Sunday, 8 December 2013

விரதியர் - பார்ப்பனர் ஸ்ரீரமகிருஷ்ணபரமஹம்சன் விரதியர் விரதியர் என்போர் தமிழ் அந்தணரைவிடத் தாழ்ந்தவர்கள்; மாணவ- பிரமச்சரிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்காததால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நிலத்தை உழுது பண்படுத்திப் பயிரிடுவதில்லை. விரதியரை யார் எனத் துல்லியமாகக் காண்பது எளிதல்ல. ஆரியர்களா? ஆரியராக ஒருபோதும் இருந்திராதவர்களா? அந்தணரால் தங்களது சமயத்துக்குள் ஈர்க்கப்பட்ட ஆரியரல்லாதோரா? அறிய இயலவில்லை என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இவர்களை நல்வழிப்படுத்த நான்குவிதமான விரதிய ஸ்தோமாக்கள் கைக்கொள்ளப் பட்டன. 1. எல்லாவிரதியருக்கும் உரியது; 2. பெரும் பாவங்கள் செய்யும் கொடிய அபிசஷ்டர்களுக் கானது. 3. இளம்வயதினராக இருந்து விரதிய வாழ்க்கை வாழ்பவர்கள். 4. வயது முதிர்ந்தோராக இருப்பினும் விரதியவாழ்க்கை ஒவ் ஒன்றிலும் எப்போதும் சொதஸ்தோமா செய்திருக்க வேண்டும். சொதஸ்தோமா குறித்து தந்தியா பிராமணத்தில் உள்ளது. 16 ஸ்தோத்திரங்களும் அனுஸ்டுப மந்திரங்களும் அடங்கியது. பழிபாவங்களை அகற்றும் சக்தி சொதஸ்தோமங்களுக்கு இருப்பதாகக் கருதப் படுகிறது. பின்னர் அவர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். விரத்யத- சுத்திசம்கிரகத்தில் பன்னிரண்டு தலைமுறைக்குப் பிறகும்கூட விரதியர்களைத் தூய்மைப்படுத்த வகைசெய்யப் பட்டுள்ளது. ஆனால் உரிய பிராயச் சித்தங்களைச் செய்யவேண்டும் எனக் குறிப்பிடுவதாகவும் குறிப்பிடுகிறார். கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு குறிப்பிடும் பிரகத்தனான ஆரியவரசன் செல்யுக்கஸ்நக்கந்தனுக்கும் அவனது ஆரியப்படையினருக்கும் தமிழ் பயிற்றுவித்துள்ளனர். அவர்களுடன் வந்துசேர்ந்த மகத விரதியருக்கும் தண்தமிழ் பயிற்றுவித் துள்ளனர். இந்த விரதியரைத் தமிழ் அந்தணர்கள் தங்களுடன் ஒத்தவர்களாக ஏற்காமல் பார்ப்பனராக மட்டுமே ஏற்றுக் கபிலரின் உதவியுடன் பல புலவர்கள் தண்தமிழ் பயிற்றுவித்தனர் என்பதைப் பல தமிழ்ப்பாடல்கள் உணர்த்துகின்றனர். “தொல்காப்பியம்: ”..காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தன பயிற்றல் இறந்ததன் பயனே !.” எனவும்; அகநாநூறு”-41.21-24.புலவர்:பரணர். “ ....நெடுங்கால் மா அத்துக் குறும்பரை பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்.. .. வேங்கட வைப்பிற் கறன் இறந்தோரே“ எனவும்; அகநாநூறு”-பாடல்-220-புலவர்:மருதன் இளநாகனார். ".....” ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ தேரோடு மறுகியும் , பணிமொழி பயிற்றியும் கெட அத்தீயின் உருகெழு செல்லூர்......” எனவும் குறிப்பிடுகின்றன. கபிலரின் குறிஞ்சிப்பாட்டு; ஆரியவரசனுக்கும் பிறருக்கும் தமிழரின் மரபையும் ஒழுக்கங்களையுமே பயிற்றுவித்து அறிவுறுத்துவதாக உள்ளது. பரசுராம துர்யோதனனே இவர்களைச் சிறைப்பிடிக்கக் கரிகால்சோழனின் தந்தையான தசரதன்- உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னியின் படைகளைப் பெற்றுப் பரசுராம துர்யோதனன் சிறைப்பிடித்ததாகச் சிலப்பதிகாரமும் இராமாயணன்மும் குறிப்பிடுகின்றன. இராமாயணம் பரசுராம துர்யோதனனை வைஜயந்தி நகரத்து இந்திரன் எனவும் சிலப்பதிகாரம் முகரி= முக்கண்டி= முகண்டி அரசன் முசுகுந்தன் எனவும் குறிப்பிடுகின்றன. இவர்களுடன் சேர்ந்தே துர்யோதன பரசுராமனும் பயின்றுள்ளான். மாபாரதம் பரசுராமனை இராமன் என்றெ பல இடங்களில் குறிப்பிடுகிறது. தமிழருடன் பயின்ற போதிலும் அவனது பழிவாங்கும் எண்ணம் நீங்கவில்லை என்பதையும்; பின்னர் கபிலர் ஆரியவரசனிடம் எடுத்துறைத்துள்ளார். அது ஒரு தனிப்பாடலாகவே இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாடல்களைத் தொகுத்தோர் அதனையும் குறிஞ்சிப்பாட்டுடன் சேர்த்துவிட்டனர் எனத் தெரிகிறது. குறிஞ்சிப்பாட்டு மூன்று பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. பழந்தமிழ்ப் பாடல்கள் கற்பு குறித்து எந்த விதிமுறையையும் தெரிவிக்கவில்லை. பார்ப்பனரான அந்நிய பிராமனர் வந்த பின்னரே இதுகுறித்த சிந்தனை தோன்றியதைக் காண்கிறோம்: கபிலரிடம் பயின்ற விரதியரையே "படிவ உண்டிப் பார்ப்பனர்" எனக் குறுந்தொகை- 156: "பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ? மயலோ இதுவே" என ஒரு பார்ப்பனன் பண்புமீறிப் பெண்ணைக் கெடுத்து ஓடிவிட்ட காலத்து; கெடுத்தவனைப் பெண்ணுடன் மீண்டும் பிணைக்கும் மருந்து - கரணம் - விதிமுறை உள்ளதா? என வினவக் காண்கிறோம். ஒரு சோழநாட்டு அரசர்குடிப் பெண்ணை ஒரு பார்ப்பனன் கெடுத்து விட்டுப்பிரிந்து ஓடிவிட்டதால் அப்பெண்; தானும் தனது நெஞ்சும் வருந்தப் பாடும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனை உறுதிசெய்ய; பாவையுடன் அந்தப் பார்ப்பனனைச் சேர்க்கத் தூதுசென்ற புலவர் பரணர்: நற்றிணை- 247ல்: " .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல் விருந்திரை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" எனக் குறுந்தொகை 156 குறிப்பிட்ட மருந்தை வேண்டுகிறார். இத்தகைய குற்றங்களுக்கு மருந்து என எதுவும் இல்லை என்பதையும்; பெண்ணை ஏற்காவிட்டால் மரணம்தான் மருந்து என்பதையும் உள்ளுரையாகக் கொண்டனவே இவை. வேங்கடமலைக் காட்டுப்பகுதிகளைத் தாண்டி மகதம் சென்று பொருள் தேடி வருவதாகப் பொய்யுரைத்துத் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் எனப் பல பாடல்கள் உணர்த்துகின்றன. மேலும் அவனைத் "துவர்வாய் நயவன்" எனச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. துர்வாடை கொண்டவன் என அடையாளப்படுத்தி உணர்த்துவதே நோக்கமாகும். மாபாரதத்தில் 'துர்' என்ற முன் ஒட்டுக் கொண்டோரெல்லாம் இத்தகையோரே. அவர்களுக்குச் சந்ததி- வழிமுறை என்பதே இருக்காது என்பதைத் துர்யோதனனே குறிப்பிடுகிறான். துர்நடத்தை கொண்டதாலேயே துர்யோதனன் எனப்பட்டான். புறநாநூறு- 358: புலவர்- வன்மீகி; பல படிமங்களைக் கொண்டது; சோதிடக் கோள்களையும் உள்ளடக்கியது; "பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம் ஒருபகள் எழுவர் எய்தி யற்றே; வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின் கைவிட் டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள் திருவே; விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே" இதுவும் மிகநீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. காஞ்சிப்புராணத்தில்; ஏழுபடைகளை நதிக்ளாகக் குறிப்பிட்டுக் காஞ்சி காமகோடத்தில் இருந்த கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்ததுமல்லாமல் நகரத்தையே அழிக்கமுற்பட்ட பரசுராம துர்யோதனனைக் காணலாம். சோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒரு பகளுக்குள் ஒருமுறை ஆட்சிபெற்றுச் சிறிதுநேரம் அரசனாகிறது. திருவும் அறிவும் என இரண்டையும் ஒப்பீடு செய்கிறது. தவத்தையும் அறத்தையும் வலியுறுத்துவதாகவும் உள்ளது. பெண்ணையும் பெண்ணுக்கே உரித்தான மண்ணையும் அதனைக் காப்பதையும், கைவிடுவதையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. 'ஐ அவி' என்பதும் பல படிமங்களைக் கொண்ட சொல். உலகம் விளைவிக்கும் உயர்ந்த அவி- பொருட்கள் எனவும்; ஐந்து பொறிகளால் நுகரப்படும் அனைத்தும் எனவும்; ஐந்தவித்தல் எனக் குறள் குறிப்பிடும் ஐங்குணங்களையும், அவித்தல் என்பது கடந்து செல்லுதல் என்பதையும் ஐந்தவித்தோரைத் திருமகள் ஒருபோதும் நீங்குவதில்லை எனவும் ஐங்குணங்களை உயர்ந்தனவாகக் கருதிப் பற்றற்றுப் பெற்றோரையும் திருமகள் நீங்குவதில்லை எனவும் பொருள்படுத்துகிறது. நடைமுறையில் அன்றைய வரலாற்றோடு தொடர்புகொண்டு காண்போருக்கு மற்றொரு விதமாகவும் பொருள் தருகிறது. சூரியகுடிச்சோழரால் ஆட்சிசெய்யப்பட்ட நிலத்தைக் கைப்பற்ற எண்ணிய பரசுராம துர்யோதனன்; திசைக்காப்பாளரான ஏழு அரசர்களைத் தன்வசமாக்கிக்கொண்டு சூரியகுலப் பெண், நல்லியற்பாவைக்கே உரித்தான சோழநாட்டைக் கைப்பற்ற வந்தான்; பாவையைக் கெடுத்துக் கைவிட்டு நாட்டைப் பெரிதாக எண்ணிக் கைப்பற்றிக்கொண்டான். பாவை துறவுபூண்டு மேன்மை யடைந்தாள். அவளது மேன்மையைக் கண்டு பொறாமையால் நாட்டைக் கைவிட்டான். துறவு பூண்டு மேன்மையடைய முயன்றான். துறவிகளையும் அமணர், பிர அமணர்= பிராமணர் எனப் பிளவுபடுத்தினான். இல்லறத்தாருக்கே உரித்தான துறவும் சீரழிந்தது, இல்லறமும் பாழ்பட்டது. எழுவரால் கைப்பற்றப்பட்ட நாட்டையும் கசியப அலெக்சாந்தனிடம் ஒப்படைத்ததால் அதுவும் சீரழிந்தது. துறவை மேற்கொண்ட பரசுராமன் துறவிலும் மேன்மையடைய முடியவில்லை. நாட்டையும் கைவிட்டு, பெண்ணையும் கைவிட்டதால் இறுதியில் பாழ்பட்டவன் பரசுராமனே. திருவும் அறமும் அவனைவிட்டு விலகின; எனவும் பொருள் தருகிறது. மாபாரதம்: சாந்திபருவம்: புவியை ஆளும் அதிகாரத்தை (கரிகால்சோழனுக்குத் தண்டனை விதித்து)ப் பெற்றவுடன் பரசுராமன் அதனைக் காசியபனிடம் கொடுத்துவிட்டுக் கானகத்துக்குச் [அமணத்தில் சேர்ந்து தீர்த்தங்கரியான பாவையை நீக்க; பிர அமணரின் ஆதரவைப்பெற்றுத் தீர்த்தங்கரன்=வர்தமான ம(க)ாவீர் ஆகி] சென்றுவிட்டார். பிராமணர்; முறை கேடாக வைசியரின்(விவசாய மற்றும் வணிகரின்)மனைவி மார்களுடன் நடந்து கொண்டனர்; அரசாங்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது; வலிமையானோரால் வலிமையற்றோர் ஒடுக்கப்பட்டனர்; எவரும் எந்தச் சொத்தின்மீதும் உரிமை கொண்டாட முடியவில்லை; கொடியவர்களின் பாவச்செயல்களால் பூமிதேவி[காவிரிப் பாவை= சோழன் மகள்] வருத்தமும் வேதனையும் அடைந்தாள்; விதி முறைகளின்படி, சத்திரியரால் ஆளப்படாததாலும் பிராமணரால் அமைதியும் ஒழுங்கும் குலைந்து மேன்மேலும் மோசமடைந்தது. பூமகள்[சட்சுமி= பூதேவி] திகிலும் பேரச்சமும் அடைந்தாள்; இதனை அறிந்த காசியபர் பூமகளைத் தனது தொடைகளில் (தொடைகளில் பிறந்த வைஷியரின் துணையுடன்) தாங்கிக்கொண்டார்; இதனால் அவள் யுருவி எனப்பட்டாள்; பூமாதேவி அவரது பாதுகாப்பை நாடி; ஒரு மன்னனைக் கொடுக்கவேண்டி: "(கேரலத்தில்) கேஹயர்களின் இனம் சார்ந்த சத்திரியரைப் பெண்களிடையே வைத்துக் காப்பாற்றி வருகிறேன்; மேலும் பௌரவர் வழித் தோன்றலும் (தாதி-வேலைக்காரிக்குப் பிறந்த) விதுரனது புதல்வனும், ரிஷாவத் மலைப்பகுதியில் (இலங்கை) கரடிகளால் வளர்க்கப்பட்டவனுமான (செழியன்= இராவணன்) ஒருவன் இருக்கிறான்; அவன் என்னை(இப்போதைக்கு) பாதுகாக்கட்டும்; பின்னர்(தண்டனைக் காலம் முடிந்து) அன்புள்ளம் கொண்ட பராசரன்[=விசுவாமித்திரனோ?]; அந்தண முனிவனாய் இருந்த போதிலும் ஒரு சூத்திரனைப் போல்; சௌதாசனின்[சந்திரகொற்றனின் தந்தை போரஸ்= பூர்வசிரவசு] வாரிசு[சந்திர கொற்றனு]க்குப் பணிவிடை செய்து பாதுகாத்ததால் சர்வகர்மன் எனப்பட்டான்; அவன் என்னைப் பாதுகாக்கட்டும். (இவ்வாறு மேலும் பலரைக் குறிப்பிட்டு) இவர்களின் சத்திரிய வழித்தோன்றல்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளனர்; பொற்கொள்ளர் மத்தியில் வாழ்ந்துவரும் தியோகரர்கள் (விசுவாமித்திரனின் கால்வழியினர்) என்னைப் பாதுகாப் பார்களானால் நான் நிம்மதியாக இருப்பேன்; அவர்களது தந்தை மார்களும் பாட்டன் மார்களும் பரசுராமனால் (பார்கவன் முசுகுந்த துர்யோதன பரசுராமனால்) வேட்டையாடிக் கொல்லப்பட்டு விட்டனர்; அவர்(சோழர்)களுக்கு நீதிகிடைக்கச் செய்வது எனதுகடமை; கசியபர்(அலெக்சாந்தன்) போன்ற ஒருமாபெரும் மனிதரால் காக்கப்படுவதை விரும்பவில்லை; சாதாரன மன்னனே போதும்; இதனைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டும்" என்கிறாள். பூமிதேவி சொன்னபடி காசியபரும் அவர்களைத் தேடிக்கண்டு அரசர்களாக்கினார்" என உள்ளது. இதில் சந்திரகொற்றன் என்பவன் சந்திரகுப்தன் என மாற்றப்பட்டான்; இதனைத் தமிழ்ப்பாடலில் வடமொழிப் பெயர் எனக் காண்கிறோம். கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்; ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா; கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல் ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன் உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல .. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என; அலெக்சாந்தனுக்கும் அவனது அடிமைப்படைத்தளபதி செல்யுக்கஸ்நிகந்தனின் மனைவிக்கும் பிறந்த அந்நியப்பெண் ஹெலன் என்ற சத்தியவதி மீது ஆசைகொண்டு வடமொழிப் பெயர் பெற்ற சந்திரகுப்த அசுரனின் புணர்ப்பினால்; முதல்மனைவியின் மகன் கரவேலன்= கண்ணன்= திரிசங்கு= சத்திய விரதன்; உரிமையிழந்து தவித்தபோது விசுவாமித்திரன் ஆதரித்ததையும் சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவை மணந்த சேத்சென்னியை ஆதரித்ததால் விசுவாமித்திரனும் தண்டிக்கப்பட்டதையும் மாபாரதமே எடுத்துரைக்கிறது. திரிசங்குவின் உண்மைப்பெயர் கரவேலன் என கல்வெட்டுக்களில் உள்ளது. பலபெயர்களில் குறிப்பிட்டதோடு பல பொய்யுரைகளையும் மாபாரதத்தில் சேர்த்துள்ளனர். 'கிருஷ்ணனின் மக்கள் சராசந்தனால் மதுராவிலிருந்து விரட்டப்பட்டபோது மேற்குப் பக்கமாக நகர்ந்து; துவாரகையில் குடியேறினர்' என்பதை நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் மேற்கோள்காட்டியுள்ளார். இந்தச் சராசந்தனே அமண நூல்களில் புஷ்ய மித்திரனாகக் காட்டப்பட்டானோ? ஜராசந்தனை இரண்டாகப் பிளந்து மாற்றிப்போட்டு வெற்றி கண்ட வீமனே போரவைக் கோ பெருநற்கிள்ளி எனப் பழந்தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேற்கோளாகக் குறிப்பிடும் பாடலை நச்சினார்க்கினியர் எங்கிருந்து பெற்றாரோ? அப்பாடல் பாரதப்போரில் ஈடுபட்ட முசுகுந்த பரசுராம துர்யோதனனைக் குறித்தது: வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் சமதக்கினி என ஒருவனைப் புகுத்தியுள்ளனர். "மறங்கெழு வேந்தன்; குறங்கறுத் திட்டபின் அருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயின் ஐவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிறீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனென துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாஅது பாஞ்சால னொடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பால் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யால்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்து; விசும்பின் இயன்றதா யுலகமு மறிந்தா லதுவே" -பாஞ்சாலம்-திரௌபதி-பெண்ணல்ல-நாடு-திருப்பதி-பாஞ்சாலி; குறங்கறுத்தல்= தொடைபிளத்தல்-பிராமணரைப் பேணும் தொடையிற்பிறந்த வைசியர் தொடர்பை நீக்குதல்; மறங்கெழு வேந்தன்=தருமன்= கரிகால்; சமதக்கினியைப் பேணிய வைசியரின் தொடர்பைத் துண்டித்ததால் சமதக்கினியின் மகன் பரசுராம துர்யோதனன் வெகுண்டு சத்திரியரைப் பழிவாங்கினான் என்றெல்லாம் எங்கெங்கோ செல்கிறது. இடையன் எறிந்த மறம்: பழமொழி நாநூறு -செய்யுள்- 224ல் முடியாத செயலை முடியும் எனக் கூறி இக்கட்டான நிலையில் இருப்பவனை இப்பழமொழியால் குறிப்பார்கள். பெரியாழ்வாரின் பெரியதிருமொழி- "இடையன் எறிந்த மரமே ஒத்திராமே" என்று இக்கட்டிலிருந்து விடுபடவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். சீவகசிந்தாமணி- செய்யுள்- 19. 14: சீவகன் "இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன்" எனத் திருமாலின் அருள்பெறாமல் இருப்பதை நினைவுகொள்வதைக் காட்டுகிறது. இவற்றுக்கான உண்மைப் பொருள் என்ன என அறியாமல் தடுமாறியதாகக் குறிப்பிடும் உ. வே. சா; திருப்பனந்தாள் மடத்தில் ஒரு முதிய இடையரிடம் விளக்கம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். அந்த முதிய இடையர் குறிப்பிட்டது "இடையன் வெட்டு அறா வெட்டு" என்பதாகும். வெட்டப்பட்ட கிளை மரத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும்; கீழே விருந்துவிடாதவாறு வெட்டப்பட்டிருக்கும். அதனால் கிளையும் செத்திவிடாது கிளைத்து வளரும், கால்நடைகளும் அதனை மேய்ந்து பசியாரும்; "கிளையறா வெட்டு". நானும் பழந்தமிழ்ப் பாடல்களில் இதுபோன்ற செய்தி உள்ளதாகப் படித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எந்தப் பாடலில் உள்ளதென்பதை அறிய மீண்டும் எல்லாப் பாடல்களையும் புரட்டிப்பார்க்க நேர்ந்தது. இறுதியில் புறநாநூறு- 58: "நீயே தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீ இ இளையது ஆயினும் கிளையறா எறியும்.. .." என்ற பாடலைப் பிடித்தேன். இப்பாடலின் இடையில் இடம்பெற்ற "இளையது ஆயினும் கிளையறா எறியும்" என்ற அடி, உ. வே. சா அவர்களின் கண்களில் படாமல் போயிருக்குமோ? இந்தப் பாடல் என்னதான் சொல்கிறது. திருமாவளவன்= கரிகால்சோழனின் தங்கையும்; பரசுராம துர்யோதனனால் கெடுக்கப்பட்டுக் கருவுற்று நல்லியற்கோடனான செங்குட்டுவனை ஈன்ற; தாயான நல்லியற்பாவையின் நிலையையும் குறிப்பிடுகிறது. பெண்வழிச்சமுதாயம்தான் அன்று இருந்தது என்பதையும் "கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கள் செல்லாது நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ இளையது ஆயினும் கிளையறா எறியும்" என இந்தியனல்லாத பரசுராம துர்யோதன துவர்வாய் நயவனுடன் தொடர்புகொண்டதால் பெற்ற புதல்வன் சூரியகுலச் சோழரின் வாரிசாக எஞ்சி நிற்பதைக் காண்கிறோம். அகநாநூறு 212 பரணர்: "தாஇல் நன்பொன் தைஇய பாவை விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. . விரவுமொழித் தகட்டூர் வேண்டுவழிக் கொளீஇ மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பொறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முனைப்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய .. .ஆனாது எளியள் அல்லோட் கருதி விளியா எவ்வம் தலைத்தந் தோயே" என செங்குட்டுவன் தனது தாய் பாவைக்காகத் தந்தை துர்யோதனனுக்கு எதிராக அர்ச்சுனனாகச் செயல்பட்டதைக் காண்கிறோம். போர்க்களத்தில் தாயாதி உறவுகள் ஒருபக்கமும் தந்தை துர்யோதனின் உறவுகள் ஒரு பக்கமும் என நின்றபோது தடுமாறியதையும் ஒரு பாடல் காட்டுகிறது. புறநாநூறு 294: “வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக் கண்கூடு அத்த கடல்மருள் பாசரைக் குமரிப் படைதழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து ' இறையும் பெயரும் தோற்றி நுமருள் நால்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு'எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார் நிறைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே" என; மாபாரதப்போர்க்களத்தைக் காட்டும் பல பாடல்கள் உள்ளன. புறம்:336,343,352,354,369 ஆகியவற்றில் பரணர்; மட்டுமின்றி, பெண்புலவர்களும் பாவைக்காக வருந்திப் பாடியுள்ளனர். பரணரின் அகநாநூறு ஆறாம் பாடலில் பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் இடம்பெறுள்ளன. 'ஆக வனமுலை அரும்பிய சுனங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாய்' 'வெய்யோள்' பாவையுடன் காவிரியில் 'பூந்தார் குழைய நெருநல் ஆடினை புனலே' என துர்யோதனனிடம் பாவையின் துயரத்தை நன்கு உணர்ந்த பரணர் அவனது நாட்டுக்கே தூதுசென்றதும், பாவையையும் புதல்வனின் பிறப்பையும் பழித்துரைத்த துர்யோதனனையும் உணர்த்தி; பாவை அவனை நீங்கித் தனது மகன் செங்குடுவனுடன் வாழ்ந்ததை யும்; தனது முதுமைக் காலத்திலும் பாவைக்காக வருந்தும் பரணரின் சலிப்பையும் காண்கிறோம். குறுந்தொகை- 26: கொடியோனான துவர்வாய்நயவன் கெடுத்ததை மறைத்துப் பொய்யுரைத்ததை; பூக்கொய்யும் பெண்டிர்போன்ற தோகையுடைய மயில் இருக்கும் வேங்கை மரங்களையுடைய மலை நாட்டவனின் தந்தையும் அறிவான் என்கிறது. சிலப்பதிகாரம்: ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை, 'சீர்கெழு நன்னாட்டுச் செல்க' என்று ஏவி- தாபத வேடத்து உயிர் உய்த்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர்; சுருளிடு தாடி,மருள்படு பூங்குழல், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண், விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை,ஆடமைப் பனைத்தோள், வளரிள வனமுலை,தளரியல் மின்னிடை, பாடகச் சீறடி,ஆரியப் பேடியோடி; எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈர்-ஐந் நூற்றுவர்;" என பிரகத்தன் முதலானோர் தோற்றொடியதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் இதில் இடம்பெறும் கஞ்சுக மாக்கள் மற்றொரு இடத்தில்: "நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்" எனவும் இடம்பெற்றுள்ளனர். பாவைக்கு எதிராகவும் முசுகுந்தநுக்கு ஆதரவாகவும் பிரகத்தன்; அகநாநூறு- 27ல்: ” 'கொடுவரி இரும்புலி தயங்க; நெடுவரை நாம்அழ .. .பொருட்பிணிச் சென்றிவண் தருமார் செல்ப' என்ப, என்போய்; நல்ல மடவை மன்ற; நீயே; வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை.. .. துவர்வாய் தகைப்பத் “தங்கலர்” ஆயினும், இகப்ப யாங்கனம் விடுமோ? மற்றே - தேம்படத் தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா; பருந்துபட; வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல்; குருதியொடு துயல்வந் தன்னநின் அரிவேய் உண்கண் அமர்ந்த நோக்கே?”எனப் பல ஐயங்களை முன்நிறுத்தி; பாவை அழ பிரிந்துசெல்லும் துர்யோதனனக் காட்டுகிறது. துர்யோதனனுக்கு 'அத்தன்' எனவும் ஒருபெயர் உண்டு; அத்தனுக்கும் பிரகத்தனுக்கும் என்னவேறுபாடு?; சாதத்துக்கும் பிரசாதத்துக்கும் என்ன வேறுபாடோ அதுதான் என்றால் மிகையாகாது. ஒரே தந்தைக்கும் வெவ்வேறு -ஒருத்தி பாப்பாத்தி-பெண்களுக்கும்; பிறந்தனரோ? சிறந்த அந்தணராகக் கருதப்படுபவர் கடைப்பிடிக்கும் ஒழுக்க மேன்மைகள் குறித்தும் பலபாடல்கள் உள்ளன. பிராமணர் என்போர் அப்போது உருவாகவில்லை என்பதும் அமணத்தைப் பரசுராம துர்யோதன மகாவீர் கைப்பற்றிய பின்னரே பார்ப்பனராக ஏற்கப்பட்டோர் தங்களைப் பிராமனராக அறிவித்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை விதியாகத் 'முருகாற்றுப் படை' அடி 177முதல் 189முடிய; தமிழ் அந்தணர் மேற்கொள்ளும் நெறிகள் குறித்து நக்கீரர்: "இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி யருநான் கிரட்டி யிளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" எனக் குறிப்பிடுகிறார். பிராமணர் யார்? சந்திரகொற்றன் மற்றும் சத்தியவதி குறித்துப் புத்தனின் கூற்றாக அம்பத்த சூத்தா மற்றும் லோகிக்க சூக்தா ஆகியவற்றில் உள்ளவற்றைச் சுருக்கமாகக் காணலாம்: "அம்பத்தா! ஒக்ககா(என்னும் சாக்கியகுடியின் அரசன் சந்திரகொற்றன்) தனது ஆசை மனைவி(ஹெலன்- சத்தியவதி)யின் விருப்பப்படி மூத்தமனைவியின் ஐந்துகுழந்தைகள்; ஒக்கமுகா, கரண்டா, ஹத்தினிகா, சினிபுரா மற்றும் ஒரு பெண்(பெயர் இல்லை)ஆகியோரை நாடுகடத்தினார். சாக்கிய ஒக்ககா மன்னனிடம் திசா என்னும் அடிமைப் பெண் இருந்தாள்; அவளுக்குக் கருப்பான குழந்தை(வியாசன்) பிறந்தது. பிசாசைக் கருப்பானவன்-கன்ஹா என்றனர்; அதிலிருந்து தான் கன்ஹயனா எனும் பெயர் வந்தது. அம்பத்தா! இப்போது உனது மூதாதையர் கன்ஹனர்(கங்கர்=கொங்கணர்?) என்பதையும் அவர்கள் சாக்கியர்களின் அடிமைப்பெண் திசாவின் பரம்பரையில் பிறந்தவர்கள் என்பதையும் காண்கிறாய்." என உரைத்து; அம்பத்தா! உனது பரம்பரையைக் கண்டுகொண்டாயா? என வினவினார். அம்பத்தா அதனை ஏற்பதாகச் சொன்னான். அங்கிருந்தோர்; 'அம்பத்தா அடிமைப்பெண் பரம்பையில் வந்ததாக அமணகோதமர் கூறுகிறார்' என இழிவாகப்பேசினர், (லோகிக்கா சூத்தாவிலும் புத்தரை அமணகோதமர் என்றே குறிப்பிட்டுள்ளனர்) அதனை அடக்கிய புத்தர்: "கன்ஹா வளர்ந்து ஒரு பெரிய ரிஷியானான்; தக்கணம் சென்று மந்திரங்கள் கற்றுத் திரும்பிவந்து ஒக்ககா மன்னனின் மகளான மத்ரூபியை(ஒரு நாடு; அதற்கு அரசனாக்க) மணமுடிக்கக் கேட்டான்; அடிமைக்குப் பிறந்தவன் தனது மகளை மணமுடிக்கக் கேட்டதும் கோபமடைந்த மன்னன் தனது வில்லில் அம்பு தொடுத்தான்; ஆனால் அம்பைச் செலுத்தமுடியவில்லை; அதனால் அச்சமுற்ற மன்னன் மத்ரூபியை (நாட்டை)க் கன்ஹாவுக்குக் கொடுத்தான்" என மேலும் விரிவாக உள்ளது. அம்பு என்பது படையையே குறிக்கும் ஒரு படிமம். சந்திரகொற்றனுக்கும் ஹெலன் சத்தியவதிக்கும் பிறந்த துர்யோதனாதியரே பரசுராமன் எனப் பார்கவ பிராமணராக மாபாரதத்தில் புகுத்தப்பட்டனர். முன்னர் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டனர். சந்திரகொற்றனின் முன்னோரைப் பிப்பிலிவன= அத்திமரக்காட்டு மூதாதையர் என்பர். அத்திமாலை சோழரின் பூமாலையாகும்; செங்குட்டுவனுக்கும் அத்தி என ஒரு பெயர் உண்டு. காரணம் சோழ- சூரியகுலப் பெண்ணுக்கும் பார்ப்பனப் பரசுராமனுக்கும் பிறந்தபோதிலும் தனது தாயையும் தனது தாய்மாமன் கரிகால்சோழனையும் சார்ந்தே அவன் வாழ்ந்தான் என்பதாகும். பௌத்த நூல்களில் கௌசாம்பியரை முருடர் எனவும் கள்ளுண்போர் எனவும் குறிப்பிடக் காண்கிறோம். கோசாம்பியரின் தலைவன் அழிக்கும் தொழிலை மேற்கொண்டவனெனக் குறிப்பிட்டுக் கோசர் குடியில் அவதரிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். புத்த சாதகக்கதைகளில் சுரா பானம்= கள் அல்ல; மேலைநாட்டினரின் சோமபானம் போன்றது; அதனை அருந்தக்கூடாது எனப் புத்தர் கோசாம்பியருக்கு அறிவுறுத்திக் கழுவாய்புரிய வேண்டும் என விதித்ததாகவும் உள்ளது. வத்சன் என்னும் அரசன் ஆண்ட நாடு வத்சதேசம் எனப்பட்டது. அவனை முதற்கோசனாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வத்சராசனின் மகனே பெருங்கதையின் உதயணன். பெருங்கதை: "வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்" எனக் குறிப்பிடுகிறது. இதுவும் ஒரு நீண்ட வரலாறுதாண் பிரகத்கதா என்ற குணாட்டியரின் நூலே பெருங்கதை எனப்பட்டது. அந்நூல் முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டது. காரணம் அந்நூல் பிரகத்தனின் வரலாற்றையும் அவனுடன் தொடர்புகொண்டு இந்தியாவை அடிமைகொள்ள நினைத்த அலெக்சாந்தன் மற்றும் துர்யோதனன் ஆகியோரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதென்பதை அதன் பெயரே வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக கொங்குவேளர் என்பவரும் ஒரு பிரகத்கதா நூலை எழுதியுள்ளார். அதன் முன்னுரை, பாயிரம் மற்றும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் காணாமல் போய்விட்டன. கோசம் என்பது உறுதிமொழியைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். ஆயினும் மகாவீரால் கைப்பற்றப்பட்ட ஒரு பிரிவினரான கோசர் என்போர் நல்வழியில் நடந்தோராகத் தமிழ்ப்பாடல்களில் இல்லை. காளிகோயிலிலும் வைரவர் கோயிலிலும் அபிமந்திரித்த நீரைக் குடித்து உறுதிகொள்வது; ரத்தகோசம் என்பது வாய்மையிலும் நட்பைப் பிழையாமல் கடைப்பிடிப்பதைக் குறிக்கும்; ஹஸ்தி கோசம் என்பது யானையை மட்டுமே எதிர்ப்போர்; வீரகோசம் என்பது தன்னை எதிர்க்கும் வீரரை எதிர்ப்போர் எனக் காண்கிறோம். செங்குட்டுவனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வேளிரிடமிருந்து பிரிந்து சென்றோரான கோசர் சேர்ந்துவிட்டனர் எனத்தெரிகிறது. வத்சரை குருகுலத்தின் வழியினர் என்பதை; "சோழன் உய்யவந்தான் குருகுல ராயன்" எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடு கின்றன; பெருங்கதையில்; வத்சராயனின் மறுபெயர் குருகுல ராயன் என்பதாகும்; உதயணனைக் குருகுலக் குருசில் என்கிறது. (4-15: 26-27) "கோடாதுயர்ந்த குருகுலக் குருசில் வாடா நறுந்தார் வத்தவர் பெருமன்" எனக் குறிப்பிடுகிறது. பெருங்கதையில் "ஐம்பெருங்குழுவும் அத்திகோசமும்" என்னும் தொடர் உள்ளது. அத்தி என்பது செங்குட்டுவனுக்கும் பொருந்தும். அத்திமாலையைச் சோழரின் ஆத்திமாலை எனக் குறிப்பிடுகின்றனர். வத்ஸன் என்பது சீனரின் பௌத்த நூல்களில் வம்சன் என வழங்கப்படுகிறது; நமது நூல்களில் வஞ்சன் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். பாண்டியருள்ளும் வத்சராயன் எனக் குறிப்பிடப்பட்ட சாசனங்கள் உள்ளன. கொளுவில் சேரமான் வஞ்சன் எனச் சோழனைச் சேரனாகக் குறிப்பிட்ட புறநாநூறு- 398: "மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர .. .. வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல்லளை போலத் துன்னலம் போகிய பெரும்பெயர் மூதூர்" எனக் குறிப்பிடுகிறது. காரணம் செங்குட்டுவனின் தாய்வழியினர் சேரலத்தினர். புத் எனும் அரபுச்சொல் உருவச்சிலையைக் குறிப்பததென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். பகுத எனவும் காணப்படுகிறது; பகுதகச்சாயனர் என ஒரு கணியர் அறிவாளராக இருந்துள்ளதையும் காண்கிறோம். ஐரோப்பா கிரேக்கம் பிரிட்டன் (கெல்தியர்) நாடுகளிலும் பௌத்தம் இருந்ததென 'கிருத்துவுக்குமுன் பௌத்தம்' நூலில் டோனால்டுமெக்கன்ஸி தவறாகக் குறிப்பிடுகிறார். கரிகால்சோழனின் நெறிகளை ஏற்ற நாடுகளெல்லாம் பௌத்த மதத்தை ஏற்றதாகக் கொள்வது ஏற்புடைய தல்ல. அமணகோதமரின் நெறிகளைக் கைப்பற்றிய ஒரு அடிமை(சிங்களர்)இனம்; பின்னாளில் தோற்றுவித்ததே புத்தம். லோகிக்காசூத்தா: இதில் "அமணகோதமர் ஒரு அர/றகதர்(அறவர்); முற்றும் உணர்ந்து மேலுலகில்(மகதம் மற்றும் கிரேக்கத்தில்) வாழும் தேவர், பிராமணர், மாரர்?(பார்கவரோ?); கீழுலகில்(தென்னகத்தில்) வாழும் அமணர், மன்னர்கள், அந்தணர், மக்கள் ஆகியோரை அறிந்து மற்றவர்களுக்குக் கூறுகிறார்; வழிகாட்டியாக உள்ளார்" என மக்கள் குறிப்பிடுவதாக உள்ளது. "பொருளும் சாரமும் இல்லை; மாற்றம் மட்டுமே உள்ளது"; என்ற புத்தனின் கூற்று மாபாரதத்திலும் உள்ளது; தமிழ்ப்பாடல் ஒன்றில் "நிலையாமையே நிலையிற்று" என உள்ளதே கரிகால்=புத்தனின் கண்டுபிடிப்பு என்பதைப் பல தமிழ்ப்பாடல்கள் உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment