Wednesday, 4 December 2013
மதுரையை எரித்தவர் சோழரே
மதுரையை எரித்தவர் சோழரே - ஸ்ரீராமகிருஷ்ணபரஹம்சன்
புறநாநூறு :367: இந்தப் பாடலில் ஒரு சூரிகுலச்சோழன்; தேவையானதையெல்லாம் செய்து கொடுத்தும் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்த பார்ப்பனரை நினைந்து வருந்துகிறான்.
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
புறநாநூறு- 361: பெருமளவில் பல அடிகள் நீக்கிச் சிதைக்கப்பட்டுள்ள இப் பாடலில் கேள்விக்குரிய வேள்வியைத் தடுத்து நிறுத்த முயன்ற அந்தணர் தண்டிக்கப்பட்டபோது அவர்களுக்காக ஆட்சியை இழந்தாலும் அதற்காக அஞ்சாமல் அந்தணரைக் காத்துநின்ற சூரியகுலச்சோழனைப் புகழ்கிறது.
"காரெதிர் உருமின் உரறிக் கல்லென
ஆருயிர்க் கலமரும் ஆராக் கூற்றம்
நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தனர்க்கு
அருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத்
தாயினன்று பலர்க்கீத்து"
சிலப்பதிகாரம்- துன்பமாலை- 51- 54:
" 'காய்கதிச் செல்வனே கள்வனோ என்கணவன்?' எனச் சூரியகுலச் சோழனைக் கேள்விகேட்கிறாள் ஒரு பெண்;
'கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்
என்றனன் வெய்யோன்" அதற்கு வெய்யோனான சூரியச்சோழன்; 'இல்லை, கள்வனல்ல' எனச் சொல்கிறான். மேலும் கள்வனெனக் குற்றம் சுமத்தியவனது கூடல் நகர் எரியூட்டி அழிக்கப்படும் எனவும் சொல்கிறான்.
சிலப்பதிகாரம் வஞ்சினமாலை- 47- 57: இதில் அங்கி எனச் செவ்வாய்- சேஎய் தோன்றி 'என்ன செய்ய வேண்டும்' என அப்பெண்ணைக் கேட்கிறான். இதில் அங்கியைப் பார்ப்பனக்கோலத்து வந்ததாகக் குறிப்பிடுவது பொருளுடையது. காரணம் சேஎய்- செவ்வாய்- அங்கி; பார்ப்பனனுக்கும் சோழகுலப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்பதாகும். இவ்வரலாறு மிகநீண்டது. அப்பெண் சிலரை நீக்கித் தீத்திறத்தோரை மட்டும் அழிக்கச் சொல்கிறாள். பாடலில் அழிக்காமல் நீக்கச் சொல்லப்பட்டோருள் பார்ப்பனர் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது; அதனை அந்தணர் என மாற்றினால் பாடலின் அடி இயல்பானதாகத் தோன்றுகிறது.
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயெற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
'மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேன் யார்பிழைப்பார் ரீங்கென':
'அந்தணர் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
ரத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்'கென்று காய்த்தீயை
பொற்கொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்"
குறள்: "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக ழான்" என்கிறது. மேலும்
"மறப்பினும் ஓத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" எனவும் குறிப்பிடுகிறது.
புறநாநூறு- 9: இப்பாடல் ஒருவனை நெடியோன் போல வாழ்க என வாழ்த்துகிறது. இப்பாடலிலும் பார்ப்பன என்ற சொல்லை அந்தண என மாற்றினால் பாடல் இயல்பானதாகத் தோன்றுகிறது.
"ஆவும் ஆனிய அந்தண மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போர்ப் புதவர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின்என
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவன் நெடியோன்"
பார்ப்பனர் வருகை
ஒருகாலத்தில் பார்ப்பார் இல்லை. பிறநாட்டினர் இங்குவந்து நாடுகளைக் கைப்பற்றியபோது நிகழ்ந்த புணர்வுகளாலும் பூசல்களாலும் பிறந்து பெருகிய பார்ப்பாரை ஏற்கவேண்டிய சூழல் துவங்கியதாகத் தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன. ஒழுக்கம் மேன்மை பெற்றதாக, மானத்தோடு கூடியதாகவும், மானம் கெடின் உயிர்நீக்கும் நிலையும் இருந்தது. இந்நிலை சீரழிந்த சூழ்நிலை மிகநீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதால் சுருக்கமாகக் காண்போம். அந்தணர் தமிழர்; பார்ப்பனர் என்போர் விரதியச்சடங்கு செய்து தென்னகத்தில் அந்தணமுனிவர் சமூகத்தோடு சேர்க்கப்பட்டனர் என்பதை; திரு ஹரஹரப் பிரசாத் சாஸ்த்திரி அவர்களின் "பௌத்த ஆய்வுகள்" என்ற நூல்: விரதியரைத் தூய்மைப்படுத்த வேண்டி நிகழ்த்தப்பட்டதும், 'பஞ்சவிம்ச' பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு வேதகாலச் சடங்குகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. பிற சடங்குகளில் வேள்விக் கூடத்தில் ஒரு வேள்வியாளரும் அவரது துணைவியும் இருக்க, இச்சடங்கில் ஆயிரக்கணக்கில் வேள்வியாளர்கள் இருந்துள்ளனர், இச்சடங்கின் முதல்வனாகக் 'குலபதி' இருக்க மற்ற அனைவரும் குலபதியைத் தொடர்ந்து சென்றனர். ஒரே சடங்கில் ஆயிரக்கணக்கில் விரதியரை (தமிழ்) அந்தனர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான உபாய மென்று நான் கருதுகிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன, கூட்டம் கூட்டமாக ஆரியர் நிலைத்துஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தங்கள் விரதிய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை, அவற்றை இன்னும் விரதியராகவே வாழ்பவருக்கு அல்லது மகததேச பிராமணருக்கு விட்டுவிட்டு வர வேண்டும். வேறொரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி மகததேச பிராமனர் என்போர் [தமிழ்முனிவர்] அந்தனர்களால் தாழ்நிலையினராக கருதப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு சிறந்த [தமிழ்முனி]அந்தனரான உயரிய திறனைப்பெற்ற 'கௌசிதாகி' என்ற புனிதமடைந்த [முனிவ] அந்தனரையும் பெற்றனர்; எனக் குறிப்பிடுகிறார்.
புலவர் எனவே புஷ்யமித்திரனால் துரத்தப்பட்ட ஆரியர்க்கும்; ஆரியவரசன் பிரகத்தனுக்கும் மகதத்தைக் கைப்பற்றி இழந்த பார்ப்பனர்க்கும் தண்தமிழ்க் கல்வியை அந்தனர் கபிலர் பயிற்றியது உறுதிப்படுகிறது. மேலும் கௌதாகி முனிவர் எனக் கபிலர் குறிக்கப்படுவதால் விசுவாமித்திரகுல அந்தணராகிறார். தன்னை அந்தனன் என்று புறநாநூறு- 200 மற்றும் 201ல் அவரும் குறிப்பிடுகிறார். அவரிடம் பயின்ற விரதியரையே குறுந்தொகை- 156:
"பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ இதுவே" என "படிவ உண்டிப் பார்ப்பனர்" எனக் குறிப்பிடுகிறது.
கற்பும் களவும்
பழந்தமிழ்ப் பாடல்கள் கற்பு குறித்து எந்த விதிமுறையையும் தெரிவிக்கவில்லை. பார்ப்பனரான அந்நிய பிராமனர் வந்த பின்னரே இதுகுறித்த சிந்தனை தோன்றியதைக் காண்கிறோம்: குறுந்தொகை- 156:
"பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ இதுவே" என ஒரு பார்ப்பனன் பண்புமீறிப் பெண்ணைக் கெடுத்து ஓடிவிட்ட காலத்து; கெடுத்தவனைப் பெண்ணுடன் மீண்டும் பிணைக்கும் மருந்து - கரணம் - விதிமுறை உள்ளதா? என வினவக் காண்கிறோம். ஒரு சோழநாட்டு அரசர்குடிப் பெண்ணை ஒரு பார்ப்பனன் கெடுத்து விட்டுப்பிரிந்து ஓடிவிட்டதால் அப்பெண்; தானும் தனது நெஞ்சும் வருந்த; பாடும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. இதனை உறுதிசெய்ய; பாவையுடன் அந்தப் பார்ப்பனனைச் சேர்க்கத் தூதுசென்ற புலவர் பரணர்: நற்றிணை- 247ல்:
" .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ
நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும்
நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல்
விருந்திரை கூடிய பசலைக்கு
மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" எனக் குறுந்தொகை 156 குறிப்பிட்ட மருந்தை வேண்டுகிறார். பல ஆண்டுகளுக்கு பரணர் தனது முதுமையிலும் இப்பெண்ணுக்காக வருத்தும் பாடல்களும் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment