வன்புணர்வுக்குத் தண்டனை தேவைதான்
வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு இல்லாத கடந்த பல நூற்றான்டுகளாக எத்தனைபேர் தண்டனை பெற்றனர் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் 2000 ஆண்டுகற்கு முன்னர் ஒரு தமிழ்ப்பெண்ணை; அந்நியன் ஒருவன் கெடுத்தபொது சோழநாடே கொதித்தெழுந்து; கெடுத்தவனை இமையம்வரை துரத்திச் சென்றதோடு அவனது நாடான எகிப்துக்கும் ரோமுக்கும் சென்று நீதியை நிலைநாட்டிய தகவல்கள் நமது தொல்தமிழ்ப் பாடல்களில் இருப்பதை எந்த வரலாற்றாளராவது வெளிப்படுத்தினார்களா? தங்களது உயிரையும் மதியாது இறந்தோர் எத்தனைபேர் என்பது தெரியுமா? எத்தனை புலவர்களும் கணியர்களும் அலெக்சாந்தனால் கடதிச்செல்லப்பட்டார்கள் என்பது தெரியுமா? கரிகால்சோழனாலும் செங்குட்டுவனாலும் மீட்டுவரப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவையே கலித்தொகையும் பரிபாடலும் என்பதாவது தெரியுமா? திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற திருச்செந்தூர்; பரிபாடல் பாடல்களில் ஏன் இடம்பெறவில்லை என்பதாவது தெரியுமா? பரிபாடலில் 70 பாடல்களில் 22 மட்டுமே கிடைத்துள்ளன; காணாமல்போன 48ப் பாடல்களில் என்ன தகவல்கள் இருந்திருக்கும்? ஒரு விழுக்காடாவது இன்றைய ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டதா? திருச்சந்தூர் மட்டுமல்ல வேடசந்தூரும் அன்று சந்தூர்களாக; இராவணனையும் இராக்கதரையும் அடக்கி; அவனுக்கு ஆதரவாக வந்த இந்திரனை விரட்டி; பின்னர் சந்து = சமாதானம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என்பதாவது தெரியுமா? சுரன் யார், சூரசம்ஹாரம் ஏன் நடந்தது, வெளிப்படுத்தும் பாடல்கள் எங்ஙே போயின? அமைதி நிலைநாட்டப்பட்ட பிறகும் தொல்லைகொடுத்த இந்திரன் யார் என்பதாவது தெரியுமா? இறையனார் கலவியல் ஏன் எழுதப்பட்டது? எந்தப்பெண்ணின் காதலையும் எந்த இந்திரனால் கெடுக்கப்பட்ட பெண் என்பதையும்; இறைவனே கலவுகொண்ட ஏமாற்றப்பட்ட பெஞையும் அவளது காதலையும் களவுப் புணர்வையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என இலக்கணம் வகுத்த இறையனாரையும் தேடுங்கள்! கண்டடைவீர்கள்!
நற்றிணை:290:
"வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஒய்நடை முதுபகடு ஆரும் ஊரன்
தொடர்புநீ வெஃகினை ஆயின் என்சொல்
கொள்ளல் மாதோ முள்எயிற் றோயே;
நீயே பெருநலத் தையே அவனே
'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே"
அகநாநூறு 36 புலவர் மதுரை நக்கீரன்:
" பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து
கொடிவாய் இரும்பின் கோள்இறை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப்பாய்ந் தெழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறிடு கதச்சேப் போல; மதம்மிக்கு
நாள்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர;
வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்;
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தயொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே;
கொய்சுவற் புரவிக் கொடித்த்தேர்ச் செழியன்;
ஆலங் கானத்து அகந்தலை சிவப்பச்
சேரல், செம்பியன், சினங்கெழு திதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நாரரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநனென்று;
எழுவர் நல்வலம் அடங்க; ஒருபகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக்
கொன்றுகளம் வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே".
அகம் 246:
"பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு ஆரல் கள்வன் ஆக
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலிநீர் அகல்வாய் யாணர் ஊர!
போதார் கூந்தல் நீவெய் யோளொடு
தாதார் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு
ஆடினை என்ப நெருநை;அலரே
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
மீழிசை முரசம் பொருகளத்து ஒழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே".
அகநாநூறு 212 பரணர் :
"தா இல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. ..
அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. .
விரவுமொழித் தகட்டூர் வேண்டுவழிக் கொளீஇ
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பொறாஅது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முனைப்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய .. ..ஆனாது
எளியள் அல்லோட் கருதி
விளியா எவ்வம் தலைத்தந் தோயே" என செங்குட்டுவன் செயல்பட்டதைக் காண்கிறோம்.
நற்றிணை10:
"அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல்நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர .. ." என.
தூதுசென்ற புலவர் பரணர்: 247ல்:
" .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ
நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும்
நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல்
விருந்திரை கூடிய பசலைக்கு
மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" என வேண்டுகிறார். அவனை நம்பி; ஓடிவிட்ட பாவையை மறுத்து; வழக்கு மன்றத்தில் முசுகுந்தன் மன்றாடியதைக்கண்டு வருந்தும் இளஞ்சேட்சென்னியை 184ல் காண்கிறோம்:
" பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ அறிவுடை யீரே;
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணிவாழ் பாவை, நடைகற் றன்னஎன்
அணியியற் குறுமகள்; ஆடிய
மணிஏர் நிச்சியும் தெற்றியும் கண்டே" என.அவளது பாதுகாப்பு; பாரிக் குன்றின் பாதுகாப்பை ஒத்தது என; 253ல்:
" புள்ளுப்பதி சேரினும்; புணர்ந்தோர்க் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து
எனவ கேளாய் நினையினை நீநனி
உள்ளினும் பனிக்கும் ஒள்இழைக் குறுமகள்
பேர்இசை உருமொடு மாரி முற்றிய
பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி
பலவுஉறு குன்றம் போல
பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே" எனக் கபிலன் குறிப்பிடுகிறான். பொய்நடத்தையால் ஏமாந்த சோழருக்காக கடிந்துரைக்கப்பட்டதைக் குறிப்பிடும் மருதன் இளநாகன்- 283ல்:
" ..வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்குதிரை
முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தொன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே" எனக்குறிப்பிடுகிறான்; மேலும் இழிநடத்தையைப் பாவையிடம் விளக்குவதாக; 290ல் :
"... .. ... .. முள்எயிற் றோயே;
நீயே பெருநலத் தையே அவனே
'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே" ஆண்மகனல்ல எனவும்;. 291ல்:முள்ளுர்த் துவன்றிய ஆரியர்க்கு; ஆ இனம் கைப்பற்றியதனால் பாவை கெட்டழிந்ததாகச் சோழன்சென்னிக்கு கபிலன் தகவல்கொடுக்கிறான்.
".. .மாஇரு முள்ளூர் மன்னன் மாஊர்ந்து
எல்லித் தரீஇய இனநிரை;
பல்ஆன் கிழவரின் அழிந்தஇவள் நலனே" எனக்குறிப்பிடுகிறது. சுற்றத்தைப் பிரிந்த பாவையையும் கரவேலைப் பழித்த வனின் இழிவும் வெளிப்பட365ல்;
".. .."கல்வயற் படப்பை அவன்ஊர் வினவிச்
சென்மோ? வாழி தோழி பல்நாள்
.. .வான்தோய் மாமலைக் கிழவனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே" என. இயற்றியவர் கிள்ளி மங்கலம் என்னும் ஊரைச்சேர்ந்தவர்; சோழன் கிள்ளி யார்?
நற்றிணை15ல்:
"முழங்குதிரை கொளீஇய மூரி எக்கர்
நுணங்குதுகில் நுடக்கம் போல கணம்கொள .. ..
பூவின் அன்ன நலம்புதிது உண்டு
நீபுணர்ந் தனை.. ..
மாசுஇல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட் டாங்கு
சேனும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ்ஊரே"என முசுகுந்தனால் கெடுத்துக்கைவிடப்பட்ட பாவையையும்; முசுகுந்தனுக்குப் பிறந்த மைந்தன் செங்குட்டுவனையும் குறிப்பிடப்படுகின்றனர். அகநாநூறு 212 ல் பரணர்:
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. ..
அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்
பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. ." என்கிறான்.
இந்த்ச் சோழநாட்டுப்பெண்ணின் துயரத்தையும் முடிவையும் அறிய விரும்புவோர் தொல்தமிழ்ப்பாடல்களில் உள்ள கலித்தொகைப் பாடல்களையும் அதற்கு உரை செய்த நச்சினார்க்கினியரின் உரையும் கண்டு; அப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்தவன் யார் என்பதை வெளிப்படுத்தலாம்.
No comments:
Post a Comment