Thursday 24 October 2013

நம்பிக்கை=குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன்

கரிகால்சோழன் கரிகால்சோழன் இலங்கையின் வங்கநாஸிகனுடன் போரிட்டு வென்று பன்னீராயிரம் சிங்களரைக் கொண்டுசென்று காவிரிக்குக் கரையெடுத்தான் என இலங்கை வரலாறு கூறுகிறது. ஒட்டக்கூத்தர் கரிகால்சோழனைப் "பொன்னிக் கரைகண்ட பூபதி" என விக்கிரமசோழன் உலாவில் குறிப்பிடுகிறார். இன்றைய ஆந்திரத்தின் வடக்கே இருந்த ரேநாட்டுச்சோழனான புண்ணிய குமாரனுடைய மேல்பாடு செப்பேடுகளிலும் கங்கைகொண்ட சோழனின் திருவாலங் காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசரேந்திரசோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்தகவல் இடம்பெற்றுள்ளது. கரையெடுத்த காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா: "தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்ககரி காலவேந் தனுந்தான் - பக்கம் அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான் மலைக்கும் புயத்தானும் வந்து" என; கலியாண்டு 3090ல் கரிகால்சோழன் கரையெடுத்ததாகக் குறிப்பிடுகிறது. கபிலர் என்னும் புலவர் இயற்றியதாக் கருத்தப்படும் நமது தொன்மையையும் சிறப்பையும் குறிப்பிடும் புறநாநூறு- 201 : ".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போர் அண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையின் பாண்கட ணாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் ... பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடலருங் குரைய நாடுகிழ வோயே" என; கபிலன்வாழ்ந்த காலத்தில் 49 வழிமுறை முடிந்து 50ஆவது தமிழனான வடபால்முனி அகத்தியன் கரவேலனின் 'தடவினுள்' (இருங்)கோ வேள் அரசனைக் காண்கிறான். கரவேலனே அகத்தியன் என்பதை அன்றை புவனத்தின் தலைநகரான புவனம் (இன்றைய புவனேஸ்வர்) அருகில் கரவேலனது உதகிரிமலையில் உள்ள அகத்தியர் குகைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. வழிமுறை என்பது நமது ஆண்டுக்கணக்கீட்டு வட்டத்தில் 60 ஆண்டுகளைக் குறிக்கும். இப்போது கலியாண்டு 5114 நடக்கின்றது. இதில் 3090 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது 2024. எனவே கலி ஆண்டுக்கணக்கீட்டின்படி 2024 ஆண்டுகற்கு முன்னர் கரிகால்சோழனால் காவிரிக்குக் கரையெடுக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள கிருத்துவ ஆண்டு 2013 கழித்தால் கிடைப்பது, கி.மு. 11. எனவே கி.மு. 11 கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்த ஆண்டாகும். மேலைநாட்டினர் செங்குட்டுவனைத்தான் கிருத்துவாகக் கொண்டனர். எனவே அப்போது செங்குட்டுவனுக்குப் 11 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கிருத்துவ ஆண்டுக் கணக்கீடு துல்லியமானதா என்பதை அறிய இயலவில்லை. 5114 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட சிறப்புப்பெற்ற நம்மை உணராத எவனோ ஒரு பிராமணன்; வழிமுறை என்பதை; தலைமுறை என உரை செய்ததை ஏற்றுக்கொண்டு; தவளைகள் போலப் பிதற்றி; ல், ழ், ற், ன் ஆகிய மெய் யெழுத்துக்களைச் சூத்திர மெய் எழுத்துக்கள் எனக் கற்பித்ததை உணராமல்; அப்படியே ஏற்றுக்கொண்டதையும் காண்கிறோம். கரிகால்சோழனின் பட்டினத்தில் கலந்தினிது உறைந்த அயல் நாட்டினர்; சோனகர், சீனர், யவனர் எனப் பாடல்களில் காண்கிறோம். யவனருள் மூன்று பிரிவினர் இருந்தனர். அவர்களைஆரியர் மோரியர் அவுணர் எனப் பழந்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இம்மூவருள் அவுணர் என்போரே இலங்கையின் சிங்களர். ஆரியர் என்போர் கொள்ளையராக நிலத்திலும் நீரிலும் இணையற்றுத் திகழ்ந்த செல்யுக்கஸ் நக்கந்தனின் கூட்டத்தராவர். அந்நியக் கொள்ளையரான கிரேக்க வணிகருள் அலெக்சாந்தனுக்குத் துணையாக நின்றவர்களே அவுணரும் ஆரியரும் மோரியரும். மோரியர் என்போர் அந்நிய வணிகரால், இங்கிருந்த பெண்களுடன் புணர்வு கொண்டதால் 1500 ஆண்டுகளாகப் பிறந்தோரின் வழிவந்தோராவர். சோனகர் என்போர் அரேபியராவர். இந்தச் சோனகரே தங்களுக்கெனத் தேர்வுசெய்த நமது சான்றோரின் வழிகாட்டுதலில் இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவர்களது நாநயம் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகத்தில் முதன்மையாகத் திகழ்ந்த சோனக- அரேபியருக்கு எதிராக வணிகத்தில் ஈடுபட்ட கொள்ளையரே அலெக்சாந்தனின் கிரேக்கர் கூட்டம். எனவே இங்கிருந்த மேலைத்தேயத்தவர் தங்களுக்கென ஒரு சமயத்தை உருவாக்க விழைந்தனர். அப்போது கிரேக்கம் மட்டுமல்லாமல் எகிப்து ரோம் முதலான நாடுகளும் செங்குட்டுவனுக்கும் கரிகால்சோழனுக்கும் அடிமைப் பட்டுக் கிடந்தன. சிறிது காலத்துக்குப் பிறகு அந்நாடுகளின் மக்கள் வணிகக் கொள்ளையரின் கொள்கைகளை எற்காமல் இசுலாமிய சமயத்துக்கு ஆதரவாக மாறிவிட்டதையும் காண்கிறோம். மேலைநாட்டு வணிகக் கொள்ளையருக்கு அஞ்சிய நமதுமக்களும் இங்கிருந்த மேலைத்தேயத்தவரும் பலநாடுகளுக்குச் சிதறி ஓடினர். அப்படி ஓடிய தமிழரும் இங்கிருந்த தமிழரும் தங்களுக்கெனத் தோற்றுவித்துக் கொண்டதே வைணவம் எனத் தெரிகிறது. வணவம் உருவாகும்வரை அமண நன்நெறிகளே கடைப்பிடிக்கப்பட்டன. அவற்றிலிருந்தே வைணவம் உருவானது. இறுதி அகத்தியனாக இருந்தவனே கரிகால்சோழன்.

No comments:

Post a Comment