Wednesday, 23 October 2013

நம்பிக்கை - குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் பழந்தமிழ்ப் பாடல்களின் அடுக்கம் வரிசைமாறியுள்ளது. திருமுருகாற்றுப்படை இயற்றப்பட்ட காலத்தை அறிய இயலவில்லை. அதேபோன்று கலித்தொகையும் பரிபாடலும் பிற்பட்ட காலத்தவையே. ஆயினும் நமது பார்வையில் பழந்தமிழ்ப் பாடல்களின் உதவியுடன் சில திருத்தங்களையும் மாற்றங்களையும் புகுத்திச் சிதைத்து வரலாற்றை மறைத்து; புகழ்பெற்ற சிலரைக் கடவுளர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் மாற்றப்பட்டவையே திருமுருகாற்றுப்படை பரிபாடல் கலித்தொகை போன்றவை. பொதுவாகவே அனைத்துப் பழந்தமிழ்ப் பாடல்களும் வஜ்ஜிரநந்தி என்பாரின் காலத்தில் அன்றைய புலவர்களின் துணையுடன் ஒரு மாபெரும் காவியப் பெருங் கதையைப் பல மாற்றைங்களுக்கும் சிதைவுகளுக்கும் நீக்கங்களுக்கும் ஆட்படுத்தி வரலாற்றை மறைக்கும் நோக்கத்தோடும் புகழ்பெற்ற வரலாற்று மாந்தரைக் கடவுளர்நிலைக்கு உயர்த்தியும்; பழம்பெரும் இலக்கணத்தைச் சிதைத்துத் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை இயற்றி அதனைப் புகுத்தி; திணை துறை எனப் பகுத்தும் தொகுத்தும் சிதைத்துச் சிதறடிக்கப் பட்டவையே பதிப்பிக்கப்பட்ட பழந்தமிழ்ப் பாடல்கள். இவற்றில் பலவும் மூலத்தில் என்ன அல்லது எந்த வடிவில் எப்படி இருந்தன என்பது புதிராக்கப்பட்டுவிட்டது. 49 வழிமுறை அகத்தியர்களது கொள்கைகளைக் கொண்ட அகத்தியம் என்னும் நூலும் 50ஆவது அகத்தியரின் தலைமையில் பழந்தமிழ்ப் பாடல்களும் சிறப்புப்பெற்றிருந்தன. 5ஆம் நூற்றாண்டில்தான் அனைத்து நெறிகளும் ஏடுகளும் திரட்டப்பட்டு உலக அளவில் பலமாற்றங்களுக்குப்பின் அமயங்களை உருவாக்கும் முயற்சிகள் உருப்பெற்றன. அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நெறிகளும் அசீவகத்திலும் அமணத்திலும் இருந்த நெறிகளே. தீர்த்தங்கரர்கள் அப்போது இல்லை. ஆயினும் நீருடன் தொடர்புகொண்ட சில சடங்குகள் இருந்ததைப் பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன. அசீவக நெறியை மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட அமணத்தையே அப்போது நாம் ஏற்றுள்ளோம், கிருத்துவத்தைப் பிறர் ஏற்றுக்கொண்டனர். கிருத்துவத்தின் தலைவர்களாகத் தேர்வுசெய்யப்பட்டோர்; மக்களுக்காகப் பாடுபட்ட மாபெரும் புகழ் படைத்தவர்களாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றவர்கள். இச்செயல்களில் ஈடுபட்டோர் உலக அளவில் மேலான்மை பெற்றுப் போரற்ற உலகை உருவாக்க ஒற்றுமையுடன் பாடுபட்டவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட கிருத்துவத்தின் தலைவன் வேற்றுநாட்டவன் என எவரும் அடையாளப்படுத்த விடாமல் தடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம் கொள்கைகள் உயர்வானவை என்பதோடு அவர்கள் பிறநாடுகளிலும் தங்களது கொள்கைகளின் மேலான்மையை நிறுவிப் புகழ்பெற்றவர்கள். இந்நிலையில் அனைத்துவரலாற்றையும் கொண்ட சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய ஒரு பழந்தமிழ்ப் பெருங்கதையின் பாடல்களைச் சிதைக்க வேண்டிய நிலை உருவானது. அன்றைய பன்னாட்டு வணிக மையமாகத் திகழ்ந்த நம்நாடு தலைமைபெற்றிருந்தது. இடையறாத போர் கொலை கொள்ளைகள் நிறந்திருந்த உலகை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்த உலக நாடுகளின் வணிக முகவர்கள் கூடி அமைதியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தனர். அமைதிக்காக உருவாக்கப்பட்ட்வையே அமையங்கள். அமயங்களை உருவாக்கியவர்களால் சிதைக்கப்பட்டதே பெருங்கதை எனத் தமிழ் மொழியில் பிரகிருத எழுத்தில் இருந்த நூல். பிரகத் கதா எனப் பெயர்பெற்ற அதனை குணாட்டியர் என்னும் அமணர் எழுதி முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கின்றனர். இந்தப் பிரகத்கதா நூலுக்குத் தமிழில் பெருங்கதை எனப் பெயரிட்டவர் திரு உ. வே. சாமிநாத ஐயர் ஆவார். கொங்குவேலர் என்பவரும் அதே பெயரில் ஒரு நூலை எழுதி அதன் முதற் காண்டமும் இறுதிக் காண்டமும் அழிந்துவிட்டதாகவும் பிறவற்றை உதணன் கதை அல்லது பெருங்கதை எனப் பெயரிட்டுப் பதிப்பித்து வெளியிட்ட உ. வே. சா ஐயர் குறிப்பிடுகிறார். குணாட்டியரின் பிரகத்கதா என்பது கபிலர் என்னும் பிற்காலப் புலவரால் மாற்றி எழுதப்பட்ட குறுஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற ஆரியவரசன் பிரகத்தன் எனப்பட்ட கொள்ளையர் தலைவன் செல்யுக்கஸ்நக்கந்தனை அடிப்படையாகக் கொண்டது. அவனது உதவிபெற்றே அலெக்சாந்தன் என்னும் ஒரு கொள்ளையர் பிரிவினர் நமது நாட்டுக்குள் புகுந்தனர். பிரகத்தனிடமிருந்தே முழுமையான உலக வரலாறு தொடங்குவதாக உணரப்பட்டது. அன்றைய நிலையில் பிரகத்தனே நீரிலும் நிலத்திலும் புகழ்பெற்ற கொள்ளையன். நமது பழந்தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றுக் கடவுளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட சிலரைக் காண்போம். குண்டலகேசியில் ஒரு பாடலில் கரிகால்சோழன் குறித்து: "முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காரும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்;தனக்கென்று ஒன்றானு மில்லான்; பிறர்க்கே யருதிக்கு ழந்தான் அன்றே; யிறைவனவன்றாள் சரணாங்க ளன்றே" எனக் குறிப்பிடுகிறது. பத்துப்பாட்டில் பட்டினப்பாலை- கரிகால்சோழன் குறித்து: ".. . திருத் துஞ்சும் தின் காப்பின் ......... கிளை களித்துப் பகை பேணாது .. .. கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் நல் ஆ னொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் ஓம்பியும் .. . கொடுமேழி நசைஉழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவு நின்ற நல் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்ப தூஉம் மிகை படாது .. . பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம் .. மொழி பல பெருகிய பழிதீர் தேஎயத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் .. ." என்றெல்லாம் அவனது நாட்டையும் நகரத்தையும் மக்களையும் குறிப்பிடுகிறது. மாபாரதப்போரில் செங்குட்டுவ-அர்ச்சுனன்; கடல்போன்ற வேளிர் அறிவாளர் சேனைகளுடன் தருமன் கரிகாலனின் தலைமையில் கண்ணன் கரவேலனின் வழிகாட்டுதலுடன் சென்றான். திருமால் கரிகால் குறித்த பரிபாடலில் உள்ள முக்கியமான வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்ட அடிகள்: 1-6: "ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர மாயுடை மலர்மார்பின் மைஇல்வால் வளைமேனிச் சேய்உயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை எறிமலர் சினைஇய கண்ணை .. ." எனக் குறிப்பிடுகிறது. மூன்றாம் பாடலில் நால்வகை நிலங்களுக்கேற்பத் தனது நிலைகளை 'நால்வகையாக செங்கட்காரி, கருங்கண் வெள்ளை, பொங்கட் பச்சை, பைங்கண் மால்' எனத்தோற்றங்கொண்டு; ' கூந்தல் எரிசினம்' கொன்றதும்; 'திரிந்து அயர்ந்து அகன்றோடி நின்அஞ்சி கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் அன்னவர் படஅல்லா அவுணர்க்கும் முதல்வன்' எனத் தன்னை நிநாட்டியதும்; 'அறம் கோலாக இருநிலழ் படாமை மூஏழ் உலகமும் ஒருநிழல் ஆக்கிய' தகவல்களும்; 'மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி (கரவேலன்)மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டுநின் நேமி நிழலே' என வாழ்ந்த கரிகாலனைக் குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளன. முருகன் செங்குட்டுவனின் தலைமையில் அனைத்துப்படைகளும் இயங்கின என்பதையும் காண்கிறோம். செங்குட்டுவன் குறித்த எட்டாம் பாடலில் இருபெரும் பிரிவாக எதிரும் புதிருமாக இருந்த அனைவரும் செங்குட்டுவனின் சொந்தங்களே. இந்நிலையை மாபாரதமும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதனைப் புறநாநூறு- 294: "வெண்குடை மதியம் மேல்நின்று திகழ்தரக் கண்கூடு இறுத்த கடல்மருள் பாசரைக் குமரிப் படைதழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து இறையும் பெயரும் தோற்றி 'நுமருள் நால்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு'எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியின் குறுகார் நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே”என அர்ச்சுனனின் மனைவி மற்றும் தாயையைக் கண்ணன்- காரவேலன் அமைதிப்படுத்தக் காண்கறோம். செங்குட்டுவன் முருகனால்; 'யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேஅரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்றாகின்று நின்காரணமாக; பரங்குன்று இமையக் குன்றம் நிகர்க்கும்' எனக் குறிப்பிடுவதையும்; இமையக்குன்றைவிட மேம்பட்டது என வேங்கட மலையைக் குறிப்பிடுவதையும்; மீண்டும் செங்குட்டுவனுக்கும் கரிகாலனுக்கும் சோழர்குடியினருக்கும் கலப்பிரருக்கும் எதிராக அலெக்சாந்தனின் கொள்ளையர் பூசலிட்டதை: 'நின்யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ கூவ மதநனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப எதிகுதிர் ஆகின்று அதிர்பு' எனவும்; 'குன்றத்தான் கூடல் வரவு' காரணமாக அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டதையும்; செங்குட்டுவனின் கல்மலைச் சொற்பொலிவு குறித்து: 'கூடல் மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பெழ காலொடு மயங்கிய கலிழ் கடலென மால்கடல் குடிக்கும் மழைக் குரலென ஏறதிர்க்கும் இந்திரன் இரும் உருமென மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும்நின் குன்றம் குமுறிய உரை' எனவும்; 'கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீர் அருவி அசும்புறு செல்வம் மண்பரிய வானம் வரப்பினும் மன்னுகமா தன்பரங் குன்றம் நினக்கு' எனவும் குறிப்பிடக் காண்கிறோம். மீண்டும் பிராமண வடவரின் தொல்லையால் தென்னகத்தில் பூசல் நிகழ்ந்ததை; 'மைஇருநூற்று இமைஉண்கண் மான்மறிதோள் மணந்தஞான்று'" நூற்றுவர்கண்ணர் என்போரின் தேவசேனையை அடக்கிச் செங்குட்டுவன் கைப் பற்றியதைத் தேவசேனாவை மணந்ததாக மாற்றிப் பெண்ணாகவும் உருவகித்தனர். மாபாரதம்- ஆதிபருவம்: " ஞானமுள்ள புரூரவன்(வேலவன்), இளை(கரிகாலனுக்கு இளையவள்)க்குப்பிறந்தான்; தாயும், தந்தையுமாக இளையே இருந்தாள் என நாம் கேள்விப்பட்டுள்ளோம். (தன்னை ஏமாற்றிக் கெடுத்த அந்நியனை ஒதுக்கி விட்டாள்) மாகடலிலுள்ள பதிமூன்றுதீவுகளை ஆண்டுவந்தான்(பாரதம் மற்றும் அதனைச் சேர்ந்த இலங்கை முதலான தீவுகளுக்கும் படைத்தளபதியாக இருந்தான்). இவனைச் சுற்றியுள்ளோரும் அ மானுஸ்ய மானவர்கள்(மனிதர்களல்ல). மிகு புகழ்பெற்றவன். தனதுபராக்கிரமத்தில் மயங்கி ஆணவத்தில் பிராமணர்க்கெதிராக மோதலில் ஈடுபட்டான். பிராமணர் (பரசுராமன், செழியன் முதலானோர்) வலிமையாக எதிர்த்தபோதிலும் ஆபரனங்களை(படைகளை)க் கைப்பற்றிக்கொண்டான். [இந்திராதி தேவர்களின் (தனது தந்தை மற்றும் ஏழுவள்ளல்)படையுடன் போரிட்டுத் தேவ(ர்)சேனையைக் கைப்பற்றினான்] பிரம்மலோக சனத்குமாரர்(?) வந்து கண்டித்தார். அதனைப் புரூரவன் பொருட்படுத்தவில்லை" என்கிறது. ரிக்வேதம்: சுதாசனின்- தசாரஞ்னயுத்தம் அல்லது பத்துமன்னர்களுடனான யுத்தம். எனவும் குறிப்பிடுவர்; 7 ஆவது மண்டலத்தில் இராவண- செழியனுடனான போர் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன. இதில் கரிகாலன்- சுதாசனை எதிர்த்துப் போரிட்ட 30 பெயர்களைத் தனக்கே உரிய மரபுப்படி அடையாளப்படுத்த முடியாதவகையில் குறிப்பிடுகிறது. இந்த மாபெரும் வெற்றியாலும் மற்றொரு மாபாரதப்போர் வெற்றியாலும்; சுதாசன்- கரிகால்சோழனை ரிக்வேதம் 27 இடங்களில் புகழ்நு பாடுகிறது. போர்ப்படையினர் (கரவேலன் கண்ணனின் கைக்கொள் பாசப் படையினர்) நீரோடு ஒப்பிடப்பட்டுள்ளனர். “சுதாசனின் குதிரையான குசிகாசை அனுகுங்கள், அவனைச் செயல்படத் தூண்டுங்கள், ராசாவுக்காக செல்வங்களைப் பெற்றுத் தருவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவனை அவிழ்த்து விடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னனான அவன் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும் விருத்திரனைத் துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபட சுதாசனை அனுமதியுங்கள்” எனக்குறிப்பிடுகிறது. இதில் தெற்குத்திசை ஏன் இடம்பெறவில்லை?!? இதில் குசிகாஸ் என்பது சுதாசன்- கரிகால்சோழனின் தங்கைமகனான செங்குட்டுவ- வேலவனே. இவர்கள் இருவரும் தெற்குத் திசையை நீக்கிப் பிற மூன்று திசைகளிலும் போரிட்டு அனைவரையும் வென்றனர் என்பதே நமது குறிப்புகளுக்கு சான்றாக விளங்குகின்றது. "குஸிகாஸ்" என்பதை குதிரை என முருகன்- சேய்- வேலவன்- செவ்வே(ள்)ல் குறித்ததே. அதனை உறுதி செய்யும் விதமாகத் தொல்காப்பியத்தில்- பொருள் 563: " சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயில் அலங் கடையே..... குதிரையுள் ஆணினை சேவல் என்றலும்....." என்னும் அடிகள் சேவல் கொடியோனான செவ்வே(ள்)ல் வேலவன் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. தமிழறியாத வடமொழிக்குச் சென்ற தமிழர் வரலாறு மீண்டும் தமிழுக்கு வரும்போது புரிந்துகொள்வதில் தவறுகள் எளிதில் நேர்கின்றன; அவற்றுள்ளும் புராணமொழியில் உள்ளவற்றை அறியாதவர்கள் மொழி மாற்றம் செய்யும்போது குழப்பமடைந்து அப்படியே எழுதிவிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. வேலவன் - செவ்வேல் குறித்த பரிபாடல் - பரி என்பது குதிரைதயையும் குறிப்பதும் நோக்கத்தக்கது. செங்குட்டுவனால் வதைப்பட்ட விருத்திரன் யார்? நாயகன்-விநாயகன், ஆழம்-வியாழம், தவ்வை-விதவ்வை போன்று- ருத்திரன்= சுரர்களின் அல்லது எதிரிகளின், அழிப்போரின் தலைவன்- விருத்திரன் என பொருள்படும்?) பிராமணீய, அமண இலக்கியங்களில் தங்களது எதிரிகளைச் சூத்திரர்களகவும்; ஆதரவளிப்போரை இந்திரனின் தேவர்களாகவும் குறிப்பிடுவர். தமிழர்களனைவரும் அசுரர்களக, தாசர்களக, தஸ்யுக்களாகக் குறிக்கப்படுவர். தனிநபர் இழைக்கும் குற்றம் அவனது இனம் முழுதும் இழைத்த குற்றமாகக் கருதப்படும், ஒரு இனம் இழைக்கும் குற்றம் அந்த இனத்தின் தலைவன் இழைத்ததாகக் கருதப்படும். பல துயரங்களுக்கு ஆளான ஒரு பெண்ணும்; அவளது மகன் என ஒருவனுக்குச் சொந்தமான ஏழு மலைப்பகுதிகளில் வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். அவனைப் பரணரின் குறிஞ்சித்திணைப் பாடல் அகநாநூறு- 152: "நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து குன்றுழை நண்ணிய சீரூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத் தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல் இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் நார நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில் கலாவத் தன்ன தோளே; - வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுற் காந்த ளுள்ளும் பலவுடன் இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோற்கு சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேய்உயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய ஆயினும் நடுங்குதுயர் தருமே" எனக் குறிப்பிடுகிறது. பாடலின் தொடக்கத்தில் உள்ள பெண்ணைக் குறித்து எவரும் ஆய்வுசெய்ததாகத் தெரியவில்லை. மகனின் ஈகைத்தன்மைகளையும் வீரத்தையும் இயல்புகளையும் மட்டுமே விவரித்துச் செல்லும் பலரது உரைகளில்; தாய்குறித்த தகவல்களை ஒதுக்கிவிடுகின்றனர்; அவனது தந்தையும் இடம் பெறும் பாடல்களில் உள்ள தகவல்களை விளக்காமல் மறைத்து மழுப்பிவிடுகின்றனர். அவனது தந்தைக்கும் பல பெயர்கள் உண்டு. மேற்கண்ட- தசாரஞ்னயுத்தம் அல்லது பத்து மன்னர்களுடனான இராமாயணப் போரில் மூன்று இனக்குழுக்கள் உள்ளன. அவை பிருகுக்களான பரசுராம பார்கவபிராமணர், திருத்சுக்கள் மற்றும் பரதர்களான பிற கரிகால்சோழன் இனத்தினர். இதில் 'வெற்றிபெற்றவர்களே பரதர்கள்' எனவும்; 'அவர்களது பெயராலேயே இந்த நிலப்பகுதி பரதகண்டம் எனப்பட்டது' எனவும் குறிப்பிடுகிறது. மாபாரதம் பரதர்களை சகுந்தலை, துஸ்யந்தன் ஆகியோரின் வழித்தோன்றலான ஒரு மகனைக் குறிப்பிடுகிறது. பாகவதம் அதனை உறுதிப்படுத்துகிறது. “ஸ்வயம்புவின் மகனான மனுவுக்கு பிரியவிரதன் என்ற மகன் இருந்தான், அவனுடைய மகன் ஆக்னிபுத்திரன்; அவனுடைய மகன் நாபி, அவனுடைய மகன் ரிஸபன், அவனுக்கு நூறு புதல்வர்கள்; அனைவரும் வேதம் பயின்றனர், அவர்களில் (கரிகால்சோழன்) நாராயணனுக்கு தன்னை அர்ப்பனித்துக் கொண்ட பரதனே மூத்தவன், அவனுடைய பெயராலேயே இந்த அற்புதமான நாடு பாரதம் என அழைக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடுகிறது. இதனையே மேற்கண்ட : ".. .பாரத்துத் தலைவன் நார நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில் கலாவத் தன்ன தோளே; -.. ." அடிகளில் உள்ள நார நன்னன் என்பதும் உணர்த்துகின்றது. எனவே செங்குட்டுவனும் கரிகால்சோழனும் கரவேலனும்; அவர்களுக்கு எதிரிகளான இராவணன் மற்றும் துர்யோதன பரசுராமாதியரும் பழந்தமிழ்ப்பாடல்களில் மட்டுமல்லாது பிற வேத இதிகாச புராணங்களிலும் பலபெயர்களில் இடம்பெற்று அடையாளப்படுத்த இயலாதவர்களாக உள்ளனர் எனக் காண்கிறோம். நமது இலக்கியங்கள் அடையாளப்படுத்துவோரை உணர்ந்துகொண்டால் வரலாற்றைத் தெளிவாக உணர முடியும்; முடியாதோக்கு வேத, இதிகாச, வடமொழி இலக்கிய புராணங்களும் உணர்த்தத் தயாராக உள்ளன செந்தமிழ் முருகனின் வரலாற்றைச் சிலப்பதிகாரம் பரிபாடல் முருகாற்றுப்படை கலித்தொகை போன்றவற்றிலிருந்து பிரித்துப் புராணமாக்கி, வடமொழியில் மாற்றப்படதே குமாரசம்பவம். சிலம்பில்; கண்ணகிக்கதை புகுத்தப்பட்ட ஒன்று. மலைநாடன் செங்கோட்டு ஐயன்-சிலம்பன் செங் கோடனின் வரலாற்றை ஆய்வுசெய்த மேலைநாட்டினர்; தங்களுக்கு இசைவான கருத்துக்களைக்கண்டு திகைத்திருக்க வேண்டும். இதனால் அவனது தந்தையை மறைத்து; ஆங்கிலநூல்களில் செங்கோடனின் பிறப்பை இழிவுபடுத்துவதைப் பிராமணர் ஊக்கப்படுத்தினர். பாவையின் மகன் செங்குட்டுவன்; வஞ்சிக் கோன்; திருமா வின் மகள் ஆதி மருதியின் கணவன் ஆட்டனத்தி, உருத்திர சூரர்க்கு எதிரி, அஞ்சன ஏயன், அனுமன், தழும்பன், நல்லியற்கோடன், நன்னன்சேஎய் நன்னன், முருகன், புரூரவன், குசிகாஸ், அங்கி, சேஎய், செவ்வாய், கந்தன், செவ்வேல், செங்குந்தன், செங்கோடன் எனப் பல பெயர்களில் குறிக்கப்பட்டான். வடமொழியில் கந்த புராணத்தில் தேவ காண்டம் அத். 6 மற்றும் தக்ககாண்டம் அத். 6,7ல்; பாவையைக் காதலித்து; திருமண-கன்யாதானத்தின்போது ஏமாற்றி ஓடிவிட்ட செங்குட்டுவனின் தந்தையின் நடத்தைகண்டு; தக்கன்(இளஞ்சேட்சென்னி) தவிப்பதைக்காணலாம். தக்கனின் யாகம் குறித்து அகநாநூறு- 13, புறநாநூறு- 43 போன்றவை தெளிவாக உணர்த்துகின்றன. அனைத்து வடமொழி நூல்களிலும் அடித்தளமாக; பிரளய மாற்றமாகச் சிறுசிறு திருத்தங்களுடன் இவை இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம்: “ஆறிரு மதியினும் காருகர் அடிப்பயின்று, ஐந்து கேள்வியும் அமைந்தோன் .. ." "வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி, "அஞ்சில் ஓதி அறிக"எனப் பெயர்ந்து.."எனவும்; குறிஞ்சிப்பாட்டில் ஆரியவரசன் பிரகத்தனுக்குக் கரிகால் சொன்னதாக: " ..பெருந்தகை"அம்சில் ஓதி அசைவல்" எனக் கபிலர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கன. கண்ணகி; செழியனின் அவையில்; கணவன் கள்வனல்லன் என நிறுவி, அறிவுரையும் படிப்பினையும் உரைக்க; தவறை உணர்ந்தவுடன் செழியன் இறக்கவில்லை. 'ஐந்தில் ஓதி அறிக' என அறிவுறுத்தி எச்சரித்து; காருகரான பஞ்ச அங்க கணிதத்தில் சிறந்த; கைக்கொள் பாசபடை- தொல் அறிவாளர் வேளிர்படையினரால் பாடம் புகட்டப்படும் என உணர்த்துவதும்; அகத்தியமும், ஐந்திரமும், பயின்ற பாவையின் கூற்றே. அமணரின்; தொழிலை அடிப்படையாகக் கொண்ட பகுப்புமுறைக்கு மாறாக; அசீவகத்தில் (கரவேல்) குந்தகுந்தாச்சாரியும், உமாவும்; உணர்வு, அறிவு அடிப்படையில் உயிர்களை ஆறு பிரிவாக்கியதையும் காண்கிறோம். தொல்காப்பிய மரபியலிலும் இதுவே உள்ளது. மேலும் பரணரின் புறநாநூறு- 341ம் உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே; மனு நீதியில் பெண்களுக்குக் கல்விபயிலும் உரிமை தடைசெய்யப்பட்டது. 'ஐ-இருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலர் உண்கண்' - என ஆயிரம் குடியரசுகளை வடிவமைத்துத் தலைமை ஏற்று நடத்திய கரிகாலனின் மகளைச் செங்குட்டுவன் மணந்த தகவல் குறிப்பிடப்படுகிறது. திருமால் குறித்த பரிபாடல் 13: 'ஞாயிரு: பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய' கையினனாகக் குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். 'மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த அறிதுயிலோன்' திருமால் கரிகாலன்; 15ம் பாடலில் தமிழ்வளர்த்த புலவர்கள் வாழ்ந்த குன்றுகள் பல எனினும் அவற்றுள் மிகச்சிறந்ததாகத் தனது தாய்மாமன் மகன் கரவேலனுடன் இணைந்து; 'வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்த் தாங்கும் நீள்நிலை ஓங்கிருங் குன்றம்' என வேங்கடம் விளங்கியதைக் காண்கிறோம். வேங்கடக்குன்றம் ஏறுவது எளிதல்ல எனினும் மால் இருங்குன்றம் அடைதற்கு எளிது எனக்குறிப்பிடுவதையும் காண்கிறோம். "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு லார்கோமான் இந்திரனே சாலும் கரி" - திருக்குறள். புறநாநூறு- 228: அய்யூர் முடவனார்; கிள்ளிவளவன் குறித்து: "கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! இருள்தினிந் தன்ன குரூஉதிறள் பரூஉப்புகை அகலிரு விசும்பின் ஊன்றுஞ் சூளை நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே! அளியை நீயே; யாங்கா குவைகொல்? நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன்; ஆதலின் அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் இருநிலம் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?" இந்தப் பாடலுக்குச் சரியான பொருளையொ வரலாற்றையோ எவராவது வெளிப்படுத்தியுள்ளனரா? குறிப்பில் கிள்ளிவளவன் எனவும் பாடலில் நெடுமாவளவன் எனவும் உள்ளது; கரிகால் வளவனைப் பல பெயர்களில் குறிப்பிடக் காரணம்; எப்படியாவது வரலாற்றை மறைத்துவிட வேண்டும் என்பதே. தனது சிறப்புமிக்க படைகள் அனைத்தையும் திரட்டி; சூரியன் போன்ற அவன் படைகளைப் பரப்பி உலைகையே தன்வசப் படுத்துவது போல இந்திரனின் தேவருலகின்மீது போர்தொடுக்கச் சென்றுள்ளான். ஈமத்தாழி செய்வோனே; உன்னைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது. கரிகால்வளவனாலும் அவனது பெரும்படையினராலும் போரில் இறப்போர்க்கு ஈமத்தாழி செய்துமுடிக்க உன்னால் முடியுமோ? அதுவும் "இருநிலம் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?" என்பதே பொருள். இப்பாடலில் 'எனையதூஉம்' என உள்ள சீரின் எழுத்துக்கள் சரியாக அமையவில்லை எனத் தெரிகிறது. சிலரது (கரிகால் வளவன் இறந்துவிட்டான் எனும்) உரையைக் காணும்போது புலவரின் வருத்தத்தைவிட நமது வருத்தம் அளவற்றதாகிறது. 17ல் கரிகாலனின் சோழர்குடியினர் வேள்வியில் நிகழ்ந்த பூசல்களால் நாட்டைநீங்கிக்காடுசேர்ந்ததை: 'வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் திசை நாறிய குன்றமர்ந்து ஆண்டுஆண்டு ஆவி உண்ணும் அகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோய் உம்பர் இமைப்பு இறப்ப தேயா மண்டிலம் காணுமாறு இன்று' நிலவச் செய்த செங்குட்டுவனையும் காண்கிறோம். 18ம் பாடலில் சுராபாணத்தைப் பெருக்கிப் படைவீரர்களிடையேயும் மக்களிடையேயும் பூசலை விளைவித்த கொள்ளையர் சூரர் கூட்டத்தாரைத் தனது குன்றிலிருந்து கடல் எல்லைவரை துரத்திய செங்குட்டுவன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 19ம் பாடலில்; 'அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரும் இயைகஎன ஈத்தநின் தண்பரங் குன்றத்து' அனைத்துப் புலவர்களும் சோழபாண்டியரும் கலந்து இயங்க வழிவகை செய்த செவ்வேல் செங்குட்டுவனைக் காணப் பாண்டியன் தனது மனைவியருடனும் பிற அனைவருடனும் வந்து பாடி வலம்வந்த தகவலும்; கலைகள் அனைத்தும் வளர்க்கப்பட்டதோடு வேள்வி குறித்துத் தெளிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டதும்; 68ம் அடியில் பல்லவனும் இடம்பெற்றதையும் காண்கிறோம். மேலும் மற்றுமோர் குன்றில் பூசலை நீக்கி அமைதி நிலவச்செய்ததை; 'எவ்வத்து ஒவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை உடைத்தோய்நீ இவ்வரை மருங்கில் கடம்மர் அணிநிலை' என இடம்பெற்றுப் பாடப்பட்டுள்ளது. அகநாநூறு-61ம் பாடலில் மாமூலனார் பல வரலாற்றுத்தகவல்களையும் கரவேலனையும் வேங்கடமலைப்பகுதியையும் குறித்த தகவல்களுடன் துயரத்தால் வருந்தும் 'நெடுவேள் ஆவிப் பொன்னுடை நெடுநகர்ப் பொதியன்ன' பெண்ணுக்காக; மழபுலம் வணக்கிய மாவண் கள்வர்கோமான் புல்லி கரவேலன் வேங்கடத்தைக் கைப்பற்றியபோதிலும் அங்கேயே இருந்துவிட மாட்டான் என ஆறுதல் மொழிவதைக் காண்கிறோம். இத்தகவல் விசுவாமித்திரரால் குடியமர்த்தப்பட்ட கரவேலன் மீண்டும் மகதத்தைக் கைப்பற்றி துயர்நீர்க்க மீண்டு வருவான் என அவனது மனைவிக்கு உரைப்பதாக உள்ளது. 70ம் பாடலில் காணப்படும் தகவல்கள்; செல்யூக்கஸ் நிக்கந்தனின் தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிடும் "சம்பரன்(பிரகத்தன்) தானவனை 40ம் ஆண்டில் கண்டு கொன்றவன் இந்திரன்-இராமன்-கரிகால்சோழன்?" என்னும் தகவலோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளன; "வெண்வேற் கவுரியர் தொல்முது கோடி முழங்குஇரும் பௌவம் இறங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலியவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே" என இராமாயணக் காட்சியையும் காண்கிறோம். கம்பரின் இராமாயணத்தில்; "நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழு முண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே" என்னும் பாடலில்; "அரக்கர் சேனை நீறாகி அழிந்தது" எனக்கம்பர் கூற; "நீர் எதைச் சொன்னாலும் சொல்லிக்கொள்ளும்; அந்த ராட்சத சேனை எங்கள் சுவாமியின் நீறு பட்டுத்தான் அழிந்தது" என்று தில்லை மூவாயிர பிராமணருள் ஒருவர் திருப்திப்பட்டாராம். நான்காம் பாடலில் இத்திருநாட்டின் 'நடுவண் ஓங்கிய பலர்புகழ் குன்றினொடு' தோன்றி 'பாம்புபடி மதம் சாய்த்த' என எவரெவரோ பிற்காலத்தில் அமணத்தையும் பௌத்தத்தையும் நம்நாட்டிலும் மேலைத்தேய நாடுகளிலும் விரட்டியதைச் செங்குட்டுவன்மீது ஏற்றித் தாங்கள் தப்பிக்க முயன்றதையும் காண்கிறோம். சோதிடத்தில் செம்பாம்பு எனப் பௌத்தத்தையும்; கரும்பாம்பு என அமணத்தையும் குறிப்பிட்டு அவர்களை வீடு-நாடு அற்றோராக்கினர். செவ்வேள் குமரன் செங்குட்டுவன் குறித்த ஐந்தாம்பாடல் முதலாக: 'பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கி சூர்மா முதல் தடிந்து .. .. மாய அவுணர் மருங்கறத் தபுத்த' என கடற்கொள்ளையரை முற்றிலுமாக நீக்கிய தகவுலும்; அலெக்சாந்தனை ஆதி அந்தணன் எனக்குறிப்பிடவும் காண்கிறோம். நூற்றுக்கணக்கான இத்தகைய பாடல்கள் உள்ளதைப் பிண்ணர் காண்போம். எனவே அன்றைய செல்யுக்கஸ்நக்கந்தன் அனைத்துநாட்டு வணிகர்களையும் அச்சுறுத்தும் கொள்ளையனாகக் கடல் வழிகளிலும் வணிகப் பெருவழிகளில் ஆறலைகள்வராக இருந்ததையும்; அவர்களது துணையுடன் அலெக்சாந்தர்கள் நமது நாட்டின் வணிக மையத்தைக் கைப்பற்ற முயன்றதையும் காணத் தவறிவிட்டோம். உலக நாடுகளில் உள்ள அனைத்து இலக்கியங்களிலும் வேதங்களிலும்; நமது வேத இதிகாச புராணங்களிலும் வரலாறு சிதறிக்கிடப்பதையும்; ஏதேனும் ஒன்றிலிருந்து அனைத்து வரலாற்றையும் வெளிப்படுத்திவிடலாம் என எண்ணாது அனைத்தையும் ஆய்வுசெய்து வரிசைப்படுத்திதான் வரலாற்றை வெளிப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தாக வேண்டும். மாபாரதமும் இதனை: 1: 56-33: “இங்கிருப்பவைதான் எங்கும் இருக்கும்; இங்கில்லாதவை வேறு எங்குமே இருக்காது” எனும் வியாசனின் கூற்று; அனைவருக்கும் ஒருசவாலாக முன் நிற்கிறது. விடையும் அக்கூற்றிலேயே மறைந்துள்ளதையும்; சிதறிக்கிடக்கும் பழந் தமிழ்ப்பாடல்களுக்கும் பொருந்துவதையும்; இவற்றின் துணையுடன்; "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" எனத் தலைகீழாகத் தமிழிலிருந்து மாபாரதத்தை உருவாக்கியதை மறைத்துத் திருத்தினர். திருத்தப்பட்டதோடு மாபாரதம் அனைத்தையும் ஒருவரே எழுதவில்லை என்பதைப் பலரது கூற்றுக்களில் உணரலாம். இச்சவாலை ஏற்று; வரலாற்றை வெளிக்கொண்டுவர எந்தத் தமிழனும் முன்வரவில்லை. மாபாரத்தில்; 12ஆண்டு முடிந்து; ஒர்ஆண்டுமறைந்துவாழ்ந்ததாக மாற்றியதை எவரும் உணரவில்லை. என்ன நடந்தது? விடை இராமாயணத்தில் உள்ளது. நாட்டை ஒப்படைக்க மறுத்த இராவண பாண்டிய செழியன்; தென் இலங்கை சென்று மறைந்து வாழ்ந்ததோடு; சோழர் ஒப்படைத்த; நாட்டை ஆளும் தகுதிக்கான ஆரத்தை- சீதையை மறைத்து வைத்தான். வேங்கடத்திருப்பதியிலிருந்து இலங்கை செல்வது எளிதல்ல. பருவமாற்றத்தால்; மழைக்காலத்தில் வனப்பகுதிகளிலும் சேரலவனப்பகுதியிலும் குமரிப்படை உதவியின்றி, கடல்சூழ்ந்த இலங்கையை அடைவதும் எளிதல்ல. 2000 ஆண்டுகற்கு முன் கரிகால்சோழனாலும் செங்குட்டுவனாலும் வாழவைக்கப்பட்டோரால்தான் இன்று தமிழர்கள் நெறுக்கப்படுகிறார்கள். கரிகால்சோழனும் செங்குட்டுவனும் என்ன செய்தனர் என்பதைப் பத்துப்பட்டுக்கள் மிகநீண்ட பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விரிவாகக் காணலாம்: ".. .வடிமணிப்புரொவியொடு வடவர்வீழ .. முனைகெடச்சென்று.. . அருங்கடிவரைப்பின் ஊர்கவின் அழியப் பெரும்பாழ்செய்தும் அமையான்;மருங்குஅற; மலை அகழ்குவனே கடல்தூர்க்குவனே வான்வீழ்க்குவனே வளிமாற்றுவன் என; தான்முன்னிய துறைபோகலின்; பல் ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அறிவாளர் தொழில் கேட்ப வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல்கெடச் சீறி; மன்னர்; .. . மாத்தானை மறமொய்ம்பின் செங்கண்ணால் செயிர்த்துநோக்கி; புன்பொதுவர் பொலிவுபொன்ற இருங்கோவேள் மருங்குசாய காடுகொன்று நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கி .. ..கோயிலொடு குடிநிறீ இ .. . நடுவு நின்ற நல் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வ தூஉம் மிகை கொளாது கொடுப்ப தூஉம் குறை படாது .. . பற்பல மொழிபேசுவோர் உறையும் பட்டினம். .. மொழிபல பெருகிய பழிதீர் தேஎயத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்துஇனிது உறையும் (கலப்பிரர்) முட்டாச் சிறப்பின் பட்டினம். .." என அனைவரையும் அனைத்தையும் மாற்றி; கலப்பிரர் குடியரசைத் தோற்றுவித்து; இந்திர விழாக்கண்ட திருமாவளவன் கரிகால்சோழனான தமிழனை மறந்ததாலேயே அவனால் குடியமர்த்தப்பட்ட வடுகர், மோரியர், குறும்பர், பிராமணர், அந்தர ஆந்தரர், கருநடர், ஒளியர், சிங்கள இலங்கையர் என அனைவரையும் ஒற்றுமையுடன் அந்நிய கிரேக்க ரோம எகிப்திய அடிமையர் என அனைவரிடமிருந்தும் காத்து ஒற்றுைப்படுத்தியதைக் காண்கிறோம். வாழவைத்த தமிழினத்தின்மீதுதானே இன்று அனைவரும் பாய்கின்றனர். இந்தியாவுக்குள் எங்கிருந்து ஒற்றுமை வளரும். நம்மால் வாழவைக்கப்பட்டோர்தானே நம்மை நெறுக்குகின்றனர். சிலப்பதிகாரத்தில் குந்தி- கவுந்தி அடிகள்- பெண் துறவி: "வானம் பொய்யாது; வளம்பிளைப்பு அறியாது; நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு;என்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ?" தவத்தோர் அடைக்கலம் தான்சிறிது ஆயினும் மிகப்பேர் இன்பம் தரும்;அது கேளாய்; காவிரிப் படப்பைப் பட்டினம்"......................என சோழநாட்டுப் பெண்டிர் புகழப்படுகின்றனர். மேலும் சிலப்பதிகாரம்: "வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கண் காலதர மாலிகை இடங்களும் கயவாய் மருங்கின் கான்போர் தடுக்கும் பயனற அறியா யவணர் இருக்கையும் கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வளர்ப்பும்" நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய; மலைப்பல் தாரமும், கடற்பல் தாரமும், வளம்தலை மயங்கிய துளங்குகல -இருக்கை அரசுஇளங் குமரரும், உரிமைச் சுற்றமும்; பரத குமரரும், பல்வேறு ஆயமும்; ஆடுகள மகளிரும், பாடுகள மகாளிரும்; தோடுகொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்- விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தன்பதம் கொள்ளும் தலைநாள் போல, வேறுவேறு கோலத்து, வேறுவேறு கம்பலை, சாறுஅயர் களத்து வீருபெறத் தோன்றி- கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப-" எனக் கலப்பிரர் ஆட்சியைத் தோற்றுவித்த கரிகாலனைக் காண்கிறொம். கிரேக்கத்திலிருந்து அலெக்சாந்தர்கள் இங்குவந்து பலகாலம் ஆட்சிசெய்தார்கள் என்று எழுதினால் அதனைத் தமிழனும் நம்புகிறான். ஆனால் தமிழரான கரிகால்சோழனும் அவனது தங்கை மகன் செங்குட்டுவனும் எகிப்திய அடிமைகளையும் அங்குச்சென்று விடுவித்தார்கள் என்றால் நம்பமறுக்கிறான். அந்த அளவுக்குத் தமிழனின் மண்டையில் மதங்கள் குடியேறி இருக்கின்றன. புத்தன்தான் கரிகால்சோழன் என்றும் கிருத்துதான் செங்குட்டுவன் என்றும் செங்குட்டுவனின் தாய்தான் கன்னியாகுமரி, கன்னிமரி என்றும் அவளது குமரன் செங்குட்டுவன்தான் குமாரன் என்றும். வேளிர்குலப்பெண்ணான அவனது தாய்தான் வேளான்கன்னி என்றும் அவளது அண்ணன்தான் திருமால்- கரிகால்சோழன் என்றும்; தாய்மாமன்தான் கலிங்கத்தின் கரவேலன்- கண்ணன் என்றும் தமிழனை எப்படித்தான் நம்பவைப்பது. இறகுகளுடன் இருக்கும் பெண்தெய்வங்களை வேதங்களிலும் புராணங்களிலும் சிலை ஓவியங்களிலும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல. தமிழ்ப் பெண்கள்தான். அந்நிய அலெக்சாந்தர்கள் காலத்தில் கெடுக்கப்பட்டவர்களே படிம வடிவில் காட்டப்பட்டனர். அவர்களது துயரைத் துடைக்க வெகுண்டெழுந்தவர்களே கரவேலனும் கரிகாலனும் செங் குட்டுவனும். இமையம்வரை மட்டுமல்ல; எகிப்து கிரேக்கம் ரோம் என அலெக்சாந்தர்களும் அவனது கூட்டத்தரும் எங்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினரோ அங்கெல்லாம் சென்று செழு வில் கயல் புலி பொறித்து வந்தவர்கள். சிங்கத்தலைத் தூண்களில் பொறித்திருப்பவை பியதசி கரிகால்சோழனின் ஆணைகளே. அவற்றைப் பொறிக்கக் கட்டளையிட்டவன் சேனாதிபதி செங்குட்டுவன். போறிப்புக்களை முன்நின்று வெட்டுவித்தவன் செங்குட்டுவனின் தந்தை; ஆனால் அசோகன் எனக் கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டனர். அதனையும் தமிழன் நம்புகிறான். காஞ்மாநகரில் சிங்கத்தலைத்தூண் இருந்ததாகச் சீனப்பயணி யுவான்சுவங் குறிப்பிட்டபோதிலும் உண்மை வெளிப்பட்டுவிடுமோ எஞ்கிற அச்சத்தால் 8ஆம் நூற்றாண்டில் அதனை உடைத்து நீக்கிவிட்டனர்; இங்குமட்டுமல்ல பிற மாநிலங்களிலும் பல தூண்கள் உடைத்து நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் தமிழனின் கட்டளைகள் என்பதே. செங்குட்டுவனின் தந்தையை வரலாற்றில் இல்லாத அசோகன் எனப்புகுத்தினர்; மேலும் முசுகுந்தன் பரசுராமன் தித்தன் நன்னன்; நந்தன் என்பதை நன்னன் என மாற்றிவிட்டனர்; நன்னன் சேய்நன்னன் என்பது நாரநன்னன் எனவும் உள்ளது; அதுவே நரநாராயணன் எனவும் புராணப் படிமமாகிவிட்டது. புத்தனின் சீடனாகக் காட்டப்படும் அநந்தன் செங்குட்டுவனே; நந்தனல்ல அநந்தன் எனப்பட்டான். கங்கைநீரைத் தெற்கே செல்லவிடாமல் கங்கைகவர்ந்தவர்கள் நந்தர்களே. நந்தர்குறித்த தகவல்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ளன. மாபாரதத்திலும் கங்கைநீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தவன் பீஷ்மன் என்பதை மாபாரதத்தின் தொடக்கத்திலேயே காணலாம். செங்குட்டுவன் நக்கந்தன் அல்ல கந்தன் எனப்பட்டான்; மேலும் அவனது தந்தையை இரும்பொறை என்பர்; இரும்பொறையின் மகன் செங்குட்டுவனை இளஞ்சேரல் இரும்பொறை எனவும் குறிப்பிட்டனர். வரலாற்றை மறைக்க எப்படியெல்லாம் பாடுபட்டனர் என்பதைக் கந்தனின் பிறப்பு குறித்த திரு முருகாற்றுப்படை, பரிபாடல் கலித்தொகை ஆகியவற்றிலும் காணலாம்; 70 பரிபாடல்களில் 20 மட்டுமே கிடைத்துள்ளன. கந்தபுராணம் ஸ்ரீகந்த மகாபுராணம் சிவபுராணம் போன்றவற்றிலும் செங்குட்டுவனின் வரலாற்றைக்காணலாம். இராமாயணத்தில் கரிகால் இராமனின் தம்பி இலக்குவனாகவும் அனுமனாகவும்; மாபாரதத்தில் அர்ச்சுனனாகவும் காணலாம். அவனது தந்தையைப் மாறீசனாகவும் பரசுராமனாகவும் துர்யோதனனாகவும் காணலாம்; வரலாற்றை மறைத்து உத்தமனாக்கிக் காட்டப் பீஷ்மனாகவும் புகுத்தியதைக் காணலாம். தமிழனின் வரலாறு எங்கெல்லாம் எப்படியெல்லாம் மறைத்தும் மாற்றியும் அழித்தும் சிதைத்தும் நீக்கப்பட்டன என்பதைக் காணவேண்டுமா? தேடுங்கள் பழந்தமிழ்ப் பாடல்களில்! கண்டடைவீர்கள்!!

No comments:

Post a Comment