Monday 8 April 2013

கரிகால்சோழன்=இராமனும் நெடுஞ்செழியன்=இராவணனும் செங்குட்டுவன்=அனுமன்=இலக்குவனும் சிங்களரும் சங்கப்பாடல்கள்


கரிகால்சோழன்=இராமனும் நெடுஞ்செழியன்=இராவணனும்
செங்குட்டுவன்=அனுமன்=இலக்குவனும் சிங்களரும்
சங்கப்பாடல்கள்

சரபோதிமாலை: கி.பி.1410-1468ல் பராக்கிரமபாகுவின் அவைப்புலவனாக இருந்த தேவிநுவரைப்பெருமாள் என்னும் வைணவபிராமணர்; நாடுகளுக்கும், நாள், கோல்களையும், அவற்றின் பலன்களையும் இந்நூலில் குறிப்பிடுகிறார்:
“வார யோகத்திற் குற்றம், வங்கமோ டங்கதேசம்
சீருறு கலிங்கம்; ஈழ தேசத்திற் காகா தென்பர்” என இந்தியா முழுமைக்குமான சோதிடப் பலன்களைக் குறிப்பிடுகிறார். தமிழ்க் கணியர்களின் வானியல் மற்றும் சோதிட சித்தாந்தங்கள் பிராமணரின் குறுக்கீடுகளால் சீரழிந்து போயின. இப்பாடலில் 600 ஆண்டுகளுக்கு முன்னமே கிழக்கு மற்றும் தென்னகமும் ஈழம்-இலங்கைக்கு ஆகாதெனக் குறிப்பிடக் காரணம் என்ன? சங்கப்பாடல்களுக்கு உரைசெய்த மிகச்சிறந்தோர் வாழ்ந்த காலம் சார்ந்தது இந்நூல்.
2000 ஆண்டுகற்கு முன்னர் நம்நாட்டில் முதலில் இருந்தோரே; அலையலாக வந்த அந்நியரால் தெற்கு மற்றும் தென்கிழக்கு -வங்கம் உட்பட ஒதுக்கப்பட்டோராவர்; அந்நியராக இங்கு வந்த எகிப்திய கிரேக்க ரோமனியருமே ஆதிக்கத்தால் நம்மை ஒதுக்கியவர்கள்; ஆயினும் அவர்கள் இங்கிருந்த பெண்டிரையே இனவிருத்திக்குப் பயன்படுத்திக் கொண்டனர். எகிப்திய கிரேக்க ரோமனியருடன் அடிமைகளாக வந்து சேர்ந்தோரே சிங்களாராக இலங்கையில் சென்று சேர்ந்தனர். காரணம் அடிமைகளைத் தங்களுக்கு நிகராக வைத்துக்கொள்வது அந்நியருக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த அடிமைகளும் செவ்விந்தியரைப்போல அந்நாடுகளில் இயல்பாக வாழ்ந்து அங்குவந்துசேர்ந்தோரால் அடிமைகொள்ளப்பட்டோராவர்.
'ஆரியர்களின் மரபுமூலம்' நூலில் பேராசிரியர் ஐசக்டெய்லர்; பக் 24-26: " .. . கிரேக்கர்கள் சிங்கத்தைச் செமிட்டிக் பெயரில் அழைத்தனர்; இந்தியர் எந்த ஆரிய வேர்ச்சொல்லையும் கொண்டு குறிப்பிட முடியாத ஒருபெயரில்(?) அழைத்தனர்; எனவே சிங்கம் கிரேக்கருக்கும் இந்தியருக்கும் பொதுவான தாயகத்தில்(?) அறியப்பட்டதாக உள்ளது" என்கிறார்.
சிங்கம் பாரதத்தை அடையாளப் படுத்தும் விலங்கல்ல, அந்நிய விலங்கு. அந்நியரைத் தனது அண்ணன் கரிகால் சோழன் மற்றும் மகன் செங்குட்டுவனைக் கொண்டு அடக்கிய பாவையே போர்த்தெய்வம் கொற்றவையாகக் கொண்டாடப் பட்டுச் சிங்கம் அவவளது வாகனமாக்கப்பட்டது; காரணம் அவளைக்கெடுத்த அந்நியன் முசுகுந்தனே. புலி மட்டுமே நம்மை அடையாளப்படுத்தும் விலங்கு; அதன் உதவியுடன் அந்நியரை அடக்கிய அவளது புதல்வன் வேல்(வேலிர்)படையைக் கொண்ட ஐ அப்பன் செங்குட்டுவன் மட்டுமே அதனை வாகனமாகக் கொண்டுள்ளான் என்பதையும்; புலி மற்றும் வில் வேடரை அடையாளப்படுத்தும் மான்தோலை இடையில் கட்டிய தெய்வங்கள் பிற்காலத்திய வளமான கற்பணையில் உருவாக் கப்பட்ட படிமங்கள் என்பதையும் உணரவேண்டும். இதனை உணர்ந்ததாலேயே நமது நாணயங்களின் ஒரு பக்கத்தில் சிங்கங்களும் மற்றொருபக்கத்தில் புலியும் பொறிக்கப்பட்டன; அவற்றிலும் அசோகன் உருவாக்கியதாக நம்பப்படும் நான்கு சிங்கங்கள் யாவர் என்பதையும் அவற்றுக்கீழே உள்ள விலங்குகளையும் மறுபக்கத்தில் இருந்த புலி ஏன் நீக்கப்பட்டது என்பதையும் இன்றைய இந்தியரின்/தமிழரின் நிலையையும் எண்ணிப்பாருங்கள். மேலும் நாகத்துடன் தொடர்பில்லாத தெய்வத்தை எங்குமே காணமுடியாது; காரணம் நாகம் என்பது புத்த சமயம் தோற்றுவிக்கப்படாத நான்காம் நூற்றாண்டுவரை அமணரையும்; ஐந்து தலை நாகம் என்பது ஐந்து திணை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாத்த அமணத் தலைமையையும் அறிவாளர் வேலிரையும் குறிப்பவை; வேலிரைச் சிலகாலம் கைப்பற்றிக்கொண்டோரும் நாகங்களைத் தங்களுடன் சேர்த்துத் தெய்வப்படிமங்களை அமைத்துக் கொண்டனர். புத்தன்=கரிகால்சோழன் நான்காம் நூற்றாண்டுவரை அமணனாகத்தான் கருதப்பட்டான்; அதன்பின்னரே சிங்களரால் புத்த சமயம் தோற்றுவிக்கப்பட்டது. சிங்களர் சிங்கத்தைத் தங்களது அடையாளமாகக் கொண்டதன் காரணத்தை இப்போது உணரமுடியும்.
மகதமண்டலம்வரை கைப்பற்றிய அலெக்சாந்தன்=வசிட்டனின் சதிகளால் நதிகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மூன்றுமண்டலங்களாகப் பகுத்தனர்; இடையில் அமைந்ததே சோழநாடு(இன்று நாம் குறிப்பிட்டும் சோழநாடல்ல); இதன் தலைமைப்பதவியை வகித்தவனே விசுவ ஆ மித்திரன். காவிரிநதிக்குத் தென்பகுதி; வசிட்டனின் வஞ்சனையால் சோழ நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு விதுரனின் மகன் நகுஷன்(நெடுஞ்செழியன்)வசம் ஒப்படைக்கப்பட்டது.
ரிக்வேதம்: 10-123: இதில் கரிகால்சோழன் வேணன்=வீணா என இடம்பெற்றுள்ளான்; இவனைக் காந்தன், சூரியன் எனவும் "மத்யஸ்தானோ தேவஹ" என மூன்று பகுதிகளின் இடையில் இருப்பவன் எனவும் பொருள் கொடுத்துள்ளனர். ஒவ்வொன்றிலும் ஒரு தலைமையும் ஏழு திசைக்காப்பாளர்களும் என மூவேழ் துறைகளாகப் பகுக்கப்பட்டன.
ரிக்வேதம்:10-159: இதில் சோழநாடு ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு அதன் விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேணன் குறித்த தகவல்கள் மிக நீண்டதாக ஹரிவம்சத்தில் உள்ளதை ம்யூர் அவர்கள் நூல் தொகுதி 1ல் மொழி பெயர்த்துள்ளார். துவக்கத்தில் குறிப்பிட்டோமே ஒரு சோதிடப்பாடலில் அங்கதேசம்; அதன் அரசனின் மகனே வீணா; அங்கதேசம் என்பதும் நாட்டின் மையப்பகுதியையும்; வீணா என்பவன் பிராமணருடன் மோதி யாகவேள்விகளைத் தடை செய்த சேத்சென்னியின் மகன் கரிகாலையும் குறிக்கும். ஹரிவம்சத்தில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களில் தொடங்கும் நமதுவரலாறுதான் உள்ளது. வீணாவை அடுத்து நகுஷன்=நெடுஞ்செழியனின் வரலாறும் அதனையடுத்துப் பாவையின் மைந்தன் புருரவன்=செங்குட்டுவனின் வரலாறும் இடம்பெற்றுள்ளன; இவை அனைத்துக்கும் முன்னராக அம்பரீசன் என சேத்சென்னியின் வரலாறும் சேத்சென்னி பண்ணிய யாகவேள்விகளும், அவற்றில் முசுகுந்தன் பரசுராமனைக்கொண்டு நிகழ்த்திய சதிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன; இராமாயணத்தில்: "அயோத்தியை ஆண்ட சகரன்=சேத்சென்னி, அசுவமேத யாகம் செய்தபோது யாகக் குதிரையைக் கெட்ட எண்ணம் கொண்ட இந்திரன் இராட்சச உருவில் திருடிவிட்டான்; தேடியவர்கள் அக்குதிரையை கபிலமுனி(சமதக்கினி) அருகில் கண்டனர்." என விசுவாமித்திரன் கூறியது இடம்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக்கும் முன்னர் சந்திரகுப்தனின் மகன் கரவேலன்=கிருஷ்ணனை வசிட்ட அலெக்சாந்தன் நாடுகடத்தியதும்; கிருஷ்ணனை ஆதரித்து விசுவாமித்திரன் வேங்கடமலைக்காட்டில் கரவேலனுக்கு ஒரு நாட்டை உருவாக்கிப் படைகளையும் கொடுத்து இந்திரனாக்க முயன்ற போது; இந்திரன் முசுகுந்தனும் அவனது தந்தை வசிட்டன்=அலெக்சாந்தனும் பணிந்து கேட்டுக்கொண்டதால் அத்துடன் நிருத்திக்கொண்ட வரலாறும்; அதற்குமுன்னர் விசுவாமித்திரனை நாடுகடத்தியதால் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களும் உள்ளன; இவை அனைத்தையும் ம்யூர் அவர்கள் தனது நூல் தொகுதி 1ல் மொழிபெயர்த்துள்ளார்.
விசுவாமித்திரனைச் சங்கப்பாடல்கள் இங்கும் அங்குமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றாக புறநாநூறு-166ல்
“நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன்;
வாய்போகாது ஒன்றுபுரிந் தீரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்; இகல்கண்டோர்;
மிகல்சாய்மார்; மெய்யன்ன பொய்யுரைத்து;
பொய்யோராது மெய்கொளீஇ;
மூவேழ்துறையும் முட்டின்றுபோகிய
உரைசால் சிறப்பின்.. .. " அமணமுனியான உரைசால் சிறப்பின் உறவோன் விசுவாமித்திரனின் ஒப்புதலின்றி ஒரு முது நூலுக்கு அந்நியர்செய்த உரையையும்; நாட்டை மூன்றாக்கி ஒவ்வொன்றிலும் ஏழு திசைக்காவளரை அமர்த்திய ஆதிக்கத்தையும் பொய்களையும் ஏற்காமல் நூலில் உள்ள மெய்ம்மையைமட்டும் ஏற்று உரைசெய்து; நடத்தப்பட்ட குருதிப்பலியற்ற வேள்வி யாகமும்; அனைத்தையும் அறிந்த விசுவாமித்திரனும் இடம்பெறக் காண்கிறோம். இதில் இடம்பெற்ற முதுநூலே அன்றிருந்த நா(ந)ல் வேதங்களாக இருக்கக்கூடும்; இன்று அவற்றின் உள்ளடக்கம் முற்றிலும் மாறிவிட்டது. புறநாநூறு -174:
"அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறுகாணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு.. .
அரசிலந் திருந்த அல்லற் காலை .. .. .
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
தின்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே" என அந்நிய மோரிய, ஆரிப்படையின் வரவால் நாடு அல்லலுற்றபோது, விசுவ ஆ மித்திரனால் வேங்கடத்தின் வேந்தனான கரவேலன்=கிருஷ்ணன் காத்ததைப்போன்று; கரிகாலுக்குத் தண்டனை விதித்ததால்; மூன்று நாடுகளில் பூம்புகார்-"உலக இடைகழி" சோழநாடு துன்புற்றபோது ஆதனுங்கன்? காத்தான் எனக் குறிப்பிடுகிறது. ஆதளும்பன்=செங்குட்டுவன் என்பதை மறைக்க ஆதனுங்கன் என மாற்றினர். எனவே ஆரியரால் தெற்கே சென்ற சோழரை மீண்டும் தாக்கியுள்ளனர் எனக்காண்கிறோம். ஆதளும்பன்=செங்குட்டுவன் யார்?
ஆறாம் நூற்றாண்டுவரை பண்பட்ட நெறிமுறை, ஆன்மிகமேன்மை குறித்த விவாதங்கள் சிறப்பாக இருந்தன; கலப்பிரர்கால இறுதிவரை இந்நிலை நீடித்ததாகக் கொள்ளலாம். பக்தி இயக்கமும் களவியல் நூலும் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலாகப் பண்பட்ட ஆய்வுகளுக்கான களங்கள் சிதைக்கப்பட்டன; ஆழ்வார் நாயன்மார் காலமாகக் கொள்ளலாம். பிறகு உலக அளவில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் தமிழரின் நெறிகள் களவாடப்பட்டு; சமயங்களாக மாறித் தீவிர வாதங்கள் தலையெடுக்கத் துவங்கின. இதன்தாக்கத்தை உணர்ந்த நம்மிடையே; அந்நியருடனான கலப்பால் தோன்றியோரும், நாமும், அந்நியரும் தங்களுக்கான நெறிகளை உருவாக்க முயன்றபோது; ஒருபிரிவினர் பக்தி இயக்கத்தைத் தீவிர மாக்கி அமண நெறிகளைப் பிளவுபடுத்தி முசுகுந்தனின் நெறிகளை உயர்த்திக்காட்ட; அவனுக்கு முன்னர் தீர்த்தங்கரியாக இருந்த; முசுகுந்தனால் கெடுத்துக் கருவுற்ற பாவையை நீக்கியதோடு முசுகுந்தனுக்குப் பின்னர் இறுதித் தீர்த்தங்கரன் அமண கோதமன்=கரிகால்சோழன்=புத்தனையும்; அமணர் வரலாற்றிலிருந்து நீக்கி; முசுகுந்தனை மா(கா)வீராக்கியதையும் மறைத்து மாற்றி; சைவத்தைத் தோற்றுவித்தனர். இதனை ஏற்காத ஒருபிரிவினர் வைணவராயினர். அந்நியரைத் தங்களது மேன்மையாலும் ஆன்மிகத்தாலும் ஈர்த்துக்கொண்ட கரிகாலையும் செங்குட்டுவனையும் இங்கிருந்த கீழைநாட்டு மற்றும் மேலைநாட்டு அந்நியர்; தங்களது சமயங்களுக்கான தலைவர்களாக ஏற்றனர். மேற்கத்தியர்; சைவரால் ஒதுக்கிச் சூத்திரன் ஆக்கப்பட்ட செங்குட்டுவனைத் கிருத்துவ சமயத்தின் தலைவனாக்கி; அவனது தாய் பாவையைக் கன்னிமரியாக்கினர். அப்போது எகிப்தியரால் இஸ்ரேலியர் அடிமைகளாக நடத்தப்பட்டதாகவும் அதனை நீக்கி ஒற்றுமைப்படுத்த செங்குட்டுவன் அங்குச்சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது; கிருத்துவ ஸ்த்தோத்திரங்களிலும் வழிபாட்டு வாசகங்களிலும் இதனை உணர முடியும். செங்குட்டுவன்=கிருத்திகன், கார்த்திகன்=கர்த்தன் வரலாற்றை; ஐரோப்பிய எகிப்திய கிரேக்க ரோமனிய இஷ்ரேலியரும் ஏற்கும் வண்ணம் மாற்றும் முயற்சிகளைப் பலரும் மேற்கொண்டனர். அனைவரும் ஏற்கத்தக்க ஒரு சமய நூலை உருவாக்கினரா? அதற்கான வரளாறு என ஆனது? என்பதும் கேள்விக்குரியனவாகும். கீழைநாட்டினர் கரிகாலைப் புத்தனாக ஏற்றனர். ஆயினும் புத்தனுக்கான வரலாற்றை மறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்ககைகள் சகிக்கமுடியாதனவாக இருந்தன. இதனைச் சகிக்க முடியாத சில அந்நிய நாட்டினர் இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர்.
பெண்வழிச்சமுதாயத்துக்கும் ஆண்வழிச்சமுதாயத்துக்கும் நடந்த மோதலில்; எதனை ஏற்கிறோமோ அதன் வழியிலேயே வரலாற்று மனிதர்களைக் காண்கிறோம், காணவேண்டும். பெண்வழித் தாய்த்தெய்வங்களே நம்மிடையே இன்றும் குல தெய்வங்களாக வழிபடப்படுகின்றன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஆண் தெய்வங்களும் அவற்றின் மூல வடிவங்களும் பெயர்களும் .. ..; ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இனங்காண முடியும். என்றபோதிலும்; அறியப்படாமல் வழிவழி யாக வழிபடப்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே; காரணம் அனைவருமே குருதியுறவு கொண்டோர் என்பதாகும்.
இலங்கைக்குத் துரத்தப்பட்ட இராமாயண கால கிரேக்க அடிமை செல்யுக்கஸ்நிகந்த இனக்கூட்டத்தின் சிங்களரோ; புத்த நெறி முற்றிலுமாகச் சைவரால் அழிக்கப்பட்டுப் புத்தன்=கரிகால்சோழனின் வரலாற்றை அழித்தபோது; புத்தனின் வரலாற்றை மாற்றி; அவனது நெறிகளைத் தங்களுக்கான சமயமாக அறிவித்து விருப்பம்போலக் கையாண்டனர். சிங்களரை ரிக்வேதம் உஷனர் எனக் குறிப்பிடுகிறது; சிங்களர் தங்களைத் தாமிரவருணர் எனக் குறிப்பிட்டுக் கொண்டனர். தமிழனான கரிகால் சோழன்=புத்தன், முசுகுந்தனுக்கு எதிரானவன் என்பதால் புத்தனைத் தமிழரின் வரலாற்றிலிருந்து நீக்க உதவியதோடு; முசுகுந்தனின் மகன் செங்குட்டுவனின் வரலாற்றையும் அழிக்க முயன்றனர். இந்நிலைகளில் பொதுமக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே பெண் மற்றும் ஆண் உருக்கொண்ட வழிபடுதெய்வங்கள். புத்தன்=கரிகாலைத் தமிழக வரலாற்றிலிருந்து நீக்கி; கிருத்து=செங்குட்டுவன் பிறப்பதற்கு 500ஆண்டுகற்கு முன்னர் எங்கோ பிறந்து எப்போதோ வாழ்ந்து புத்த மதத்தைத் தோற்றுவித்ததாகவும்; 500ஆண்டுகளுக்குத் தன்னைச் சிலையாக வைத்து வணங்கக்கூடாது எனக் கட்டளையிட்டதாகவும்; சிங்களரை 5500ஆண்டுக்காலத்துக்கு எவரும் ஒன்றும் செய்யமுடியாது என அறிவித்துத் ஆசீர்வதித்ததாகவும் எழுதிவைத்து வரலாற்றை அழிப்பதைத் தீவிரமாக மேற்கொண்டனர். அனைவரையும் சமமாகவும் செய்தொழில் வேற்றுமையால் இழிவு படுத்தக் கூடாது எனவும் போதித்தவன் கரிகால்=புத்தன். அவனது கொள்கைகளைப் பழந்தமிழ்ப் பாடல்களில் மிகத்தெளிவாகக் காணமுடியும்; காணவேண்டும் என்பதோடு பிற கீழைநாட்டுப் பௌத்த நெறியினருக்கு இவ்வரலாற்றினை உணர்த்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளதை மறந்துவிடக்கூடாது. குறிப்பாகச் சீனருக்குத் தெளிவாக உணர்த்திச் சிங்களருக்கு அறிவுபுகட்ட வேண்டும். இதனைச் செய்யாதவரை தமிழும் தமிழரும் மதிக்கப்பட மாட்டார்கள்.
மேற்கண்ட சூழலில் நெடுஞ்செழிய இராவணனை இனம்காண்பது அவரவரது வரலாற்றுத் தெளிவை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் தமிழருக்கும் சோழருக்கும் எதிரான; சிங்களருக்கு ஆதரவான நெடுஞ்செழியன் ஒரு கட்டத்தில் சுயநலம் காரணமாக முசுகுந்தனுக்கும் ஆதரவாக இருந்தான் என்பதாலேயே பழந்தமிழ்ப்பாடல்களில் நெடுஞ்செழியனை முசுகுந்தன் பிறையாக்கி நெற்றியில் அணிந்துகொண்டதைக் குறிப்பிடுகின்றன. தன்னை இந்திரனாக அறிவித்துக்கொண்ட நெடுஞ்செழியன் முசுகுந்த இந்திரனுக்கும் எதிரானவனாகச் சிறிதுகாலம் வாழ்ந்துள்ளான் என்பதையும் வேதங்களும் இதிகாச புராணங்களும் உணர்த்துகின்றன. இதனை அறிந்து வெளிப்படுத்த வேதங்களையும் மாபாரதத்தையும்; அதில் தமிழரின் மேன்மைகள் எப்படிக் காட்டப்பட்டுள்ளன என்பதையும் பயின்று; தெளிவாக வெளிப்படுத்தியாக வேண்டும்.

1 comment: