Thursday, 23 October 2014

நூற்றுவர் தலைவன் எனக் குறிப்பிடப்படுவோன் யார்? துர்யோதனன் பரசுராமன்

நூற்றுவர் தலைவன் எனக் குறிப்பிடப்படுவோன் யார்? துர்யோதன் பரசுராமன் திருவாக்கு: மத்தேயு 27:54: "நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்." அந்த நூற்றுவர்தலைவந்தான் ஏசுவிந்தந்தை! மாபாரதத்தில் அர்ச்சுனனின் தந்தை துர்யோதனன்! போதுமா சான்று! இன்னும் வேண்டுமா! நூற்றுவர்கண்ணர், சதக்கண்ணி, சதவாகனர் என்றெல்லாம் இடம்பெற்ற; வசிட்டரால் பிராமணரின் சதிக்கு உடந்தையாகிப் பிறப்பிக்கப்பட்டவரே சமதக்கினி. சதவாகனர் எனப்பட்ட சதகன்ண்ணியரை; கரிகால் வெற்றிகொண்டதை அடையாளப்படுத்தும் நாணயத்தில் 'வசிட்டி மகன் சதகண்ணி' என்பது, ஒருபக்கத்தில் தமிழிலும் மறுபக்கத்தில் பிரகிருதத்திலும் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இப்பெயர்கள் வசிட்டரின் மகன் சமதக்கினி என புராணங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிப்பட்டன. மஹாபாரதம்-ஆதிபருவம்: இதியில் வசிட்டருக்கும் விசுவா மித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, தமிழ் அந்தணர்க்கும் சத்திரியபிராமணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத் தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்பதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் தண்டிக்கப்பட்ட விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர்)நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக்கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(கரிகால்சோழன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர், வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றூவரையும் சபித்தார். அவரது சாபம்பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் [கரிலால்சோழன்]சுதாசன் வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விசுவாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.” கபிலன்: கலித்தொகை 2- குறிஞ்சிப்பாடல் 52ன் தொடக்கத்தில்: "முறம்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெத்து மறம்தலைக் கொண்ட, நூற்றுவர் தலைவனைக்; குறங்கறுத் திடுவோன்போல் கூர்நுதி மடுத்துஅதன் நிறம்சாடி முரண்தீர்த்த நீள்மருப்பு எழில்யானை, மல்லரை மறம்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண்; கல் உயர் நனம்சாரல் கலந்தியலும் மலைநாட!" கலித்தொகை-4 முல்லைக்கலி சோழன் நல்லுருத்திரன்? பாடலில்: .. . எருத்தத்துப் பாய்ந்தானை நோனாது குத்தும் இளம்காரித் தோற்றம்காண் பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீல்நிற வண்ணனும் ... .. .. கோள்சாற்று பவரொடு புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் .. .. நேர்இலாய் கோள்அரி ஆக நிறுத்த கொலைஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலர்எடுத்த ஊராரை உச்சி மிதித்து.. .." பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் குறித்தது: 14ல் " .. .போர்தலை மிகுந்த ஈர்ஐம்ப தின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை அக்குரன் அனைய கைவண் மையையே .. . மாபாரதம்-வனபருவம்: “மனு[பரசுராமன்] என்னும் ஒரு மாபெரும்ரிசி, [வசிட்டர்]வைவசுவதனின்புதல்வர்; .. . நனைந்த கந்தைத்துணி, சிக்குப் பிடித்த தலையுடன்.. ..என மனு - காசியப்ப முசுகுந்தனைக் குறிபிடுகிறது. சிலப்பதிகாரத்தில்; தனது தந்தை முசுகுந்த இமையவனை எதிர்த்துச்சென்ற செங்குட்டுவனின் கூற்றும் உறுதிப்படுத்துவதாக: “புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை அரசன் .. .." எனக் குறிப்பிடுகிறான்; சதபதபிராமணம்-1-8.1.1: “காலையில் மனு உடல் அலம்புவதற்காகத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத் தார்கள் .. .. " எனக்குறிப்பிடுகிறது. ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி; கரியகஞ்சுகன்-அழுக்கடைந்த ஆடை-புலரா உடுக்கை அணிந்தவன் எனக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம்; ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை, 'சீர்கெழு நன்னாட்டுச் செல்க' என்று ஏவி - தாபத வேடத்து உயிர் உய்த்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர்; சுருளிடு தாடி, மருள்படு பூங்குழல், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண், விரிவெண் தோட்டு, வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை, ஆடமைப் பனைத்தோள், வளரிள வனமுலை, தளரியல் மின்னிடை, பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடி; எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈர்- ஐந் நூற்றுவர்;" என ஆரிய மன்னர் முசுகுந்த துர்யோதனன் முதலான நூற்றுவர் மற்றும் செல்யுக்கஸ்நக்கந்த கூட்டத்தர் ஈர் ஐந்நூற்றுவர் -ஆயிரவர் பிடிபட்டதாகக் குறிப்பிடுகிறது; இந்த ஆயிரவரை முன்னரே விசுவாமித்திரனுக்கு எதிராக எழுந்தனர் என சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்(சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்டர்வசர்கள்; விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள் ஆயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. மேலும் போரில் பிடிபட்டதாக ஆரியவரசன் முதலானோரை நீலன் -முசுகுந்தன் கொண்டுவந்த தகவலை அறிந்த கரிகால்சோழனின் கூற்றாகச் சிலப்பதிகாரம்; "நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி,..... .....'தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே! செம்பியன் மூதூர் சென்றுபுக்கு, ஆங்கு, வச்சிரம், அவந்தி , மகதமொடு, குழீ இய சித்திர மண்டபத்து இருக்க வேந்தன், அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரிற் சென்று, தகையடி வணங்க, "நீளமர் அழுவத்து, நெடும்போர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக் கொல்லாக் கோலத்து உயிருய்ந் தோரை வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று' என, தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன், சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை" என; முசுகுந்தனுக்கு எதிராகப் போரிட்டதாக நடித்துச் சோழ நாட்டுக்குள் புகுந்து பூசலைத் தோற்றுவிக்க முசுகுந்தனுக்காக வசிட்டனின் திட்டப்படி ஆரியவரசன்; செல்யுக்கஸ்நக்கந்த கூட்டத்தர் பிடிபட்டபோது; அமணத் துறவியர் வேடத்தில் தப்பியோடியதாகக் குறிப்பிடுகிறது. இவை அனைத்துமே வசிட்ட பூர்ணகாசியப்ப அலெக்சாந்தனின் திட்டமிட்ட சதிவேலைகள் என்பது உணரத்தக்கது. கிருஷ்ணனால் அடக்கப்பட்ட இந்திரன் முசுகுந்த பீஷ்மனே; கரிகால்சோழன் தருமனாலேயே மகத்திலிருந்து அர்ச்சுண செங்குட்டுவனின் துணையுடன் அனைவரும் இமையம் வரை விரட்டியடிக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் கரிகால்சோழனின் தங்கையும் செங்குட்டுவனின் தாயுமான பாவையை பிராமணவேடமிட்டுக் கெடுத்த பார்கவ முசுகுந்த பரசுராமனின் தகா நடத்தைகளே என்பதை முசுகுந்தனின் மகன் செங்குட்டுவனே குறிப்பிடுகிறான்; சிலப்பதிகாரத்தில்: “முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்.......” வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் தென்றமிழ் நல்நாட்டுச் செழுவில், கயல்,புலி: மண்டலை ஏற்ற வரைக, .. .. “கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம், எம்கோ மகளை ஆட்டிய அந்நாள், ஆரிய மன்னர் ஈர்-ஐந் நூற்றுவர்க்கு ஒருநீ ஆகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது, கடுங்கண் கூற்றம்: இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய” “தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க, சேனா முகம்!'என வாழ்த்தி,” “அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல்! நின் வெஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ? இமையவரம்ப!........” என இமையத்தை வென்ற வரம்பனாகச் செங்குட்டுவனைக் காட்டுகிறது. மேலும் ஈர்-ஐம்பதின்மர், குட்டுவன் முருகனுக்குப் பணிந்ததை: “ஆணையிற் புகுந்த ஈர்-ஐம்பத் திருவரொடு மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி- 'வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும்,...... யாம்தரும் ஆற்றலம்' என்றனர்'என்று”... சஞ்சயன் கூற்றாக நமக்குத் தெரிவிக்கிறது.கால்கோட் காதை முழுதும் முருகன் புகழ்பாடுவதக் காண்கிறோம். அசோகனின் கிர்னார் கல்வெட்டு எனக்குறிப்பிடும் செங்குட்டுவனின் கல்வெட்டுப்போன்றே அதே பாறைகளில் மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாக்கம் உண்டாக்கும் மாறுபாட்டுடன்; செங்குட்டுவனின் - ருத்ரதாமனின் சம்ஸ்கிருதப் பொறிப்புக்கள் உள்ளன. பொறிப்பின் ஏழாம்பகுதி அழிக்கப்பட்டோ அழிந்தோ உள்ளது. அதில் சந்திரகொற்றனின் ஆளுநரான வைஷியன் புஷ்யகுப்தனால் கட்டப்பட்டு அசோக- பிம்பிசார மவுரியனின் கீழ் யவன- பாரசீக மன்னன் துசாபனால் ஒரு கால்வாய் அமைப்புடன் தெற்கே செல்லவிடாமல் தடுத்த அணை தகர்க்கப்பட்டு இரண்டுமடங்கு அளவில் மறுபடியும் ருத்ரதாமனின் சொந்தச்செலவில் பிற எவருடைய, பவுர ஜனபத குடிகளிடமிருந்து பொருளும் பங்களிப்பும் உழைப்பும் பெறப்படாமல் கட்டப்பட்ட சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கொல்வதை நிறுத்தியதையும், அவந்திமுதல் சிந்து -அபராந்தா வரை ஏராளமான மாகானங்களையும் அத்துடன் பழங்குடிக் காட்டுவாசி- ஆரிய செல்யுக்கஸ்நிகந்த நிசதரையும்; தாக்கியதையும், வெற்றிகொண்டதையும், தீரமிக்க யுதேயர்களைப் பூண்டோடு அடக்கியதையும், அவர்களோடு மண உறவுகொண்டுள்ளதால் விட்டுவைக்கப்பட்ட யுதேயரின் தலைவன் நூற்றுவர் தலைவன்- துர்யோதன பரசுராம சதகர்ணியை இருமுறை தோற்கடித்ததையும் பெருமையோடு குறிப்பிடுகிறான் ருத்ரதாமன். அந்நினைவாக வெளியிடப்பட்டதே "யௌதேய கணஷ்ய ஜய" எனப் பிரகிருத்த்தில் பொறிக்கப்பட்ட நாணயம். மேலும் உரைநடையாயினும் கவிதை யாயினும் எல்லா இலக்கியப் பாங்குகளிலும், வெளிப்படுத்துவதிலும் சம்ஸ்கிருத்த்திலும்; தனக்குள்ள ஆளுமையைக் குறிப்பிடுகிறான். தங்கம் வெள்ளி நகைகள் என தனது பொக்கிசங்களையும் குறிப்பிடுகிறான். பெஸ்நகரில் தூணை நிறுவிய ஹெலியடோரியஸின் கிருஷ்ண -வசுதேவ பாகவத வழிபாடு இதனை உறுதிப் படுத்துகிறது.

Monday, 20 October 2014

கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள்

கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள் அயோத்திதாசர் 1845 - 1914; ராபர்ட் கால்டுவெல் 1814 - 1891; பௌத்தரான அயோத்திதாசர் மரபான தமிழ்க்கல்விபயின்ற சித்தவைத்தியர். அயோத்திதாசரின் சிந்தனைகள் 199ல் ஞான அலாய்சியஸ் தொகுப்புகளாக மூன்று வெளியிடப்பட்டன; தமிழன் என்ற இதழில் 1907 முதல் 1914 வரை அவரால் வெளியிடப்பட்டதன் தொகுப்பே அது! கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை மூன்றாம் பதிப்பாகப் பதிப்பித்த சென்னைப்பல்கலைக்கழகம் 1913ல் அரசியல்நோக்கங்களுக்காக அதன் மூலப்பிரதியிலிருந்து 160 பக்கங்களுக்குமேல் அடிக்குறிப்புக்களையும் நீக்கி வெளியிட்டனர்; பல ஆண்டுகள்வரை இதனை எவரும்கண்டுகொள்ளவே இல்லை. முதல் இரண்டுபதிப்புக்களும் கால்டுவெல்லாலேயே வெளியிடப்பட்டவை! நீக்கப்பட்ட பகுதிகளின் கருத்துக்களும் அயோத்திதாசரின் தொகுப்புக்களில் உள்ள கருத்துக்களும் ஒப்பிட்டுக்காணத்தக்கவை. ஞானசம்பந்தரின் காலத்தையும் சைவசமயத்தின் துவக்கத்தையும் காலத்தால் பிற்பட்டவையெனக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். திராவிடருள் உயர்சாதினரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒரே வரிசையில் வைத்துள்ளார். அவர்களுள் பழமையான பறையர் இனத்தாரை பழம்திராவிடர் என எழுதியுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரையும் தலித்துகள் எனக்கொள்ளலாமா? ஆங்கிலேயரின் 1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கணக்கெடுப்பின்போது தங்களை இந்துக்கள் என்று பதிவுசெய்யாமல் 'ஒரிகினல் டமில்ஸ்' ஆதித்தமிழர் / பூர்வதமிழர் எனப் பதிவுசெய்யுமாறு விண்ணப்பித்தார். ஆனால் அது அழுத்தம்பெறாமல் விடப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு பிறசாதியினர் தங்களை நால்வருணப் பாகுபாடுகளுக்குள்ளும் புராணமரபுகளுக்குள்ளும் இருப்போராகச் சான்றுகளுடன் காட்டி அச்சிட்டு; அவற்றை அரசிடம் கொடுத்து இந்துமதத்துக்கு உட்பட்டவர்களென உரிமைக்கோரிக்கைகளை வைத்தனர். 1885 முதல் அயோத்திதாசர்; கிருத்துவப்பாதிரியார் ஜான் ரத்தினம் என்கிறவரால் தொடங்கப்பட்ட திராவிடர்கழகம் என்ற அமைப்பில் திராவிடபாண்டியன் என்ற இதழை நடத்தினார்! பின்னர் திராவிடன் என்ற அடையாளத்துடன் செயல்பட்டார். 1891ல் நீலகிரியில் திராவிடமகாசபை என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழன் என்ற உணர்விலிருந்து திராவிடன் என்ற அடையாளத்துக்கு ஏன் மாறினார் என்பது அன்றைய சூழலிலேயே காணவேண்டியதாக உள்ளது. கால்டுவெல்லின் திராவிடன் என்கிற சொல் பலதளங்களில் முன்நிலைபெற்று அரசின் ஆதரவும் இருந்ருக்கவேண்டும் எனத்தெரிகிறது. பறையரை திராவிடகுடியினருள் பழைமையானோர் எனக்குறிப்பிட்ட கால்டுவெல் பிராமணரல்லாதோரை நீக்கிப் பிறர் அனைவரையும் திராவிடகுடியினர் எனக்குறிப்பிட்டதும் அத்தகையோர் தங்களைத் திராவிடருள் உயர்சாதியினர் என நிறுவமுயன்றதும் நோக்கத்தக்கது.திராவிடருள் சூத்திரர் என்போர் பலசாதியினர் - சாதிபேதமுள்ள திராவிடர் எனவும் பிராமணரால் வகுத்தளிக்கப்பட்ட சாதி சமய ஆசாரங்களை ஏற்று நன்பிராமின்ஸ் என சாதிபேதமுள்ள திராவிடர் குறிப்பிடுவதைப் பயணற்றது எனக் குறிப்பிட்டார். பிறரை - தங்களை சாதிபேதமற்ற திராவிடர் எனவும் குறிப்பிட்டார்! அவரது காலத்திலேயே சிலர் தங்களை ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டுக்கொண்டனர். தீவிர பிராமண எதிர்ப்பைத் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தினார்! பூர்வத்தில் பௌத்தராய் வாழ்ந்தோரைத் தாழ்ந்தசாதியினரென இழிவுபடுத்திய பிராமணரே; பௌத்தரின் அடையாள மேன்மைகளைத் தங்களுடையதாக்கிக்கொண்டனர் என்பதை வலியுறுத்துவதிலேயே கருத்தாக இருந்துள்ளார். பிராமணரை ஒட்டியே பிற திராவிடரின் சடங்குகள் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பிராமண எதிர்ப்புக்கான வேர் நமது மரபிலேயே இருப்பதாகவும் குறிப்பாகப் பறையர் வகுப்பாரிடம் மேலோங்கி உள்ளதாகவும் அவரது எழுத்துக்கள் உணர்த்துகின்றன! பிராமண எதிர்ப்பில் பறையரே முன்நிலைவகிப்பதாக உரிமைகோவதை அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. இத்தகைய பறையர்கள் குறித்த கால்டுவெல்லின் தகவல்கள்தான் அவரது நூலின் மூன்றாம் பதிப்பில் சென்னைப்பல்கலைக்கழகத்தாரால் நீக்கப்பட்டு வெளிவந்தது! கால்டுவெல்லின் "பூர்வகுடிகளான அவர்கள் மதிப்புடையோராகவே இருந்தனர்; பின்னர்வந்தவர்களால் வெற்றிகொள்ளப்பட்டே அடிமைகளாக்கப்பட்டார்கள்" எனப் பறையர்களைமட்டுமல்லாது பள்ளர் புலையர் என மேலும் சிலகுடியினரையும் குறிப்பிடுகிறார். மேலும் "பலதலைமுறைக்குமுன் இந்தியாவுக்குவந்த ஐரோப்பியர்கள் பறையர்களைப்பற்றி மேலோட்டமான ஊகங்களைக்கொண்டு முடிவெடுக்கும்படி; தவறான நடத்தையில் பிறந்தவர்கள்; குற்றநடவடிக்கைகளுக்காக சாதிவிலக்கம் செய்யப்பட்டனர் போன்ற கருத்துக்கள் பிராமணராலும் மேல்நிலை வகுப்பாராலும் கட்டமைக்கப்பட்டு பரப்பட்டது" என்றகருத்திலும் இதனைக் காண்கிறோம்; திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலிலும் இதேகருத்தைக் குறிப்பிட்டுள்ளார். கால்டுவெல்லின் கருத்துக்களை விரிவுபடுத்துவனவாக அயோத்திதாசரின் கருத்துக்கள் உள்ளன! பிராமண ஆணுக்கும் பறையர்குலப் பெண்ணுக்கும் பிறந்தவரே திருவள்ளுவர் என்று பரப்பட்ட கட்டுக்கதையை அயோத்திதாசர் முன்வைக்கிறார். தமிழ்கற்றுக்கொள்ள முயன்ற இரு ஐரோப்பியர்களிடம் பறையர்மீது வெறுப்புக்கொள்ளும்படி தூண்டிய பிராமண ஆசிரியர்களைப்பற்றியும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். பல்வேறு கோயில்களில் பூசாரிகளாக இன்றும் இருப்பதையும், திருவாரூர் யானையேறும் பெரும்பறையன் பழக்கமும், மாறியம்மன் விழாக்களில் முன்னுரிமை பெறுவதையும், அயோத்திதாசர் எடுத்துரைக்கிறார். இவற்றைக் கால்டுவெல்லும் உணர்த்துவதோடு அம்மனுக்குத் தாலிகட்டும் பறையன் கதையையும் குறிப்பிடுகிறார். சேரிக்குள் நுழையும் பிராமணனைச் சாணிச்சட்டியைப்போட்டு உடைத்து விரட்டும் சடங்கையும் சூழலோடு விரிவாக அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். பழங்காலத்தில் அவர்களது முன்னோர் மன்னர்களாக இருந்ததையும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதையும் குறிப்பிடும் கால்டுவெல், மன்னரின் பெயரைக்குறிப்பிடவில்லை; ஆனால் அம்மன்னனின் பெயர் நந்தன் எனஅயோத்திதாசர் தனது இந்திரர்தேச சரித்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு விளக்குகிறார். இந்தச்சாதியினர் பிரம்மனின் கட்டுக்கதையில் எந்த இழிவான உறுப்பிலிருந்தும் பிறப்பிக்கப்படவில்லை எனக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இக்கருத்தே இவர்கள் இந்து அல்லாதவர்கள் சாதியற்றவர்கள் போன்ற கருத்துக்களை அயோத்திதாசரிடம் உருவாக்கியிருக்கலாம். தஞ்சைப்பகுதியில்தான் நந்தன் என்ற மன்னன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்ற கர்ணபரம்பரைக்கதை வழங்கப்படுகிறது. இக்கதையைத் தஞ்சை வேதநாயகம் சாஸ்த்திரியும் காலின் மெக்கன்ஸிக்கு வழக்காறுகள் குறித்துத் தெரிவித்த தகவல்களில் குறிப்பிட்டுள்ளார். [கால்டுவெல்லும் இதனை அறிந்தே இருப்பார் என்பதை நாம் உணரலாம். ஆயினும் நந்தன் என்ற மன்னனின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டதன் காரணம்; தொடக்கத்தில் இந்தியத்தமிழருக்கு எதிராகச்செயல்பட்ட நந்தர்கள் குறித்த தகவல்கள் தொல்தமிழ்(சங்க)ப் பாடல்களில் உள்ளன என்பதே! மேலும் சைவரால் நந்தனின் கதையொன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது!] குறிப்பு: ஸ்டாலின் ராஜாங்கம் என்பவரால் காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கமாகும். அடைப்புக்குள் கொடுக்கப்பட்டவை மட்டுமே எனது கருத்தாகும். எனது கருத்தாக் வரலாற்றின் பின்னணியில் குறிப்பிடத்தவற்றைக் காண்போம். இக்கட்டுரையில் நந்தன் எனக்குறிப்பிடப்படுபவர் அலெக்சாந்தனே. அலெக்சாந்தனின் கூட்டத்தர் அல்லது அலெக்சாந்தனின் கூட்டத்தருக்கு உதவிய ஆரியவரசன் பிரகத்தனின் கூட்டத்தரே பறையரென மாற்றப்பட்டதாகத்தெரிகிறது. முகநூலில் குறுந்தொகை - 7ஆம் பாடலின் "கயிறாடு பறை" என்ற எனது இடுகையை இக்கட்டுரையுடனும் எனது கருத்துக்களுடனும் சேர்த்துக்காணவேண்டுகிறேன். அலெக்சாந்தனுக்கும் இந்த ஆரியவரசனின் மனைவிக்கும் பிறந்த பரசுராம பிம்பிசாரனின் வரலாற்றையும் இதனுடன் சேர்த்தே காணும்படி கோருகிறேன்.

Tuesday, 14 October 2014

சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!

சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்! மேரியர்களே - மௌரியர் எனப்பட்டனர்; சந்திரகுப்தன் மௌரியனல்ல! சத்தியவதி என்ற ஹெலனுக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பிம்பிசாரனே மௌரியன்; ஆரியனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பெண்ணே ஹெலன் என்ற சத்தியவதி. அவளுக்குப் பிறந்த பிம்பிசாரன் எனப்பட்டவனை ஆரியரும் யூதரும் ஏற்கவில்லை. பிம்பிசாரனின் மகனான செங்குட்டுவனை ஏசுவாக ஏற்றுக்கொண்டோரும் பிம்பிசாரனை ஏசுவின் மதத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே ஓரிறைக்கொள்கையை அல்லாவை அல்லஃசாந்தாவை ஏகைறைவனாகவும் தன்னை இறுதி இறுதி இறைத்தூதனாகவும் அறிவித்து அனைவர்மீதும் போர்தொடுத்தவன் முகம்மது எனத்தெரிகிறது! ஏக் ஆம் பரன் எனத் தமிழில்[?] அவனைக் குறிப்பிடுகின்றனர். அந்த மாம்பழத்தின் மாங்கொட்டையே பிளக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் பருப்பு முகம்மதியரால் காட்டப்படுகிறது[!?!?] சு என்ற முன் ஒட்டு சேர்ந்த பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில: சு பிரமன்= சுப்ரமன் -சுப்ரமண்யன்; சு தாசன்= சுதாசன்; சு வர்க்கம்= சுவர்க்கம்; சு தந்திரம்=சுதந்திரம்; சு குமார்= சுகுமர்; சு கன்யா= சுகன்யா; சு ப்ரபாதம்= சுப்ரபாதம்; சு மித்ரா= சுமித்ரா; சு மதி= சுமதி; சு மேரு= சுமேரு. இவற்றில் மேரு என்பதாக நமது புராண இதிகாச வேதங்களில் பல இடங்கள் குறிப்பிடப்படுகின்றன! அவற்றுள் நமது உத்தெரமேரு என்ற ஊரும் ஒன்று! திருநெல்வேலியிலும் ஆந்திரத்திலும்கூட மேரு இருந்துள்ளது! இவற்றுக்கெல்லாம் மேலானதாக அல்லது தலைமை இடமாக இருந்த பகுதியே சுமேரு; அதுவே அன்றைய அலெக்சாந்திரியா எனவும் துருவம் எனவும் நெற்றிக்கண் எனவும் குறிக்கப்பட்ட இமையமலையின் அடிவாரத்தில் மேற்கு எல்லையில் உள்ள பகுதி; சுமேரு எனப்பட்டது! சுமேரியர் குறித்து சுமேரியநாட்டில் பல பழமையான புராணங்களும் உள்ளன! நமது நாட்டுக்கும் சுமேரியநாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படக்காரணமே பராசரன் எனப்பட்டவனே; ஆயினும் இந்தப்பராசரனை எவரும் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவனுக்கும் மச்சகந்தி - பரிமலகந்தி - சத்தியவதி எனப்பட்ட பெண்ணுக்கும் இலங்கைத்தீவில் புணர்ப்பு உண்டானதால் பிறந்தவனே மாபாரதத்தையு எழுதியதோடு அன்றைய வேதங்களையும் தொகுத்த வியாசன்! அடுத்து அலெக்சாந்தா என்ற பெயரில் மூவர் இங்குவந்துள்ளனர். நந்தர் எனப்பட்டனர் எனத்தெரிகிறது! மேலும் அவர்களுக்குத் தென்னகச்சோழருடன் ஏற்பட்ட உறவுக்குக் காரணமானவனே அல்லஃநந்தாவின் வளர்ப்புமகனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன்! பிம்பிசாரனே பலபெயர்களில் வேத இதிகாச புராணங்களிலும் இடம்பெற்றுள்ளான். அவனது மகனே சுப்ரமன்= சுப்ரமணி எனப்பட்ட செவ்வேல் செங்குட்டுவன் கந்தன்! ஆயினும் இவனே அஜாதச்சத்ரு எனவும் உள்ளான். அசோகன் சங்கரன் எனவும் காணப்படுகிறான்! குஜரத் முதல் வங்கத்தின் கிழக்குப்பகுதிவரை அடங்கியதே அன்றைய தமிழகமாகும். அன்றைய தென்னகம் என்பது தமிழைத்தாய்மொழியாகக்கொண்டது. அதன் வட எல்லையாக விந்தியமலையே இருந்தது. மதராஸ் ராஜதானி எனப்பட்டதும்; அன்றைய கலிங்கத்தின் காரவேலன் ஆட்சிசெய்த இன்றைய ஒடிஸ்சாவையும் உள்ளடக்கியதே! மேற்கண்ட அலெக்சாந்தருடன் வந்துசேர்ந்த ஆரியரும் திராவிடரும் வந்தபின்னரே வடவேங்கடம் தென்குமரி ஆகியவை தமிழகத்தின் எல்லைகளாகச் செங்குட்டுவனின் காலத்தில் அமைக்கப்பட்டன. எஞ்சிய பகுதிகள் திராவிடருக்கெனவும்; அதற்கும் வடக்கே உள்ள பகுதிகள் வடவர் எனப்பட்டோருக்கும் செங்குட்டுவனின் தந்தை சங்கரனைச்சார்ந்தோருக்கும் அன்றைய செங்குட்டுவன் - அசோகனாலேயே கொடுக்கப்பட்டன! ஆதிசங்கரன்- செங்குட்டுவன் தன்னைத் தந்தைவழியில் திராவிட சிசு எனக் குறிப்பிட்டிருந்தபோதிலும் தமிழனாகவே தனது தாயைச்சார்ந்து தாய்மாமன் கரிகால்சோழனுடன் நந்தர்களுக்கு எதிராக அநந்தனாக வாழ்ந்தவன் செங்குட்டுவ அசோக அஜாதச்சத்ரு. நமது தத்துவங்களின் முன்னோர் சங்கரனையும் ஆதிசங்கரனையும் பிரித்தறிய இயலாதபடி குழப்பி பெயர்களையும் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரிளபட்டர் என்பவரே செங்குட்டுவன் என்பதை நம்மால் நிறுவமுடியும்! செங்குட்டுவனது தந்தை சங்கரன்- பிம்பிசாரன் குறித்த வரலாற்றை அறிய; சுமேரியரின் வரலாற்றில் உள்ள நமது வரலாற்றைப் பிரித்தெடுத்தாலே பெறமுடியும்! காரணம் செங்குட்டுவனது தாய்; சுமேரியநாட்டுக்குச் சென்று; பிம்பிசாரனான - கில்காமேசின் மகனே செங்குட்டுவன் என்பதை நிறுவப் போராடிய தகவல்கள் அங்கு இருக்கக்கூடும். பல ஓவியங்களும் புடைப்புச்சிற்பங்களும் சிற்பங்களும் இதனை உறுதிப்படுத்துவனவாக அங்கு உள்ளன! கரிகால்சோழனின் தங்கை தனது சிலம்புபோன்ற ஒரு பொருளுடன் சில ஆட்சியாளரின் முன்நிலையில் தனது மகனுடன் இருப்பதாகவும் அவை உள்ளன. மகனை மடியில் வைத்திருப்பதுபோலவும் பல உள்ளன! எனவே மேரு எனப்பட்ட பகுதிகளுக்குத் தலைமை இடமாக சுமேரு- அன்றைய சுமேரியநாடு இருந்திருக்கக்கூடும் என்பதை நிறுவியாகவேண்டும்! இதுகுறித்துத் தகவல் அறிந்தோர அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்! வரலாறற்ற தமிழனுக்கு வரலாறு உள்ளது என்பதை நிறுவியாகவேண்டும்!

Friday, 10 October 2014

உலகப்படைப்பு வளர்ச்சி கபிலர் சாங்கியம்

உலகப்படைப்பும் வளர்ச்சியும் - கபிலர் சம்கியம் - சாங்கியம்! இந்திய- உலகத்தமிழரின்ரலாறு மிகநீண்டது! ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திரகுலப் பாரதர்க்கும் வசிட்டகுலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனவும்;(இந்தத் திரித்சூக்களே சேரலத்தின் திருசூரில் பரசுராமனால் குடியமர்த்தப்பட்டவர்கள்) 8.96.13-14: "கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி(?) ஆற்றங்கரையில் இந்திரனோடு போரிட்டான்" எனவும்; காண்கிறோம். ஒடிஸ்ஸா=கலிங்கத்தில் இந்திர பரசுராம- பீஷ்மனுடன் போரிட்டதே காலிங்கனோடு கரவேல்= கண்ணன் போரிட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கரவேலனின் [அ]ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிந்தோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது. 1. [அசோகன் பிறக்கக்காரணமான பரசுராமனால் கைப்பற்றப் பட்ட நகரைக் கைப்பற்ற] கலிங்கநாட்டுக்குச் சென்றான்; 2. [பரசுராமனை] சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படை கொண்டு தாக்கினான்; 3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று [முகரி]'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. [ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது.] 4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன; 5. [செல்யுக்கஸ்நிகந்தனின் ஆரியர் மற்றும் கோசர்] ராச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்; 6. [கங்கைநதி நீர் தெற்கே கலிங்கத்துக்குச் செல்ல] நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன; 7. [ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்] பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப் பட்டன; [கரவேலனின் அத்தையான பிருந்தாவின் மகளும் கரிகால்சோழனின் தங்கையுமான நல்லியற்பாவையை வஜ்ஜிரகன் எனப்படும் வச்சிரத்தடக்கையன் இந்திரன்- பரசுராமன் புணர்ந்து கெடுத்ததோடு அக்குழந்தையைக் கொலைசெய்யவும் முயன்றதால் குழந்தை செங்குட்டுன் கரவேலனால் பாதுகாக்கப்பட்டான்] கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது. 8. மகதம் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் [அலெக்சாந்தன்] நந்தனும் [துர்யோதன- பரசுராம] சதகர்னியரும் கைப்பற்றிச்சென்ற [சந்திரகொற்ற] தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத[அலெக்சாந்தன்?] மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சி செய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்; 9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்; 10. வட இந்திய[சிந்து]ப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்; 11. [இராவணன் மற்றும் அவனுக்கு ஆதரவான கேரள மற்றும் சிங்கள் மன்னர்கள் பத்துப்பேரான] தமிழ் மன்னர்களை வென்று [மற்றொரு அமண தீர்த்தங்கரர்] கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்; 12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை[இராவணனை] வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன; 13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI [குடதிசை மேற்குத் திசை - குடநாட்டு] குடபஸ்ரீயான செங்குட்டுவன் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துப் பாதுகாவலனாக சேனாபதியாக] உள்ளான். பிரகிருதியும் புருசனும்:- பிரகிருதியைச்சடப்பொருளாகவும் புருசனை முழுமுதற்பொருளாக - ஆண்டவனாகவும் கொண்டு அனைத்து உலகத்தத்துவங்களுக்கும் முதன்மையானதாகவும் அடிப்படையாகவும் விளங்கிய கபிலரின் சம்கிய - சாங்கிய தத்துவநூல் சிதைத்து அழிக்கப்பட்டுவிட்டது. அனுமுதற்கொண்டு அவற்றின் சேர்க்கைகளும் அதன் விளைவுகளும் குறித்த; மற்றும் ஆண் பெண் சேர்க்கை அதன் விளைவுகள் என அனைத்தையும் விவரிக்கும் நூலாக இருந்ததெனப் பலரது பிந்தைய நூல்களில் அறிய, உணர முடிகிறது. கரிகால்சோழனின் தங்கையே பிரகிருதியாகவும் அப்பெண்ணைக் கெடுத்துக் கருவுறச்செய்து; அக்குழந்தையின் தந்தை தானே என அறிவிக்க மறுத்து ஓடிவிட்ட ஒருவனைப் புருசனாகவும் உருவகித்து உலகத்தோற்றமும் மனித இனமும் அப்போதுதான் துவங்கியது என்ற கட்டுமானத்தை நிறுவியுள்ளனர். காரணம் அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அந்தப் புருசனின் முக அமைப்பையும் பொன்னார் மேனி நிறத்தையும் கொண்டிருந்ததாகும். புருசன் ஒரு அந்நியன்; ஆனால் அப்பெண்ணோ ஒரு தமிழச்சி 'கானக்காக்கையின் கடும்சிறகு ஏய்க்கும்' நிறத்தவள். அப்பெண்ணே விவிலியத்தில்; கடவுள் அருளால் கருவுற்றுக் கர்த்தனை ஈன்றதாகக் காண்கிறோம்! இறையனாரால் படைத்தளிக்கப்பட்ட இறையனார் களவியல் நூலும் இதனையே வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தவே அந்நூல் இறைவனால் படைக்கப்பட்டது என்றனர்! முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம். வஜ்ரநந்தி - வஜ்ரகரனின் காலத்தில் கூடலில் அமைக்கப்பட்ட சங்கத்தில் இயற்றப்பட்டதே அந்நூல்; வஜ்ரகரனே இறையனாராகவும் அவரே படைத்ததாகவும் குறிப்பிட்டு; அவருக்காகப் படைத்த நக்கீரரும் முக்கண்ணானால் எறிந்து சாம்பலாகிவிட்டார் கடவுள் தனது சொந்த விருப்பை நிறைவுசெய்ய விரும்பியதை மறைக்க; உலகத்தோற்றத்தின் கதை புகுத்தப்பட்டுவிட்டது. கபிலரின் பாடல்களில் அப்பெண்ணின் துயரங்களே வெளிப்படுகின்றன. பரணரும் சலைத்தவரல்ல. இறையனாரின் இருப்பிட்த்துக்கே சென்று அப்பெண்ணுக்காக வாதாடிய பாடல்களும் பல உள்ளன. அப்பெண்ணின் துயரை எடுத்துரைக்கும் மேலும்பலபாடல்கள் காணாமைல் போய்விட்டன; ஆயிரத்துமேற்பட்ட பால்ல்களே எஞ்சி யுள்ளன. நற்றிணைப்பாடல்களில் காணாமல்போனதாகக் குறிக்கப்படும் வரலாற்றுடன்கூடிய சிதைத்துநீக்கப்பட்ட-234ல்: “ .. .. .. .. ..சான்றோர் வருந்திய வருத்தமும், நுமது வான்தோய் வன்ன குடிமையும், நோக்கி, திருமு/மனி/ணிவ ரன்றும் குன்றம் கொண்டிவள் வரும/முலை ஆகம் வழங்கினோ நன்றே: அஃதுஆன்று அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே."” எனக்காட்டப்பட்டுள்ளது; இப்பாடலில் முதலில் 1(அ)2 அடிகளை நீக்கி; பிறகு பாடலையே நீக்கிவிட்டார்களோ? களவியல் காரிகை பதிப்பித்த வையாபுரிப்பிள்ளை அவர்களும் இதனை நற்றிணைப் பாடலாகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியரால் இறையனார் அகப்பொருள் நூலுக்கு உரைசெய்ததில் களவியல் 23ஆம் பாடலுக்கு விளக்கமாக: "நீர்நலும்முன்னாள் எல்லையும் ஒருசிறை புதுவை ஆகலின் கிளத்தல் நாணி நேர்இறை வளைத்தோள் நின்தோழி செய்த ஆர்உயிர் வருத்தம் களையாயோ என எற்குறை உறுதிர் ஆயின் சொற்குறை எம்பதத்து எளியள் அல்லள் எமக்குஓர் கட்காண் கடவுள் அல்லளோ பெரும ஆய்கொள் மிளகின் அமலைஅம் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புற நாநூறு தைவரும் மாஞ்சுசூழ் மணிவரை மன்னநன் மகளே" எனக்காட்டப்பட்டுள்ளது!

Sunday, 5 October 2014

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்! வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது. பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர். அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள். ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது" சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான். பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன. ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர். சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்! கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை. விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர் http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!