Friday, 14 November 2014
"க" மண்டலம்! - அகத்தியர் - "க" என்ற கடவுள்! - ரிக்வேதம்!
சிவனை வணங்குவோரெல்லாம் மேற்குத்திசைநோக்கித்தானே வணங்கவேண்டும்? சிவனும் கிழக்குநோக்கித்தானே இருக்கவேண்டும்! சிவனின் கோயில்களிலலுள்ள நந்தி லிங்கத்தைப் பார்த்தபடிதானே உள்ளது! அதன்மூலமாகத்தானே நமது வேண்டுதல்களை லிங்கத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்? லிங்கம் அமைக்கப்பட்ட சிவனின் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்த்தடுப்புக்களால் பிரிக்கப்பட்டு; வணங்குவோரெல்லாம் வடக்கு அல்லது தெற்குநோக்கி நின்றுகொண்டு; தங்களது கழுத்தைத் திருப்பி முகத்தை மட்டும் லிங்கத்தை நோக்கி வணங்குவது ஏற்றுக்கொள்ளப் படுமா? முழுமையான வேண்டுதல்களை ஏற்றுப் பலன்பெற முடியுமா? முகம்மதியரெல்லாம் மேற்குநோக்கித் தங்களது முழு உடலையும் முகத்தையும் காட்டியல்லாவா தொழுகிறார்கள்! லிங்கத்தைத் தொழுவோர் ஏதாவது தவறு செய்கிறார்களா! ஆகமங்கள் என்ன சொல்கின்றன? அறிந்தோர் விளக்கினால் தெளிவுபெறலாம்! உருவம் இல்லையென்றாலும் மேற்குநோக்கித்தான் தொழுகையை நடத்தவேண்டுமா? சீக்கியர்களின் தலைவர் ஒருவர் க அபா வில் படுத்திருந்தபோது அவரது கால்கள் இறைவனை நோக்கி இருந்ததாகவும் அங்கிருந்த காவலர் அதனைச் சுட்டிக்காட்டியபோது இறைவன் இல்லாத திசை எது எனக் கேட்டாராமே! உண்மையா? ஒன்னுமே புரியல்லியே!! சிறப்பான பெருமால் கோயில்களில் இதுபோன்ற தடுப்புக்கள் இல்லையெனத்தெரிகிறதே! திருப்பதிப் பெரும் ஆள் திருமால் பெருமால் கோயிலில்கூட நேராகப் பெருமாலைப் பார்த்து வணங்கி வழிபட முடிகிறதே! சீக்கியரின் கோயில்களில் இதேமுறைதான் உள்ளதாகத் தெரிகிறது! மக்களே உங்களது கருதென்ன? சொல்லுங்கள்!
" க" என்ற கடவுள் ரிக்வேதத்திலும் உள்ளாரே! "க அபா" என்றால் க என்ற தந்தை என்று பொருள்படுவதாகத் தெரிகிறது! அபா என்பது குழந்தைகள் தங்களது தந்தையை மிக்க அன்புடன் அழைக்கும் சொல் என்கிறார்கள்! "க" என்ற கடவுள் யாராக இருக்கும்? அவர் குடிகொண்டிருக்கும் மண்டலம் எதுவாக இருக்கும்? க மண்டலம் உலகிலலெ இருக்கிறது? உங்களில் யாருக்காவது தெரியுமா? இந்தியாவின் வரைப்பட அமைப்பைக் காணுங்கள்; க என்ற எழுத்தின் வடிவில்தானே உள்ளது?! க மண்டலம் இந்தியாதானோ? அகத்தியரிடம்தானே இந்தக்கமண்டல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது!? அவரது கமண்டலத்திலிருந்துதானே கா விரியை தென்னகத்துக்குக் கொண்டுவந்தான் சோழன் எனவும் காண்கிறோமே! அதுவும் சரியாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது!?! கமண்டலத்தின் கீழே ஒரு கிண்ணம் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் வைக்கமுடியாது! மேலே இருக்கும் குடுவைபோன்ற அமைப்புக்குள்தான் நீரை வைக்கமுடியும்! கீழே உள்ள கிண்ணம் எப்போதும் நீரின்றித்தான் இருக்கும்; இருக்கவேண்டும் eஎன எண்ணியவர்களால்டானே இந்த மண்டலத்துக்குக் க மண்டலம் என்ற பெயர் இடப்பட்டிருக்கவேண்டும்!?! அதனை எதிர்த்துக் கீழே உள்ள கிண்ணத்துக்கும் நீர் செல்லவேண்டுமமென்று விரும்பி விடுவித்தவந்தானே சோழன்! அதற்கு அகத்தியமுனிவரும் ஒப்புக்கொண்டதால்தானே கா விரிநீர் தெற்கே கொண்டுவரப்பட்டது! இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் க மண்டலத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் என்பதை! மீண்டும் வலியுறுத்திச் சொல்லுங்கள் இந்தச்செய்தியை!
வானம் பொய்யாது; வளம் பிளைப்பு அறியாது;
நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது;
பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?
"கோசலத்திலிருந்து மகதத்துக்குவரும் நீர் அனைத்தும் ரோஹிணி ஆற்றின்வழியாக வருவதாகும். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டபோது கோசலத்தார்,நதியைத் தடுத்தனர். இதனால் மகதத்துடன் விரோதம் ஏற்பட்டது;சித்தார்த்,'சண்டை வேண்டாம்' என சமாதானம் பேசினான்."
"ஆறுகாடு எனப்பட்ட பகுதியை கரிகால்சோழன் கைப்பற்றிய போது இவர்கள் வெளியேற்றப்பட்டனர் . கைப்பற்றப்பட்ட பகுதியை,காடுதிருத்தி நாடாக்கி ஒழுங்கு படுத்திய கரிகால்சோழன்,நீர்வளம்பெருக்க,பொன்னி நதிக்கு கரையெடுத்தபோது,ஆந்திரநாட்டின் முகரிப்பகுதியை ஆண்ட முசுகுந்தன் எதிர்ப்புக் காட்டியுள்ளான்."
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரியைப் படத்து
எழுதுகென்று கண்டிது மிகைக்கண் என்று
இங் கழிக்கவே அங் கழிந்ததும்
-குழவி இறப்பினும்....எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது,பற்றுக்கோட் பட்டு,குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா என்று பெறாது,பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு இவ்வளவு வருத்தப்பட்ட அந்த இரும்பொறை யாரோ?
"துவராபதிப்போந்து நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட் டோரையும் அருவாளரையும் கொண் டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித்.. .."
.............நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,மற்று அதன்
தகுதிகேள் இனி மிகுதி யாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே,'.......
.........அருபோர்ச் செழிய! இக லலு வல்லே!
நிலன்நெளி மருங்கின் நேர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!" இராவண செழியனுக்கு ஏன் இந்த அறிவுரை?
"தெண்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள்" யாரு?
"கங்கைநீர் சடைக்கரந்தான்" யாரு?
Monday, 10 November 2014
"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன்.
"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன்.
மறைந்துபோன உலகவரலாறு இந்த 21 தலைமுறைக்குள் அடக்கம்!
அது; வரலாற்றிலேயே இல்லாத 60 ஆண்டுகள்முதல் 1260 ஆண்டுகள்வரை இருக்கக்கூடும்! நிச்சயமாக வரலாற்றில் இல்லாத 560 ஆண்டுகள் முதல் 1260 ஆண்டுகளை உள்ளடக்கியது!
இந்த மேல் அளவீடான 1260 ஆண்டுகளுக்குப் பிறகான இன்றைய 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட 754 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொருநாட்டுக்குமான வரலாற்றை உண்மை வரலாற்றின் அடிப்படையில் கட்டமைக்கமுடியும்!
அதற்குமுன்னரான உலகவரலாறும் பாரத் - பாரத வரலாறும் மதங்களுக்குள் புதைந்துவிட்டன! அவற்றைக் கட்டமைப்பதென்பது ஒருசிலரால் மட்டுமே இயலும்!
புருஷோத்தமன் என ஒருவர் இருந்தாரா?
போரஸ் என ஒருவர், சந்திரகொற்றனின் தந்தையாக வரலாற்றில் உள்ளார்!
புருஷ் - புருஷன் என ஒருவர் ரிக்வேதத்தில் உள்ளார்!
நான்முகன் = பிரம்மா என ஒருவர் இருந்தாரா?
விசுவாமித்திரர் என வேத இதிகாச புராணங்களில் பிரம்மாவாகத் தெரிகிறார்! இவரே பெருமால் எனப்பட்டுள்ளார்! சூரியகுலச்சோழருக்குப் பிறந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்!
விஷ்ணு என ஒருவர் இருந்தாரா?
முதலில் குறிப்பிடப்பட்ட புருஷோத்தமரே விஷ்ணுவாகத் தெரிகிறார்!
கிருஷ்ணன் = கண்ணன் என ஒருவர் இருந்தாரா?
கார்வேல் = கார்வண்ணன் = நீலமேகன் = கண்ணன் என ஒருவர் வரலாற்றிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளார்! சந்திரகொற்றனின் மகனாகவும் தெரிகிறார்!
திருமால் என ஒருவர் இருந்தாரா?
திருமா வளவன் = கரிகால்சோழன் என ஒருவர் தொல்தமிழ்ப்பாடல்களிலும் கல்வெட்டுக்களிலும் பட்டயங்களிலும் உள்ளார்!
அம்பா = பார்வதி= உமா என ஒருவர் இருந்தாரா?
அம்பா என ஒருவர் மாபாரதத்தில் உள்ளார்! இவரையே பார்வதி எனவும் உமா எனவும் குறிப்பிடுகின்றனர்! உமா என- அமணத்தில் உமாஸ்வாதி என ஓறூவறர் உள்ளார்! மாயா எனவும் உஷை எனவும் கொற்றவை எனவும் பலபெயர்களில் இடம்பெற்ற முதல் பெண்ணாக உள்ளார்! ரிக்வேதத்தில் உள்ள ஊர்வசி - உஷை என்பவரும் இவரே எனத்தெரிகிறார்!
செவ்வேல் முருகன் என ஒருவர் இருந்தாரா?
சிலப்பதிகாரத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் முருகன் உள்ளார்! சிலப்பதிகாரத்தில் உள்ள செங்குட்டுவனே முருகனாகவும் தெரிகிறார். செங்குட்டுவனின் குணநலன்களே முருகனுக்கும் காட்டப்படுகின்றன!
இறையனார் என ஒருவர் இருந்தாரா?
இறவன் என ஒருவர் இதிகாச புராண தொல்தமிழ்ப்பாடல்களிலும் உள்ளார்! இறையனார் என ஒரு புலவரும் உள்ளார். இறையனார் இயற்றியதாக அகப்பொருள் நூலொன்று 60 சூத்திரங்களுடனும் பாயிரம் சிறப்புப்பாயிரம் என சேர்க்கப்பட்டதாக உள்ளது! பைங்கட்பார்ப்பான் என தொல்தமிழ்ப்பாடல்களிலும் புராணங்களிலும் இடம்பெறும் முருகனின் தந்தை; மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் இதனை மூன்று செப்பிதழ்களில் எழுதியதாகவும் உள்ளது! உப்பூரிக்கிழ்ழன் மகன் உருத்திரசம்மன் பைங்கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப்பிராயத்தான் மூங்கைப்பிள்ளை குமாரதெய்வம் சாபத்தினால் பிறந்தவன் என ஒரு ஊமைக்குழந்தை இச்சூத்திரங்களுக்கான உரையைக்கேட்டதாகவும் அதில் காணப்படுகிறது! இதன் காலம் கடைச்சங்ககாலம் என உரைப்பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்! இதில் முச்சங்கங்கள் குறித்த முறன்பட்ட தகவல்களும் உள்ளன! எழுதப்பட்டகாளத்துக்குப்பிறகு பத்துத்தலைமுறை கழிந்தபின்னர் வெளிப்பட்டதாகவும் வழிவழியாகச் செவிவழி கேட்டுப் பின்னர் எழுதப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
திரு.கே.எம்.சிவராசபிள்ளை அவர்களின் நூல் ????? 1932ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. அதில் "முச்சங்கவரலாறு குறித்த இறையனார் அகப்பொருள் உரையும், களவியல் நூலும் கட்டுக்கதையாக வெளி வந்தன. தமிழை அமணர்கள் கையாண்டு சிறப்பாக வெளிப்படுத்தியபோது; தமிழ் உச்ச வளர்ச்சியை அடைந்தது. தமிழ், தங்கள் தெய்வீக பாஷை என அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழில் வந்த அனைத்து நூல்களையும் கைப்பற்றி பிராமணரின் துணையுடன் சைவநெறியினர் தங்கள் விருப்பம்போல் கையாண்டனர்... என உள்ளது!
அல்லா என ஒருவர் இருந்தாரா?
அல்லெக்சாந்தர் மூவர் இருந்ததாக வரலாற்றில் தெரிகிறது! அவர்களுள் ஒருவரே அல்லா எனத்தெரிகிறது! ஒவ்வொருவராக அவர்கள் அராபிய - மேற்காசியநாட்டிலிருந்து இந்தியாமீது படைநடத்தி வென்று காஷ்மீரில் அல்லஃநந்தா நதியையும் உத்திரப்பிரதேசத்தில் அல்லாஃபாத் என்ற நகரத்தையும் உருவாக்கி கங்கைநதியின்மீது ஆதிக்கம் செய்ததாகத் தெரிகிறது! இந்திரன் என ரிக்வேதத்திலும் ஒருவர் காணப்படுகிறார்! அல்லஃசாந்திரியா என்ற தலைமையிடத்தைக் காஷ்மீரில் - இமையமலையின் மேற்கு எல்லையின் அடிவாரத்தில் உருவாக்கியதாக பெரிப்ப்ளுசின் பயணநூலில் காணப்படுகிறது. அந்நூலில் காணப்படும் தகவல்களைக்கொண்டு அல்லஃசாந்தாவும் பயணியும் பயனம்செய்த வழித்தடத்தை ஒரு வரைப்படமாக உலகவரைப்படத்தில் காட்டியுள்ளனர். இத்தாலி எகிப்த்திலிருந்து பலநாடுகள் வழியாக பாரத் எனப்பட்ட பாரதத்தின் தென்பகுதிமுதல் இமையத்தின் வடக்கே இன்றைய சீனநாடுவரை சென்றதாக அதில் குறீப்பிட்டுள்ளனர். அந்நூல் முழுமையாகக்கிடைக்காமல் சிதைந்தே கிடைத்துள்ளது!
முகம்மது என ஒருவர் இருந்தாரா?
முகம்மது என ஒருவர் இருந்ததற்கான சான்றுகள் முகம்மதியரின் நூல்களில் மட்டுமே உள்ளன! மக்காவீரரைப்போலவே தன்னை அல்லாவின் இறுத்தி இறைத்தூதர் என அறிவித்துக்கொண்டார்!
இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை.
இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு.
7- 8ஆம் நூற்றாண்டுகளில்தான் முகம்மதியரின் இந்தியப்படையெடுப்பு துவங்குகிறது! உலகவரலாற்றாளர்கள் அனைவரும்; உலகநாட்டு மக்களெல்லம் இவ்விரு நூற்றாண்டுகளில் கொந்தளிப்பான நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
சேரமான் மசூதி எனச் சேரலத்தில் ஒன்று உள்ளது! சேரமான் இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்று ஒரு தகவலும் உள்ளது! சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்தவர். ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். என ஒரு கட்டுக்கதையும் உள்ளது! எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்? சைவம், சாணக்கியம், புத்தம், ஜைனம் போன்ற மதங்களை எதிர்கொண்ட ஆழ்வார்கள் இஸ்லாமைப் பற்றி ஒரு வரி கூடக்கூறவில்லை; நாயன்மார்களும் எதுவும் குறிப்பிடவில்லை! நிலவு என்பது சந்திரகுலத்தோரையே குறிக்கும்; இவர்கள் அனைவரும் சூரிய குலச்சோழருக்கு எதிரானவர்கள். மேற்காசியநாடுகளில் வாழ்ந்த ஒரு கலப்பினத்தாரைத் தனது கூட்டத்துடன் சேர்த்துக்கொண்ட முகம்மது; பாரதத்துக்குள் தன்னுடன் சேர்ந்து தனது இளமைக்காலம் முதல் இருந்தோரால் பிறப்பிக்கப்பட்ட அனைவருடனும் கலக்கச்செய்து அவர்களின் உதவியுடன் பெருமளவிலான பாரதநாட்டைக் கைப்பற்றியதையே இங்கு காணவேண்டும்!
முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்; இதிலும் 60 ஆண்டுகள் கணக்கிடப்படாமல் உள்ளதாகத்தெரிகிறது. சந்திரமான ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட்டதால் இந்த வேற்றுமை உருவாகிறது. அக்காலத்தில் பாரதநாட்டவரோ சூரிமானத்தை ஒரு ஆண்டாகக்கொள்வோர் ஆவர்! முகம்மதியரின் ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்துத் திரட்டப்பட்டன. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார்.
ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான கடவுள் தத்துவத்தைப் பின்பற்றி வந்துள்ளார்கள். அதப்போது அங்கிருந்த யூதமதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருந்திருக்கிறது. இப் புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயரிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு நிறுவனரும் இல்லையெனத்தெரிகிறது; புத்தகமும் இல்லை; கடுமையான விதிமுறைகளும் இல்லை. அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எங்கும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. முதன் முதலில் 691இல்தான் குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது.
பரசுராமர் என ஒருவர் இருந்தாரா?
சேரலவரலாற்றில் பரசுராமர் இருந்ததாலேயே அதற்குப் பரசுராமக்ஷேத்ரம் என ஒரு பெயர் விளங்குகிறது! அவரால் குடியமர்த்தப்பட்டோரெல்லாம் தமிழரோ பாரதநாட்டவரோ அல்ல எனத்தெரிகிறது! பார்கவபிராமணர் எனத் தெரிகின்றனர். இதிகாசங்களிலும் இவர்கள் உள்ளனர்! யமதக்கினியின் மகன் எனக் காணப்படுவதால் அல்லஃசாந்தரின் மகனாகவும் தெரிகிறார். சிவனோடு அடையாளப்படுத்தக்கவராகவும் உள்ளார்! இவரைக்குறித்த தகவல்கள் இதிகாசங்களிலும் புராணங்களிலுமே உள்ளன! பலபெண்களைக் கொலைசெய்ததோடு 21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பதாகச் சபதமுரைத்ததாகவும் தெரிகிறது. 21 தலைமுறை என்பது அவரவர் விருப்பம்போலக் கணக்கிடப்படுகிறது.
கள / லப்பிரர் என ஒரு இனம் இருந்ததா?
இருந்ததாகத்தெரியவில்லை! பரசுராமனால் குறிப்பிடப்படும் 21 தலைமுறைக்கால வரலாறாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரால் கட்டமைக்கப்பட்டதே இந்த இருண்டகாலம்! இது ஒரு வரலாறற்ற காலமாகக்குறிப்பிடப்பட்டு வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் குறைக்கவும் கூட்டவும் சிதைக்கவும் பயண்படுத்தப்பட்ட காலம்! எல்லா உலகமதங்களும் சமயங்களும் இந்த இருண்டகாலத்தையே சிறப்புடன் பயண்படுத்தித் தங்களது மதங்களுக்கான வரலாற்றைக் கட்டமைக்கப் பயண்படுத்தப்பட்டது! அவற்றுக்கான சான்றுகள் இல்லையாயினும் தங்களது மத சமய தலைவர்- நிறுவனரை வரலாற்றிலிருந்து தேர்வுசெய்து ஒரு கூட்டுமுயற்சியாக வரலாற்றை மறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது!
புத்தன் என ஒருவர் இருந்தாரா?
உலகவரலாற்றை வெளிப்படுத்தும் தகவல்களைக்கொண்ட நூல்களை எழுதிவந்த அமண / அமனர்களையும் அவர்களது நூல்களையும் முற்றிலுமாக் அழித்தொழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது! மேற்கண்ட உலகமதங்கள் நிறுவப்பட்டபின்னர் அமண / அமனரால் எழுதப்பட்ட நூல்களெல்லாம் கைப்பற்றப்பட்டு அலெக்சாந்திரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த அல்லெக்சாந்திரியா எது என எவருக்குமே தெரியாது! உலகில் அன்று இரண்டு அல்லெக்சாந்திரியாக்கல் இருந்தன; அவற்றுள் ஒன்றே இமையத்தில் மேற்றிசை அடிவாரத்தில் இருந்தது! சிங்களரால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நூல்களின் உதவியுடன் அமனத்தின் இறுதித்தீர்த்தங்கரனைப் புத்தன் என நிறுவிய சிங்களரால் கட்டமைக்கப்பட்டதே புத்தமதம். இந்தப் புத்தன் மகாவீர் அல்ல! இந்தியாவிலிருந்து புத்தன் என ஒருவர் இருந்ததாக புத்தமத நூல்களில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது! அமணகோதமர் என்றே அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது! பாரத் -- பாரதத்துக்குள் பிறந்த அவரது பிறப்பிடம் உறுதிப்படுத்தப்படவில்லை! வடமொழி அல்லது ஏதோ ஒரு மொழியில் "ஜா" என்ற ஒற்றைச்சொல்லில் உள்ள குறிப்பைக்கொண்டு அவதரித்தார் எனக்கொள்கின்றனர். அது தோன்றினார்- வந்தார் எனப் பொருள்கொள்ளத் தக்கது. அவரது பிறந்த, இறந்த ஆண்டுகள் ஏற்கத்தக்கனவல்ல! அவற்றிலும் 60 ஆண்டுகள் வேற்றுமை காணப்படுகிறது!
மகாவீரர் என ஒருவர் இருந்தாரா?
அமண நூல்களில் மட்டுமே காணப்படுகிறார்! இவருக்குமுன்னர் ஒரு பெண்ணே தீர்த்தங்கரியாக இருந்துள்ளார். அவரை வன்முறையால் நீக்கியதாகவும் உள்ளது! அதனாலேயே மகாவீரர் எனப்பட்டார்; தன்னை இறுதித் தீர்த்தங்கரர் எனவும் அறிவித்துக்கொண்டார்! அப்பெண்ணைப் புணர்ந்து கருவுறச்செய்து திருமணம்செய்துகொள்ள மறுத்தவரே மகாவீரர் எனக்காணப்படுகிறது! இவருக்குப் பின்னரும் சமகாலத்திலும் வாழ்ந்த புத்தரும் மற்கலியும் கூடத் தீர்த்தங்கரர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளனர்!
ஏசு என ஒருவர் இருந்தாரா?
1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.
2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.
3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.
4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.
அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9
ஏசு என ஒருவர் இருந்தாரென உறுதிப்படுத்தப்படவில்லை! விவிலியத்திலோ புதிய ஏற்பாட்டிலோ அவரது பிறந்த ஆண்டு அல்லது பிறந்த நாள் என எதுவும் இல்லை! இளமைப்பருவம் குறித்த வரலாறு இல்லை! வரலாற்றுச்சான்றுகளும் இல்லை!
ஆனால் விவிலியத்தி எஸ்தரின் ஆகமத்தில் இந்தியாதேசம் முதல் எத்தியோப்பியாதேசம்வரையுள்ள 127 நாடுகளில் உலகவரலாறு ஒரே காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற உண்மை உணர்த்தப்படுகிறது.
அகத்தியர் என எவரும் இருந்தாரா?
அகத்தியர்கள் 49பேர் இருந்ததாக இதிகாச புராணங்களில் காணப்படுவதோடு தொல்தமிழ்ப்பாடைகளிலும் காப்பியங்களிலும் உறுதிப்படுத்தப்படுகிறது! அவர் வேளிர் இனத்தவராக அறிமுகமாகிறார்.
49 வழிமுறைகளில் தொடர்ந்து அகத்தியர்கள் இருந்துள்ளனர் எனத்தெரிகிறது! ஒரு வழிமுறை என்பது எத்தனை ஆண்டுகளைக்கொண்டதென எவரும் இன்றுவரை தெளிவுபடுத்தவில்லை!
உலக மதங்களும் சமயங்களும் புராணங்களும் தத்தமது வரலாற்றையே தொன்மையானவையெனக் குறிப்பிட்டுக்கொள்கின்றன!
ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களே பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு!
Thursday, 23 October 2014
நூற்றுவர் தலைவன் எனக் குறிப்பிடப்படுவோன் யார்? துர்யோதனன் பரசுராமன்
நூற்றுவர் தலைவன் எனக் குறிப்பிடப்படுவோன் யார்? துர்யோதன் பரசுராமன்
திருவாக்கு: மத்தேயு 27:54: "நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்." அந்த நூற்றுவர்தலைவந்தான் ஏசுவிந்தந்தை! மாபாரதத்தில் அர்ச்சுனனின் தந்தை துர்யோதனன்! போதுமா சான்று! இன்னும் வேண்டுமா!
நூற்றுவர்கண்ணர், சதக்கண்ணி, சதவாகனர் என்றெல்லாம் இடம்பெற்ற; வசிட்டரால் பிராமணரின் சதிக்கு உடந்தையாகிப் பிறப்பிக்கப்பட்டவரே சமதக்கினி. சதவாகனர் எனப்பட்ட சதகன்ண்ணியரை; கரிகால் வெற்றிகொண்டதை அடையாளப்படுத்தும் நாணயத்தில் 'வசிட்டி மகன் சதகண்ணி' என்பது, ஒருபக்கத்தில் தமிழிலும் மறுபக்கத்தில் பிரகிருதத்திலும் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இப்பெயர்கள் வசிட்டரின் மகன் சமதக்கினி என புராணங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிப்பட்டன.
மஹாபாரதம்-ஆதிபருவம்: இதியில் வசிட்டருக்கும் விசுவா மித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, தமிழ் அந்தணர்க்கும் சத்திரியபிராமணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத் தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்பதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் தண்டிக்கப்பட்ட விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர்)நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக்கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(கரிகால்சோழன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்? எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர், வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றூவரையும் சபித்தார். அவரது சாபம்பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் [கரிலால்சோழன்]சுதாசன் வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விசுவாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.
கபிலன்: கலித்தொகை 2- குறிஞ்சிப்பாடல் 52ன் தொடக்கத்தில்:
"முறம்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெத்து
மறம்தலைக் கொண்ட, நூற்றுவர் தலைவனைக்;
குறங்கறுத் திடுவோன்போல் கூர்நுதி மடுத்துஅதன்
நிறம்சாடி முரண்தீர்த்த நீள்மருப்பு எழில்யானை,
மல்லரை மறம்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண்;
கல் உயர் நனம்சாரல் கலந்தியலும் மலைநாட!"
கலித்தொகை-4 முல்லைக்கலி சோழன் நல்லுருத்திரன்? பாடலில்:
.. . எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளம்காரித் தோற்றம்காண்
பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்
நீல்நிற வண்ணனும் ... .. .. கோள்சாற்று பவரொடு
புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க
வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் .. ..
நேர்இலாய் கோள்அரி ஆக நிறுத்த கொலைஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வுற்று எமர்கொடை நேர்ந்தார் அலர்எடுத்த
ஊராரை உச்சி மிதித்து.. .."
பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் குறித்தது:
14ல் " .. .போர்தலை மிகுந்த ஈர்ஐம்ப தின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே .. .
மாபாரதம்-வனபருவம்: மனு[பரசுராமன்] என்னும் ஒரு மாபெரும்ரிசி, [வசிட்டர்]வைவசுவதனின்புதல்வர்; .. . நனைந்த கந்தைத்துணி, சிக்குப் பிடித்த தலையுடன்.. ..என மனு - காசியப்ப முசுகுந்தனைக் குறிபிடுகிறது. சிலப்பதிகாரத்தில்; தனது தந்தை முசுகுந்த இமையவனை எதிர்த்துச்சென்ற செங்குட்டுவனின் கூற்றும் உறுதிப்படுத்துவதாக:
புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை அரசன் .. .." எனக் குறிப்பிடுகிறான்; சதபதபிராமணம்-1-8.1.1: காலையில் மனு உடல் அலம்புவதற்காகத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத் தார்கள் .. .. " எனக்குறிப்பிடுகிறது. ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி; கரியகஞ்சுகன்-அழுக்கடைந்த ஆடை-புலரா உடுக்கை அணிந்தவன் எனக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம்;
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை,
'சீர்கெழு நன்னாட்டுச் செல்க' என்று ஏவி -
தாபத வேடத்து உயிர் உய்த்து பிழைத்த
மாபெருந் தானை மன்ன குமரர்;
சுருளிடு தாடி, மருள்படு பூங்குழல்,
அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண்,
விரிவெண் தோட்டு, வெண்ணகைத் துவர்வாய்ச்,
சூடக வரிவளை, ஆடமைப் பனைத்தோள்,
வளரிள வனமுலை, தளரியல் மின்னிடை,
பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடி;
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐந் நூற்றுவர்;" என ஆரிய மன்னர் முசுகுந்த துர்யோதனன் முதலான நூற்றுவர் மற்றும் செல்யுக்கஸ்நக்கந்த கூட்டத்தர் ஈர் ஐந்நூற்றுவர் -ஆயிரவர் பிடிபட்டதாகக் குறிப்பிடுகிறது; இந்த ஆயிரவரை முன்னரே விசுவாமித்திரனுக்கு எதிராக எழுந்தனர் என சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்(சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்டர்வசர்கள்; விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள் ஆயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. மேலும் போரில் பிடிபட்டதாக ஆரியவரசன் முதலானோரை நீலன் -முசுகுந்தன் கொண்டுவந்த தகவலை அறிந்த கரிகால்சோழனின் கூற்றாகச் சிலப்பதிகாரம்;
"நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி,.....
.....'தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே!
செம்பியன் மூதூர் சென்றுபுக்கு, ஆங்கு,
வச்சிரம், அவந்தி , மகதமொடு, குழீ இய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்,
அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகையடி வணங்க,
"நீளமர் அழுவத்து, நெடும்போர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக்
கொல்லாக் கோலத்து உயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை" என; முசுகுந்தனுக்கு எதிராகப் போரிட்டதாக நடித்துச் சோழ நாட்டுக்குள் புகுந்து பூசலைத் தோற்றுவிக்க முசுகுந்தனுக்காக வசிட்டனின் திட்டப்படி ஆரியவரசன்; செல்யுக்கஸ்நக்கந்த கூட்டத்தர் பிடிபட்டபோது; அமணத் துறவியர் வேடத்தில் தப்பியோடியதாகக் குறிப்பிடுகிறது. இவை அனைத்துமே வசிட்ட பூர்ணகாசியப்ப அலெக்சாந்தனின் திட்டமிட்ட சதிவேலைகள் என்பது உணரத்தக்கது.
கிருஷ்ணனால் அடக்கப்பட்ட இந்திரன் முசுகுந்த பீஷ்மனே; கரிகால்சோழன் தருமனாலேயே மகத்திலிருந்து அர்ச்சுண செங்குட்டுவனின் துணையுடன் அனைவரும் இமையம் வரை விரட்டியடிக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் கரிகால்சோழனின் தங்கையும் செங்குட்டுவனின் தாயுமான பாவையை பிராமணவேடமிட்டுக் கெடுத்த பார்கவ முசுகுந்த பரசுராமனின் தகா நடத்தைகளே என்பதை முசுகுந்தனின் மகன் செங்குட்டுவனே குறிப்பிடுகிறான்; சிலப்பதிகாரத்தில்:
முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்.......
வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென்றமிழ் நல்நாட்டுச் செழுவில், கயல்,புலி:
மண்டலை ஏற்ற வரைக, .. ..
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்,
எம்கோ மகளை ஆட்டிய அந்நாள்,
ஆரிய மன்னர் ஈர்-ஐந் நூற்றுவர்க்கு
ஒருநீ ஆகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது, கடுங்கண் கூற்றம்:
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி
வாழ்க, சேனா முகம்!'என வாழ்த்தி,
அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல்! நின்
வெஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமையவரம்ப!........ என இமையத்தை வென்ற வரம்பனாகச் செங்குட்டுவனைக் காட்டுகிறது. மேலும் ஈர்-ஐம்பதின்மர், குட்டுவன் முருகனுக்குப் பணிந்ததை:
ஆணையிற் புகுந்த ஈர்-ஐம்பத் திருவரொடு
மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி-
'வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னரும்,......
யாம்தரும் ஆற்றலம்' என்றனர்'என்று...
சஞ்சயன் கூற்றாக நமக்குத் தெரிவிக்கிறது.கால்கோட் காதை முழுதும் முருகன் புகழ்பாடுவதக் காண்கிறோம்.
அசோகனின் கிர்னார் கல்வெட்டு எனக்குறிப்பிடும் செங்குட்டுவனின் கல்வெட்டுப்போன்றே அதே பாறைகளில் மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாக்கம் உண்டாக்கும் மாறுபாட்டுடன்; செங்குட்டுவனின் - ருத்ரதாமனின் சம்ஸ்கிருதப் பொறிப்புக்கள் உள்ளன. பொறிப்பின் ஏழாம்பகுதி அழிக்கப்பட்டோ அழிந்தோ உள்ளது. அதில் சந்திரகொற்றனின் ஆளுநரான வைஷியன் புஷ்யகுப்தனால் கட்டப்பட்டு அசோக- பிம்பிசார மவுரியனின் கீழ் யவன- பாரசீக மன்னன் துசாபனால் ஒரு கால்வாய் அமைப்புடன் தெற்கே செல்லவிடாமல் தடுத்த அணை தகர்க்கப்பட்டு இரண்டுமடங்கு அளவில் மறுபடியும் ருத்ரதாமனின் சொந்தச்செலவில் பிற எவருடைய, பவுர ஜனபத குடிகளிடமிருந்து பொருளும் பங்களிப்பும் உழைப்பும் பெறப்படாமல் கட்டப்பட்ட சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கொல்வதை நிறுத்தியதையும், அவந்திமுதல் சிந்து -அபராந்தா வரை ஏராளமான மாகானங்களையும் அத்துடன் பழங்குடிக் காட்டுவாசி- ஆரிய செல்யுக்கஸ்நிகந்த நிசதரையும்; தாக்கியதையும், வெற்றிகொண்டதையும், தீரமிக்க யுதேயர்களைப் பூண்டோடு அடக்கியதையும், அவர்களோடு மண உறவுகொண்டுள்ளதால் விட்டுவைக்கப்பட்ட யுதேயரின் தலைவன் நூற்றுவர் தலைவன்- துர்யோதன பரசுராம சதகர்ணியை இருமுறை தோற்கடித்ததையும் பெருமையோடு குறிப்பிடுகிறான் ருத்ரதாமன். அந்நினைவாக வெளியிடப்பட்டதே "யௌதேய கணஷ்ய ஜய" எனப் பிரகிருத்த்தில் பொறிக்கப்பட்ட நாணயம். மேலும் உரைநடையாயினும் கவிதை யாயினும் எல்லா இலக்கியப் பாங்குகளிலும், வெளிப்படுத்துவதிலும் சம்ஸ்கிருத்த்திலும்; தனக்குள்ள ஆளுமையைக் குறிப்பிடுகிறான். தங்கம் வெள்ளி நகைகள் என தனது பொக்கிசங்களையும் குறிப்பிடுகிறான்.
பெஸ்நகரில் தூணை நிறுவிய ஹெலியடோரியஸின் கிருஷ்ண -வசுதேவ பாகவத வழிபாடு இதனை உறுதிப் படுத்துகிறது.
Monday, 20 October 2014
கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள்
Tuesday, 14 October 2014
சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!
சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!
மேரியர்களே - மௌரியர் எனப்பட்டனர்; சந்திரகுப்தன் மௌரியனல்ல! சத்தியவதி என்ற ஹெலனுக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பிம்பிசாரனே மௌரியன்; ஆரியனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பெண்ணே ஹெலன் என்ற சத்தியவதி. அவளுக்குப் பிறந்த பிம்பிசாரன் எனப்பட்டவனை ஆரியரும் யூதரும் ஏற்கவில்லை. பிம்பிசாரனின் மகனான செங்குட்டுவனை ஏசுவாக ஏற்றுக்கொண்டோரும் பிம்பிசாரனை ஏசுவின் மதத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே ஓரிறைக்கொள்கையை அல்லாவை அல்லஃசாந்தாவை ஏகைறைவனாகவும் தன்னை இறுதி இறுதி இறைத்தூதனாகவும் அறிவித்து அனைவர்மீதும் போர்தொடுத்தவன் முகம்மது எனத்தெரிகிறது! ஏக் ஆம் பரன் எனத் தமிழில்[?] அவனைக் குறிப்பிடுகின்றனர். அந்த மாம்பழத்தின் மாங்கொட்டையே பிளக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் பருப்பு முகம்மதியரால் காட்டப்படுகிறது[!?!?]
சு என்ற முன் ஒட்டு சேர்ந்த பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில: சு பிரமன்= சுப்ரமன் -சுப்ரமண்யன்; சு தாசன்= சுதாசன்; சு வர்க்கம்= சுவர்க்கம்; சு தந்திரம்=சுதந்திரம்; சு குமார்= சுகுமர்; சு கன்யா= சுகன்யா; சு ப்ரபாதம்= சுப்ரபாதம்; சு மித்ரா= சுமித்ரா; சு மதி= சுமதி; சு மேரு= சுமேரு. இவற்றில் மேரு என்பதாக நமது புராண இதிகாச வேதங்களில் பல இடங்கள் குறிப்பிடப்படுகின்றன! அவற்றுள் நமது உத்தெரமேரு என்ற ஊரும் ஒன்று! திருநெல்வேலியிலும் ஆந்திரத்திலும்கூட மேரு இருந்துள்ளது! இவற்றுக்கெல்லாம் மேலானதாக அல்லது தலைமை இடமாக இருந்த பகுதியே சுமேரு; அதுவே அன்றைய அலெக்சாந்திரியா எனவும் துருவம் எனவும் நெற்றிக்கண் எனவும் குறிக்கப்பட்ட இமையமலையின் அடிவாரத்தில் மேற்கு எல்லையில் உள்ள பகுதி; சுமேரு எனப்பட்டது!
சுமேரியர் குறித்து சுமேரியநாட்டில் பல பழமையான புராணங்களும் உள்ளன! நமது நாட்டுக்கும் சுமேரியநாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படக்காரணமே பராசரன் எனப்பட்டவனே; ஆயினும் இந்தப்பராசரனை எவரும் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவனுக்கும் மச்சகந்தி - பரிமலகந்தி - சத்தியவதி எனப்பட்ட பெண்ணுக்கும் இலங்கைத்தீவில் புணர்ப்பு உண்டானதால் பிறந்தவனே மாபாரதத்தையு எழுதியதோடு அன்றைய வேதங்களையும் தொகுத்த வியாசன்! அடுத்து அலெக்சாந்தா என்ற பெயரில் மூவர் இங்குவந்துள்ளனர். நந்தர் எனப்பட்டனர் எனத்தெரிகிறது! மேலும் அவர்களுக்குத் தென்னகச்சோழருடன் ஏற்பட்ட உறவுக்குக் காரணமானவனே அல்லஃநந்தாவின் வளர்ப்புமகனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன்! பிம்பிசாரனே பலபெயர்களில் வேத இதிகாச புராணங்களிலும் இடம்பெற்றுள்ளான். அவனது மகனே சுப்ரமன்= சுப்ரமணி எனப்பட்ட செவ்வேல் செங்குட்டுவன் கந்தன்! ஆயினும் இவனே அஜாதச்சத்ரு எனவும் உள்ளான். அசோகன் சங்கரன் எனவும் காணப்படுகிறான்! குஜரத் முதல் வங்கத்தின் கிழக்குப்பகுதிவரை அடங்கியதே அன்றைய தமிழகமாகும். அன்றைய தென்னகம் என்பது தமிழைத்தாய்மொழியாகக்கொண்டது. அதன் வட எல்லையாக விந்தியமலையே இருந்தது. மதராஸ் ராஜதானி எனப்பட்டதும்; அன்றைய கலிங்கத்தின் காரவேலன் ஆட்சிசெய்த இன்றைய ஒடிஸ்சாவையும் உள்ளடக்கியதே! மேற்கண்ட அலெக்சாந்தருடன் வந்துசேர்ந்த ஆரியரும் திராவிடரும் வந்தபின்னரே வடவேங்கடம் தென்குமரி ஆகியவை தமிழகத்தின் எல்லைகளாகச் செங்குட்டுவனின் காலத்தில் அமைக்கப்பட்டன. எஞ்சிய பகுதிகள் திராவிடருக்கெனவும்; அதற்கும் வடக்கே உள்ள பகுதிகள் வடவர் எனப்பட்டோருக்கும் செங்குட்டுவனின் தந்தை சங்கரனைச்சார்ந்தோருக்கும் அன்றைய செங்குட்டுவன் - அசோகனாலேயே கொடுக்கப்பட்டன! ஆதிசங்கரன்- செங்குட்டுவன் தன்னைத் தந்தைவழியில் திராவிட சிசு எனக் குறிப்பிட்டிருந்தபோதிலும் தமிழனாகவே தனது தாயைச்சார்ந்து தாய்மாமன் கரிகால்சோழனுடன் நந்தர்களுக்கு எதிராக அநந்தனாக வாழ்ந்தவன் செங்குட்டுவ அசோக அஜாதச்சத்ரு. நமது தத்துவங்களின் முன்னோர் சங்கரனையும் ஆதிசங்கரனையும் பிரித்தறிய இயலாதபடி குழப்பி பெயர்களையும் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரிளபட்டர் என்பவரே செங்குட்டுவன் என்பதை நம்மால் நிறுவமுடியும்! செங்குட்டுவனது தந்தை சங்கரன்- பிம்பிசாரன் குறித்த வரலாற்றை அறிய; சுமேரியரின் வரலாற்றில் உள்ள நமது வரலாற்றைப் பிரித்தெடுத்தாலே பெறமுடியும்! காரணம் செங்குட்டுவனது தாய்; சுமேரியநாட்டுக்குச் சென்று; பிம்பிசாரனான - கில்காமேசின் மகனே செங்குட்டுவன் என்பதை நிறுவப் போராடிய தகவல்கள் அங்கு இருக்கக்கூடும். பல ஓவியங்களும் புடைப்புச்சிற்பங்களும் சிற்பங்களும் இதனை உறுதிப்படுத்துவனவாக அங்கு உள்ளன! கரிகால்சோழனின் தங்கை தனது சிலம்புபோன்ற ஒரு பொருளுடன் சில ஆட்சியாளரின் முன்நிலையில் தனது மகனுடன் இருப்பதாகவும் அவை உள்ளன. மகனை மடியில் வைத்திருப்பதுபோலவும் பல உள்ளன! எனவே மேரு எனப்பட்ட பகுதிகளுக்குத் தலைமை இடமாக சுமேரு- அன்றைய சுமேரியநாடு இருந்திருக்கக்கூடும் என்பதை நிறுவியாகவேண்டும்! இதுகுறித்துத் தகவல் அறிந்தோர அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்! வரலாறற்ற தமிழனுக்கு வரலாறு உள்ளது என்பதை நிறுவியாகவேண்டும்!
Friday, 10 October 2014
உலகப்படைப்பு வளர்ச்சி கபிலர் சாங்கியம்
உலகப்படைப்பும் வளர்ச்சியும் - கபிலர் சம்கியம் - சாங்கியம்!
இந்திய- உலகத்தமிழரின்ரலாறு மிகநீண்டது!
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திரகுலப் பாரதர்க்கும் வசிட்டகுலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனவும்;(இந்தத் திரித்சூக்களே சேரலத்தின் திருசூரில் பரசுராமனால் குடியமர்த்தப்பட்டவர்கள்) 8.96.13-14: "கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி(?) ஆற்றங்கரையில் இந்திரனோடு போரிட்டான்" எனவும்; காண்கிறோம். ஒடிஸ்ஸா=கலிங்கத்தில் இந்திர பரசுராம- பீஷ்மனுடன் போரிட்டதே காலிங்கனோடு கரவேல்= கண்ணன் போரிட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
கரவேலனின் [அ]ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிந்தோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது.
1. [அசோகன் பிறக்கக்காரணமான பரசுராமனால் கைப்பற்றப் பட்ட நகரைக் கைப்பற்ற] கலிங்கநாட்டுக்குச் சென்றான்;
2. [பரசுராமனை] சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படை கொண்டு தாக்கினான்;
3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று [முகரி]'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. [ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது.]
4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன;
5. [செல்யுக்கஸ்நிகந்தனின் ஆரியர் மற்றும் கோசர்] ராச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்;
6. [கங்கைநதி நீர் தெற்கே கலிங்கத்துக்குச் செல்ல] நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன;
7. [ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்] பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப் பட்டன; [கரவேலனின் அத்தையான பிருந்தாவின் மகளும் கரிகால்சோழனின் தங்கையுமான நல்லியற்பாவையை வஜ்ஜிரகன் எனப்படும் வச்சிரத்தடக்கையன் இந்திரன்- பரசுராமன் புணர்ந்து கெடுத்ததோடு அக்குழந்தையைக் கொலைசெய்யவும் முயன்றதால் குழந்தை செங்குட்டுன் கரவேலனால் பாதுகாக்கப்பட்டான்] கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது.
8. மகதம் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் [அலெக்சாந்தன்] நந்தனும் [துர்யோதன- பரசுராம] சதகர்னியரும் கைப்பற்றிச்சென்ற [சந்திரகொற்ற] தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத[அலெக்சாந்தன்?] மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சி செய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்;
9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்;
10. வட இந்திய[சிந்து]ப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்;
11. [இராவணன் மற்றும் அவனுக்கு ஆதரவான கேரள மற்றும் சிங்கள் மன்னர்கள் பத்துப்பேரான] தமிழ் மன்னர்களை வென்று [மற்றொரு அமண தீர்த்தங்கரர்] கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்;
12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை[இராவணனை] வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன;
13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI [குடதிசை மேற்குத் திசை - குடநாட்டு] குடபஸ்ரீயான செங்குட்டுவன் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துப் பாதுகாவலனாக சேனாபதியாக] உள்ளான்.
பிரகிருதியும் புருசனும்:- பிரகிருதியைச்சடப்பொருளாகவும் புருசனை முழுமுதற்பொருளாக - ஆண்டவனாகவும் கொண்டு அனைத்து உலகத்தத்துவங்களுக்கும் முதன்மையானதாகவும் அடிப்படையாகவும் விளங்கிய கபிலரின் சம்கிய - சாங்கிய தத்துவநூல் சிதைத்து அழிக்கப்பட்டுவிட்டது. அனுமுதற்கொண்டு அவற்றின் சேர்க்கைகளும் அதன் விளைவுகளும் குறித்த; மற்றும் ஆண் பெண் சேர்க்கை அதன் விளைவுகள் என அனைத்தையும் விவரிக்கும் நூலாக இருந்ததெனப் பலரது பிந்தைய நூல்களில் அறிய, உணர முடிகிறது.
கரிகால்சோழனின் தங்கையே பிரகிருதியாகவும் அப்பெண்ணைக் கெடுத்துக் கருவுறச்செய்து; அக்குழந்தையின் தந்தை தானே என அறிவிக்க மறுத்து ஓடிவிட்ட ஒருவனைப் புருசனாகவும் உருவகித்து உலகத்தோற்றமும் மனித இனமும் அப்போதுதான் துவங்கியது என்ற கட்டுமானத்தை நிறுவியுள்ளனர். காரணம் அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அந்தப் புருசனின் முக அமைப்பையும் பொன்னார் மேனி நிறத்தையும் கொண்டிருந்ததாகும். புருசன் ஒரு அந்நியன்; ஆனால் அப்பெண்ணோ ஒரு தமிழச்சி 'கானக்காக்கையின் கடும்சிறகு ஏய்க்கும்' நிறத்தவள்.
அப்பெண்ணே விவிலியத்தில்; கடவுள் அருளால் கருவுற்றுக் கர்த்தனை ஈன்றதாகக் காண்கிறோம்!
இறையனாரால் படைத்தளிக்கப்பட்ட இறையனார் களவியல் நூலும் இதனையே வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தவே அந்நூல் இறைவனால் படைக்கப்பட்டது என்றனர்! முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம்.
வஜ்ரநந்தி - வஜ்ரகரனின் காலத்தில் கூடலில் அமைக்கப்பட்ட சங்கத்தில் இயற்றப்பட்டதே அந்நூல்; வஜ்ரகரனே இறையனாராகவும் அவரே படைத்ததாகவும் குறிப்பிட்டு; அவருக்காகப் படைத்த நக்கீரரும் முக்கண்ணானால் எறிந்து சாம்பலாகிவிட்டார் கடவுள் தனது சொந்த விருப்பை நிறைவுசெய்ய விரும்பியதை மறைக்க; உலகத்தோற்றத்தின் கதை புகுத்தப்பட்டுவிட்டது.
கபிலரின் பாடல்களில் அப்பெண்ணின் துயரங்களே வெளிப்படுகின்றன. பரணரும் சலைத்தவரல்ல. இறையனாரின் இருப்பிட்த்துக்கே சென்று அப்பெண்ணுக்காக வாதாடிய பாடல்களும் பல உள்ளன. அப்பெண்ணின் துயரை எடுத்துரைக்கும் மேலும்பலபாடல்கள் காணாமைல் போய்விட்டன; ஆயிரத்துமேற்பட்ட பால்ல்களே எஞ்சி யுள்ளன. நற்றிணைப்பாடல்களில் காணாமல்போனதாகக் குறிக்கப்படும் வரலாற்றுடன்கூடிய சிதைத்துநீக்கப்பட்ட-234ல்:
.. .. .. .. ..சான்றோர் வருந்திய வருத்தமும், நுமது
வான்தோய் வன்ன குடிமையும், நோக்கி,
திருமு/மனி/ணிவ ரன்றும் குன்றம் கொண்டிவள்
வரும/முலை ஆகம் வழங்கினோ நன்றே: அஃதுஆன்று
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே." எனக்காட்டப்பட்டுள்ளது; இப்பாடலில் முதலில் 1(அ)2 அடிகளை நீக்கி; பிறகு பாடலையே நீக்கிவிட்டார்களோ? களவியல் காரிகை பதிப்பித்த வையாபுரிப்பிள்ளை அவர்களும் இதனை நற்றிணைப் பாடலாகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நச்சினார்க்கினியரால் இறையனார் அகப்பொருள் நூலுக்கு உரைசெய்ததில் களவியல் 23ஆம் பாடலுக்கு விளக்கமாக:
"நீர்நலும்முன்னாள் எல்லையும் ஒருசிறை
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர்இறை வளைத்தோள் நின்தோழி செய்த
ஆர்உயிர் வருத்தம் களையாயோ என
எற்குறை உறுதிர் ஆயின் சொற்குறை
எம்பதத்து எளியள் அல்லள் எமக்குஓர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும
ஆய்கொள் மிளகின் அமலைஅம் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புற நாநூறு தைவரும்
மாஞ்சுசூழ் மணிவரை மன்னநன் மகளே" எனக்காட்டப்பட்டுள்ளது!
Sunday, 5 October 2014
குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!
குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!
வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது.
பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர்.
அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள்.
ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது"
சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான்.
பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.
"ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன.
ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர்.
சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது.
கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்!
கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை.
விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர் http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!
Subscribe to:
Posts (Atom)