Monday, 20 October 2014

கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள்

கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள் அயோத்திதாசர் 1845 - 1914; ராபர்ட் கால்டுவெல் 1814 - 1891; பௌத்தரான அயோத்திதாசர் மரபான தமிழ்க்கல்விபயின்ற சித்தவைத்தியர். அயோத்திதாசரின் சிந்தனைகள் 199ல் ஞான அலாய்சியஸ் தொகுப்புகளாக மூன்று வெளியிடப்பட்டன; தமிழன் என்ற இதழில் 1907 முதல் 1914 வரை அவரால் வெளியிடப்பட்டதன் தொகுப்பே அது! கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை மூன்றாம் பதிப்பாகப் பதிப்பித்த சென்னைப்பல்கலைக்கழகம் 1913ல் அரசியல்நோக்கங்களுக்காக அதன் மூலப்பிரதியிலிருந்து 160 பக்கங்களுக்குமேல் அடிக்குறிப்புக்களையும் நீக்கி வெளியிட்டனர்; பல ஆண்டுகள்வரை இதனை எவரும்கண்டுகொள்ளவே இல்லை. முதல் இரண்டுபதிப்புக்களும் கால்டுவெல்லாலேயே வெளியிடப்பட்டவை! நீக்கப்பட்ட பகுதிகளின் கருத்துக்களும் அயோத்திதாசரின் தொகுப்புக்களில் உள்ள கருத்துக்களும் ஒப்பிட்டுக்காணத்தக்கவை. ஞானசம்பந்தரின் காலத்தையும் சைவசமயத்தின் துவக்கத்தையும் காலத்தால் பிற்பட்டவையெனக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். திராவிடருள் உயர்சாதினரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒரே வரிசையில் வைத்துள்ளார். அவர்களுள் பழமையான பறையர் இனத்தாரை பழம்திராவிடர் என எழுதியுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரையும் தலித்துகள் எனக்கொள்ளலாமா? ஆங்கிலேயரின் 1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கணக்கெடுப்பின்போது தங்களை இந்துக்கள் என்று பதிவுசெய்யாமல் 'ஒரிகினல் டமில்ஸ்' ஆதித்தமிழர் / பூர்வதமிழர் எனப் பதிவுசெய்யுமாறு விண்ணப்பித்தார். ஆனால் அது அழுத்தம்பெறாமல் விடப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு பிறசாதியினர் தங்களை நால்வருணப் பாகுபாடுகளுக்குள்ளும் புராணமரபுகளுக்குள்ளும் இருப்போராகச் சான்றுகளுடன் காட்டி அச்சிட்டு; அவற்றை அரசிடம் கொடுத்து இந்துமதத்துக்கு உட்பட்டவர்களென உரிமைக்கோரிக்கைகளை வைத்தனர். 1885 முதல் அயோத்திதாசர்; கிருத்துவப்பாதிரியார் ஜான் ரத்தினம் என்கிறவரால் தொடங்கப்பட்ட திராவிடர்கழகம் என்ற அமைப்பில் திராவிடபாண்டியன் என்ற இதழை நடத்தினார்! பின்னர் திராவிடன் என்ற அடையாளத்துடன் செயல்பட்டார். 1891ல் நீலகிரியில் திராவிடமகாசபை என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழன் என்ற உணர்விலிருந்து திராவிடன் என்ற அடையாளத்துக்கு ஏன் மாறினார் என்பது அன்றைய சூழலிலேயே காணவேண்டியதாக உள்ளது. கால்டுவெல்லின் திராவிடன் என்கிற சொல் பலதளங்களில் முன்நிலைபெற்று அரசின் ஆதரவும் இருந்ருக்கவேண்டும் எனத்தெரிகிறது. பறையரை திராவிடகுடியினருள் பழைமையானோர் எனக்குறிப்பிட்ட கால்டுவெல் பிராமணரல்லாதோரை நீக்கிப் பிறர் அனைவரையும் திராவிடகுடியினர் எனக்குறிப்பிட்டதும் அத்தகையோர் தங்களைத் திராவிடருள் உயர்சாதியினர் என நிறுவமுயன்றதும் நோக்கத்தக்கது.திராவிடருள் சூத்திரர் என்போர் பலசாதியினர் - சாதிபேதமுள்ள திராவிடர் எனவும் பிராமணரால் வகுத்தளிக்கப்பட்ட சாதி சமய ஆசாரங்களை ஏற்று நன்பிராமின்ஸ் என சாதிபேதமுள்ள திராவிடர் குறிப்பிடுவதைப் பயணற்றது எனக் குறிப்பிட்டார். பிறரை - தங்களை சாதிபேதமற்ற திராவிடர் எனவும் குறிப்பிட்டார்! அவரது காலத்திலேயே சிலர் தங்களை ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டுக்கொண்டனர். தீவிர பிராமண எதிர்ப்பைத் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தினார்! பூர்வத்தில் பௌத்தராய் வாழ்ந்தோரைத் தாழ்ந்தசாதியினரென இழிவுபடுத்திய பிராமணரே; பௌத்தரின் அடையாள மேன்மைகளைத் தங்களுடையதாக்கிக்கொண்டனர் என்பதை வலியுறுத்துவதிலேயே கருத்தாக இருந்துள்ளார். பிராமணரை ஒட்டியே பிற திராவிடரின் சடங்குகள் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பிராமண எதிர்ப்புக்கான வேர் நமது மரபிலேயே இருப்பதாகவும் குறிப்பாகப் பறையர் வகுப்பாரிடம் மேலோங்கி உள்ளதாகவும் அவரது எழுத்துக்கள் உணர்த்துகின்றன! பிராமண எதிர்ப்பில் பறையரே முன்நிலைவகிப்பதாக உரிமைகோவதை அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. இத்தகைய பறையர்கள் குறித்த கால்டுவெல்லின் தகவல்கள்தான் அவரது நூலின் மூன்றாம் பதிப்பில் சென்னைப்பல்கலைக்கழகத்தாரால் நீக்கப்பட்டு வெளிவந்தது! கால்டுவெல்லின் "பூர்வகுடிகளான அவர்கள் மதிப்புடையோராகவே இருந்தனர்; பின்னர்வந்தவர்களால் வெற்றிகொள்ளப்பட்டே அடிமைகளாக்கப்பட்டார்கள்" எனப் பறையர்களைமட்டுமல்லாது பள்ளர் புலையர் என மேலும் சிலகுடியினரையும் குறிப்பிடுகிறார். மேலும் "பலதலைமுறைக்குமுன் இந்தியாவுக்குவந்த ஐரோப்பியர்கள் பறையர்களைப்பற்றி மேலோட்டமான ஊகங்களைக்கொண்டு முடிவெடுக்கும்படி; தவறான நடத்தையில் பிறந்தவர்கள்; குற்றநடவடிக்கைகளுக்காக சாதிவிலக்கம் செய்யப்பட்டனர் போன்ற கருத்துக்கள் பிராமணராலும் மேல்நிலை வகுப்பாராலும் கட்டமைக்கப்பட்டு பரப்பட்டது" என்றகருத்திலும் இதனைக் காண்கிறோம்; திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலிலும் இதேகருத்தைக் குறிப்பிட்டுள்ளார். கால்டுவெல்லின் கருத்துக்களை விரிவுபடுத்துவனவாக அயோத்திதாசரின் கருத்துக்கள் உள்ளன! பிராமண ஆணுக்கும் பறையர்குலப் பெண்ணுக்கும் பிறந்தவரே திருவள்ளுவர் என்று பரப்பட்ட கட்டுக்கதையை அயோத்திதாசர் முன்வைக்கிறார். தமிழ்கற்றுக்கொள்ள முயன்ற இரு ஐரோப்பியர்களிடம் பறையர்மீது வெறுப்புக்கொள்ளும்படி தூண்டிய பிராமண ஆசிரியர்களைப்பற்றியும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். பல்வேறு கோயில்களில் பூசாரிகளாக இன்றும் இருப்பதையும், திருவாரூர் யானையேறும் பெரும்பறையன் பழக்கமும், மாறியம்மன் விழாக்களில் முன்னுரிமை பெறுவதையும், அயோத்திதாசர் எடுத்துரைக்கிறார். இவற்றைக் கால்டுவெல்லும் உணர்த்துவதோடு அம்மனுக்குத் தாலிகட்டும் பறையன் கதையையும் குறிப்பிடுகிறார். சேரிக்குள் நுழையும் பிராமணனைச் சாணிச்சட்டியைப்போட்டு உடைத்து விரட்டும் சடங்கையும் சூழலோடு விரிவாக அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். பழங்காலத்தில் அவர்களது முன்னோர் மன்னர்களாக இருந்ததையும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதையும் குறிப்பிடும் கால்டுவெல், மன்னரின் பெயரைக்குறிப்பிடவில்லை; ஆனால் அம்மன்னனின் பெயர் நந்தன் எனஅயோத்திதாசர் தனது இந்திரர்தேச சரித்திரம் என்ற நூலில் குறிப்பிட்டு விளக்குகிறார். இந்தச்சாதியினர் பிரம்மனின் கட்டுக்கதையில் எந்த இழிவான உறுப்பிலிருந்தும் பிறப்பிக்கப்படவில்லை எனக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இக்கருத்தே இவர்கள் இந்து அல்லாதவர்கள் சாதியற்றவர்கள் போன்ற கருத்துக்களை அயோத்திதாசரிடம் உருவாக்கியிருக்கலாம். தஞ்சைப்பகுதியில்தான் நந்தன் என்ற மன்னன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்ற கர்ணபரம்பரைக்கதை வழங்கப்படுகிறது. இக்கதையைத் தஞ்சை வேதநாயகம் சாஸ்த்திரியும் காலின் மெக்கன்ஸிக்கு வழக்காறுகள் குறித்துத் தெரிவித்த தகவல்களில் குறிப்பிட்டுள்ளார். [கால்டுவெல்லும் இதனை அறிந்தே இருப்பார் என்பதை நாம் உணரலாம். ஆயினும் நந்தன் என்ற மன்னனின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டதன் காரணம்; தொடக்கத்தில் இந்தியத்தமிழருக்கு எதிராகச்செயல்பட்ட நந்தர்கள் குறித்த தகவல்கள் தொல்தமிழ்(சங்க)ப் பாடல்களில் உள்ளன என்பதே! மேலும் சைவரால் நந்தனின் கதையொன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது!] குறிப்பு: ஸ்டாலின் ராஜாங்கம் என்பவரால் காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கமாகும். அடைப்புக்குள் கொடுக்கப்பட்டவை மட்டுமே எனது கருத்தாகும். எனது கருத்தாக் வரலாற்றின் பின்னணியில் குறிப்பிடத்தவற்றைக் காண்போம். இக்கட்டுரையில் நந்தன் எனக்குறிப்பிடப்படுபவர் அலெக்சாந்தனே. அலெக்சாந்தனின் கூட்டத்தர் அல்லது அலெக்சாந்தனின் கூட்டத்தருக்கு உதவிய ஆரியவரசன் பிரகத்தனின் கூட்டத்தரே பறையரென மாற்றப்பட்டதாகத்தெரிகிறது. முகநூலில் குறுந்தொகை - 7ஆம் பாடலின் "கயிறாடு பறை" என்ற எனது இடுகையை இக்கட்டுரையுடனும் எனது கருத்துக்களுடனும் சேர்த்துக்காணவேண்டுகிறேன். அலெக்சாந்தனுக்கும் இந்த ஆரியவரசனின் மனைவிக்கும் பிறந்த பரசுராம பிம்பிசாரனின் வரலாற்றையும் இதனுடன் சேர்த்தே காணும்படி கோருகிறேன்.

No comments:

Post a Comment