Saturday, 12 October 2013

சரஸ்வதி பூசை ஆயுத பூசை

சரஸ்வதி பூசை ஆயுத பூசை சரசுவதியைத்தான் 2106 ஆண்டுகளுக்கு முன்னரே மாசிடோனியன் அலெக்சாந்தன் கொன்றுவிட்டானே; அதற்குப்பிறகு வெறும் சரசுவதி பூசைதான 2000 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. பரிபாடல் திரட்டு: 2/95-97 "அருமரபின் அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் .. .." (அந்தரவான்யாறு=திரிசங்கு சொர்க்கம்-திருப்பதி) பரிபாடலில் செவ்வேலாக்கப்பட்ட செங்குட்டுவனிடமிருந்து தப்பியோர்; "கொல்லாக் கோலத்து உயிர் உய்த்தோர்" எனச்சிலம்பில் இடம் பெற்றனர். சிந்தா மணியில் கத்தியாரின் இடைச்செருகற்பாடல் பல உள்ளதை நச்சர் குறிப்பிடுவது போலவே பரிபாடலிலும் கந்தியாரின் பாடற் செருகல் உள்ளதை; அதன் பாயிரம் உறுதிப்படுத்துகிறது. அமணத்தில் ஆரியர் ஆசாரியர் ஆயினர்; ஆர்யா என்னும்சொல் பிரகிருதத்தில் பெண்பிக்குணிக்கு அஜ்ஜா என; தமிழில் ஐயை எனவும்; கந்தி, குரத்தி, அடிகள், மாதவத்தாட்டி எனவும் மாறுகிறது; கந்தி எனும் சொல்லே கவுந்தி, குந்தி எனவும்; ஆர்யநந்தி (நந்தி=சிலம்பு=மலை=உயர்ந்த) அஜ்ஜநந்தி எனவும்; தமிழில் அச்சநந்தி எனவும் மாறுகின்றன.அமணத்தில் ஆடவரும் பெண்டிரும் சாத்தன் சாத்தி என இடம்பெற்றனர் என்பதற்குச் சங்கப்பாடல்களை இயற்றியோராகப் பல சாத்தர்களும், ஒக்கூர் மாசாத்தியும் உள்ளனர். நந்தர் ஆட்சியில் கலிங்கத்திலிருந்து மகதத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட அருகனின் படிமத்தைக் கலிங்கத்தில் மீட்டு வைத்த கரவேலன்; அங்காகமங்களையும் மீட்டுத் தொகுப்பித்தான். குமரிப்பகுதியில் யாமளசாஸ்திர அமணர் என (ஸ்வேதாம்பரர், திகம்பரர் இரண்டுக்கும் பொதுவர்) வாழ்ந்தோருக்கு உதவிய சிலப்பதிகாரத்தின் "பாசன்டைச்சாத்தன்" கரவேலன்; "சர்வ பாசண்ட பூஜகோ" எனப்பட்டான். பாசனேந்தி என வடமொழிநூல்களில் காண்கிறோம். கைக்கொள் பாசம் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறாது. செண்டுப்படை என சிலப்பதிகாரம், அடியார்க்குநல்லார் மற்றும் சேத்கிழாரின் பெரியபுராணம் போன்றவை குறிப்பிடுகின்றன. இன்றும் திருமால் கண்ணன் பெருமால் விஷ்ணு கோயில்களில் செண்டு என்னும் படையைக் கையில் கொண்டு இரண்டு பகுதியாகப் பிரிந்த வளைந்த வடிவில் ஒரு படைக்கருவியைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். அனைத்து வேளிர் அறிவாளர்களையும் ஒன்றுபடுத்தி ஆயுத பூசைக்கும் சரஸ்வதி பூசைக்கும் வழியமைத்தவனே கரவேலன். அமணத்தின் விரதியரையே மகத அமணத்தில் விராத்தியர் எனக் குரிப்பிட்டனர். இவ்விராத்தியருடன் அமணத்தைக் கஈப்பற்றிக்கொண்ட மாவீரின் கூட்டத்தரே தங்களை அமணரிலும் மேம்பட்ட பிர-அமணர்= பிராமணர் எனக் குறிப்பிடப்பட்டனர். மாவீருக்கு முன்னர் பிராமணர் என எவரும் வரலாற்றில் இல்லை. அமண நூல்களில் பிற அனைத்துத் தீர்த்தங்கரர் குறித்த தகவல்களும் வரலாறும் நீக்கப்பட்டன. தென்னகத்தில் பிராமணரின் வேதவேள்வி, யாகங்கள் கரிகால்சோழனால் நிறுத்தித் தடைசெய்யப்பட்டு; "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அற முந்நீர் அடைந்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யார்கள் வயிறுபுக் காங்கு" என; சேதுப்பாலம் அமைக்கப்பட்டு இலங்கையில் இராவண தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அடக்கப்பட்டபிறகு அமைதியாக இருந்தது தமிழகம். சிலம்பில் மாடல மறையோன் மறக்கள வேள்வியைத் தவிர்த்து அறக்கள வேள்வியை ஓம்பும்படி செங்குட்டுவனை: "நாளைச் செய்குவம் அறம் என்னாது இன்றே செய்க" என வேண்டுகிறான். "சூழ்கலன் வேந்தன்" கரிகால் நோக்கில்: அறக்கள வேள்வி; "நான்மறை மரபின் நயந்தெரி நாவின், கேள்வி முடித்த, வேள்வி மாக்களை மாடலமறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி" எனச் சிலம்பு குறிப்பிடுகிறது. மூன்றாம் பதிற்றுப்பத்து-24ல் புலவர் கௌதமனார்(விசுவாமித்திரர்) செங்குட்டுவனை: ".. ..ஓதல், வேட்டல், அவைபிறர்ச் செய்தல், ஈதல்,ஏற்றலென நானுபுரிந் தொழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி............." எனப் பிராமணரை எதிர்த்த தமிழ் அந்தணரை; ஆதரித்ததாகக் குறிப்பிடுகிறார். ரிக்வேதம்:"சரஸ்வதி நதி சிதைந்து / மறைந்துபொனது" என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காண்கிறோம். பிரமாவின் மனைவி என சரசுவதி குறிக்கப்படுகிறாள்; சரசுவதி என்பது அன்றைய அகத்தியனாக இருந்த தமிழன் விசுவ ஆ மித்திரனின் அவையினரான அறிவாளரைக் குறிக்கும். சந்திரகுப்தனின் தந்தை ஆட்சி செய்த சிந்து நாட்டை; படையெடுத்து வந்த எகிப்திய கிரேக்க மாசிடோனியன் அலெக்சாந்த வசிட்டனின் தலைமையில் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டனர். சிறிது காலத்துக்குப்பிறகு விசுவாமித்திரனுடனும் போரிட்டுத் தமிழ் அவையின் அறிவாளரையும் அவர்களால் பாதுகாக்கப்பட்ட அனைத்துத் தமிழ் நூல்களையும் கைப்பற்றிக் கிரேக்கத்துக்குக் கொண்டுசென்றனர் என அவனது வரலாற்றிலும் புளூடார்க்கின் குறிப்புக்களிலும் காண்கிறோம். "அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைமாரிபொழிந்து அலெக்சாந்தனை எதிர்க்குமாறு வலியுறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானியரும் தொல்லைகொடுப்போராக இருந்ததால் அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான்; சில ஆண்டுகளுக்கு முன்னர் எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதியிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிருந்தான்" எனக் குறிப்பிடுகிறான். வசிட்ட அலெக்சாந்தனும் அறிவாளரைக் கொன்றுவிட்டதாலேயே அன்றைய தொல்தமிழ்ப்பாடமரபினரும் பாடல்களும் தொடர்ச்சியில்லாமல் கைவிடப்பட்டுள்ளன. அத்தகையபாடல்கள் பின்னர் இயற்றப்படவே இல்லை. இப்படித்தான் நமது சரசுவதி நதி மறைந்துபோனது. சரசுவதி நதி-அறிவாளர் அவை; சிதந்து மறைந்துபோனது. ஒவ்வொருமுறையும் இந்தத் தமிழ் அவை உருவாக்கப்பட்டு வளர்ந்து உச்சநிலையை அடையும்போதெல்லாம் அந்நியரால் தாக்கப்பட்டு; புலவர்களையும் நூல்களையும் கைப்பற்றிஸ் சென்றுள்ளனர் என்பதைச் சிலபாடல்கள் உணர்த்துகின்றன. ரிக்வெதம்: 3-33.2: விஸ்வாமித்திரர், கௌ/குசிகரின்மகன். 3-1.23: இவரதுபரம்பரையினர் தலைமுறை தலைமுறையாக (சூரிய குலத் அறிவாளரை)'அக்னி'யைத் தூண்டிவிட்டு(வலிமைப்படுத்தி)க் கொண்டிருந்தனர். 3-62.10; காயத்திரி மந்திரம் இவரால் இயற்றப்பட்டது(பிராமணர் தினமும் பாராயணம்செய்வது); பாரதவர்களின்(இக்ஷவாகு) குடும்பத்தைச் சேர்ந்தவர். விஷ்ணுபுராணம்: விஸ்வாமித்திரரை மன்னன்(சந்திரகுப்தனின் தந்தை போரசின்)புரூரவசுவின் வழித்தோன்றலான காதியின் மகன் எனக் குறிப்பிடுகிறது; ஹரிவம்சமும் உறுதிசெய்கிறது. அந்நிய அலெக்சாந்த வசிட்டனின் வரவுக்குப்பின்னர் வசிஷ்டன் மற்றும் வசிட்டனின் மகன் சமதக்கினியும் கைப்பற்றிக்கொண்ட இக்ஷவாஹு(சோழர்) பரம்பரைக்கு; புரோகித குருவாக விசுவாமித்திரர் முயன்றதாக மாபாரதம் ஆதிபருவத்திலும் காணப்படுகிறது. கட்டுப்பாடுமிக்க தொல் அறிவாளர், வேளிர் படை; அகத்தியன் கரவேல், கரிகால் மற்றும் பாவையின் ஆசியோடு; செங்குட்டுவனுக்கு வழங்கப்பட்டு(பதிற்-ப 81/13-18) பரசுராமனின் வேள்வி மோகம் கொண்ட சுரரும், ராச்சச சிங்களரும் அடக்கப்பட்டனர் என்பதே(பரி பா: 17)வரலாறு. அனைவரும் வெல்லப்பட்டு இந்திரவிழா நடத்தப்பட்டதைத் திரித்து ரிக்வேதத்திலும் இதிகாசங்களிலும் மறைக்கப்பட்ட வரலாற்றைச் சிலம்பும் மணிமெகளையும் வெளிப்படுத்துகின்றன. விழாவுக்கு " ஓங்குயர் மலையத்து அருந்தவன்" பொதியை அகத்திய கரவேலை-அழைத்தபோது; இந்திரவிழா நடத்தும் முறைகுறித்து; மணிமேகலையின் தொடக்கத்தில் குறிப்பிடுவது: "வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம் (கரிகால்சோழனின்) விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் (துயரத்தை நீக்கிய) மடித்த செவ்வாய் வல்லெயிறு இலங்க (சேனைத்தலைவன் செவ்வேலின் வேளிர்) இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் (குன்றம்குமுரிய உரையுடன்) தொடுத்த பாசத்துத் தொல்பதி நகரைப் (நீதிநெறிகளால் மக்கள் மனதை) புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் (சுத்தப்படுத்தும்அறிவாளர்) மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் (ரிக் -ல் வருணப்பாகுபாட்டுடன்) ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்க" என (புருஷ சூத்தத்திலும்) "திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி (இவ்விழா இடம்பெற்றுள்ளது) வானமும் மாரி பொழிக; மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக"எனச் சோழனின் துயர்தீர்த்த சேனைத்தலைவன் செவ்வாய் செங்குட்டுவனின் வேளிர்; குற்றவாளிகளைத் தடியும் அறிவாளர்; தலைமைகளுக்கும் சிறப்புச்செய்ய வேண்டுகிறான். இவ்விழாக்களே சரஸ்வதி பூசை ஆயுத பூசை எனக் குருதிப்பலிகளற்றுக் கொண்டாடப்படுகின்றன. சிலப்பதிகாரமும் இதனை: "அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில், 'உரைசால் மன்னர் கொற்றம் கொள்க'என, மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட தன்நருங் காவிரி, தாதுமலி பெருந்துறை, புண்ணிய நல்நீர் பொற்குடத்து ஏந்தி மண்ணகம் மருள,வானகம் வியப்ப, வின்னவர் தலைவனை விழுநீர் ஆட்டி..."; "வின்பொரு பெரும்புகழ்க் கரிகால்வளவன் தன்பதங் கொள்ளும் தலைநாள் போல... ..இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து(வருணப்பாகுபாட்டுக்குள் அடங்காத) அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப.." எனக்குறிப்பிடுகிறது. ரிக்வேதத்திலும்; பிராமணன் ராசன்யன் வைசியன் சூத்திரனைப்புகுத்தியோர்; ஆரிய கிரேக்க புலத்தியச் சிங்களராகவே இருத்தல் வேண்டும். புறம்-135,136ல்: "வேண்டார் உறுமுரண் கடந்த ஆற்றல் பொதுமீக் கூற்றத்து நாடுகிழவோன்" செவ்வேல் செங்குட்டுவனிடம்; "யாழ்ப்பத்தர் புறம் கடுப்ப; இழைவலந்த பஃறுன்னத்து(சிங்களர்) இடைப்புரை பற்றிப் பிணிவிடாஅ ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த பேஎன்பகையென ஒன்று எங்கோ? உண்ணாமையின் ஊன்வாடித் தெண்ணீரின் கண்மல்கிக் கசிவுற்ற என் பல்கிளையடு பசியலைக்கும் பகைஒன் றெங்கோ? அன்னதன்மையும் அறிந்துஈயார் 'நின்னதுதா'என நிலைதளர; மரம்பிறங்கிய நளிச்சிலம்பின் குரங்கன்ன புன்குறுங்கூளியர்; பரந்தலைக்கும் பகை ஒன்றெங்கோ? 'ஆஅங்கு எனைப்பகையும் அறியுனன்ஆஅய் என .. .. .. ..உண்குவம் பெரும நீ நல்கிய வளனே" என: சிங்கள யாழ்ப்பத்தரின் இயல்பையும் செங்குட்டுவனின் ஈகைப்பண்பையும்; கரிகால் இராமனுக்குக் குரங்குகளாக; இலங்கை சென்று சிங்கள இராவண புலத்தியரை அடக்கியதையும் காண்கிறொம். இராமாயணப் போரில்; செங் குட்டுவன்: இலக்குவன்-அஞ்சனையின் மைந்தன் அனுமன்; சேதுநாட்டு(கலிங்கம்-இன்றைய ஒடிஸ்சா) மன்னன் கரவேலன் -கண்ணனின் அனைத்து வேளிரும்; குரங்குகளாக; அங்குள்ள கற்களால் " சேதுப்பாலம்" ; “இராமர்பாலம்” கட்டியதை; மணிமேகலை: 17:11-12ல்: " நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரும் முந்நீர் அடைத்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யார்கள் வயிருபுக் காங்கு" என; இலங்கைக்கு ஓடிய புலத்திய இராவண நெடுஞ்செழியனிடமிருந்து ஆரத்தை மீட்டுவரப் பாலம் அமைத்ததை; துயரமடைந்த இராமன்-நெடியோனுடன் இலக்குவன்-செங்கோடன்-அனுமனுடன் குரங்குகளாக; பெருங்கற்களைக் கடலில் போட்டுப் பாலம் அமைத்ததைக் காண்கிறோம். இவர்களை; மாபாரதத்தில் பீஷ்மனும் குறிப்பிடுகிறான். மாபாரதம்-சாந்திபருவம்-அத் 46: கண்ணன்(கரவேல்)உருவத்தைப் படிமவடிவில் பீஷ்மன்: "ஆயிரம் தலை முகம் கை கால் களுடைய; புத்திக்கும் இந்திரியங்கற்கும் புலப்படா உருவுடைய, உலகங்களுக்குப் பதியான அந்த ரகஸ்யரூபியான பகவனுக்கு நமஸ்காரம்; சடைமுடியுள்ள, தடியுள்ள, தொங்கும் தொந்தி தொப்பை வயிறுள்ள, கமண்டலத்தை அம்புக்கூடாகக் கொண்ட பிரம ரூபியான(கரவேல்-கண்ணன்) பகவானுக்கு நமஸ்காரம்"; என சடைமுடி, தடி, தொங்கும் தொந்தி தொப்பை வயிறு, கமண்டலம், அம்புக்கூடு என ஒவ்வொன்றும் படிம வடிவில் கண்ணனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட படைகளாகக் குறிப்பிடுகிறான்.இப்படை; பிரமா- பெருமாலான விசுவாமித்திரனால்; திருசங்கு எனவும் சத்தியவிரதன் எனவும் இடம்பெற்ற கண்ணன்- கரவேலுக்கு; வேளிர் அறிவாளர் படையின் துணையுடன் அந்தர-ஆந்தரத் திருப்பதியில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுத்துக் குடியமர்த்தினான். இதிகாசங்களுள்; இராமகீர்த்தனம் இராமாயணத்தில்; கரவேலால்: இப்படை கரிகாலுக்குக்கொடுக்கப்பட்டு, அனுமனுடன் மூவரும் தலைவராக; (முன்னர் ஆ/அந்தர தேசம் இப்போது)ப்ரம்ம (தேசம்) ஸ்தானம்- திருப்பதியில் விசும்பு செல் இவுளி-வேளிர் அறிவாளர் படை; செவ்வேல் செங் குட்டுவனிடம்: “நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை” எனச் சேக்கிழார்குறிப்பிட்ட மும் முனைப் படை; (கிருத்துவத்தில் சிலுவை)கரவேலன் கரிகால் பாவை என மூவரால் செவ்வேலிடம் ஒப்படைக்கப்பட்டன. செங்கோட்டையின் செங் கோட்டுப்புலி - ஐ அப்பன்-குட்டுவனை எதிர்த்துப் போரிட்டோராகச் சிலம்பதிகாரத்தில் உள்ளோர்: "உத்தரன், விச்சித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம், தன்தமிழ் ஆற்றல் காண்குதும்' என(வெஞ்சினமுரைத்த குட்டுவன்) நிலந்திரைத் தானையொடு நிகர்ந்து மேல்வர.. ." “காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப"(பெரும்பாணாற்றுப்படை: அடி 420) என அழிப்புவேலைக்கான கடவுளராகக் குறிக்கப்படுவோருள் சிங்கன் என இலங்கையின் சிங்களனைக் காண்கிறோம். இதனைப் பிற்காலச் சித்தரான குமரகுருபரர் "சிங்கமுகனை வென்று வாகை முடித்தோய்" என; "பூமேவுசெங்கமல.. ." எனத்தொடங்கும் மிகநீண்ட பாட்டில் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் குறிப்பிடும்; "பாசன்டைச்சாத்தன்"; “சர்வ பாசண்ட பூஜகோ” வான கரவேலன்-கண்ணனே; வேளிர் அறிவாளரை ஒன்று படுத்திய வேலாயுதன்-செங்குட்டுவனால்; ஆயுத பூசைக்கும், சரஸ்வதி பூசைக்கும் வழியமைத்தவன். கிருத்துவத்தின் புதிய ஏற்பாட்டிலும் முதல் அதிகாரத்தில் இதேதகவல் உள்ளதை இன்றும் காணலாம். சிங்கள மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம், புத்தசாதகக் கதைகள் உட்படப் பலவும் பொய்யானவை. இவற்றை நம்பியே புத்தனின் வரலாற்றைப் பாலி மொழியில் பெயர்த்தனர். இவையனைத்தும் தமிழனான கரிகால்சோழன்-புத்தனை மறைப்பதற் காகவே எழுதப்பட்டவை. புத்தசாதகக்கதை 177,516,528ல்: 'அனுமன் (செங்குட்டுவனால்) சிங்க(ள)ம் தீயிட்டு அழிக்கப் பட்டதால்; குரங்குகளைக் கொன்று; அதன் மாமிசத்தைப் பிராமணர் உட்பட சிங்களர் அனைவரும் உண்டனர்' எனக் குறிப்பிட்டு வரலாற்றையும் மாற்றி எழுதினர். மேலும் "தனக்கு 500 ஆண்டுகள்வரை சிலைவைத்து வணங்கக்கூடாது எனப் புத்தன் ஆணையிட்டதாகவும்" எழுதிவைத்தனர்; அதாவது கரிகால்வளவன் பிறப்பதற்கு 400 ஆண்டுகற்கு முன்னரே பிறந்தவன் புத்தன் எனப் பொய்யுரைத்தனர். அதனாலேயே பட்டயங்களிலோ கல்வெட்டுக்களிலோ கரிகால்வளவனுக்கு முன்னரும் பின்னரும் வரலாறற்ற நாடாகப் பாரதம் மாற்றப்பட்டது; தமிழ் நூல்கள் சங்கப்பாடல்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டன.

No comments:

Post a Comment