Friday, 14 November 2014
"க" மண்டலம்! - அகத்தியர் - "க" என்ற கடவுள்! - ரிக்வேதம்!
சிவனை வணங்குவோரெல்லாம் மேற்குத்திசைநோக்கித்தானே வணங்கவேண்டும்? சிவனும் கிழக்குநோக்கித்தானே இருக்கவேண்டும்! சிவனின் கோயில்களிலலுள்ள நந்தி லிங்கத்தைப் பார்த்தபடிதானே உள்ளது! அதன்மூலமாகத்தானே நமது வேண்டுதல்களை லிங்கத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்? லிங்கம் அமைக்கப்பட்ட சிவனின் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்த்தடுப்புக்களால் பிரிக்கப்பட்டு; வணங்குவோரெல்லாம் வடக்கு அல்லது தெற்குநோக்கி நின்றுகொண்டு; தங்களது கழுத்தைத் திருப்பி முகத்தை மட்டும் லிங்கத்தை நோக்கி வணங்குவது ஏற்றுக்கொள்ளப் படுமா? முழுமையான வேண்டுதல்களை ஏற்றுப் பலன்பெற முடியுமா? முகம்மதியரெல்லாம் மேற்குநோக்கித் தங்களது முழு உடலையும் முகத்தையும் காட்டியல்லாவா தொழுகிறார்கள்! லிங்கத்தைத் தொழுவோர் ஏதாவது தவறு செய்கிறார்களா! ஆகமங்கள் என்ன சொல்கின்றன? அறிந்தோர் விளக்கினால் தெளிவுபெறலாம்! உருவம் இல்லையென்றாலும் மேற்குநோக்கித்தான் தொழுகையை நடத்தவேண்டுமா? சீக்கியர்களின் தலைவர் ஒருவர் க அபா வில் படுத்திருந்தபோது அவரது கால்கள் இறைவனை நோக்கி இருந்ததாகவும் அங்கிருந்த காவலர் அதனைச் சுட்டிக்காட்டியபோது இறைவன் இல்லாத திசை எது எனக் கேட்டாராமே! உண்மையா? ஒன்னுமே புரியல்லியே!! சிறப்பான பெருமால் கோயில்களில் இதுபோன்ற தடுப்புக்கள் இல்லையெனத்தெரிகிறதே! திருப்பதிப் பெரும் ஆள் திருமால் பெருமால் கோயிலில்கூட நேராகப் பெருமாலைப் பார்த்து வணங்கி வழிபட முடிகிறதே! சீக்கியரின் கோயில்களில் இதேமுறைதான் உள்ளதாகத் தெரிகிறது! மக்களே உங்களது கருதென்ன? சொல்லுங்கள்!
" க" என்ற கடவுள் ரிக்வேதத்திலும் உள்ளாரே! "க அபா" என்றால் க என்ற தந்தை என்று பொருள்படுவதாகத் தெரிகிறது! அபா என்பது குழந்தைகள் தங்களது தந்தையை மிக்க அன்புடன் அழைக்கும் சொல் என்கிறார்கள்! "க" என்ற கடவுள் யாராக இருக்கும்? அவர் குடிகொண்டிருக்கும் மண்டலம் எதுவாக இருக்கும்? க மண்டலம் உலகிலலெ இருக்கிறது? உங்களில் யாருக்காவது தெரியுமா? இந்தியாவின் வரைப்பட அமைப்பைக் காணுங்கள்; க என்ற எழுத்தின் வடிவில்தானே உள்ளது?! க மண்டலம் இந்தியாதானோ? அகத்தியரிடம்தானே இந்தக்கமண்டல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது!? அவரது கமண்டலத்திலிருந்துதானே கா விரியை தென்னகத்துக்குக் கொண்டுவந்தான் சோழன் எனவும் காண்கிறோமே! அதுவும் சரியாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது!?! கமண்டலத்தின் கீழே ஒரு கிண்ணம் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் வைக்கமுடியாது! மேலே இருக்கும் குடுவைபோன்ற அமைப்புக்குள்தான் நீரை வைக்கமுடியும்! கீழே உள்ள கிண்ணம் எப்போதும் நீரின்றித்தான் இருக்கும்; இருக்கவேண்டும் eஎன எண்ணியவர்களால்டானே இந்த மண்டலத்துக்குக் க மண்டலம் என்ற பெயர் இடப்பட்டிருக்கவேண்டும்!?! அதனை எதிர்த்துக் கீழே உள்ள கிண்ணத்துக்கும் நீர் செல்லவேண்டுமமென்று விரும்பி விடுவித்தவந்தானே சோழன்! அதற்கு அகத்தியமுனிவரும் ஒப்புக்கொண்டதால்தானே கா விரிநீர் தெற்கே கொண்டுவரப்பட்டது! இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் க மண்டலத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் என்பதை! மீண்டும் வலியுறுத்திச் சொல்லுங்கள் இந்தச்செய்தியை!
வானம் பொய்யாது; வளம் பிளைப்பு அறியாது;
நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது;
பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?
"கோசலத்திலிருந்து மகதத்துக்குவரும் நீர் அனைத்தும் ரோஹிணி ஆற்றின்வழியாக வருவதாகும். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டபோது கோசலத்தார்,நதியைத் தடுத்தனர். இதனால் மகதத்துடன் விரோதம் ஏற்பட்டது;சித்தார்த்,'சண்டை வேண்டாம்' என சமாதானம் பேசினான்."
"ஆறுகாடு எனப்பட்ட பகுதியை கரிகால்சோழன் கைப்பற்றிய போது இவர்கள் வெளியேற்றப்பட்டனர் . கைப்பற்றப்பட்ட பகுதியை,காடுதிருத்தி நாடாக்கி ஒழுங்கு படுத்திய கரிகால்சோழன்,நீர்வளம்பெருக்க,பொன்னி நதிக்கு கரையெடுத்தபோது,ஆந்திரநாட்டின் முகரிப்பகுதியை ஆண்ட முசுகுந்தன் எதிர்ப்புக் காட்டியுள்ளான்."
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரியைப் படத்து
எழுதுகென்று கண்டிது மிகைக்கண் என்று
இங் கழிக்கவே அங் கழிந்ததும்
-குழவி இறப்பினும்....எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது,பற்றுக்கோட் பட்டு,குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா என்று பெறாது,பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு இவ்வளவு வருத்தப்பட்ட அந்த இரும்பொறை யாரோ?
"துவராபதிப்போந்து நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட் டோரையும் அருவாளரையும் கொண் டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித்.. .."
.............நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,மற்று அதன்
தகுதிகேள் இனி மிகுதி யாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே,'.......
.........அருபோர்ச் செழிய! இக லலு வல்லே!
நிலன்நெளி மருங்கின் நேர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!" இராவண செழியனுக்கு ஏன் இந்த அறிவுரை?
"தெண்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள்" யாரு?
"கங்கைநீர் சடைக்கரந்தான்" யாரு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment