Friday, 26 July 2013

ப்ளுடார்க் மற்றும் மெகஸ்தனிஸ் குறிப்புக்கள்: கிரேக்கர் - அலெக்சாந்தர் - இந்தியா

நம்பிக்கை=குருடு - ராமகிருஷ்ணபரமஹம்சன்
ப்ளுடார்க் மற்றும் மெகஸ்தனிஸ் குறிப்புக்கள்: கிரேக்கர் - அலெக்சாந்தர் - இந்தியா
சந்திரகுப்தனுடன் போரிட்டுத் தோற்ற ஒருமன்னனின் படையில் இருந்தவன் மெகஸ்தனிஸ்; அவனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் நூல் 'இண்டிகா'. எட்டுப்ப குதிகளைக்கொண்ட அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றெல்லாம் ஒரு 19ஆம் நூற்றாண்டுச் ஜெர்மனியன் எழுதிய நூலைக் கொண்டு விருப்பம்போல் எழுதுகின்றனர். மேலும் செல்யுக்கஸ் நக்கந்தனின் தூதனாகச் சந்திரகுப்தனின் அரசவைக்கு அனுப்பப்பட்டவன் மெகஸ்தனிஸ் என ஒரு புரட்டையும் கட்டியுள்ளனர். ப்ளுடார்க் என ஒருவன் அலெக்சாந்தன் குறித்து ஒரு நூலை எழுதியிருப்பதாகவும் உள்ளது. பெரிபுளுஸ் என ஒரு பயணக் குறிப்புநூலை; பெரிபுளுஸ் என்பவனே எழுதியதாகவும் குறிப்பிட்டனர். அவையனைத்தும் புனைவுகளே எனத் தெரிகிறது. ஆயினும் இந்தியாகுறித்துச் சில தகவல்களை வாய்மொழியாகக் கேட்டு, அடிப்படையாகக் கொண்டு மேலும் சில தகவல்களை இந்தியாவிலிருந்தும் தென்னகத்திலிருந்தும் திரட்டி எழுதி; அவற்றின் உதவியுடன் பலவிதமான புனைவுகளை; அலெக்சாந்தன் செல்யுக்கஸ்நக்கந்தன் மற்றும் சந்திரகுப்தன் குறித்து எழுதியுள்ளனர். அவற்றில் சில தகவல்கள் மாறுபட்டவையாகவும் உள்ளன. நம்மவரும் அயலாரின் எழுத்தென்றால் உண்மையென நம்புகின்றனர். அலையலாக வந்த அயலரெல்லாம் எப்படிப்பட்டோர் என்பதை அந்நூல்களில் உள்ள ஒரே ஒரு தகவலால் விளங்கிக்கொள்ளலாம். இந்தியர் எவரும் வாய்மொழி ஒப்பந்தத்தை மீறுவதில்லை; எனக் குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்தங்களை மீறுவதென்பது எகிப்திய கிரேக்க ரோம ஈரானியருக்கு ஒன்றும் சிரமானதல்ல. ஆனால் நமது முன்னோராகக் கருதப்படும் சந்திரகுப்தனும் அவனது இந்தியப்பெண்வழிக் கால்வழியினரும் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் என்பதையும் மேற்கண்ட அனைவரது நூல்களிலும் காண்கிறோம். அதுதான் நமது பெருமை. அதற்கு மட்டுமே கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் குறிப்பிடும் பிற அனைத்தையும் நமது மொழிகளில் உள்ள தொல்தமிழ்ப்பாடல்களிலும், வேத புராண இதிஹாச காப்பியங்களைக் கொண்டுதான் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களது நூல்களில் உள்ளவற்றைத் தமிழில் அறிந்தால் மட்டுமே உண்மைப்பொருளையும் வரலாற்றையும் காணமுடியும். அலெக்சாந்தனின் அடிமைப்படையினரின் தலைவனே செல்யுக்கஸ்நக்கந்தன் எனவும் ஒரு தகவல் உள்ளது. இரண்டு அலெக்சாந்தர்கள் உள்ளனர் என்பதை உணர்ந்து வரலாற்றைக் காணவேண்டும்.
ப்ளுடார்க்கின் அலெக்சாந்தர் குறித்த எழுத்துக்களை ஒரு மாதிரி ஏடாகக் கொண்டு பிறவற்றின் துணையுடன் வரலாற்றைக் காணலாம். சாய்வு எழுத்துக்களில் உள்ளவை நமது கருத்துக்களும் சான்றுகளுமாகும். மேலும் பல தொல்தமிழ்ப் பாடற்சான்றுகளை முன்னரே கண்டுள்ளோம்.
"போரசுடனான போர் மாசிடோனியரின் (ஒரு அலெக்சாந்தனும் அவனது வீரர்களும் மாசிடோனியர்கள்) வீரத்தை மழுங்கடித்தது; முன்னேற்றத்தைத் தடுத்தது."
ஆயினும் மாசிடோனிய அலெக்சாந்தன் தட்சசீலம்வரை முன்னேறியதாகத் தெரிகிறது. அப்போது குழந்தையாக இருந்த சந்திரகுப்தன் சிறுவனாக 6 அல்லது 7 வயதினனாக இருந்தான்; அலெக்சாந்தனைக் கண்டான் எனவும் ஒரு தகவல் உள்ளது. அன்றைய தட்சசீலம் என்பது பஞ்சாப் முதல் கிழக்கே வங்கம் மகதம் கலிங்கம் அங்கம் என இருந்த பகுதிகளாகும். இப்பகுதிகளில் அங்கம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்களே சோழர்கள். மீண்டும் அலெக்சாந்தனால் படைதிரட்டப்பட்டு பஞ்சாபைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால் பஞ்சாபை நீங்கி மகதத்துக்குச் செல்லவேண்டிய சூழல் நேரிட்டதாகவும் தெரிகிறது. மகதம் சென்ற சந்திரகுப்தனின் தந்தை போரசாக இருக்கக்கூடும். அப்போது இத்தகைய தாக்குதல் நடக்கும் என்னும் சூழ்நிலை எதிர்பாராததாக இருந்ததால் அறிவாளர் மட்டுமே இருந்தனர். நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள் என்பதாக எவரும் இல்லை.
மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் மகதத்தையும் கைப்பற்ற முயன்ற அலெக்சாந்தன்; தனக்கு உதவியாக செல்யுக்கஸ்நகந்தன் என்னும் ஒரு மீனவர் கூட்டத்தின் தலைவனை நாடியுள்ளான் எனத் தெரிகிறது. இக்கூட்டம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதில் குழப்பம் உள்ளது. சிலர் செல்யுக்கஸ்நக்கந்தனை கிரேக்கத்தின் அடிமைப்படைத் தலைவன் எனக் குறிப்பிடுகின்றனர். அவனது தலைமையிலான அனைவரும் குள்ளமானவர்கள். அம்பைப் பயன்படுத்துவோர் எனத்தெரிகிறது. அப்படையினரையும் ப்ளுடார்க்கின் குறிப்பில் காண்கிறோம்.
"தங்களது 20000 காலாற்படையினரும், 2000 குதிரைவீரர்களும் ஒரு எதிரிப் படையைத் தோற்கடிப்பது இயலாது என்பதை அலெக்சாந்தனுடன் வந்த படைவீரர்கள் அறிந்திரிந்தார்கள்"; "32 பர்லாங் அகலமும் நூறடிக்கு மேற்பட்ட ஆழமும் கொண்ட கங்கையாற்றைக் கடந்து அக்கரை நெடுகப் படைவீரர்களல் காக்கப்படும் எதிரியுடன் போரிடச்சொல்வது ஒரு சூழ்ச்சியாகக் கருதப்பட்டது. அக்கரையில் 80000 குதிரைவீரர்கள், 6000 யானைகள் எதிர்த்து நிற்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்".
அந்நிலையில் செல்யுக்கஸ்நக்கந்தனால் அலெக்சாந்தனுடன் ஒத்துப்போக முடியவில்லை என்பதால் திரும்பிச்செல்லும் வழியில் நோயுற்று மாண்டான் எனத் தெரிகிறது. அலெக்சாந்தனால் படையினருடன் சேர்ந்திருந்த செல்யுக்கஸ்நக்கந்தன் அலெக்சாந்தனால் கைவிடப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு சிலகாலம் ஆட்சிசெய்துள்ளான். செல்யுக்கஸ்நக்கந்தனின் மனையைப் புணர்ந்த லேக்சாந்தனால் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையே ஹெலன். அப்பெண்ணை மாபாரதமும் புராணங்களும் சத்தியவதி எனக் குறிப்பிடுகின்றன. அலெக்சாந்தனை ரிச்சிகன் எனக் குறிப்பிடுகின்றன. அந்நிலையில் மீண்டும் படைதிரட்டிவந்தவனே மஹா அலெக்சாந்தன். அதனை எதிர்பார்த்திருந்த சந்திரகுப்தன் தங்களது வலிமையை அண்டைநாட்டினருடன் சேர்ந்து பெருக்கிக்கொண்டு குடியரசுகளாக வலிமையுடன் அனைத்துப்பகுதிகளையும் பாதுகாத்தனர். அதனை ப்ளுடார்க்கின் நூலும் குறிப்பிடுகிறது."தட்சசீலத்துக்கு அருகில் உள்ள நகரங்களை வீரர்கள் துணிவுடன் பாதுகாத்தனர்; அலெக்சாந்தனைப் பெருமளவுக்குத் தொல்லைப்படுத்தினர். இறுதியில் ஒரு ஒப்பந்தத்துடன் இருபடையினரும் பின்வாங்கினார்கள்; பின்வாங்கிச் சென்றபோது அலெக்சாந்தன் தட்சசீலப் படையினரைத் தாக்கினான்; இந்த வாக்குத்தவறிய நடத்தை அலெக்சாந்தனின் சாதனைகளின் மீது ஒரு கலங்கமாகப் படிந்துவிட்டது."
சந்திரகுப்தன் இளைஞனாகவும் பெருவீரனாகவும் வளர்க்கப்பட்டதால் தடுத்து நிருத்தப்பட்டனர். அந்நிலையிலும் மகதத்தின்மீதும் அலெக்சாந்தன் மேலான்மை பெற்றுள்ளான்."இந்தியர் வாய்மொழியாலேயே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள்; நேர்மையுடன் நிறைவேற்றினார்கள். ஒருபோதும் பொய்யுரைத்ததாகக் குற்றம்சாட்டப்படவில்லை".
"கைவிட்டுப்போன எல்லைப்புற மாகாணங்களைக் கைப்பற்ற செலூக்கஸ் நிகேடார் முயன்றான். ஆனால் துரத்தப்பட்டுச் சந்திரகுப்தனுடன் உடன்பாட்டுக்கு வந்தான். உடன்பாடு போலவே ஒருவித மண ஒப்பந்தமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. "அங்கு அதிககாலம் ஆட்சியிலிருக்காத அந்திரகோட்டஸ் தன்னால் வென்று கைக்கொள்ளப்பட்ட ஆறாயிரம் வீரர்களையும் ஒட்டுமொத்தமாக ஐநூறு யானைகளையும் செல்யுக்கஸ் நிகந்தனுக்குக் கொடுத்தான்."
கலித்தொகை-[இவ் வரலாற்றை; வடமொழி வேத புராண இதிகாசங்களிலும் விரிவாகக் காணலாம்] பாலைக்கலி - பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவரென்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல
.. .. சிறப்புச்செய் துழையராப் புகழ்பேத்தி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் .. ." என; சந்திரகுப்தனை ஹேலனுடன் புணரச்செய்த சதிகாரப் புல்லியரின் புணர்ப்பால்; சகோதரர் அல்லலாத இந்தியத் தமிழர்களான ஐந்து திணைப்பகுதி நிலங்களின் தலைவர்களை;ஆட்சியிலிருந்து நீக்கி எரியூட்டி அழிக்கமுயன்றபோது; சதியிலிருந்து தப்பித் தங்களை நிறுவிக்கொள்ள ஐவரும் போராடியதைக் காண்கிறோம்.
அலெக்சாந்தன் இந்தியாமீது படையெடுத்து வந்தபோது கிரேக்கர்கள் தங்களைப்போன்ற மரபினரைக் கண்டதாகவும், கிருஷ்ணன் தங்களது ஹெர்க்குலிஸ் =ஹெரக்ளிடஸ் போல இருப்பதாகவும் கருதினர் என வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திரகுலப் பாரதர்க்கும் வசிட்டகுலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனவும்;(இந்தத் திரித்சூக்களே சேரலத்தின் திருசூரில் பரசுராமனால் குடியமர்த்தப்பட்டவர்கள்) 8.96.13-14: "கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி(?) ஆற்றங்கரையில் இந்திரனோடு போரிட்டான்" எனவும்; காண்கிறோம். ஒடிஸ்ஸா=கலிங்கத்தில் அசோக=இந்திர முசுகுந்த பீஷ்மனுடன் போரிட்டதே காலிங்கனோடு கரவேல்=கண்ணன் போரிட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
அந்நிலையில் அலெக்சாந்தனால் மேற்கொள்ளப்பட்ட சதிவேலையே ஹெலனுடனான சந்திரகுப்த்தனின் புணர்வு. புணர்ப்பினாலேயே பிற பகுதியினரும் தங்களது ஒப்பந்தப்படி சந்திரகுப்தனுக்குக் கட்டுப்பட்டிருந்தனர். அலெக்சாந்தன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் காசிநகரைத் தனக்கெனப் பெற்றுக்கொண்டான். செல்யுக்கஸ்நக்கந்தன் வெங்கடமலைக் காட்டுப்பகுதிகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அதனால் அலெக்சாந்தனைப் புராணங்களும் வேதங்களும் பூர்ணகாசியப்பன் எனக் குறிப்பிடுகின்றன; செல்யுக்கஸ்நகந்தனைப் பிரகத்தன், சம்பரன் என இதிஹாசங்களும் புராணங்களில் மாற்றுப்பெயர்களிலும்; யாழ் பிரகத்தன் என்பதெல்லாம் இராமாயணத்தோடும், பாண்டிய இராவணனோடும் இலங்கைச் சிங்கரோடும் தொடர்பு கொண்டு இடம்பெற்றான். இவனைக் கரிகாலின் உதவிபெற்ற முசுகுந்தன் சிறைப்படுத்தியபோது தாபத வேடமிட்டு அமணமுனிவனாக இருந்தான் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. காசி நகருக்கு வாரணாசி எனப் பெயர் உண்டாகக் காரணத்தையும் காண்கிறோம். காசியில் வரண ஹசி = வர்ணங்களாக நால்வருணக்கோட்பாடு கொண்டுவரப்பட்டது. அலெக்சாந்த பூர்ணகாசியப்பன் வசிட்டனாக மகதத்தின் தலைமைப் புரோகிதனாகத் தன்னை அறிவித்துக்கொண்டான். சந்திரகுப்தனை மணந்த ஹெலன் என்னும் சத்தியவதியின் ஆண்வாரிசுகளுக்கே ஆட்சியுரிமை கொடுக்கப்படவேண்டும் என்னும் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவனாகிச் சந்திரகுப்தன் தனது உரிமைகளை இழந்தான். சந்திரகுப்தனின் சொந்த மகன் கரவேலனும் ஆட்சிபெறுவது தடுக்கப்பட்டது; தனது உரிமையை நிலைநாட்ட முயன்றபோது பூசல் நிலவியது. பூசலுக்குக் காரணமான கரவேலன் தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டான். அன்றைய நிலையையே ப்ளுடார்க்கின் நூலும் உறுதிப்படுத்துகிறது.
"அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான்."
ஞானியரும் முனிவர்களும் எனப் ப்ளுடார்க் குறிப்பிடுவது தமிழ் அமண அந்தண முனிவர்களையும் தமிழ்ப்புலவர்களையும்தான். தொல்தமிழ்ப்பாடல்களில் பல்லாயிரக்கணக்கில் அதனை வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.
மகதத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் பல தகா நிகழ்வுகள் நடந்தன; அவற்றுக்குஸ் சந்திரனே காரணம் எனக் காட்டி வசிட்டன் சந்திரகுப்தனையும் நாடுகடத்திவிட்டான். அந்நிலையில் சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவே தாய்வழிச்சமுதாய மரபுப்படி மகதத்தின் உரிமை பெற்றவளாகிறாள். பிரிதாவை மணந்துகொண்ட சேத்சென்னியே ஆட்சியாளனாகிறன். சேத்சென்னியின் மகனே கரிகால்சோழன். அவனது வீரத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் நூற்றுக்கணக்கில் தொல்தமிழ்ப்பாடல்களில் உள்ளன; அந்நியருடன் போரிட்டதாகவும் பாடல்கள் உள்ளன. ப்ளுடார்க்கும் குறிப்பிடுகிறான்.
"ஆனால் இந்தியரின் வீரம் மாசிடோனிய அலெக்சாந்தனின் வீரத்துக்குச் சவால்விடுவதாக இருந்தது. இந்தியாவுக்குள் அவனது முன்னேற்றத்தைத் தடுத்தது".
தடுத்தது மட்டுமல்ல; பூர்ணகாசியப்ப வசிட்டன் மகத்திலிருந்து விரட்டப்பட்டான் என்பதைச் சிலப்பதிகாரமும் பிற தொல்தமிழ்ப்பாடல்களும் குறிப்பிடுகின்றன; இமையத்தின் வடபகுதிவரை விரட்டப்பட்டதாகவும் புலி, கயல், வில் சின்னங்கள் இமையத்தில் பொறிக்கப்பட்டதைப் பாடல்களும் அகச்சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. அந்நிலையில்தான் சந்திரகுப்தனின் ஆசைமனைவி ஹெலன்; சோழவேந்தர்களிடமும் பிற அரசர்களிடமும் சந்திரகுப்தன் தனக்குக் கொடுத்த வாக்குறுதியைச் சொல்லித் தனக்கு வாழ்வளிக்க வேண்டுகிறாள். அவளது வேண்டுதல் ஏற்கப்பட்டுள்ளதையும் தொல்தமிழ்ப்பாடல்களும் சிலப்பதிகாரமும் உறுதிப்படுத்துகின்றன. "தத்துவஞானிகள் முனிவர்கள் சிரமணர்கள் என எட்டு இந்தியர் கொண்ட குழுவை அலெக்சாந்தன் சந்தித்தான்."
இந்த எட்டுப்பேருமே இராமாயணத்தில் தசரதன் பண்ணிய வேள்வி யாகத்தில் தலைவனாகச் சேத்சென்னி தசரதனாகவும் பிற எழுவரும் குறுநில மன்னர்களாகவும் இடம்பெற்றனர். இவர்களனைவரும் தொல்தமிழ்ப் பாடல்களில் எழுவராக இடம்பெற்றுள்ளனர். முதலில் ஐந்தாக இருந்த நிலப்பகுப்புமுறை அலெக்சாந்த வசிட்டனின் காலத்தில் எட்டாக மாற்றப்பட்டது. இதனைத் தொல்தமிழ்ப்பாடல்களும் குறிப்பிடுகின்றன.
"காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்பதில் எண்வகைத் தமிழ்மறையோர் தேயக் களவியல்-அகவியல் துறைகள் எவை? இவற்றைக் களவாடி நால்வருணக் கொட்பாட்டுக்குள் புகுத்திவிட்டனர். பரிபாடல்:4:
"ஐந்நிருள் அறநீக்கி நான்கினுள் துடைத்துத்தம்
ஒன்றாட்டுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரித்தனர்; கிளக்குங்கால் அவைநினக்கு
இரும்பூது இன்மைநன் கறிந்தேம் ஆயினும்
நகுதலும் தகுதிஈங்கு .. ." எனநால்வருணக்கொட்பாட்டுக்கெதிராகத் திருமால் கரிகாலிடம் முறையிடுவதைக் காண்கிறோம். இதனையே வழிமொழிவதாக : சிலப்பதிகாரம்:
“அருமறை மருங்கின், ஐந்தினும், எட்டினும்,
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறை யாக உளம்கொண்டு ஓதி...” என முடித்துவிடுகிறது. தமிழரின் ஐந்திணை ஒழுக்கத்தினை=ஐந்தறத்தினை அழித்துத் தங்களுடை காமக் களியாட்டங்களை மறைக்க:
1.பிரமம் 2.தெய்வம் 3.அருஷம் 4.பிரசபத்தியம் 5.அசுரம் 6.கந்தருவம் 7.ராச்சசம் 8.பைசாசம் என எட்டுச்சாதிகளகப் பிரித்தனர்.
ஐத்ரீயபிராமணம்: (மார்ட்டின் ஹாக் நூல்தொகுதி II பக்523-524: [இளஞ்சேத்சென்னிக்கும் ஏழு திசைக் காப்பாளர்களுக்கும்) மகாபிசேக (முடிசூட்டு)விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் முடிசூட்டிக் கொண்ட திசைக்காப்பாளர் எழுவரும் அவர்கற்கு முடிசூட்டியோரும்] மனுவின் மகன் சரியாதிக்குப் (ஜமதக்கினி)பிருகுவின் மகன் (சிவன்)சியவனன்; சத்ரசித்தின் மகன் சதனிகனுக்கு-வஸ்ரத்னனின் மகன் சமசுசாமன்; அம்பஷ்தியனுக்கும் உக்ரசேனனின் மகன் யுதாமஸ் ரௌஸ்டிக்கும் பர்வதனும் நாரதரும்; புவனனின் மகன் விசுவகர்மன் என்னும் மயனுக்கு கசியபர்(வசிட்டன்= சமதக்கினி என்னும் அலெக்சாந்தன்= காசிராசன்=பூர்ணகாசியப்பனின் மகன் முசுகுந்தன்= பரசுராமன்= அசோகன்= பீஷ்மன் என்னும் தேவவிரதன்= துர்யோதனன்); (தெக்கன்=தக்கன்= தசரதன்=உருவப்பல்தேர் சேத்சென்னி) பிஜவனனின் மகன் (திருமா= கரிகால்சோழன்= இராமன்= தருமன்) சுதாசனுக்கு வசிட்டர்(பூர்ணகாசியப்பன் என்னும் அலெக்சாந்தன்); அவிச்சித்தின் மகன் மருத்தனுக்கு -அங்கிரசனின் மகன் சம்வர்த்தன். இவர்களுள் புவனனின் மகனான விசுவகர்மனுக்குக் கசியபர் முடிசூட்டிய சில ஆண்டுகளில் விசுவகர்மனை நோக்கிப் பூமித்தாய்(இலங்கையின் நிலமகள்); "எந்தமனிதனும் என்னைத் தானமாகக் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை; விசுவ கர்மனே; என்னைத் தானமாகக் கொடுத்தபடியால் நான் நடுக்கடலில் குதிப்பேன், கசியபருக்கு நீ கொடுத்த வாக்குறுதியை வீனாக்கி விட்டாய்" என வருந்தியதாக ஒரு செய்யுள் உள்ளது. அதில் நெடுஞ்செழிய இராவணன் விசுவகர்ம மயனின் பெண்ணைக் கெடுக்கச்செய்து இலங்கையைக் கைப்பற்றிக்கொண்டான் எனக் காண்கிறோம்.
புறாநாநூறு: 365ல் பல எழுத்துக்களும் சொற்களும் சிதைக்கப்பட்டுள்ளன; புலவன் மார்க்கண்டேயன் பாடியதில்:
"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி"
இயங்கிய இருசுடர் கண்னெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழிய யானெனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டென உரைப்பரால் உணர்ந்திசி நோரே" என இப்பாடல் மேற்கண்ட பல தகவல்களைக் கொடுக்கிறது. எனவே முன்னர் சேர்ந்திருந்த இலங்கை; புயலால் நடுக்கடலில் ஒரு தீவாகிவிட்டதையும் நெடுஞ்செழிய இராவணனால் கைப்பற்றப்பட்டதையும் படிமவடிவில் காண்கிறோம். இத் தீவில்தான் மச்சகந்தி எனும் சத்தியவதி= ஹெலனைப் பராசரன் புணர்ந்து மாபாரத ஆசிரியன்
வியாசன்=கருப்பன்=கன்ஹா=கிருஷ்ணத்த்வைபாயனன்=தீவில் வசிப்பவன் பிறந்தான்.
"குழுவின் எட்டுப்பேரில் ஒருவன் (கரிகால்சோழன்) நாலாமவனிடம் ' (அலெக்சாந்தனுக்கு அல்லது மகன் முசுகுந்தன் என்னும் பரசுராமன் துர்யோதனனுக்கு) அவனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு சொன்னபின் அவர் வாழ்வதோ சாவதோ கன்ணியமாக இருக்கவேண்டும் என்பதைத் தவிற வேறொன்றும் இல்லை' என்றான்."
மெகஸ்தனிசின் குறிப்புக்களுக்கு டயடோரஸ் சிக்யுலஸ் கொடுத்த விளக்கம்: "இந்திய முனிவர்களும் ஞானியரும் விதித்துள்ளவற்றுள் குறிப்பிடத்தக்க பண்டைய தத்துவமாக இருந்த ஒன்று மெச்சதக்கதாகும். அதன்படி இந்தியருள் எவரும் எந்தச் சூழ்நிலையிலும் அடிமையாக இருப்பதை ஏற்பதில்லை. அச்சுறுத்தலுக்குப் பணியாமல், அனைவரின் உரிமைகளையும் மதித்தார்கள். சூழ்நிலை மாற்றங்களுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கற்றிருந்தார்கள்."
"கிரீஸின் எந்த ஒரு அரசும் வரலாற்றின் எந்தக்கட்டத்திலும் நேர்மையுடன் நடந்துகொண்டதாக உரிமைகோர முடியாது. ஹெலனிய அரசில் அன்றாட நடப்பாக முடிவற்ற சட்டப்புரட்டுக்கள் நீதித்துறைகளில் நடந்தன."
அலெக்சாந்தனிடம் அரசன்(கரிகால்சோழன்) கூறியது: "இந்தப்பகுதிகளுக்கு நீங்கள் வந்ததன் நோக்கம் இன்றியமையாத எங்கள் நீரையோ உணவையோ எம்மிடமிருந்து கவருவதற்காக அல்ல என்றால் வேறு எதற்காக நாம் இருவரும் சண்டையிட வேண்டும்."
ரிக்வேத காலத்திலிருந்து நீருக்காக ஆரியர்கள் போரிட்டுள்ளனர். பஞ்சாப்பகுதியில் விளைச்சலையும் நீர்வளத்தையும் பெருக்கியதாலேயே அலெக்சாந்தன் பஞ்சாபை முதலாவது அலெக்சாந்தன் கைப்பற்ற முயன்றான். கங்கைப்பகுதியிலிருந்து தெற்கே நீரை விடுவிக்க முயன்றபோது; அலெக்சாந்தனுக்கும் முசுகுந்தனுக்கும் நீரைத் திருப்பிவிடுவதைத் தடுக்கும் நோக்கம் இல்லையென்றால் போரிடவும் வேறு நோக்கம் இருந்திருக்க முடியாது. தொல்தமிழ்ப்பாடல்களிலும் வேதங்களிலும் பைபிளிலும் நீருக்காக நடந்த சண்டைகளும் பூசல்களும் இடம்பெற்றிருப்பதோடு கரிகால்சோழனைப் புத்தனாக மாற்றிய புத்தமத நூல்களிலும் நீர்ப்பூசல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் புத்தனின் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மேற்கண்ட எவரது குறிப்பிலும் அசோகனோ புத்தனோ இடம்பெறவில்லை என்பதை எவருமே காணாதது வியப்பாக உள்ளது. இந்தியாவின்(தட்சசீலத்தில்) சாதிமுறைபற்றி மெகஸ்தனிஸ் தரும் தகவல் "தனித்தனியாக ஏழு வகுப்புக்கள் இருந்தன; அவற்றிடையே மண உறவுகளுக்குத் தடை இருந்தது. (தமிழ் வேந்தன் சேத்சென்னியும் அவனுக்குப்பிறகு கரிகால்சோழனும்; எட்டாவதாக அனைவருக்கும் தலமை தாங்கினர்) பஞ்சாபில் நால்வகுப்புப் பிரிவினையை அலெக்சாந்தன் காணவில்லை. பிராமணன்(தமிழ் அந்தணன்) 35ஆம் வயதுவரை துறவியரைப் போலவே கடுமையான பயிற்சிக்கு ஆளானான். கூடாரமிட்டுத் தங்கும் நாடோடிகள் விராத்திய குலத்தினர்."
பிரமசரிய விரதத்துக்கான கால அளவு; 35ஆண்டுகள் என்பது தவறெனத் தெரிகிறது; திருமுருகாற்றுப்படை: 177-182ல் நக்கீரர்:
"இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" என 48ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது.சிலப்பதிகாரமும் தெளிவாகக் காட்டுகிறது:
"ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்;
முத்தீச் செல்வத்து ந(ா)ன்மறை முற்றி;
ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
அறுதொழில் அந்தனர் .. ." ; எனவும் மற்றும்:
"முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு .. .." என விசுவாமித்திரன் வகுத்தளித்த முத்தீ வழிபாடு இடம்பெற்றுள்ளது. தீ என்பதும் ஆடை என்பதும் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையே குறிக்கும். மனித மற்றும் விலங்குப்பலி வேள்விகளையோ குருதிப்பலி யக்ஞங்களையோ குறிப்பதில்லை.
"கி.பி.3ஆம் நூற்றாண்டுவரை சாதி என்னும் சொல் தெரிந்திருக்கவில்லை. அடிமைகள் இல்லாமலே உருவாக்கப்பட்ட நீர்தேங்கிய புறப்பகுதிகளில் காணப்பட்ட கோட்டைகளையும் கோபுரங்களையும் ப்ளுடார்க் விவரித்துள்ளான். பாட்னா -பாடலிபுத்தரம் உலகின் மாபெரும் பட்டனமாக இருந்தது; கிரேக்கர்கள் கட்டியிருந்த எதனையும் விடப் பெரிதாய் இருந்தது. கிரேக்கரின் கொள்ளைகளில் கால்நடைகளே சொத்தாகவும் வேதகாலத்திலிருந்து செல்வத்தின் அளவு கோளாகவும் இருந்தன. தட்சசீலத்தில் பயிர்விளைச்சல் குறித்த தகவல்கள் இல்லை."
மேலும் தகவல்களையும் வரலாற்றையும் காண முந்தைய ஐந்து உள்ளீடுகளையும் காணவும்.
Pl visit web http://nhampikkai-kurudu.blogspot.in

No comments:

Post a Comment