Friday, 2 January 2015

ஒற்றியூரன் கூத்தன் மரீசிமகன் களந்தைக்கோன் இரும்போரை பரசுராமன் பராந்தகன் திருத்தணி வேலஞ்சேரி செப்பேடு கார்வேல் கரிகால் செங்குட்டுவன்

ஒற்றியூரன் கூத்தன் மரீசிமகன் களந்தைக்கோன் இரும்போரை பரசுராமன் பராந்தகன் திருத்தணி வேலஞ்சேரி செப்பேடு கார்வேல் கரிகால் செங்குட்டுவன் புறநாநூறு.பாடல்17.புலவர்.குறுங்கோழியூர்க்கிழார்; இரும்பொறையினைப் பாடியது: "........தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலாஎல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் கொடிதுகடிந்து கோல்திருத்திப் படுவதுண்டு பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழி......" என குறிப்பிடுவதில் 'கொடிதுகடிந்து கோல்திருத்தி' என்பதும், 'இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர்' யார்? சிறைப்பட்டு விடுவிக்கப் பட்டது ஏன்? என்பதும் நோக்கத்தக்கது. புறநாநூறு பாடல்-22:புலவர் குறுங்கோழியூர்க்கிழார்: "........மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேல் உலகத்து அற்று எனக்கேட்டு, வந்து இனிது காண்டிசின், பெரும! முனிவிலை வேறு புலத்து இருக்கும் தானையொடு சோறுபட நடத்தி நீ துஞ்சாமாறே!" என இரும்பொறையின் தோல்விக்கு வருத்தியும், மீண்டும் அவனுக்கு ஆட்சியுரிமை வழங்கப்பட்டது கண்டு வாழ்த்தியும், அறிவுறுத்தியும் பாடியதை காண்கிறோம். புறம்-53: இளங்கீரனார் பொறையனிடம் வருணாசிரம 'ஒளியர்' குறித்து: ".. .ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே; தாழாது; செறுத்த செய்யுள்செய் செந் நாவின் (பாடிய செய்யுற்கள்)(எங்கே?) வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன் (கேள்வியெழுப்பி பிராமணரை) இன்றுளன் ஆயின் நன்றுமன்' என்றநின் (வெறுத்த கபிலனின்) ஆடுகொள் வரிசைக்கு ஏற்பப் (பாடல்கள் அழிக்கப்பட்டுவிடன) பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே" என 'ஒளியோர்'- சூத பிராமணரின் தொல்லை தாங்காமல், வேள்வியைவெறுத்துக் கேள்வி எழுப்பிய கபிலன் இல்லாத நிலைக்காக வாடும் புலவனின் நிலையையும்; காண்கிறோம். கபிலன்; பிராமணரால் கொலைசெய்யப்பட்டதை மறைத்துவிட்டனரோ? யாப்பருங்கலம்-மேற்கோள் பாடல்: "உச்சியார்க் கின்றவனாய் உலகமெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாய்ப் பாவித்தார் வச்சிரங்கை காணாத காரணத்தால் மயங்கினரே, அக்காலம் அணிநிறைகாத் தடுவறையாற் பணிதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்ந்தனரே, மால்கொண்ட பகைதனிப்பான் மாத்தடித்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியோனாப் பாவித்தார் வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே'...எனவும்; சீவக சிந்தாமணி.திருத்தக்கதேவர்:.1242-1243: அருகதேவனை அரணபாதம் என்னும் மலையடிவாரத்தில் ஸ்ரீ கோயிலில் வழிபட்டுப் பாடுவதாக: "அடியுலக மேத்தி அலர்மாரி தூவ முடியுலக மூர்த்தியுற நிமிர்ந்தோன் யாரே? முடியுலக மூர்தியுற நிமிர்ந்தோன் மூன்று கடிமதிலுங் கட்டழித்த காவளநீ யன்றோ தீரா வினைதீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து வாராக் கதியுரைத்த வாமணநான் யாரே வாராக் கதியுரைத்த வாமண் மலர்த்ததைத்த காராம்பூப் பிண்டிக் கடவுணீ யன்றே!" யாப்பருங்கலம்:விருத்தி உரையில் பலபாடல்கள் மேற்கோளாக உள்ளன. அவற்றில் பலவும் கரிகால்சோழனை அச்சுதன் எனவும், அமண மரபின்படி நந்தி எனவும் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம்: "வின்பொரு பெரும்புகழ்க் கரிகால்வளவன் தன்பதங் கொள்ளும் தலைநாள் போல...... ..இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தலை நீக்க அருள் சிறந்து ஒருபால்" பாண்டியன் விடுவிக்கப்பட்டதை: "அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதித்த வந்நாள்-முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றலையை வெட்டிவிடும் ஓசை மிகும்." எனப் பாண்டியனும் சிறைப்பட்டு விடுவிக்கப்பட்டதைக்க்காண்கிறோம்! கணையன் அகப்பட கழுமலம் தந்த - அகம் 44/13 கணையன் நாணிய ஆங்கு மறையினள் - அகம் 386/8 கரிகால்சோழனின் தங்கைக்குப் பிறந்த செங்குட்டுவனை மகனாக ஏற்க மறுத்தான் கணைக்கால் இரும் பொறை. இதனால் வெகுண்ட சோழப்பெண் நல்லியயற்பாவை; இரும் பொறை -பிம்பிசாரனை அடிபணியவைத்த வரலாறே பலவாறு மாற்றப்பட்டது. தனது அண்ணன் கரிகால்சோழனையும் தனது மகன் செங்குட்டுவனையும் தனது மாமன் சந்திரகொற்றனின் மகன் கார்வேலனையும் துணையாகக் கொண்டு பிம்பிசாரனை அடிபணியவைத்து; [பிம்பிசாரனை அஜாதச்சத்ரு பட்டினிபோட்டுக் கொன்றாதாக வரலாற்றில் உள்ளது; ஆனால் கங்கைநதி நீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தான் என வரலாற்றில் பதிவாகியுள்ளது. மேலும் தமிழ்ப்பாடல்களில் அகநாநூறு 44ல் பெரும்பூட் சென்னி- சோழன் செங்கணான்- கரிகால்சோழன்; சேரனது கழுமலங்கொண்ட போரில் 'வஞ்சிக்கோன்' என இளங்கோ குறிப்பிட்ட நறும்பூன் அத்தியே; இளஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவன் என; தனது தந்தை 'கணையன்' கணைக்கால் இரும் பொறையைச் சிறைப்படுத்தக் காண்கிறோம். கணைக்கால் இரும் பொறையைச் சிறைப்படுத்தக் காண்கிறோம். புறநாநூறு- 22; குறுங்கோழியூர்க்கிழார்: “ ....மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேல் உலகத்து அற்று எனக்கேட்டு,வந்து இனிது காண்டிசின், பெரும! முனிவிலை வேறு புலத்து இருக்கும் தானையொடு சோறுபட நடத்தி நீ துஞ்சாமாறே!”" என மாந்தரஞ்சேரல் இரும்பொறை அடக்கப்பட்டதையும், போர்மறவர்கள் நாட்டை விட்டு அகற்றப்படதையும், சோறுபட நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டதையும், இரும்பொறைக்குக் கீழ் இருந்த சிற்றரசர்களின் போர்ப்படையினர். செங்குட்டுவனின் தலைமைக்கீழ் [திருத்தணி]வேற்றிடத்தில் வைக்கப்பட்டதையும் காண்கிறோம். களவழி நாற்பது: கணையன் அகப்பட்டுச் சிறப்பட்டுப் பின்னர் விடுபட்டதையும், கலிங்கத்துப்பரணி மற்றும் மூவர் உலா நூல்களும் குறிப்பிடுகின்றன. மூவர்உலா: ” நல்லவன் பொய்கை களவம் நாற்பதுக்கு வில்லவன் கால்தலையை விட்ட கோன்”" எனக் குறிப்பிடுகிறது. புறநாநூறு-74: ”குழவி இறப்பினும்....”எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: ”சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டுக் குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா” என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய ]வருந்திய] பாட்டு “என்று குறிப்பிடுகிறது. வடமொழி நூல்களிலும் தனது தந்தை பிம்பிசாரனைப் பட்டினிபோட்டுக் கொன்றதாக அஜாதச்சத்துரு எனச் செங்குட்டுவன் இடம்பெறுகிறான். இப்போரில் சென்னியின் படை முதலியாக இடம்பெற்றுப் பொறையன் அகப்பட உதவித் தன்னுயிர்படப் போரிட்டவனே பழையன். பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் பாடிய கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்தான் இளங்கோ பாடிய செங்குட்டுவன். அகநாநூறு -கணைக்காலிரும்பொறை. "...... திண்டேர்க் கணையனகப்படக் கழுமலந் தந்த பிணெயலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி......." என அடக்கிவிடுவிக்கப்படக் காண்கிறோம்.ஒட்டக் கூதரும் இதனை உறுதிப்படுத்துகிறார். பட்டினப்பாலை-புலவர் உருத்திரங்கண்ணனார்: "................................ மருங்கு அற மலை அகழ்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்குவனே வளிமாற்றுவன் என தான் முன்னிய துறை போகளின் பல் ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அருவாளர் தொழில் கேட்ப வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல்கெட சீறி மன்னர் மன் எயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாற் றானை மற மொய்ப்பின் செங் கண்ணால் செயிர்த்து நோக்கி புன் பொதுவர் வழி பொன்ற இருங் கோவேள் மருங்கு சாய.........." எனத் தென்னவனாகக் குறிப்பிடப்படுபவனே சிலப்பதிகாரம் குறிப்பிடும் "இளையர் ஆயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர்" பொருநர் ஆற்றுப்படை: "............எய்யாத் தெய்வர் ஏவல் கேட்ப செய்யார் நேஎம் தெருமறல் கழிப்ப பவ்வ மீமிசை பகற்கதிர் பரப்பி வெல்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு...." எனத் தெளிவாகக்குறிப்பிடுகிறார்.இவ்வாறு அனைவரையும் அடக்கியவன் "திருமா" - இராமன் எனக் காண்கிறோம்.! எனவே பொறையனை அடக்கியது; செங்கண்ணான் என்னும் காரிகால்சோழனே என்பது தெளிவாகிறது. "அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதித்த வந்நாள்-முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றலையை வெட்டிவிடும் ஓசை மிகும்." சிறையுற்று விடுபட்டதைக் காண்கிறோம். யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் பாடல்கள் மற்றும் விளக்கத்தார் கூத்து நூலின் வாழ்த்துப் பாடல்கள் போன்றவற்றைக் காணும்போது; அமணர்களும் திருமாவளவனை, விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக்கொண்டு, அச்சுதன் எனப் போற்றியுள்ளது தெரிகிறது. தமிழ் மரபுப்படி அவனை நமது மக்களும் புலவர்களும் திருமாலாகப் போற்றியுள்ளனர். ஆகவே அன்றைய நிலையில் மதம் என்பதாக எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. முத்தொல்லாயிரம் பாடல்களின் எண்ணிக்கை என்ன வென்பதில் குழப்பம் உள்ளது; சில பாடல்களே கிடைத்துள்ளன: 49: "கச்சி ஒரு கால்மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தாண்மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகால்மிதியா வருமேநங் கோழியர் கோக்கிள்ளி களிறு" எனக் கார்வேலனின் கல்வெட்டில் குறிப்பிட்டபடி தெற்கே மூவர் கூட்டனியான காஞ்சியைக் கைப்பற்றிய ஒற்றியூரன் பரசுராம இரும்பொறை, தண்ணுஞ்சை எனப்பட்ட தஞ்சையைக்கைப்பற்றியவனையும், ஈழத்தைக்கைப்பற்றிய இராவண பாண்டிய செழியனையும் தம்ரபர்ணரையும் அடக்கியதைக்காண்கிறோம்! முசுகுந்த பரசுராம இரும்பொறை ஒற்றியூரன் முக்கண்ணான் தொண்டைநாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்றியதோடு; சேத்சென்னிக்கும் கட்டுப்பட மறுத்து; பாவையை மணம்புரிய மறுத்ததோடு; வசிட்டனின் சதியால் சேட்சென்னியை(புறம்9,52,55,195,அகம்212,ம-காஞ்)மகத ஆரிய மோரிய அவுணருக்குக் கப்பம்கட்டும்படி வலியுறுத்தினான். இதனைச் சேக்கிழாரின் பெரியபுராணம்: "மருற்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர்" என திருக்குறிப்புத்தொண்டர் புராணத்திலும், சுந்தரர் தேவாரத்திலும்; ஒற்றியூரன் எனச் செப்பேட்டிலும் முசுகுந்தன் இடம்பெற்று: "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திரை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமான்" எனவும்; திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம். பராந்தகசோழனினின் 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இச்செப்பேடு ஆங்கில ஆண்டு கி.பி. 932 ஆகும். விஷ்ணு,பிரம்மா, மரிச்சி,காஸ்யபா, சூரியா,உஷினாரா போன்றோர் இவன் குலத்தில் தோன்றினார்கள் என்றும், கர்காலன்,சிபி, கோச்செங்கணான் போன்ற சோழ முன்னோர்களின் செய்திகளும் காணப்படுகின்றன. இச்செப்புப்பட்டயத்தின் சமஸ்கிருதப் பகுதி சோழ மன்னர்களின் பட்டியலையும் தருகிறது. அதில் கோச்செங்கணான் என்று ஒருவன் குறிப்பிடப்படுகிறான், அவன் மகன் ஒன்றியூரான் என்றும், அவன் மகன் சிறந்த போர் வீரன் என்றும், அவன் மகன் ஆதித்யன் என்றும் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்யன் தந்தையான விஜயாலயனுக்கு ஒன்றியூரான் தந்தை என்றும், ஒன்றியூரானின் தந்தையான கோச்செங்கணான் என்பவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான் என்றும் அறிய முடிகிறது. இலக்கியங்களில் காணப்படும் பெருஞ்சேரல் இரும்போறையோடு போரிட்டு வெற்றி கண்ட கோச்செங்கணான் இவனா என்பது ஆய்வுக்குரியதாகும். மேலும் கரிகாலன் காலத்திய மூன்று நிகழ்ச்சிகள் பற்றி இச்செப்பேடு கூறுகிறது. 1. கரிகாலன் சோழர்களின் புகழை இமயம் வரை பரப்பினான் 2. காவேரியாற்றின் இரு கரைகளிலும் அணைகள் கட்டி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தினான். 3. காஞ்சியில் பல அரண்மனைகள் கட்டினான். விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்றும் ஆதித்த சோழனின் மகனாகிய முதலாம் பராந்தகன் இராமேஸ்வரம், திருவரங்கம், கன்னியாகுமரி கோயில்களுக்கு துலாபாரம் அளித்துள்ளான் என்ற புதிய செய்தியையும் முதலாம் பராந்தகசோழனின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. இந்தக் கதநாய்வடுகர் தங்களைச் சோழர் என அறிவித்துக்கொண்டு பொய்யாக வெளியிட்ட செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் எப்படியெல்லாம் வரலாற்றை மாற்ற உதவியுள்ளன என்பதை இன்றுவரை எவருமே வெளிப்படுத்த மறுக்கிறார்களே! கும்பகோணத்துக்கு அருகில் திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோயிலில் கருவறையின் வெளியே தெற்குச்சுவற்றில் உள்ள SII XIX No. 347 கல்வெட்டில் "மொசி" ஒற்றியூரன் கூத்தன்" என உள்ளது. மரீசி என்பதை மொசி எனப் படித்து மரீசியின் மகன் ஒற்றியூரன் என்பதை மறைத்துள்ளனர். மேலும் ஒற்றியூரனே கூத்தனாகவும் குறிப்பிடப்படுகிறான். இவனையே சேக்கிழார்: " ஆல்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன். .. .." எனக் குறிப்பிடுகிறார். அந்தக் கூற்றனே தில்லைவாழ் அந்தணரிடம் சோழர்கள் தண்டிக்கப்பட்டபோது ஒப்படைக்கப்பட்ட மகுடங்களை - சோழரின் முடியைத் தனக்குச்சூட்டும்படி வேண்டியவன்; அந்தணர் எவரும் முடிசூட்ட மறுத்துவிட்டுச் சேரலத்துக்குச்சென்றுவிட்டதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார். எப்பதோ வாழ்ந்த ஒற்றியூரனைப் பராந்தகனுடன் சேர்த்துக்குறிப்பிடுமளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை எவராவது தெளிவுபடுத்துகிறார்களா! மாட்டார்கள் மக்களே! திருத்தனி வேலஞ்சேரிச்செப்பேட்டில் " கறையார் மணிமிடற்றான் காபாளி .. .. ." எனக் கழுத்தில் கறையுடையவன் எனவும் குறிப்பிடக்காண்கிறோம்! இதனைப் புறத்திரட்டில் ஒரு பாடல்: "மண்ணுலார் தம்மைப்போல்வார் மாட்டாதே யன்றுவாய்மை நண்ணினார் திரத்துங்குற்றங் குற்றமே நல்லவாகா விண்ணுலார் புகழ்தற்கொத்த விழுமியோ னொற்றிபோழ்ந்த கண்ணுளான் கண்டந்தன்மேல் கறையையார் கறையன்றன்பார்?" எனக் குறிப்பிடுகிறது! கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4 கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை/மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/5,6 இந்தப்பாடல்களை எங்கே கொண்டுபோய் மறைப்பது? சொல்லுங்கள் மக்களே!

No comments:

Post a Comment