Thursday, 21 November 2013

தமிழரும் இசுலாமியரும்

தமிழரும் இசுலாமியரும் உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல் வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66: "நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உறவோன் மருக ! களி இயல் யனைக் கரிகால் வளவ ! ..."என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் அரேபியருடனும் கடல்வழி வணிகமையமாக இருந்தது. இதனை முல்லைப்பாட்டு: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. ." என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத்தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டுமுறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம். முல்லைபாட்டு: "வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர் நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்; நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட; நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்; அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு; துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப் பெருமூ தா ளர் ஏமம் சூழ; பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்; தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப; மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்; புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல் திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண் எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. ." என அரேபியரின் படையைப் பெற சூரியகுல வேந்தன் அரேபியா சென்றதையும்; அவனது மனைவி தனது இல்லத்தில் அவனை நினைந்து வாடுவதையும் மிக அழகாக எடுத்துரைப்பதே முல்லைப்பாட்டு. நெடுநல்வாடை: ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் படலைக் கண்ணி பருஏர்எறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர" என இரவில் பனிபெய்யும் நாளில் மதுரையைக் காத்த அரேபியக் காவலரைக் காட்டுகிறது நெடுநல்வாடை. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். பழந்தமிழ்ப் பாட்டுக்களில் பத்துப்பட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு: திறையரான சோழநாட்டினர் கரிகாலின் தலைமையில்: ".. .'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவணர் புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்.. .." என அக்காலப் பள்ளிகளில் வகுப்புத் தொடங்குமுன் பாடும் மரபைக் குறிப்பிட்டு கிரேக்க ரோம யவணர்க்கும் கல்வி பயிற்றுவித்ததைக் குறிப்பிடுகிறது; பிறதகவலுடன் முழுப்பாடல் இல்லை. மத்திகை- குதிரை ஓட்டும் சம்மட்டி என முல்.பா- 59ம்; சுருங்கை- சுரங்கவழி என பரி.பா 20/104, சிலம்பு 14/65; கலம்- மரவீடு- படகுவீடு என அகம்149, புறம் 56; கன்னல்- காலத்தை அளக்கும் கருவி- Time glass- நீராலானது; காழகம்- பர்மா, தாரங்கள்- பண்டங்கள்; கள்- தோப்பி- பிழிநறவு, மகிழ், மட்டு, மது, தேறல்; மருங்கம்- ஊணூர் மது.கா; சாலியூர்- நெல்லூர்: யுடாலமி- ஸலௌர், கொற்கை- kolklus, துளுநாடு- மங்களூர்; கடம்பறுத்தல்- கடலில் கொள்ளையிடும் கூட்டத்தை அடக்குதல். அரேபியப் பாதுகாவலர்கள் வணிகப்பெருவழிகளில் பாதுகாப்புக் கொடுத்ததை; பெரும்பாணாற்றுப்படை- 61முதல்: முடலை யாக்கை முதுவலி மாக்கள் சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப சில்பத உணவின் கொள்ளை சாற்றி பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுனர்க்கு ஏமம் ஆக .. . அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின் விரவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள் வரையூர் பாம்பின் பூண்டுபுடை தூங்க சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை கருவில் ஓச்சிய கண்ணகன் எருழ்த்தோள் கடமோமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் .. . உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் .. ." எனக் குறிப்பிடுகிறது. அரேபியப்பெண்களும் நமது பெண்களுக்கும் பெண்களின் பாதுகாப்பு மையங்களில், கோயில்களிலும் பாட்டிசைப்பதையும் பாதுகாப்பளிப்பதையும் நெடுநல்வாடை: " .. .களிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து ஐயகல் நிறைநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணி பல்வேறு பள்ளிதொரும் பாய்இருள் நீங்க பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்.. ." எனக் குறிப்பிடுகிறது. இந்த யவனரை சோனகர் என அரேபியராகக் கொண்டு நச்சினார்க்கினியரும் உரைசெய்துள்ளார். பழந்தமிழ்ப் பாடல்களில் நந்தர்கள் வடகிழக்கில் பாடலியைக் கைப்பற்றி வாழ்ந்ததைக் குறிப்பிட்டு, நீர்வழிகளையும் தெற்கே செல்ல விடாமல் தடுத்ததாக உள்ளன. எகிப்திய கிரேக்க ரோமனிய நந்தர்; அலெக்சாந்தர்கள் எத்தனைபேர் இங்கு வந்தனர் என்பது தெளிவாக இல்லை; மூவர் அல்லது இருவர் எனத் தெரிகிறது. அவர்களுடன் கடற்கொள்ளையரான செல்யுக்கஸ்நகந்த கூட்டத்தாரும் பெருமளவில் வந்துள்ளனர். உலகம் முழுதும் பற்பல மொழிபேசும் மக்கள் தமிழருடன் வங்கம், மகதம் முதல் கலந்தினிது வாழ்ந்ததாகப் பட்டினப்பாலைப் பாடல் குறிப்பிடுகிறது. உலகில் எந்த மிழியிலாவது தொன்மையான வரலாற்றில் இத்தகைய தகவல்களைக் காணமுடியுமா? பிற நாட்டினரின் வரலாற்றுநூல்களிலோ சம்ஸ்கிருதத்திலோ தமிழர் மற்றும் தமிழ் மொழி குறித்தோ தமிழர் குறித்தோ தகவல்கள் உள்ளனாவா. தமிழனின் மேன்மையையும் பிற இன மொழி கலாச்சாரம் கொண்ட மக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக எங்கேனும் காணமுடியுமா? இந்த உலக மக்கள் யாவரும் தமிழனுக்கும் தமிழுக்கும் கடன்பட்டவர்கள் என்னும் உணர்வு ஏன் எவருக்கும் இல்லாமல் போனது. சிந்தியுங்கள்!?!

No comments:

Post a Comment