோடிய கோசல இளவரசன் தீகாவு மூன்றுவேதங்களிலும் தேர்ச்சிபெற தட்ச சீலத்துக்கு ஓடி; இழந்த ராச்சியத்தை மீட்டான்; ஜாதகம்- 371: ஒருவேளை பிரமதத்தனின் மருமகன் என்ற முறையில் காசியை இணைத்துக்கொண்டான் .கோசல இளவல் சாத்தன் பற்றியும் இக்கதை கூறுகிறது .தந்தை தோற்கடிக்கப் பட்டபின் சாத்தன் பிரமதத்தனிடமிருந்து கோசலத்தை மீட்டான் .வெல்லமுடியாதபடி சாவதத்துக்கு அரண் செய்தான். அசோகனால் வெட்டுவிக்கப்பட்ட கிர்னார் கல்வெட்டுபோன்ற அதேபாறைகளில் மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாக்கம் உண்டாக்கும் மாறுபாட்டுடன்; ருத்ரதாமனின் சம்ஸ்கிருதப் பொறிப்புக்கள் உள்ளன. பொறிப்பின் ஏழாம்பகுதி அழிக்கப்பட்டோ அழிந்தோ இருக்கிறது. அதில் சந்திரகுப்தனின் ஆளுநரான வைஷியன் புஷ்யகுப்தனால் கட்டப்பட்டு அசோக மவுரியன் கீழ் யவன - பாரசீக மன்னன் துசாபனால் ஒரு கால்வாய் அமைப்புடன் இருந்த அணை தகர்க்கப்பட்டு இரண்டுமடங்கு அளவில் மறுபடியும் ருத்ரதாமனின் சொந்தச்செலவில் பிற எவருடைய, பவுர ஜனபத குடிகளிடமிருந்து பொருளும் பங்களிப்பும் உழைப்பும் பெறப்படாமல் கட்டப்பட்ட சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கொல்வதை நிறுத்தியதையும், அவந்திமுதல் சிந்து -அபராந்தாவரை ஏராளமான மாகானங்களையும் அத்துடன் பழங்குடிக் காட்டு வாசி -நிசதரையும், தாக்கியதையும் வெற்றிகொண்டதையும், தீரமிக்க யுதேயர்களைப் பூண்டோடு அழித்ததையும், அவர்களோடு மண உறவுகொண்டுள்ளதால் விட்டுவைக்கப்பட்ட யுதேயரின் தலைவன் சதகர்ணியை இருமுறை தோற்கடித்ததையும் பெருமையோடு குறிப்பிடுகிறான் ருத்ரதாமன். மேலும் உரைநடையாயினும் கவிதை யாயினும் எல்லா இலக்கியப் பாங்குகளிலும், வெளிப்படுத்துவதிலும் சம்ஸ்கிருத்த்திலும்; தனக்குள்ள ஆளுமையைக் குறிப்பிடுகிறான். தங்கம் வெள்ளி நகைகள் என தனது பொக்கிசங்களையும் கூறிக்கொள்கிறான். பெஸ்நகரில் உள்ள தூணை நிறுவிய ஹெலியடோரியஸின் கிருஷ்ண -வசுதேவ பாகவத வழிபாடு இதனை உறுதிப்படுத்துகிறது. பின்னாளில் பாரசீகமும் பிறகு ஆங்கிலமும் இந்திய நகரங்களிலும் சபைகளிலும் சம்ஸ்கிருதத்தின் இடத்தைப் பிடித்ததும் இதே நோக்கத்தில்தான். சதவாகனராகக் கருதப்படும் ஹாலா என்பவரால் எழுதப்பட்டவற்றுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்ட 700 அடிகள் கொண்ட நேர்த்தியான கவிதை; பத்திகளிடையே தொடர்புபடுத்தும் கண்ணி இல்லாமலேயே சாமானிய மக்களைப் பற்றியும் நாட்டுப்புறக் காட்சிகளையும் பேசுகிறது; காமச்சுவையுடனும் உள்ளது. குணாத்தியரின் பிருஹத் கதாவும் அதே அரசவைக்காக பைசாசி என்ற ஒரு பாமர மொழியில் எழுதப்பட்டதும் நம்பத்தக்கதே. இதில் மீதமுள்ளதெல்லாம் சோமதேவரின் கதா சரித் சாகரம், க்ஷேமேந்திரனின் பிருஹத் கதா மஞ்சரி போன்ற சம்ஸ்கிருதத் தழுவல்களிலேயே உள்ளன; இவர்களிருவருமே காஷ்மீரிகள். புத்தகாலக் கோவையான மஹாவம்சோ; இலங்கையில் தற்காலம்வரை திரும்பத்திரும்ப ]மாற்றி [ எழுதப்பட்டது. அதன் இடையில் 60 ஆண்டுகள் எவ்வித விளக்கமுமின்றி விடப்பட்டுள்ளது. இரட்டைக் கதைகள் -நீதிக்கதைகள்- பழங்கதைத் தொகுப்பான ஜாதகக் கதைகளில் ஒவ்வொரு கதையும் ஒரு நடப்பு நிகழ்வைக் கொண்டு புத்தரால் கூறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் புத்தரின் கால சமூக உறவுகளின் சித்திரத்தை நேரடியாகக் காட்டப் பயன் படுத்த முடியாது; சதவாகன காலத்தில் இவை எழுத்தில் வடிக்கப் பட்டன; மறைந்துபோன இலங்கை வடிவங்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தன. அதன் உதவியுடனே தற்போதைய பாடமாகப் பாலியில் ஆக்கப்பட்டன. மஜ்ஜிம நிகாயம் 93ல் அஸ்ஸல்லாயனனிடம் புத்தர் கூறியது :'யோனா கம்போஜா மற்றும் எல்லைகளில் ஆரியா, தாசா என இருசாதிகள் மட்டுமே உள்ளதாக அறிந்திருக்கிரீர்; ஆரியர் தாசராகலாம், தாசர் ஆரியராகலாம்' என்பதாக. ஆப்கானிஸ்த்தானில் யோனா -அயோனியா என்ற பெயர் இருப்பதால்; பாரசிகப் பேரரசை அலெக்சாந்தர் வெற்றி கொண்டதற்கு முன் புத்தனின் மேற்கண்ட சொற்கள் வெளிப்பட்டிருக்க முடியாது. ரிக்வேதப்படி ஒரு ஆரியன் தாசனாக முடியாது; கிரேக்க அடிமைமுறையே வெளிப்படையாகக் குறிப்பிடப்படுகிறது .அமணர் சாதிகளை ஒத்துக்கொண்டார்கள்; மூல சாதிகள் நான்கின் கலப்பையும் ஏற்றார்கள் . வளர்கருக்கள் பரிமாற்றம் என்ற கருத்தால் மஹாவீரரும் பிராமணப் பின்னணிகொண்டவர் என ஏற்றிக்கூறும் முயற்சியும் நடந்தது. ஸ்ரீ கந்த மஹாபுராணத்தில் முசுகுந்தன்; தக்ஷனான சேத்சென்னியின் மகளைப் பிராமணவேடமிட்டுக் கெடுத்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதாக்ச் சம்மதித்துவிட்டு; பாணிக்கிரகனத்தின் போது வராமல் எமாற்றி ஒடிவிட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ கந்த மகா புராணம்: முதற் பாகம்; தச்ச காண்டம் 7ல்: “முசுகுந்தன், தக்கனின் பெண்ணைத் தூக்கிச் சென்று விட்டான்." இதனை அறிந்த தக்கன்: "திருட்டுத்தனமாக எனதுபெண்ணைக் கவர்ந்து கொண்டான்; தாய் தந்தை அனுமதியின்றி எவன்தான் பெண்ணைக் கவர்ந்து செல்வான்? இப்பாப காரியத்தைச்செய்து அவமானத்தையும் அபகீர்த்தி யையும் தேடிக்கொண்டான்." என நொந்து புலம்புகிறான். [பழந்தமிழ்ச் சங்கப்படல்களில் புலவர் பரணரும் புலவர்களும் சமாதானம் மேற்கொண்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்]: "பெண்ணை மணமுடிக்க, பாணிக் கிரகணம் செய்யும் வேளையில் ஓடிவிட்டான்; போக்கிரிகளின் தலைவனான கூத்தாடி, பாதிக்கல்யாணத்தில் அபகீர்த்தி உண்டாக்கினான்; அவரவரது இழி குணம் எவரையும் விடுவதில்லை; தாய் தந்தயரை அறியாத, மிகவும் அசுத்தமான பிறவி, வஞ்சகன்; அவனாகவே எனது பெண்ணை, பிராமண வேடமிட்டுக் காதலிப்பதுபோல் நடித்துக் கெடுத்தான்; நானும் அவனுக்கே பெண்கொடுக்க முன்வந்தேன்" எனப்புலம்புகிறான். தொல்காப்பியர் = இறையனார் நச்சினார்க்கினியர் கொடுக்கும் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியரையும் அகத்தியரையும் சுருக்கமாகக் காண்போம்: "தேவரெல்லாருங்கூடித் தாம்சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது, 'இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர்; 'கங்கையார் உழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர்மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு புலத்தியனாருழைச்சென்று அவருடன்பிறந்த குமரியார் உலோப முத்திரையாரை அவர்கொடுப்ப நீர் ஏற்று இரீயிப்பெயர்ந்து; துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்பதினெண்மரையும், பதின் எண்(குடி) கோடி வேளிருள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டுபோந்து; காடு கெடுத்து நாடாக்கி பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து, இராக்க தரை ஆண்டு, இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினி யாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக்கூற அவரும் 'எம் பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகலநின்று (பாதுகாப்புடன்) கொண்டு வருக' என; அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி; வைகைநீர்கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோகத் தொல் காப்பியனார் கட்டளையிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்துநீட்ட, அதுபற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார், குமரியாரையும் தொல்காப்பியனாரையும் 'சுவர்க்கம் புகாப் பீர்' எனச்சபித்தார். 'யாங்கள் ஒருகுற்றமும் செய்யாதிருக்க; சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல் காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." இதில் இடம்பெறுவோரெல்லாம் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை முதலில் உணர்ந்தாக வேண்டும். தேவர்= தமிழர் அல்லாத [அலெக்சாந்தன், செல்யுக்கஸ்நக்கந்தன் போன்றோரின் வழி] அந்நியர், அந்நியராற்பிறந்தோர் சேர்தல்= செல்குடி நிறுத்தல்; இந்தியாவிலேயே நிலைத்து வாழச்செய்தல்; சேர்ந்த இடம் உத்தரமேரூர்.. .. மேரு= உத்தரமேரூர் எனப்பட்ட உத்தமேரு.. .. தென்திசை= உத்தமேரூருக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் உள்ளோர் தேவர் முதலானோருடன் சேர்வதைக் கடுமையாக எதிர்த்தனர்; காரணம் தேவர்கள் கயவர்களாக, தெந்திசியின் சோழநாட்டுப் பெண்களை மதியாது நடந்து கொண்டதே. பெண்களை எப்படிப்பட்டோராக நடத்தினர் என்பதை இறையனார் களவியல் நூலின் பாயிரத்தில் காண்க.. .. அகத்தியனார்= விசுவாமித்திரர், கரவேல், கரிகால் என மூன்று அகத்தியர்கள் உள்ளனர். மூவரும் மட்டுமல்லாமல் அவர்களது மக்களும் நாடுகளும் தேவர்களால் கடுமையாகப் பாதிப்படைந்த போதிலும் தேவருடன் பரிவு காட்டினர்.. .. கங்கையார்= செங்குட்டுவனின் தந்தை; கங்கைப் பகுதி, நீரையும்; காவிரிப் பகுதி, நல்லியற்பாவையையும் கவர்ந்தவர் காவிரியார்= செங்குட்டுவனின் தாயும் கரிகாலின் தங்கையுமான நல்லியற்பாவை; காவிரிநாட்டுக்குரிய பெண்.. .. யமதக்கினியார்= செங்குட்டுவனின் தந்தையின் தந்தை; பரசுராமனின் தந்தை; அந்நியன் அலெக்சாந்தன் வசிட்டன்.. . யமதக்கினி மகன் திரணதூமாக்கினி= பரசுராமன் அக்னி இந்திரன் சினத்தால் அழிப்புவேலைகளில் ஈடுபட்டவன்.. .. . புலத்தியனார்= விதுரன் செழியன் இராவணன் பாண்டியன் அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரை= விதுரனின் சகோதரி; கரவேல அகத்தியனால் கைப்பற்றப்பட்ட பெண்.. துவராபதி= பஞ்சாபின் குருத்துவாரா அல்லது வேங்கடத் திருப்பதி நிலங்கடந்த நெடிமுடியண்ணல்= வசிட்ட யமதக்கினியால் நாடுகடத்தப்பட்ட கரவேல் அகத்தியன் கிருஷ்ணன்.. .. அரசர் பதினெண்மர்= பதினெண் வேளிர்குடியினரின் தலைவர்கள் சிற்றரசர்கள் படைமுதலிகள் பதினெண்குடி வேளிர்= பதினெண் சிற்றரசர்களான படைமுதலின் படைவீரர்களும் குடிமக்களும் அருவாளர்= அறிவாளராக இருந்து அகத்திய விசுவாமித்திரர் சாபத்தால் அருவாளர் கோசர் கொலைகாரராக மாறியோர்.. காடுகெடுத்து நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கிப் பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கியோர்= நின்றுபோன அந்நியநாட்டு வணிகத்தை ஊக்கிவிட்டு அந்நிய நாடுகளையும் சொர்கமாக்க அகத்திய கரவேல் கிருஷ்ணன் உதவியால் அகத்திய கரிகால் மேற்கொண்ட நடவடிக்கைகள்.. . இராவணன்= விதுரன் நகுஷன் செழியன் பாண்டியன் இராக்கதர்= செல்யுக்கஸ்நக்கந்தனின் கூட்டத்தர்; அலெக்சாந்த யமதக்கினியின் அடிமைப்படை; கடற்கொள்ளையர்.. . திரணதூமாக்கினியான தொல்காப்பியர்= அகத்தியர்களில் ஐந்திரத்தைச் சிதைத்துத் தொல்காப்பியமாக்கி அதனையும் சிதைத்து இறையனார் களவியலாக மாற்றியவர்; யமதக்கியின் மகன்; பரசுராமன்; செங்குட்டுவனின் தந்தை .. .. வைகைநீர்= பாண்டிய செழியனின் படைவீரர்கள் இராக்கதர்கள்.. .. எதிர்கோல்= வேளிர்படையின் சிறு பிரிவு சொர்க்கம்= மகதம் மற்றும் அந்நியநாடுகளும் திரிசங்குசொர்க்கமான வேங்கடத்திருப்பதியுமாம்.. .. அதங்கோட்டாசிரியர்= அவலோகி சந்திரகுப்தன் அல்லது விசுவாமித்திரர் தொல்காப்பியன் செய்தநூல்= சிதைக்கப்பட்ட தொல்காப்பியம் மற்றும் இறையனார் களவியல்.

No comments:

Post a Comment