Friday, 5 December 2014
சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!
சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!
சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!
சப்தரிஷி - ஏழுமுனிவர்களின் மண்டலங்களில் தென்கிழக்கில் வின்மீன்களில் ஸ்வாத் என்ற மீன் வால்மீகி முனிவரால் அனுமனுடன் சேர்த்துப் பேசப்படுகிறது! இம்மீன் இடம்பெற்ற மீன்தொகுதியை ஆல்பா பூட்ஸ் என மேலைநட்டினர் குறிப்பிடுவர். [கீழ்த்தாடை எலும்பு வளர்ச்சியடையாத முகம் எனப்பொருள்படும்] சுவாத் மீனை ஆர்க்ற்றஸ் எனக்குறிப்பிடுகின்றனர். [காதாநாயகி எனக்கொள்ளலாமா?] இதனைக் குரங்குபோன்ற [அனுமனின்] வடிவம் என முன்னோரால்கொள்ளப்பட்டது! இராமாயணத்தில் கிஸ்கிந்தாகாண்டத்தில் 67ஆம் சருக்கத்தில் 20ஆம் பாடலில்: பவிஷ்யதி ஹிமே; யதா ஸ்வாதே; பந்தா இவாம்பரே - சுவாதி முன்னேருவதேபோல நான் முன்னேறுவேன் என அனுமன் குறிப்பிடுகிறான்! வாயுவின் புதல்வனே அனுமன்; அன்றைய வாயுவாக இந்திரனான சிவனை மஹேசுவரனையே குறிப்பிடுவதாகத்தெரிகிறது! அனுமன் குரங்காக உருவானதைப் பண்டைய எகிப்த்து நாட்டின் தொன்மங்களும் குறிப்பிடுகின்றன. சீனரின் தொன்மங்களில் கன்னி - கன்யா மண்டலத்தின் அருகில் உள்ள குரங்கு எனக்குறிப்பிடுகின்றன. வன்மண்டலத்தைப் பலபிரிவுகளாக்கிக் கொடுக்கும் கிரிமால்டி கேட்லாகில் இவை இடம்பெற்றுள்ளன. சுவாதியியும் சூரியனும் சேர்ந்து காணப்படும் காலமான அக்டோபர் 20முதல் நவம்பர் 2வரை இந்தியாவுக்குள் கடல்கொந்தளிப்பும் சூர - சுர ஆவளியும் [தீபாவளி] புயற்காற்றும் [சுவாதிபவனோ]உருவாகின்றன! சுவாதியும் வாயுவுக்கும் ஏற்பட்ட தொடர்பே கன்யாவுக்கும் மகேசுரனுக்கும் ஏற்பட்ட தொடர்பாகவும் அதனால் பிறந்தவனே அனுமன் எனவும் காண்கிறோம். வேதங்களில் சுவாதியை வாயுதேவதா என்கின்றன. இது வடக்குநோக்கியே நகர்வதாகும்.அன்றைய மகேசுரன் வாழ்ந்தது வடபகுதியே என்பது குறிப்பிடத்தக்கது. அவனைத் தனது புதல்வனின் துணையுடன் விரட்டுவதையே இது காட்டுகிறது! வாயுதேவனான இந்திர மகேசுரனிடம் வஜ்ராயுதம் உள்ளதாகவும் அதன் ஒளியே வானில் இடி மின்னலை உருவாக்குவதாகவும் காண்கிறோம். சுவாதி என்றாலும் வாளையே குறிக்கும். அதனைக்கைப்பற்றவே அனுமன் மகேசுரனுடன் அர்ச்சுனனாகப் போரிட்டான். அதனாலேயே இடி மின்னல்கள் உருவகும்போது இன்றும் மக்கள் அர்ச்சுனா அர்ச்சுனா என அலருகின்றனர்! சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் இமையம்சென்றது அந்த மஹேசுரனால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நமது தமிழரின் சில பிரிவுப்படையை [வேளிர் படையின் 18 பிரிவுகளில் பாதி அல்லது 11 பிரிவுகள் - மருத் தேவதைகள் என இதிகாசங்களும் குறிப்பிடும்] விடுவித்ததையும் செங்குட்டுவனின் படையெடுப்பையும் நமது தொல்தமிழ்ப்பாடல்களிலும் காண்கிறோம்! மாமல்லபுரம் பாறையின் புடைப்புச்சிற்பங்களிலும் இதனைக் காணலாம்! அர்ச்சுனனே முருகனாகவும் பரசுராமனே மகேசுரனாகவும் காட்டப்பட்டிருப்பார்கள்! இமையவன் மீது செங்குட்டுவனின் படையெடுப்பையே இவை குறிப்பிடுகின்றன. தனது தாயை விடுவிப்பதாகவும் இதனைக்கொள்ளலாம்!
அனுமனின் தாய் கன்யாவை சிறைப்பிடித்துச்சென்ற மகாதேவன் அப்பெண்ணைக்காட்டியே தமிழரை அச்சுறுத்தித் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் காத்துக்கொண்டான். அரபியர்கள் - மிளேச்சர்கள்; சுவாதியை சுவர்க்கத்தின் காவல்தேவதை எனக் குறிப்பிடுகின்றனர். ஆர்க்ற்றஸ் - மரிமாதா என பைபிளில் வெகுவாகப்புகழப்படுகிறாள்.
மருத் தேவதைகளில் மற்ற பிரிவுகள் - எஞ்சிய வேளிர்படைப்பிரிவுகள் திருவோண மீனின் கூட்டத்தில் - விஷ்ணுவின் அருகிள் உள்ளன. விஷ்ணுவின் தொண்டனே அனுமன்! விசுவாமித்திரரின் நதிமூலம் - ரிஷிமூலம்; கால்வழியில் வந்தபெண்ணே அனுமனின் தாய் கன்யா. மாபாரதத்தில் இதனை மகாதேவனே குறிப்பிடுகிறான்!
மத்வர்கள் வாயுபுதல்வனான அனுமனின் துணையுடனே விஷ்ணுவை அடையலாம் எனக்குறிப்பிடுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment