Friday, 14 November 2014
"க" மண்டலம்! - அகத்தியர் - "க" என்ற கடவுள்! - ரிக்வேதம்!
சிவனை வணங்குவோரெல்லாம் மேற்குத்திசைநோக்கித்தானே வணங்கவேண்டும்? சிவனும் கிழக்குநோக்கித்தானே இருக்கவேண்டும்! சிவனின் கோயில்களிலலுள்ள நந்தி லிங்கத்தைப் பார்த்தபடிதானே உள்ளது! அதன்மூலமாகத்தானே நமது வேண்டுதல்களை லிங்கத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்? லிங்கம் அமைக்கப்பட்ட சிவனின் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்த்தடுப்புக்களால் பிரிக்கப்பட்டு; வணங்குவோரெல்லாம் வடக்கு அல்லது தெற்குநோக்கி நின்றுகொண்டு; தங்களது கழுத்தைத் திருப்பி முகத்தை மட்டும் லிங்கத்தை நோக்கி வணங்குவது ஏற்றுக்கொள்ளப் படுமா? முழுமையான வேண்டுதல்களை ஏற்றுப் பலன்பெற முடியுமா? முகம்மதியரெல்லாம் மேற்குநோக்கித் தங்களது முழு உடலையும் முகத்தையும் காட்டியல்லாவா தொழுகிறார்கள்! லிங்கத்தைத் தொழுவோர் ஏதாவது தவறு செய்கிறார்களா! ஆகமங்கள் என்ன சொல்கின்றன? அறிந்தோர் விளக்கினால் தெளிவுபெறலாம்! உருவம் இல்லையென்றாலும் மேற்குநோக்கித்தான் தொழுகையை நடத்தவேண்டுமா? சீக்கியர்களின் தலைவர் ஒருவர் க அபா வில் படுத்திருந்தபோது அவரது கால்கள் இறைவனை நோக்கி இருந்ததாகவும் அங்கிருந்த காவலர் அதனைச் சுட்டிக்காட்டியபோது இறைவன் இல்லாத திசை எது எனக் கேட்டாராமே! உண்மையா? ஒன்னுமே புரியல்லியே!! சிறப்பான பெருமால் கோயில்களில் இதுபோன்ற தடுப்புக்கள் இல்லையெனத்தெரிகிறதே! திருப்பதிப் பெரும் ஆள் திருமால் பெருமால் கோயிலில்கூட நேராகப் பெருமாலைப் பார்த்து வணங்கி வழிபட முடிகிறதே! சீக்கியரின் கோயில்களில் இதேமுறைதான் உள்ளதாகத் தெரிகிறது! மக்களே உங்களது கருதென்ன? சொல்லுங்கள்!
" க" என்ற கடவுள் ரிக்வேதத்திலும் உள்ளாரே! "க அபா" என்றால் க என்ற தந்தை என்று பொருள்படுவதாகத் தெரிகிறது! அபா என்பது குழந்தைகள் தங்களது தந்தையை மிக்க அன்புடன் அழைக்கும் சொல் என்கிறார்கள்! "க" என்ற கடவுள் யாராக இருக்கும்? அவர் குடிகொண்டிருக்கும் மண்டலம் எதுவாக இருக்கும்? க மண்டலம் உலகிலலெ இருக்கிறது? உங்களில் யாருக்காவது தெரியுமா? இந்தியாவின் வரைப்பட அமைப்பைக் காணுங்கள்; க என்ற எழுத்தின் வடிவில்தானே உள்ளது?! க மண்டலம் இந்தியாதானோ? அகத்தியரிடம்தானே இந்தக்கமண்டல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது!? அவரது கமண்டலத்திலிருந்துதானே கா விரியை தென்னகத்துக்குக் கொண்டுவந்தான் சோழன் எனவும் காண்கிறோமே! அதுவும் சரியாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது!?! கமண்டலத்தின் கீழே ஒரு கிண்ணம் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் வைக்கமுடியாது! மேலே இருக்கும் குடுவைபோன்ற அமைப்புக்குள்தான் நீரை வைக்கமுடியும்! கீழே உள்ள கிண்ணம் எப்போதும் நீரின்றித்தான் இருக்கும்; இருக்கவேண்டும் eஎன எண்ணியவர்களால்டானே இந்த மண்டலத்துக்குக் க மண்டலம் என்ற பெயர் இடப்பட்டிருக்கவேண்டும்!?! அதனை எதிர்த்துக் கீழே உள்ள கிண்ணத்துக்கும் நீர் செல்லவேண்டுமமென்று விரும்பி விடுவித்தவந்தானே சோழன்! அதற்கு அகத்தியமுனிவரும் ஒப்புக்கொண்டதால்தானே கா விரிநீர் தெற்கே கொண்டுவரப்பட்டது! இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் க மண்டலத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் என்பதை! மீண்டும் வலியுறுத்திச் சொல்லுங்கள் இந்தச்செய்தியை!
வானம் பொய்யாது; வளம் பிளைப்பு அறியாது;
நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது;
பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?
"கோசலத்திலிருந்து மகதத்துக்குவரும் நீர் அனைத்தும் ரோஹிணி ஆற்றின்வழியாக வருவதாகும். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டபோது கோசலத்தார்,நதியைத் தடுத்தனர். இதனால் மகதத்துடன் விரோதம் ஏற்பட்டது;சித்தார்த்,'சண்டை வேண்டாம்' என சமாதானம் பேசினான்."
"ஆறுகாடு எனப்பட்ட பகுதியை கரிகால்சோழன் கைப்பற்றிய போது இவர்கள் வெளியேற்றப்பட்டனர் . கைப்பற்றப்பட்ட பகுதியை,காடுதிருத்தி நாடாக்கி ஒழுங்கு படுத்திய கரிகால்சோழன்,நீர்வளம்பெருக்க,பொன்னி நதிக்கு கரையெடுத்தபோது,ஆந்திரநாட்டின் முகரிப்பகுதியை ஆண்ட முசுகுந்தன் எதிர்ப்புக் காட்டியுள்ளான்."
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரியைப் படத்து
எழுதுகென்று கண்டிது மிகைக்கண் என்று
இங் கழிக்கவே அங் கழிந்ததும்
-குழவி இறப்பினும்....எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது,பற்றுக்கோட் பட்டு,குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா என்று பெறாது,பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு இவ்வளவு வருத்தப்பட்ட அந்த இரும்பொறை யாரோ?
"துவராபதிப்போந்து நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட் டோரையும் அருவாளரையும் கொண் டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித்.. .."
.............நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,மற்று அதன்
தகுதிகேள் இனி மிகுதி யாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே,'.......
.........அருபோர்ச் செழிய! இக லலு வல்லே!
நிலன்நெளி மருங்கின் நேர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!" இராவண செழியனுக்கு ஏன் இந்த அறிவுரை?
"தெண்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள்" யாரு?
"கங்கைநீர் சடைக்கரந்தான்" யாரு?
Monday, 10 November 2014
"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன்.
"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன்.
மறைந்துபோன உலகவரலாறு இந்த 21 தலைமுறைக்குள் அடக்கம்!
அது; வரலாற்றிலேயே இல்லாத 60 ஆண்டுகள்முதல் 1260 ஆண்டுகள்வரை இருக்கக்கூடும்! நிச்சயமாக வரலாற்றில் இல்லாத 560 ஆண்டுகள் முதல் 1260 ஆண்டுகளை உள்ளடக்கியது!
இந்த மேல் அளவீடான 1260 ஆண்டுகளுக்குப் பிறகான இன்றைய 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட 754 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொருநாட்டுக்குமான வரலாற்றை உண்மை வரலாற்றின் அடிப்படையில் கட்டமைக்கமுடியும்!
அதற்குமுன்னரான உலகவரலாறும் பாரத் - பாரத வரலாறும் மதங்களுக்குள் புதைந்துவிட்டன! அவற்றைக் கட்டமைப்பதென்பது ஒருசிலரால் மட்டுமே இயலும்!
புருஷோத்தமன் என ஒருவர் இருந்தாரா?
போரஸ் என ஒருவர், சந்திரகொற்றனின் தந்தையாக வரலாற்றில் உள்ளார்!
புருஷ் - புருஷன் என ஒருவர் ரிக்வேதத்தில் உள்ளார்!
நான்முகன் = பிரம்மா என ஒருவர் இருந்தாரா?
விசுவாமித்திரர் என வேத இதிகாச புராணங்களில் பிரம்மாவாகத் தெரிகிறார்! இவரே பெருமால் எனப்பட்டுள்ளார்! சூரியகுலச்சோழருக்குப் பிறந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்!
விஷ்ணு என ஒருவர் இருந்தாரா?
முதலில் குறிப்பிடப்பட்ட புருஷோத்தமரே விஷ்ணுவாகத் தெரிகிறார்!
கிருஷ்ணன் = கண்ணன் என ஒருவர் இருந்தாரா?
கார்வேல் = கார்வண்ணன் = நீலமேகன் = கண்ணன் என ஒருவர் வரலாற்றிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளார்! சந்திரகொற்றனின் மகனாகவும் தெரிகிறார்!
திருமால் என ஒருவர் இருந்தாரா?
திருமா வளவன் = கரிகால்சோழன் என ஒருவர் தொல்தமிழ்ப்பாடல்களிலும் கல்வெட்டுக்களிலும் பட்டயங்களிலும் உள்ளார்!
அம்பா = பார்வதி= உமா என ஒருவர் இருந்தாரா?
அம்பா என ஒருவர் மாபாரதத்தில் உள்ளார்! இவரையே பார்வதி எனவும் உமா எனவும் குறிப்பிடுகின்றனர்! உமா என- அமணத்தில் உமாஸ்வாதி என ஓறூவறர் உள்ளார்! மாயா எனவும் உஷை எனவும் கொற்றவை எனவும் பலபெயர்களில் இடம்பெற்ற முதல் பெண்ணாக உள்ளார்! ரிக்வேதத்தில் உள்ள ஊர்வசி - உஷை என்பவரும் இவரே எனத்தெரிகிறார்!
செவ்வேல் முருகன் என ஒருவர் இருந்தாரா?
சிலப்பதிகாரத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் முருகன் உள்ளார்! சிலப்பதிகாரத்தில் உள்ள செங்குட்டுவனே முருகனாகவும் தெரிகிறார். செங்குட்டுவனின் குணநலன்களே முருகனுக்கும் காட்டப்படுகின்றன!
இறையனார் என ஒருவர் இருந்தாரா?
இறவன் என ஒருவர் இதிகாச புராண தொல்தமிழ்ப்பாடல்களிலும் உள்ளார்! இறையனார் என ஒரு புலவரும் உள்ளார். இறையனார் இயற்றியதாக அகப்பொருள் நூலொன்று 60 சூத்திரங்களுடனும் பாயிரம் சிறப்புப்பாயிரம் என சேர்க்கப்பட்டதாக உள்ளது! பைங்கட்பார்ப்பான் என தொல்தமிழ்ப்பாடல்களிலும் புராணங்களிலும் இடம்பெறும் முருகனின் தந்தை; மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் இதனை மூன்று செப்பிதழ்களில் எழுதியதாகவும் உள்ளது! உப்பூரிக்கிழ்ழன் மகன் உருத்திரசம்மன் பைங்கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப்பிராயத்தான் மூங்கைப்பிள்ளை குமாரதெய்வம் சாபத்தினால் பிறந்தவன் என ஒரு ஊமைக்குழந்தை இச்சூத்திரங்களுக்கான உரையைக்கேட்டதாகவும் அதில் காணப்படுகிறது! இதன் காலம் கடைச்சங்ககாலம் என உரைப்பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்! இதில் முச்சங்கங்கள் குறித்த முறன்பட்ட தகவல்களும் உள்ளன! எழுதப்பட்டகாளத்துக்குப்பிறகு பத்துத்தலைமுறை கழிந்தபின்னர் வெளிப்பட்டதாகவும் வழிவழியாகச் செவிவழி கேட்டுப் பின்னர் எழுதப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
திரு.கே.எம்.சிவராசபிள்ளை அவர்களின் நூல் ????? 1932ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. அதில் "முச்சங்கவரலாறு குறித்த இறையனார் அகப்பொருள் உரையும், களவியல் நூலும் கட்டுக்கதையாக வெளி வந்தன. தமிழை அமணர்கள் கையாண்டு சிறப்பாக வெளிப்படுத்தியபோது; தமிழ் உச்ச வளர்ச்சியை அடைந்தது. தமிழ், தங்கள் தெய்வீக பாஷை என அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழில் வந்த அனைத்து நூல்களையும் கைப்பற்றி பிராமணரின் துணையுடன் சைவநெறியினர் தங்கள் விருப்பம்போல் கையாண்டனர்... என உள்ளது!
அல்லா என ஒருவர் இருந்தாரா?
அல்லெக்சாந்தர் மூவர் இருந்ததாக வரலாற்றில் தெரிகிறது! அவர்களுள் ஒருவரே அல்லா எனத்தெரிகிறது! ஒவ்வொருவராக அவர்கள் அராபிய - மேற்காசியநாட்டிலிருந்து இந்தியாமீது படைநடத்தி வென்று காஷ்மீரில் அல்லஃநந்தா நதியையும் உத்திரப்பிரதேசத்தில் அல்லாஃபாத் என்ற நகரத்தையும் உருவாக்கி கங்கைநதியின்மீது ஆதிக்கம் செய்ததாகத் தெரிகிறது! இந்திரன் என ரிக்வேதத்திலும் ஒருவர் காணப்படுகிறார்! அல்லஃசாந்திரியா என்ற தலைமையிடத்தைக் காஷ்மீரில் - இமையமலையின் மேற்கு எல்லையின் அடிவாரத்தில் உருவாக்கியதாக பெரிப்ப்ளுசின் பயணநூலில் காணப்படுகிறது. அந்நூலில் காணப்படும் தகவல்களைக்கொண்டு அல்லஃசாந்தாவும் பயணியும் பயனம்செய்த வழித்தடத்தை ஒரு வரைப்படமாக உலகவரைப்படத்தில் காட்டியுள்ளனர். இத்தாலி எகிப்த்திலிருந்து பலநாடுகள் வழியாக பாரத் எனப்பட்ட பாரதத்தின் தென்பகுதிமுதல் இமையத்தின் வடக்கே இன்றைய சீனநாடுவரை சென்றதாக அதில் குறீப்பிட்டுள்ளனர். அந்நூல் முழுமையாகக்கிடைக்காமல் சிதைந்தே கிடைத்துள்ளது!
முகம்மது என ஒருவர் இருந்தாரா?
முகம்மது என ஒருவர் இருந்ததற்கான சான்றுகள் முகம்மதியரின் நூல்களில் மட்டுமே உள்ளன! மக்காவீரரைப்போலவே தன்னை அல்லாவின் இறுத்தி இறைத்தூதர் என அறிவித்துக்கொண்டார்!
இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை.
இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு.
7- 8ஆம் நூற்றாண்டுகளில்தான் முகம்மதியரின் இந்தியப்படையெடுப்பு துவங்குகிறது! உலகவரலாற்றாளர்கள் அனைவரும்; உலகநாட்டு மக்களெல்லம் இவ்விரு நூற்றாண்டுகளில் கொந்தளிப்பான நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
சேரமான் மசூதி எனச் சேரலத்தில் ஒன்று உள்ளது! சேரமான் இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்று ஒரு தகவலும் உள்ளது! சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்தவர். ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். என ஒரு கட்டுக்கதையும் உள்ளது! எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்? சைவம், சாணக்கியம், புத்தம், ஜைனம் போன்ற மதங்களை எதிர்கொண்ட ஆழ்வார்கள் இஸ்லாமைப் பற்றி ஒரு வரி கூடக்கூறவில்லை; நாயன்மார்களும் எதுவும் குறிப்பிடவில்லை! நிலவு என்பது சந்திரகுலத்தோரையே குறிக்கும்; இவர்கள் அனைவரும் சூரிய குலச்சோழருக்கு எதிரானவர்கள். மேற்காசியநாடுகளில் வாழ்ந்த ஒரு கலப்பினத்தாரைத் தனது கூட்டத்துடன் சேர்த்துக்கொண்ட முகம்மது; பாரதத்துக்குள் தன்னுடன் சேர்ந்து தனது இளமைக்காலம் முதல் இருந்தோரால் பிறப்பிக்கப்பட்ட அனைவருடனும் கலக்கச்செய்து அவர்களின் உதவியுடன் பெருமளவிலான பாரதநாட்டைக் கைப்பற்றியதையே இங்கு காணவேண்டும்!
முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்; இதிலும் 60 ஆண்டுகள் கணக்கிடப்படாமல் உள்ளதாகத்தெரிகிறது. சந்திரமான ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட்டதால் இந்த வேற்றுமை உருவாகிறது. அக்காலத்தில் பாரதநாட்டவரோ சூரிமானத்தை ஒரு ஆண்டாகக்கொள்வோர் ஆவர்! முகம்மதியரின் ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்துத் திரட்டப்பட்டன. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார்.
ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான கடவுள் தத்துவத்தைப் பின்பற்றி வந்துள்ளார்கள். அதப்போது அங்கிருந்த யூதமதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருந்திருக்கிறது. இப் புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயரிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு நிறுவனரும் இல்லையெனத்தெரிகிறது; புத்தகமும் இல்லை; கடுமையான விதிமுறைகளும் இல்லை. அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எங்கும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. முதன் முதலில் 691இல்தான் குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது.
பரசுராமர் என ஒருவர் இருந்தாரா?
சேரலவரலாற்றில் பரசுராமர் இருந்ததாலேயே அதற்குப் பரசுராமக்ஷேத்ரம் என ஒரு பெயர் விளங்குகிறது! அவரால் குடியமர்த்தப்பட்டோரெல்லாம் தமிழரோ பாரதநாட்டவரோ அல்ல எனத்தெரிகிறது! பார்கவபிராமணர் எனத் தெரிகின்றனர். இதிகாசங்களிலும் இவர்கள் உள்ளனர்! யமதக்கினியின் மகன் எனக் காணப்படுவதால் அல்லஃசாந்தரின் மகனாகவும் தெரிகிறார். சிவனோடு அடையாளப்படுத்தக்கவராகவும் உள்ளார்! இவரைக்குறித்த தகவல்கள் இதிகாசங்களிலும் புராணங்களிலுமே உள்ளன! பலபெண்களைக் கொலைசெய்ததோடு 21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பதாகச் சபதமுரைத்ததாகவும் தெரிகிறது. 21 தலைமுறை என்பது அவரவர் விருப்பம்போலக் கணக்கிடப்படுகிறது.
கள / லப்பிரர் என ஒரு இனம் இருந்ததா?
இருந்ததாகத்தெரியவில்லை! பரசுராமனால் குறிப்பிடப்படும் 21 தலைமுறைக்கால வரலாறாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரால் கட்டமைக்கப்பட்டதே இந்த இருண்டகாலம்! இது ஒரு வரலாறற்ற காலமாகக்குறிப்பிடப்பட்டு வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் குறைக்கவும் கூட்டவும் சிதைக்கவும் பயண்படுத்தப்பட்ட காலம்! எல்லா உலகமதங்களும் சமயங்களும் இந்த இருண்டகாலத்தையே சிறப்புடன் பயண்படுத்தித் தங்களது மதங்களுக்கான வரலாற்றைக் கட்டமைக்கப் பயண்படுத்தப்பட்டது! அவற்றுக்கான சான்றுகள் இல்லையாயினும் தங்களது மத சமய தலைவர்- நிறுவனரை வரலாற்றிலிருந்து தேர்வுசெய்து ஒரு கூட்டுமுயற்சியாக வரலாற்றை மறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது!
புத்தன் என ஒருவர் இருந்தாரா?
உலகவரலாற்றை வெளிப்படுத்தும் தகவல்களைக்கொண்ட நூல்களை எழுதிவந்த அமண / அமனர்களையும் அவர்களது நூல்களையும் முற்றிலுமாக் அழித்தொழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது! மேற்கண்ட உலகமதங்கள் நிறுவப்பட்டபின்னர் அமண / அமனரால் எழுதப்பட்ட நூல்களெல்லாம் கைப்பற்றப்பட்டு அலெக்சாந்திரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த அல்லெக்சாந்திரியா எது என எவருக்குமே தெரியாது! உலகில் அன்று இரண்டு அல்லெக்சாந்திரியாக்கல் இருந்தன; அவற்றுள் ஒன்றே இமையத்தில் மேற்றிசை அடிவாரத்தில் இருந்தது! சிங்களரால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நூல்களின் உதவியுடன் அமனத்தின் இறுதித்தீர்த்தங்கரனைப் புத்தன் என நிறுவிய சிங்களரால் கட்டமைக்கப்பட்டதே புத்தமதம். இந்தப் புத்தன் மகாவீர் அல்ல! இந்தியாவிலிருந்து புத்தன் என ஒருவர் இருந்ததாக புத்தமத நூல்களில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது! அமணகோதமர் என்றே அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது! பாரத் -- பாரதத்துக்குள் பிறந்த அவரது பிறப்பிடம் உறுதிப்படுத்தப்படவில்லை! வடமொழி அல்லது ஏதோ ஒரு மொழியில் "ஜா" என்ற ஒற்றைச்சொல்லில் உள்ள குறிப்பைக்கொண்டு அவதரித்தார் எனக்கொள்கின்றனர். அது தோன்றினார்- வந்தார் எனப் பொருள்கொள்ளத் தக்கது. அவரது பிறந்த, இறந்த ஆண்டுகள் ஏற்கத்தக்கனவல்ல! அவற்றிலும் 60 ஆண்டுகள் வேற்றுமை காணப்படுகிறது!
மகாவீரர் என ஒருவர் இருந்தாரா?
அமண நூல்களில் மட்டுமே காணப்படுகிறார்! இவருக்குமுன்னர் ஒரு பெண்ணே தீர்த்தங்கரியாக இருந்துள்ளார். அவரை வன்முறையால் நீக்கியதாகவும் உள்ளது! அதனாலேயே மகாவீரர் எனப்பட்டார்; தன்னை இறுதித் தீர்த்தங்கரர் எனவும் அறிவித்துக்கொண்டார்! அப்பெண்ணைப் புணர்ந்து கருவுறச்செய்து திருமணம்செய்துகொள்ள மறுத்தவரே மகாவீரர் எனக்காணப்படுகிறது! இவருக்குப் பின்னரும் சமகாலத்திலும் வாழ்ந்த புத்தரும் மற்கலியும் கூடத் தீர்த்தங்கரர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளனர்!
ஏசு என ஒருவர் இருந்தாரா?
1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.
2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.
3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.
4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.
அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9
ஏசு என ஒருவர் இருந்தாரென உறுதிப்படுத்தப்படவில்லை! விவிலியத்திலோ புதிய ஏற்பாட்டிலோ அவரது பிறந்த ஆண்டு அல்லது பிறந்த நாள் என எதுவும் இல்லை! இளமைப்பருவம் குறித்த வரலாறு இல்லை! வரலாற்றுச்சான்றுகளும் இல்லை!
ஆனால் விவிலியத்தி எஸ்தரின் ஆகமத்தில் இந்தியாதேசம் முதல் எத்தியோப்பியாதேசம்வரையுள்ள 127 நாடுகளில் உலகவரலாறு ஒரே காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற உண்மை உணர்த்தப்படுகிறது.
அகத்தியர் என எவரும் இருந்தாரா?
அகத்தியர்கள் 49பேர் இருந்ததாக இதிகாச புராணங்களில் காணப்படுவதோடு தொல்தமிழ்ப்பாடைகளிலும் காப்பியங்களிலும் உறுதிப்படுத்தப்படுகிறது! அவர் வேளிர் இனத்தவராக அறிமுகமாகிறார்.
49 வழிமுறைகளில் தொடர்ந்து அகத்தியர்கள் இருந்துள்ளனர் எனத்தெரிகிறது! ஒரு வழிமுறை என்பது எத்தனை ஆண்டுகளைக்கொண்டதென எவரும் இன்றுவரை தெளிவுபடுத்தவில்லை!
உலக மதங்களும் சமயங்களும் புராணங்களும் தத்தமது வரலாற்றையே தொன்மையானவையெனக் குறிப்பிட்டுக்கொள்கின்றன!
ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களே பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு!
Subscribe to:
Posts (Atom)