Tuesday, 24 December 2013

வரலாறு சரியா? நமது வரலாறு ஓர் அறிமுகம்

வரலாறு சரியா? நமது வரலாறு ஓர் அறிமுகம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுப்புநூல்கள் எவையும் இல்லை. பல்லாரிரம் பாடல்களில் சீராக வெளிப்பட்ட ஒரு வரலாற்றுப் பெருங்கதையைச் சிதறடித்து; அவற்றின் கருத்துக்களைத் தொகுத்து மாற்றி அமைக்கப்பட்டவையே இவை. பத்துப்பாட்டு. 1. திருமுருகாற்றுப்படை - முருகன் - செங்குட்டுவன் 2. பொருநராற்றுப்படை - கரிகால்வளவன் 3. சிறுபாணாற்றுப்படை - நல்லியற்கோடன் - செங்குட்டுவன் 4. பெரும்பாணாற்றுப்படை - இளந்திரையன் - செங்குட்டுவன் 5. முல்லைப்பாட்டு - நெடுநல்வாடையுடன் சேர்ந்தது - இரண்டாம்செழியன் - வெற்றிவேற்செழியன் - செங்குட்டுவன் 6. மதுரைக்காஞ்சி - சோழரால் ஆட்சிபெற்ற முதற்செழியனின் தந்தைக்கும் செழியனுக்கு அறிவுறுத்தியது 7. நெடுநல்வாடை - முல்லைப்பாட்டுடன் சேர்ந்தது - இரண்டாம்செழியன் - வெற்றிவேற்செழியன் - செங்குட்டுவன் 8. குறிஞ்சிப்பாட்டு - சிறைப்பிடிக்கப்பட்ட ஆரியவரசன் பிரகத்தனுக்கும் பிறருக்கும் களவுப் புணர்வு குறித்த எச்சரிக்கை 9. பட்டினப்பாலை - கரிகாற்பெருவளத்தான் 10. மலைபடுகடாம் - நன்னன் சேய்நன்னன் - செங்குட்டுவனின் தந்தை மற்றும் செங்குட்டுவன். இவற்றுள்; 8 ஒன்று, 6 ஒன்று, 2 9 சேர்ந்து ஒன்று, 3 4 5 7 10 சேர்ந்து ஒன்று, இறுதித் தொகுப்பாக 1; ஆக 5 தொகுப்பாகக் காணலாம். இவற்றுள் முல்லைப்பாட்டு; சில பாடல்களைச் சேர்த்து அரேபியருடன் சேர்ந்த முதல்செழியனையும் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. பழம்பாடல்களைத் தொகுத்த புலவர்களும் தொகைநூல்களாக்கிய பாண்டிய மன்னர்களும் மதுரையைச் சேர்ந்தவர்களே. மதுரையில் திரமிள சங்கம் உருவாக்கப்பட்ட காலம் முதலாகவே முந்தைய பாடல்களைத் திரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அலெக்சாந்தன் பிடித்துச்சென்ற அறிஞர்களும் புலவர்களும் கொலைசெய்யப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த புலவர்களையும் ஏடுகளையும் மதுரைக்குக் கொண்டுசென்று மதுரைப் புலவர்களாக மாற்றப்பட்டனர். இவற்றை உணர்த்துவனவே களவியல் நூலும் பாயிரமும் உரைகளும் பாண்டிய மன்னர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களும். எஞ்சியிருந்த புலவர்களால் இயற்றப்பட்ட சிலபாடல்களும் பழம்பாடல்களுடன் சேர்க்கப்பட்ட சில அடிகளும் ஆடையாளப்படுத்த இயலாத வண்ணம் திறமையாகப் பண்ணப்பட்டுள்ளன. பாண்டியரைப் பெருமைப்படுத்தும் நோக்கிலும், செங்குட்டுவனின் தந்தையைப் பல பாடல்கள் முரண்மிகு செல்வன் எனக் குறிப்பிட்ட போதிலும்; கடவுளாகவும் தெய்வமாகவும் உயர்த்திக் காட்டும் எண்ணமும் மேலோங்கியதால் வரலாற்றை மாற்றிச் செங்குட்டுவனின் தந்தையின் பெயரைப் பலமாற்றங்களுக்கு ஆட்படுத்தி; பலவற்றை நீக்கியும் சேர்த்தும் சிதைத்தனர். செங்குட்டுவனின் தந்தையை; உள்ளம்கவர் கள்வன் எனத் தலைவனாகப் புகழ்ந்தனர். புலவர்களின் பெயர்களிலும் அவனது பெயர்களில் ஏதாவதொன்றைச் சேர்த்து; எங்கெங்கோ இருந்த செல்லூரை மதுரைக்கும் கொண்டுசெல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. செங்குட்டுவனின் தாய் கன்னியாக இருந்தபோது சோழநாட்டில் புணர்ந்து கெடுத்ததை மறைத்து வையையில் புணர்ந்ததாக மாற்றினர். கரவேலனால் அடித்து நொறுக்கி அடக்கப்பட்ட செழியன் குறித்த பாடல்களை நீக்கிப் புகழ்பரப்பும் பாடல்களச் சேர்த்தனர். செழியனைத் திருமாலின் அவதாரமாகக் காட்டும் முயற்சியும் நடந்தது. ஆனால் செங்குட்டுவனின் தாய்மாமன் கரிகாலுடன் சேர்ந்து வலிமைபெற்றபோது; வெள்ளை, பால்நிறவண்ணன், பனைக்கொடியோன் என்றெல்லாம் போற்றப்பட்ட பலராமனான பாண்டியன் செழியன் நீக்கப்பட்டான். குணாட்டியரால் இயற்றப்பட்ட; கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற பிரகத்தனைத் தலைவனாகக் கொண்ட ஒரு மாபெரும் காப்பியநூல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. மேலும் கண்ணில் கண்ட நூல்கள் சிலநாட்களில் காணாமல் போய்விடுவதாகப் பல நூல்களைப் பதிப்பித்த உ. வே. சா அவர்களும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பிரகத்தனை முதன்மையாகக் கொண்ட நூலான பிரகத்கதா என்னும் நூலைப் போன்றதே கொங்கு வேளரின் பிரகத் கதா அல்லது உதயணன் கதையும் ஆகும். அதிலும் முதற்காண்டமும் இறுதிக் காண்டமும் காணாமல்போய் விட்டதாகக் குறிப்பிடும் உ. வே. சா அவர்கள் அதற்குப் பெருங்கதை என்று பெயரிட்டுள்ளார். .பதிற்றுப்பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் நீக்கப்பட்டுவிட்டன. பரிபாடலின் பாடல்களில் 48ப் பாடல்களை நீக்கியுள்ளனர். வரலாற்றை வெளிப்படுத்தும் பாடல்களே பெருமளவில் நீக்கப்பட்டு விட்டதால் தெளிவான வரலாற்றை அறிவதும் ஆட்சியாளனை அடையாளப் படுத்துவதும் எளிதாக இல்லை. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பு எதிலுமே குறிப்பிடப்படவில்லை எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றைப் பெற்றோரும் வைத்திருந்தோரும் வெளியிடப் பலகாலம் தயங்கியதாகக் குறிப்பிடுகின்றனர். காரணம் அப்பாடல்களில் தங்களது விருப்பம்போலப் பல சேர்க்கைகளைச் செய்தவர்கள் அச்சப்படுமளவுக்குப் பல மாற்றங்களைப் புகுத்தினர் என்பதே. வேறு எவராவது வெளியிட்டு; வரலாற்றைச் சிதறடித்த தகவல்கள் வெளிவந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் இருந்துள்ளது. ஆயினும் பல முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தகவல்கள் எல்லாத் தொகுப்புக்களிலும் இருக்கவே செய்கின்றன. சோழநாட்டை ஆட்சிசெய்வதற்கான நிலையை; சத்திரியன் அல்லாத செழியனிடம் ஒப்படைக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வரலாறுகொண்ட தமிழ்ப்பாடல்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. இங்கும் அங்குமாக சில மட்டுமே கிடைக்கின்றன. அவையும் புராணகால நிகழ்வுகளைப் போன்று தோற்றமளிக்கின்றன என்பதை உணர்ந்து அவற்றில் உள்ள உண்மை வரலாற்றைக் காணவேண்டும். வெற்றிடங்களை நிறப்ப; வேத இதிகாச புராணங்களுடன் அந்நியப்பயனிகளின் குறிப்புக்களும் உதவுகின்றன. காரணம் தமிழ்ப்பாடல்களை களவியல்நூலைப் புகுத்திய காலத்தில் இலக்கணங்களையும் திணை துறைகளையும் புகுத்தி சீரான வரிசியை நீக்கிச் சிதறடித்துவிட்டனர் என்பதே. சந்திரகொற்றனின் தந்தை போரசின் காலத்திலிருந்துதான் வரலாற்றை வெளிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கின்றன. பிளுடார்க்கின் நூற்குறிப்புக்கள் பலதொகுதிகளையும் பக்கங்களையும் கொண்டவை. அந்நூலில்: "போரசுடனான அலெக்சாந்தனின் போர் மாசிடோனியரின் வீரத்தை மழுங்கடித்து; அலெக்சாந்தனின் வீரத்துக்குச் சவால் விடுவதாகவும் மாசிடோனியரின் (ஒரு அலெக்சாந்தனும் அவனது வீரர்களும் மாசிடோனியர்கள்) வீரத்தை மழுங்கடிப்பதாகவும் [இந்தியாவுக்குள்] தங்களது 20 000 தரைப்படையினரும் 2000 குதிரை வீரரும் ஒரு பெரும் எதிரிப் படையை வீழ்த்துவது இயலாது என்பதை அலெக்சாந்தனுடன் வந்த படைவீரர்கள் அறிந்திருந்தார்கள்" என உள்ளது. சன்டிரகொட்டஸ் அல்லது அண்டிரகொட்டஸ் எனப்படும் சந்திரகொற்றன் சிறுவனாக இருந்தபோது தட்சசீலத்தில் அலெக்சாந்தனைப் பார்த்ததாக அமைச்சன் சாணக்கியனின் [விசுவாமித்திரன்] குறிப்பும் கிரேக்க வரலாறும் குறிப்பிடுகின்றன. சில ஆன்டுகளுக்குப் பிறகு பெரும்படையுடன் வந்து போரசுடன் மீண்டும் போடிட்டுள்ளான். ஆயினும் அவனால் முன்னேற முடியவில்லை. இந்நிலையில் சிந்து ஆப்கானிஸ்த்தான் பஞ்சாப்வரை வென்ற நிலையில் மேலும் வலிமையைப் பெருக்கும் எண்ணத்தில்; வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளை விட்டுத் திரும்பிச்செல்லும் வழியில் நோயுற்று மாண்டான் எனத் தெரிகிறது. ஏதோ ஒரு வகையில் அலெக்சாந்தனால் விசுவாமித்திரன் அவமதிக்கப்பட்டுள்ளான். விசுவாமித்திரனைச் சாணக்கியன் விஷ்ணுகுப்தன்; மகதத்தை மீட்கச் சபதமிட்டவன் என்றெல்லாம் பலநூல்களும் குறிப்பிடுகின்றன. மீண்டும் போர்தொடுக்கப் பெரும்படையுடன் வந்தவனே மற்றொரு அலெக்சாந்தன். செல்யுகஸ் நகந்தனின் படையையும் சேர்த்துக் கங்கைநதியைக் கடக்க முயன்றுள்ளனர். அதனை செல்யுகஸ்நக்கந்தன் ஏற்கவில்லை என்பதை: "32 பர்லாங் அகலமும் நூறடிக்கு மேற்பட்ட ஆழமும் கொண்ட கங்கையாற்றைக் கடந்து அக்கரையில் படைவீரர்களல் காக்கப்படும் எதிரியுடன் போரிடச்சொல்வது ஒரு சூழ்ச்சியாகக் கருதப்பட்டது" என ப்ளுடார்க் குறிப்பிட்டுள்ளான். "அக்கரையில் 80000 குதிரைவீரர்கள், 6000 யானைகள் எதிர்த்து நிற்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்; தட்ச சீலத்தின் அருகில் உள்ள நகரங்களை வீரர்கள் துணிவுடன் பாதுகாத்தனர்; அலெக்சாந்தனைப் பெருமளவுக்குத் தொல்லைப் படுத்தினர். இறுதியில் ஒரு ஒப்பந்தத்துடன் இருபடையினரும் பின்வாங்கினார்கள்" "பின்வாங்கிச் சென்ற அலெக்சாந்தன் தட்சசீலப் படையினரைத் தாக்கினான்; இந்த வாக்குத்தவறிய நடத்தை அலெக்சாந்தனின் சாதனைகளின் மீது ஒரு கலங்கமாகப் படிந்துவிட்டது" எனவும் குறிப்பிடுகிறது. அந்நிலையில் அலெக்சாந்தனுடன் கங்கைநதியைக் கடந்துசென்று போரிடுவதை செல்யுகஸ்நகந்தன் விரும்பவில்லை. செல்யுக்கஸ்நக்கந்தனின் மனைவியைப் புணர்ந்த முதல் அலேக்சாந்தனால் பிறந்த குழந்தையே ஹெலன். அப்பெண்ணை மாபாரதமும் புராணங்களும் கங்கை திசா சத்தியவதி எனப் பலவாறு குறிப்பிட்டுச் செல்யுக்கஸ்நகந்தனைப் பிரகத்தன் சம்பரன் வளர்ப்புத் தந்தை எனவும்; அலெக்சாந்தனை ரிச்சிகன் வசிட்டன் பூர்ணகாசியப்பன் எனவும் குறிப்பிடுகின்றன. சந்திரகொற்றன் இளைஞனாக பெருவீரனாக வளர்க்கப்பட்டதால் தடுத்து நிருத்தப்பட்டனர். அந்நிலையிலும் மகதத்தின் மீதும் அலெக்சாந்தன் மேலான்மை பெற்றுத் தலைமைப் புரோகிதனாகத் தன்னை நிறுவிக்கோண்டுள்ளான். மேலும் தான் வென்ற நாடுகளைச் செல்யுகஸ்நகந்தனிடம் கொடுத்துள்ளான் எனவும் தெரிகிறது. அவனுடனும் சந்திரகொற்றன் போரிட்டுப் பல பகுதிகளை மீட்டதாகவும் தெரிகிறது. "இந்தியர் வாய்மொழியாலேயே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள்; நேர்மையுடன் நிறைவேற்றினார்கள். ஒருபோதும் பொய்யுரைத்ததாகக் குற்றம்சாட்டப்படவில்லை". "கைவிட்டுப்போன எல்லைப்புறங்களைக் கைப்பற்ற செலூக்கஸ் நிகேடார் முயன்றான். ஆனால் துரத்தப்பட்டுச் சந்திரகொற்றனுடன் உடன்பாட்டுக்கு வந்தான். உடன்பாடு போலவே ஒருவித மண ஒப்பந்தமும் ஏற்பட்டது. அங்கு அதிககாலம் ஆட்சியிலிருக்காத சந்திரகோட்டஸ் தன்னால் வென்று கைக்கொள்ளப்பட்ட ஆறாயிரம் வீரர்களையும் ஒட்டுமொத்தமாக ஐநூறு யானைகளையும் செல்யுக்கஸ் நிகந்தனுக்குக் கொடுத்தான்" என்கிறது. "சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான். அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். " எனவும் குறிப்பிடுகிறது. ஞானியரும் முனிவர்களும் எனப் ப்ளுடார்க் குறிப்பிடுவது தமிழ் அமண அந்தண முனிவர்களையும் புலவர்களையும் தான். தொல்தமிழ்ப்பாடல்களில் பல்லாயிரக்கணக்கில் அதனை வெளிப்படுத்தும் பாடல்களும் தத்துவப்பாடல்களும் கொள்கைப்பாடல்களும் வெளிநாடுகளில் இயற்றிப் பாடப்பட்டவையும் உள்ளன. புலவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கவும் கூடும் என்பதையும் மறுக்கமுடியாது. அனைத்துப்பாடல்களும் சந்திரகொற்றன் முதலாக செங்குட்டுவன் வரையிலான கிட்டத்தட்ட 200 ஆண்டுகற்கு உட்பட்ட வரலாற்றையும் தென்னகம் ஓய்ந்துவிடவில்லை; மேலை நாட்டினரும் தங்களது நடத்தைகள மாற்றுமளவுக்கு நமது மேன்மைகள் வெளிப்பட்டன என வெளிப்படுதுகின்றன. அதன்பின்னர் எஞ்சிய புலவர்களால் இயற்றப்பட்டவையே திருமுருகாற்றுப்படை கலித்தொகை போன்றவை. மெகஸ்தனிசின் குறிப்புக்களுக்கு டயடோரஸ் சிக்யுலஸ் கொடுத்த விளக்கம்: "இந்திய முனிவர்களும் ஞானியரும் விதித்துள்ளவற்றுள் குறிப்பிடத்தக்க பண்டைய தத்துவமாக இருந்த ஒன்று மெச்சதக்கதாகும். அதன்படி இந்தியருள் எவரும் எந்தச் சூழ்நிலையிலும் அடிமையாக இருப்பதை ஏற்பதில்லை. அச்சுறுத்தலுக்குப் பணியாமல், அனைவரின் உரிமைகளையும் மதித்தார்கள். சூழ்நிலை மாற்றங்களுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கற்றிருந்தார்கள்.. .. ."; "கிரீஸின் எந்த ஒரு அரசும் வரலாற்றின் எந்தக்கட்டத்திலும் நேர்மையுடன் நடந்துகொண்டதாக உரிமைகோர முடியாது. ஹெலனிய அரசில் அன்றாட நடப்பாக முடிவற்ற சட்டப்புரட்டுக்கள் நீதித்துறைகளில் நடந்தன" எனக் குறிப்பிடுகிறான். மனு: 11.75: "வேதமோதின, அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற; மூன்று வருணத்தாருள் எவரேனும்; ஒழுக்கமில்லாத பிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால்; தோஷம் நீங்க ஜிதேந்திரியாளாய், கொஞ்சமாகப் புசித்துக் கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக் கொண்டு, நூறுயோசனை தூரம் புண்ணிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்) 11.78: இவ்விதமாகப் பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ் செய்து கொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில் இருந்து; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது; 11.81:இவ்விதவிரதமுள்ளவனாய் மனதையடக்கி 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாது சீவித்தால் தோசத்தினின்றும் நீங்குவான்"; மேற்கண்ட தண்டணைகளை மனுவின் பெயரால் அரசர்க்கும் மேலான படிநிலையை உருவாக்கி; தலைமைப் புரோகிதனான பூர்ணகாசியப்பன் மற்றும் காசியப்பன் என்னும் வசிட்ட அலெக்சாந்தர்களின் சந்ததியினரே விதித்துள்ளனர். வேதங்களில் இவற்றுக்கான சான்றுகள் விரிவாக உள்ளன. ரிக்வேதத்தில் போரஸ் என்னும் பெயர்; புருஷ், பூர்வசிரஸ் புருரவஸ் எனப் பலவாறு இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல கிரேக்கப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம்: புருசசூக்தம்; 10ம் மண்டலம் 90ஆம் பாடல் முதலாக: புருடனை அசீவகனாக; ஆயிரம் தலைகளுடனும் ஆயிரம் கண்களுடனும் புவியின் எல்லாப்பகுதிகளிலும் பரவி; சீவர்களின் காவலனாக இருப்பதாகத் தெரிவிக்கிறது; அவனால் முன் நிருத்தப்பட்ட கடவுளர்- மன்னர்- காவலர்களாகச் செயல்பட்ட 1000பேரையும் குறிப்பிடுகிறது. பின்னர் போரசின் மகன் சந்திரகொற்றனையும் புருடனாகப் பலிகொடுத்ததைக் குறிப்பிடுகிறது. பலியிடுதல் என்றால் இந்தியத் தீபகற்பத்தை மூன்றாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு தலைமைப்புரோகிதனை அமர்த்தி; ஆட்சியில் பல மாற்றைங்களைப் புகுத்தி; புருடனை மகா இந்திர பிரஜாபதியாக்கிப் பிற ஏழு ஆட்சியாளர்களைத் திசைக்காவலராக அமர்த்திப் பிரஜாபதியான தனக்குக் கட்டுப்பட வைக்கும் சடங்கு. பிரஜாபதி என அலெக்சாந்தர்களே வசிட்டன் எனவும் உள்ளனர்; உண்மைப் பெயர்கள் இல்லை. காசிநகரைப் பெற்றுக்கொண்ட அலெக்சாந்தன் வசிட்டனாகவும் பூர்ணகாசியப்பனாகவும் மனு எனவும் வேத இதிகாச புராணங்களில்; புருடனுக்கும் மேலானவனாக இடம்பெறுகிறான். ரிக்வேதம்: புருசசூக்தம்: 10ம் மண்டலத்தில் கிரேக்கர், சந்திரகொற்றனின் தந்தையையும் சந்திரகொற்றனையும் அடிமைப் படுதியதைக் குறிக்கும் பாடல்களின் எண்ணிக்கை வரிசைமாறி 15ம்; பிறவேதங்களில் 15முதல் 22வரையும் மொழிபெயர்ப்புக் குறைகளுடன் உள்ளன. வேதப்பாடல்களின் பொருளைச் சரியாக உணர்ந்து அனைவரும் ஏற்கத்தக்கதாக மொழிபெயர்ப்பது இயலாது. எழுத்துக்கள் அறியப்பட்டபோதிலும் அவற்றின் படிமவடிவ மொழியை எவராலும் துல்லியமாக அறிய இயலவில்லை. 1. புருஷன் புவியின் எல்லாப்பக்கங்களிலும் பரவி அதைவிட விஞ்சி நிற்கிறான். 2. புருஷனே இதுவரை இருந்துவந்துள்ள இனி இருக்கப்போகும் இந்த முழுப்பிரபஞ்சமும் ஆவான். அவன் அழியாமையைத் தரும் தலைவன். அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான். 3. அவனுடைய முக்கால் பங்கு அளவு சோதியில் (சூரியனில்) நிலைத்துள்ளது. 4. அது பல வடிவங்களில் உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் சென்றது. 5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான்; விராஜனிடமிருந்து புருஷன் பிறந்தான்; பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருந்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான். 6. தேவர்கள் புருஷனைப் பலிப்பொருளாக்கி (தலைமைக் காப்பாளனாக்கி மூன்று நாடுகளாகப் பிரித்து) யக்ஞத்தை நடத்தியபோது அதற்கு வசந்தம் நெய்யாயிற்று; கோடை விறகாயிற்று; சரத்காலம் அவிப்பொருளாயிற்று. 7. சிருஷ்டிக்கு (மூன்றாகப்பிரிபதற்கு) முன்பிறந்த புருஷனை அவிப்பொருளாகத் தர்ப்பைப்புல்லால் தெளித்துப் பலியிட்டனர். சாத்தியர்களும் ரிஷிகளுமான தேவர்கள் புருஷனை அவிப்பொருளாகக்கொண்டு யக்ஞத்தை நடத்தினார்கள். 8. யக்ஞத்தில் தயிரும் நெய்யும் தோன்றி வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வன விலங்குகளையும் உருவாக்கின. 9. யக்ஞத்திலிருந்து ரிக், சாம வேதங்கள் தோன்றின; சந்தங்கள் பிறந்தன, யஜுர் தோன்றியது. 10. யக்ஞத்திலிருந்து குதிரைகள் இருவரிசைப் பற்களுள்ள விலங்குகள் அனைத்தும்; பசுக்கள் ஆடுகளும் தோன்றின. 12: பிராமணன் அவனது வாயானான், ராசன்யன்-வேந்தன் கைகளானான், தொடைப்பகுதி வைசியனாயிற்று, பாதங்களில் சூத்திரர் பிறந்தனர் (எனவும்; இவற்றுக்கு மாறாக) 13. அவனது மனத்திலிருந்து சந்திரனும், கண்களிலிருந்து சூரியனும், வாயிலிருந்து இந்திரனும் அக்கினியும், சுவாசத்திலிருந்து வாயுவும் பிறப்பிக்கப்பட்டனர் (என ஐவரைக் குறிப்பிட்டு; மேலும் முரண்படுவதாக) 14. அவனது நாபியிலிருந்து காற்று, சிரசிலிருந்து வானம், பாதங்களிலிருந்து புவி, செவிகளில் இருந்து திசைகள் பிறந்தன; தேவர்களால் இவை பிறப்பிக்கப்பட்டன. 15: தேவர்கள் புருஷனைப் பலி உயிராகக் கட்டிப்போட்ட போது; நெருப்பைச் சுற்றிலும் ஏழு கழிகளை நட்டனர்; மூ ஏழு சமித்து விறகுகள் உருவாக்கப்பட்டன. இதன்பின்னராக மேலும் வெள்ளை யஜுர்வேத வாஜனேயிசமிதை xivல் சேர்க்கப்பட்ட 6 பாடல்கள் உள்ளன. 16. தேவர்கள் யக்ஞத்தால் யக்ஞத்தை நடத்தியது முதல் சடங்கானது; இப்பெரும் சக்திகள் பழைய சாத்தியர்களும் தேவர்களும் வசிக்கும் வானுலகுக்குச் சென்றன. 17. நீரிலிருந்தும் பூமியின் சாற்றிலிருந்தும் அவர் விசுவகர்மாவால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகிறார்; துவஸ்தா அவருக்கு உருவைக் கொடுக்கிறார்; அதுதான் ஆரம்பத்தில் புருஷனின் பிரபஞ்சமாகும். 18. சூரியனைப் போன்ற வண்ணத்தையும் இரவைக் கடந்தும் உள்ள இம்மஹாபுருஷனை எனக்குத் தெரியும்; அவனை அறிவதன்மூலமே ஒருவர் இறப்பைக் கடந்திருக்க முடியும்; அதைவிட வேறுவழியில்லை. 19. பிரஜாபதி கர்ப்பப்பையின் உள்ளே நகருகிறார்; பிறவாதிருந்தபோதிலும் அவர் பல உருவங்களில் பிறந்திருக்கிறார். அறிவாளிகள் அவரது இருப்பிடத்தைப் பார்க்கிறார்கள்; அறிவாளிகள் மரீசிகள் இருக்கும் இடத்தைப் விரும்புகிறார்கள். 20: கடவுளர்களுக்காக ஒளிவீசிப் பிரகாசிக்கவும்; பூசாரிகளாகக் கடவுளர்க்கு முன் யார் அமர்த்தப்பட்டார்களோ; அந்தப் பிரமாவின் ஒளிவீசிப் பிரகாசிக்கும் பிள்ளைகளை வணங்குவோம். 21ல் பிரமாவின் ஒளிவீசும் பிள்ளைகளைப் படைத்து; பிராமணரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களே கடவுளர்கள் என்பதை கடவுளர்க்கு ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப் பிராமணர் நன்கு அறிந்திருக்கிறார்கள். 22. ஸ்ரீயும் இலக்குமியும் அவரது மனைவிமார்கள்; பகலும் இரவும் பக்கங்கள்; வின்மீன்கள் அணிமணீகள்; அஸ்வினிகள் பிரகாசமான முகம்; நான் விரும்பியதை அளிப்பீராக; ஒவ்வொன்றையும் எனக்கு அளியுங்கள். மேற்கண்டவைதான் புருஷசூக்தப் பாடல்களாக; ம்யுர் அவர்களின் நூல்தொகுதி 1ல் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் 15ல் குறிப்பிடப்பட்ட தகவல்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ஆவூர் மூலங்கிழாரின், வேள்வி செய்த சோநாட்டுப் பூஞ்சாற்றுப் பார்ப்பான் சௌணியன் விண்ணந்தாயனைப் பாடியதாக புறநானூறு- 166: “நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுஉ ணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகில்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோஇய உரை சால் சிறப்பின் உரவோர் மருக விணைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க் கலைப் பச்சை சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய மறம் கடிந்த அருங் கற்பின் அறம் புகழ்ந்த வலை சூடிச் சிறு நுதல் பேரகல் அல்குல் சில சொல்லின் பல் கூந்தல் நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர் தமக் கமைந்த தொழில் கேட்பக்; காடு என்றா நாடு என்று ஆங்கு ஈர் ஏழின் இடம் முட்டாது நீர் நாண நெய் வழங்கியும் எண் நாணப் பல வேட்டும் மண் நாணப் புகழ் பரப்பியும் அருங் கடிப் [எருங் காலை விருந் தூற்றநின் திருந் தேந்துநிலை என்றும் காண்கதில் அம்மயாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு; சிலைப்பின் பூவிரிப் புதுநீர் காவிரி புரக்கும் தண்புனற்படப்பை எம்மூ ராங்கண் உண்டும் தின்றும் ஊர்ந்து மாடுகம் செல்வல் லத்தை யானே செல்லாது மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமையம் போல நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே?” என உள்ளபாடலின் குறிப்பில் வேள்வி பண்ணிய கரவேலனையும், வேள்வியை முன்நின்று நடத்திய விசுவாமித்திரனின் பெயரையும் மாற்றியுள்ளனர். அமணத்தை வழிநடத்திய முதுமுதல்வன் விசுவா மித்திரன் விதித்த முதுநூலின்படி வேள்வியை நடத்திக் கொடுத்தவன் விசுவாமித்திரனே. 'நீடிய சடையொடு ஆடாமேனி குன்றுறை தவசியர்'ஆன 'நன்றாய்ந்த நீள்நிமிர்சடை' அமண முதுமுதல்வன் விசுவாமித்திரனின் நூலை; இகல்கண்டு பொய்யுரைத் தோரின் பொய்கொளாது; மெய்கொண்ட, உரை சால் சிறப்பினராக போரசின் சூரியகுடியினர் காட்டப்படு கின்றனர். இம்முதுகுடியின் உரவோனாக ஆட்சியாளனாக கரவேலனைக் காட்டுகிறார். உரைசெய்தோர் 'நன்றாய்ந்த நீள்நிமிர் சடை முதுமுதல்வன்' சிவன் எனத் தவறாகக் காட்டுகின்றனர்; அக்காலத்தில் சிவன் என எங்குமே இடம்பெற்றதில்லை; முக்கண்ணான் கறைமிடற் றன்னல் கறைமிடற்றொருவன் மட்டுமே காணப்படுகிறான். எனவே மேற்கண்ட முதுகுடியின் உறவோனக இடம் பெறுவோனே சந்திரகொற்றனின் மகன் கரவேலன் எனக் காண்கிறோம். தலைமைப் புரோகிதனாக வசிட்டன் இருக்க விசுவாமித்திரன் எப்படி வேள்விசெய்தான்? சந்திரகொற்றனின் ஆட்சியின்போது வந்த அலெக்சாந்தனுக்குப் செல்யுக்கஸ்நகந்தன்= பிரகத்தன் உதவியுள்ளான். காரணம் பிரகத்தனின் மனைவிக்கும் முதல் அலெக்சாந்தனுக்கும் பிறந்த பெண்ணே ஹெலன்= சத்தியவதி. சிறுவனான சந்திரகொற்றன் இளைஞனானபோது இப்பெண்ணைப் புணரவைக்கக் கிரேக்கருள் அல்லது கிரேக்கனுக்குப் பிறந்து இங்கு வளர்ந்த ஒருவன் முயன்றாதாகத் தெரிகிறது. தேவவிரதன் =பீஷ்மன் என்பவன் தனது தந்தை சந்தனுவுக்குச் சத்தியவதியை மணம்பண்ணி வைக்க முயன்றான் என மாபாரதம் குறிப்பிடுகிறது. ரிக்வேதம் : மண்டலம் 10ல் 8. அதிதி[கங்கை]யின் உடம்பிலிருந்து எட்டுப் புதல்வர்கள் பிறந்தனர்; அவள் (எட்டாவதாகப் பிறந்த) மார்த்தாண்ட (பீஷ்ம)னை மேலேவானவெளியில் அனுப்பிவிட்டு ஏழுபுதல்வர்களுடன் கடவுளை (அலெக்சாந்த வசிட்டனை) அணுகினாள். அதிதி தனது ஏழு புதல்வர் (திசைக்காப்பாளர்)களுடன் கடந்த (எகிப்திய கிரேக்க) சந்ததியில் புகுந்துகொண்டு மார்த்தாண்டனைப் பிறப்பும் இறப்பும் உள்ள (பாரத)மனித வர்க்கங்களுக்காகப் பெற்றாள்; என்கிறது. சந்திரகொற்றனுடன் ஹெலனைப் புணரவைக்க முயன்றவனிடம் பிரகத்தன் குறிப்பிடுவதாக; நற்றிணை- 45: "இவளே கானல் நண்ணிய காமர்சிறுகுடி நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன்எறி பரதவர்மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ? புலவு நாறுதும் செலநின் றீமோ? பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ? அன்றே எம்ம நோரில் செம்மலும் உடைத்தே" எனக் குறிப்பிடுகிறான். அப்பெண்ணே ஹெலன்- சத்தியவதி எனவும் சந்திர கொற்றனுடன் புணர்ந்து கருவுற்றாள் எனவும் தெரிகிறது. இதனால் பல தொல்லைகள் வந்துசேர்ந்தன. சந்திரகொற்றனால் கருவுற்ற ஹெலன்- சத்தியவதியால் உருவான தொல்லைகளை; கலித்தொகை-பாலைக்கலி- 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்.. . .. .. சிறப்புச்செய் துழையராப் புகழ்பேத்தி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் .. ." எனக் குறிப்பிடுகிறது. ஏதோ ஒருவகைத் தூண்டுதலாலும் சதியாலும் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் இந்தியத் தமிழர் வாரிசுகளும் தொல்லைக்கு ஆளானதைக் குறிப்பிடுகிறது. "கைவிட்டுப்போன எல்லைப்புற மாகாணங்களைக் கைப்பற்ற செலூக்கஸ் நிகேடார் முயன்றான். ஆனால் துரத்தப்பட்டுச் சந்திரகொற்றனுடன் உடன்பாட்டுக்கு வந்தான். உடன்பாடு போலவே ஒருவித மண ஒப்பந்தமும் ஏற்பட்டது. அங்கு அதிக காலம் ஆட்சியிலிருக்காத சந்திரகோட்டஸ் தன்னால் வென்று கைக்கொள்ளப்பட்ட ஆறாயிரம் வீரர்களையும் ஒட்டு மொத்தமாக ஐநூறு யானைகளையும் செல்யுக்கஸ் நிகந்தனுக்குக் கொடுத்தான்." என ப்ளுடார்க்கின் நூல் குறிப்பிடுகிறது. சந்திரகொற்றனுக்கு மணம்பண்ணப்பட்ட சத்தியவதியும் பல நிபந்தனைகளை விதித்துக் கட்டுப்படுத்தியுள்ளாள். கிரேக்கன் உபரிசரவசு= அலெக்சாந்தனின் அடிமைப் படைத்தளபதி (ஒரு மீனவனாக=மீன் பாண்டியரின் சின்னமாக்கப் பட்டது; விதுரனின் பிறப்பும் விதுரனின் மகன் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனது கால்வழியில் வந்தவர்களே) ஹெலன் =சத்தியவதி மீது மீன்வாடை வீசியதாகவும் கங்கைநதியில் [இலங்கைப்பகுதியில் நடந்ததை மாபாரதம் மறைத்துள்ளது] படகு ஓட்டியபோது பராசரனைப் புணர்ந்ததால் இவ்வாசம் நீங்கி வியாசன் பிறந்ததாகவும் குறிப்பிட்டு; [ஹெலன் ஒரு கிரேக்கரின் அடிமைப்பெண் என்பதை மறைத்து மாபாரதம் குழப்புகிறது] அவள் மீது சந்திரகுப்தன் ஆசை கொண்டான் அவளோ தனக்குப் பிறக்கும் புதல்வர்க்கே ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்ததால் மனம்தளர்ந்து திரும்பி விட்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்= கிருஷ்ணன்; நீக்கப்பட்டு அவ்விடத்தில் அசோகன் என முசுகுந்தன்= காசியப்பன்= காசி ராசனின் மகன், தேவவிரதானகப் புகுத்தப்பட்டுச் சந்திரகுப்தனின் ஆசையை நிறை வேற்றுவதாக நடித்துத் தனது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத்து ஹெலனை மணம் முடித்து பீஷ்மனானான் என மாபாரதம் குழப்புகிறது. மேலும் "விருந்தொன்றில் [சந்திரகொற்றன்]-சந்தனு; கங்கை (ப்பகுதி)ஊர்வசியின்மீது மனம் பரிகொடுத்தவனாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியதனால் கங்கைப் பகுதிக்கு அனுப்பப் பட்டான். கங்கைப்பகுதியை ஆட்சிசெய்த எட்டுக் காவலர்கள் -வசுக்களைவென்று; அவர்களின் பெண்களைச் சந்திரகுப்தன் மணந்தான். எட்டாவதாகத் தொடர்புகொண்ட பெண்ணுக்குப் பிறந்தவனே பீஷ்மன் எனப்பட்ட தேவவிரதன் எனவும் உள்ளது. கரவேலன்= கிருஷ்ணனும் எட்டாவதாகப் பிறந்தவனே. சந்திரகொற்றனை மணந்த சத்தியவதிக்கு மகன் பிறந்தவுடன் சந்திரகொற்றனின் மகன் கரவேலனைப் பொய்க்குற்றம் சுமத்தி நாட்டைவிட்டு நீக்கினர்; நீக்கப்பட்ட கரவேலனுக்கு வேங்கடமலைக் காட்டில் ஒரு நாட்டை உறுவாக்கி வீரர்களைக் குடியமர்த்தி வேள்விநடத்தினார் விசுவாமித்திரர் என மாபாரதமிம் குறிப்பிடுகிறது. “அரச[சந்திரகொற்ற]னுக்கும் வசிட்ட [அலெக்சாந்த]ருக்கு மிடையே; சீடன் மதகுரு என்ற உறவின் அடிப்படையில் வசிட்டர் அயோத்தி நகரத்தையும், நாட்டையும், அரசமாளிகையில் அமைந்துள்ள அந்தரங்க இருப்பிடங்களையும் தனது ஆளுகைக்குள் வைத்திருந்தார். ஆனால் வசிட்டருக்கு எதிராக விதியின் காரணமாகவோ அல்லது அறிவீனத்தின் காரணமாகவோ சத்தியவிரதன் (கரவேல்) கோபம் கொண்டிருந்தான். அவனுடைய தந்தை, அவனை அரசாங்க எல்லைக்கு வெளியே தள்ளி வைத்திருப்பதைத் தடுக்க, ஏதோ ஒரு காரணத்தால், குலகுரு வசிட்டர் தலையிடவில்லை. (மனுவின் சட்டப்படி சத்தியவிரதன் 12 ஆண்டுகள் ஆட்சிவகிக்கத் தடை செய்யப்பட்டிருந்தது. [காரணம் ஹரிவம்சத்தின் மற்றொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு குடிமகனின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு கடத்திச் சென்ற குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு நாட்டைவிட்டு பிரஷ்டம் செய்யப்பட்டான் என. இதுவும் படிம வடிவில் உள்ளதால் சரியான பொருளை எவரும் கொடுக்கவில்லை. சத்தியவிரதனான கரவேலனும் ஒரு திசைக் காப்பாளனாக இருந்து மற்றொரு திசைக் காப்பாளனின் நாட்டைக் கைப்பற்ற முயன்றிருக்கவேண்டும். நாடுகளைப் பெண் என்றுதான் பெருமளவில் வேதங்களும் குறிப்பிடுகின்றன] வசிட்டர் இதனை தடுக்க விரும்பவில்லை. சத்தியவிரதனின்(காரவேலன்) வாதம் : ”திருமணச் [திசைக்காப்பாளரை அமர்த்தும்] சடங்குகளில் சூத்திரங்கள் மட்டுமே கட்டுப்படுத்துவதாக உள்ளன. ஏழாவது அடி எடுத்துவைத்து நான் எனது மனைவியை[நாட்டை]க் கைப்பற்றியபோது இச் சூத்திரங்கள் அனுசரிக்கப் படவில்லை. சட்டத்தை அறிந்த வசிட்டர் இவ்விசயத்தில் எனக்கு உதவ முன்வரவில்லை.” “எனவே சத்தியவிரதன் வசிட்டருக்கு எதிராகக் குரோதத்தை வளர்த்துக் கொண்டான். இந்த ஏழு அடி வைக்கும் சடங்கை ஏற்றுக்கொண்டதால் தனது குடும்ப கௌரவத்தை மீட்டான். தண்டனை விதிக்கப்பட்டதால் மகனுக்கு அரசுப்பதவி அளிக்கத் தீர்மானித்தார். வலிமிக்க சத்தியவிரதன் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்தபின் கோபம், களைப்பு, ஏமாற்றம், பசியின்கொடுமை ஆகியவற்றின் காரணமாக வசிட்டரின் பால்தரும் பசுவை [வேங்கடமலைக் காடுகளிதான் மாட்டுப்பண்ணைகள் அனைத்தும் இருந்தன. அவற்றை விசுவாமித்திரரின் உதவியுடன் கைப்பற்றி]க் கொன்றான்/ [கொண்டான்], அதன் மாமிசத்தை [அங்குகிடைக்கும் வருவாயை]த் தானும் தின்று பிறகு விசுவாமித்திரரின் புதல்வர்க்கும் கொடுத்தான். (பசிவந்திட பத்தும் பறந்துபோம்) பத்துக் கடமைகளிலும் தவறியதாலும் மூன்று தவறுகளைச் செய்ததாலும் வசிட்டர் அவனை 'திரிசங்கு' ஆக்ககடவது எனச் சாபம் கொடுத்தார்”. (மூன்றுவிதமான தண்டனை: மனுவின் சட்டத் தொகுப்பில் உள்ள இம்மூன்று விதிகளையும் முன்னரே தனித்தனியாகக் கண்டுள்ளோம்.) இராமாயணம்: வசிட்டரும் புதல்வர்களும் திரிசங்குவைக் கைவிட்டபோது, விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்குத் தெற்கில் ஒரு நாட்டை உருவாக்கக் குடியமர்த்தியதாகப் புராணவடிவில்; சுவர்க்கமான துவராபதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகற்கு விலக்கி வைக்கப்பட்டு விஸ்வாமித்திரரின் தவவலிமையால் வேத வேள்விகளோடு சுவர்க்கத்துக்கு அனுப்பட்டபோது அவனை திருப்பி அனுப்பியதாகவும், ராசரிசியான விசுவாமித்திரர் மீண்டும் அவனை சுவர்க்கத்து அனுப்பியதாகவும், துவாராபதியின் இந்திரன் மீண்டும் ஒதுக்கியதாகவும் காண்கிறோம். இந் நிலையே திரிசங்குநிலை எனப்படுகிறது. இந் நிலையில் மகதத்துக்கும் துவராபதிக்கும் நடுவில் தென்பாகத்தில் அவனுக் கென ஒரு நாட்டை உருவாக்கி புதிய துருவம், புதிய சப்தரிஷிகள் என ஒரு நாட்டை நிர்மானித்ததாகக் காண்கிறோம். இதுவே இரேணாடு ஏழாயிரம். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்(சோழன் சத்தியவிரதன்=விராடன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது துர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்ட துர்வசர்கள்; விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்)ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்" எனக் குறிப்பிடுகிறது. இந்த 6000 பேருமே சந்திரகொற்றனால் பிரகத்தன்= செல்யுக்கஸ்நக்கந்தனுக்குக் கொடுக்கப்பட்ட வீரர்கள் என்பதை முன்னரே கண்டோம். மஹாபாரதம்-ஆதிபருவம்: இதியில் வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த பல பூசல்கள் இடம்பெற்றுள்ளன, சத்திரிய ரிஷிக்கும் சோழராச குருவுக்குமானவை. தமிழ் அந்தணர்க்கும், சத்திரியபிராமணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத் தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்பதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது 100 புதல்வர்களை நாடித் தெற்குத்திசைக்கு வந்து வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென்புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவா மித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன் (நாடுகடத்தப்பட்ட கரவேலன்) யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடும் உணவைக் கடவுளரும் (திசைக்காப்பாள அரசர்கள்- எழுவர்) ரிஷிகளும் (பிராமணர்) எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம்- கிரேக்கம்) சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வி யுற்ற விசுவாமித்திரர், வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றூவரையும் சபித்தார். அவரது சாபம் பலித்தது. ரிசிகளும் பயந்து நடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். பெரும்பாணாற்றுப்படை: இப்பாடலில் விசுவாமித்திரனால் கரவேலனுக்காக வேள்வியாகத்தில் உருவாக்கப்பட்ட மூதூர்: “கடுங்கண் கானவர் கடறுகூட் டுண்ணும் அருஞ்சுரம் இறந்த உம்பர்: பருந்துபட ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி வைந்நுதி மலுங்கிய புலவுவாய் எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாண் சாபம் சாத்திய கணைதுஞ்சு வியல்நகர் .. ..” “குட காற்று எறிந்த குப்பை செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும் .. ..” “காந்தல் அம் சிலம்பில் களிரு படிந் தாங்கு பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் வெயில்நுழைபு அறியா குயில்நுழை ெ பாதும்பர் ..” “நீல்நிற நெடி யோன்(காரவேல்) கொப் பூழ் நான்முக ஒருவற்( விசுவாமித்திரன்) பயந்த பல்இழைத் தாமரைப் பொகுட்டில் தாண்வரத் தோன்றி சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் .. ..” விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர் .. ..” என இடம்பெறக்காண்கிறோம். அலெக்சாந்தனின் படையையும், அதனை நடத்திவந்த செல்யூக்கஸ் நிக்கந்தனையும், போரிட்டு வெற்றி கண்டான் சந்திரகொற்றன். ஆப்கானிஸ்தான் பலூசிஸ்தான் என, இன்றைய கர்நாடகம் வரை இவனது சாம்ராஜ்யம் இருந்தது. சந்திர கொற்றன் மௌரியன் அல்ல; அவனுக்கும் சத்தியவதிக்கும் பிறந்தோரே மௌரியராவர். 27 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் எண்ணாயிரம் அமணர்களுடன் பத்ரபாகு என்ற ஆசாரியரின் தலைமையில் இன்றைய கர்நாடகத்தின் சிரமண பெளகொள வந்துவிட்டான்; காரணம் அப்போது ஏற்பட்ட பஞ்சம் என 'வட்டாராதெனே' நூல்; வரலாற்றை மறைத்துக் குறிப்பிடுகிறது. மேலும் தூலபத்திரர் என்ற அமணரின் தலைமையில் பாடலிபுத்தரத்தில் செயல்பட்ட அமணர்கள்; சத்தியவதிக்குப் பிறந்த பிம்பிசாரனின் தலைமையில் முன்னர் இருந்த அமண நூல்களான அங்கம் உபாங்கம் போன்றவற்றைத் தொகுத்தனர்; ஆயினும் அத்தொகுப்பைப் 12ஆண்டுகற்குப்பின் சந்திரகொற்றனுடன் தாயகம் திரும்பிய எண்ணாயிரம் அமணர்கள் ஏற்க வில்லை எனவும் குறிப்பிடுகிறது. [பிம்பிசாரன் காலத்தில் அமணம் பற்பல மாற்றங்கற்கு ஆளானது. அவற்றையெல்லாம் மறைத்தே வைதீகக் கருத்துக்களும் பிராமணரும் பிராமணியமும் உலக மதங்களான கிரீஸ்தவமும் இசுலாமும் தோற்றுவிக்கப் பட்டன. இவற்றுள் எவற்றையும் ஏற்காத இலங்கையின் சிங்களர் அமணத்திலிருந்த இறுதித்தீர்த்தங்கரன் கரிகால்சோழனான புத்தன்- சித்திபெற்ற சித்தார்த்தனைத் தலைவனாக்கிப் பௌத்த மதத்தை உருவாக்கினர். இதனை ஏற்காத அமணத்தைக் கைப்பற்றி மகாவீராகிய பிம்பிசாரனை ஆதரித்தோர் சைவத்தையும் புத்தன்= கரிகால்சோழனை ஆதரித்தோர் வைணவத்தையும் உருவாக்கி; அமணரின் வரலாற்றை அழித்தனர். இவ்விடத்தில் பெரும் ஐயம் எழுகின்றது. பாடலிபுத்ரம் என காஞ்சியும் குறிக்கப்படுகிறது. காஞ்சியில் அமணத் தலைமையாக இருந்த கரவேலனுக்குப் பின்னர் கரிகால்சோழனின் தங்கை பாவை= கந்தி தீர்த்தங்கரியானாள். இப்பெண்ணை; கந்தி- கந்தியார் மற்றும் வெள்ளிவீதியார் எனவும் குறிப்பிடுவர். வெள்ளிவீதியாரின் சில பழந்தமிழ்ப் பாடல்களும் பிறர் பாடியவையும் உள்ளன. மதுரையிலும் வச்சிரநந்தியின் தலைமையில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டு அனைத்து நூல்களும் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அமணநூள்கள் குறிப்பிடுகின்றன. வரலாற்றை மறைத்த எத்தனையோ குழருபடிகளைக் காண்கிறோம். அகத்தியர்களின் வரலாற்றையும் சிதைத்து உருவாக்கப் பட்ட தீர்த்தங்கரர் வரலாறும் தெளிவாக இல்லை. பிம்பிசாரன்= மகாவீரால் அமணம் இரண்டாகப் பிளவுற்றதுதான் உண்மை. இதிகாசங்களும் காப்பியங்களும்; மறைக்கப்பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மாற்றி உருவாக்கப்பட்டவையே.] எனவே அலெக்சாந்தனும் பீஷ்மனும் சந்திரகொற்றனையும் அவனது மகனும் இந்திய வாரிசுமான கரவேலனையும் மனு நீதிப்படி குற்றம் சுமத்தி நாடுகடத்தி; சத்தியவதியின் மகன் பிம்பிசாரனை அரசனாக்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது. இராமாயணம்: [மியூர் அவர்களின் முதல்தொகுதி பக்கம் 397- 400(சுருக்கம்)] முன்னொரு காலத்தில் பிரசாபதியின் மகன் குசன் என்னும் அரசன் இருந்தான், அவனது மகன் குசநாபன். குசநாபனுக்குக் காதி என்ற மகனிருந்தன் அவனது மகனே விசுவாமித்திரன். அவரது ஆட்சியில் வலம்வந்தபோது பிரமாவின் மகன் வசிட்டரின் ஆசிரமத்துக்கு வந்தார். அவர்கொடுத்த விருந்தைக் கொடுத்தது வசிட்டரிடம் இருந்த பசு என்பதை அறிந்து அதனைத் தன்னிடம் கொடுக்கும் படி வற்புறுத்தினார். அதற்குப் பதிலாக வேறு பசுக்களைத் தருவதாகச் சொன்னார். வசிட்டர் ஏற்காததால் விசுவாமித்திரர் பசுவை வலிக்கட்டாயமாகக் கைப்பற்றினார். வீரர்களிடமிருந்து தப்பிய பசு வசிட்டர் தன்னைக் காப்பாற்றவில்லை என அவரிடம் முறையிட்டது. அரசன் வலிமையானவன் அவனை எதிர்க்க முடியாது என்றார். பசுவோ பிராமணனே வலிமையானவன்; அவனது வலிமை தெய்வீகமானது என்றது. பிராமண வலிமையால் என்னைக் கைப்பற்றியுள்ளீர்கள். எனக்குக் கட்டலையிடுங்கள் அந்த அரசனின் அதிகாரத்தையும் வலிமையையும் அழித்துவருகிறேன் என்றது. தனது வலிமையால் பல வீரர்களை உருவாக்கி விசுவாமித்திரரின் படைகளையும் வலிமையையும் தனது வலிமையால் அழிக்க முயன்றபோது அவற்றை விசுவாமித்திரரின் வீரர்கள் அழித்தனர். பசுவோ மீண்டும் சகர்களையும் யவனர்களையும் கொண்டுவந்து போரிட்டு எதிரிகளை அழித்தது. ஆனால் அரசன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு பசுவின் வீரர்களை அழித்தான். மீண்டும் பசு பலவகையான வீரர்களைக் கொண்டுவந்தது. அவர்கள் அனைவரும் விசுவாமித்திரரின் யானை குதிரை ரதங்கள் காலாட்படை அனைத்தையும் அழித்தனர். அதனால் விசுவாமித்திரர் தனது புதல்வர்களுள் ஒருவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தவம்செய்யச் சென்றுவிட்டார்.; என்று குறிப்பிடுகிறது. மேலும்; தனது வலிமையால் பலவிதமான போர்முறைகளையும் கற்று வலிமையைப் பெருக்கிக்கொண்டு வசிட்டரின் ஆசிரமத்தை நிர்மூலமாக்கினார். விசுவாமித்திரரின் வீரத்தை வசிட்டர் தவிடுபொடியாக்கினார். இறுதியில் விசுவாமித்திரர் பிராமணப் பதவி பெற எண்ணித் தனது மனைவியுடன் தெற்குநோக்கிப் பயணம் செய்தார். அவரை மெச்சி பிரமா தோன்றி அவரை ராசரிசிகளின் மோட்சத்தை அடைந்துவிட்டதாகவும் பிராமப் பதவியை அடைந்துவிட்டதாகவும் அறிவித்தார்; என்கிறது. மேற்கண்டவை அனைத்தும் ப்ல்வேறு இடங்களில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களைப் படிம வடிவில் குறிப்பிடுவதாக உள்ளது. பசு என்பது பிராமணனையும் பின்னர் சத்திரியராக உருவெடுத்த பிராமணரையும் வசிட்ட குலத்தருக்கும் விசுவாமித்திர குலத்தருக்கும் நடந்த பல் மோதல்களையும் குறிப்பிடுவதாகும். விசுவாமித்திரனைத் தண்டித்து நாடுகடத்தியபோது விசுவாமித்திரன் இன்றைய ஒடிசாவுக்குச் சென்று ஒரு நாட்டை உருவாக்கி ஆட்சி செய்துள்ளான். அதன்மீதும் சத்தியவதிக்குச் சந்திரகொற்றன் கொடுத்த வாக்குறுதிப்படி கைப்பற்ற முயன்றுள்ளனர். வசிட்டனால் தண்டிக்கப்பட்ட விசுவாமித்திரனை; திரிசங்கின் மகன் அரிச்சந்திரன் என மாற்றி; அரிச்சந்திரனை விசுவா மித்திரன் கொடுமைப்படுத்தியதாக வரலாற்றையே தலைகீழாக மாற்றியுள்ளனர். ரிக்வேதம்;3-53.24: 'விசுவாமித்திரரின் குலத்தவரான பாரதர்களுக்கும், வசிட்டரின் குலத்தவர்களான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது.'- என குறிப்பிடுகிறது. (\இதனை சத்திரியர்க்கும், அந்நியர்க்குமான பகை எனக் காணவேண்டும்.

No comments:

Post a Comment