Monday, 20 October 2014
கால்டுவெல் மற்றும் அயோத்திதாசர் சிந்தனைகள்
Tuesday, 14 October 2014
சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!
சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!
மேரியர்களே - மௌரியர் எனப்பட்டனர்; சந்திரகுப்தன் மௌரியனல்ல! சத்தியவதி என்ற ஹெலனுக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பிம்பிசாரனே மௌரியன்; ஆரியனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பெண்ணே ஹெலன் என்ற சத்தியவதி. அவளுக்குப் பிறந்த பிம்பிசாரன் எனப்பட்டவனை ஆரியரும் யூதரும் ஏற்கவில்லை. பிம்பிசாரனின் மகனான செங்குட்டுவனை ஏசுவாக ஏற்றுக்கொண்டோரும் பிம்பிசாரனை ஏசுவின் மதத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே ஓரிறைக்கொள்கையை அல்லாவை அல்லஃசாந்தாவை ஏகைறைவனாகவும் தன்னை இறுதி இறுதி இறைத்தூதனாகவும் அறிவித்து அனைவர்மீதும் போர்தொடுத்தவன் முகம்மது எனத்தெரிகிறது! ஏக் ஆம் பரன் எனத் தமிழில்[?] அவனைக் குறிப்பிடுகின்றனர். அந்த மாம்பழத்தின் மாங்கொட்டையே பிளக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் பருப்பு முகம்மதியரால் காட்டப்படுகிறது[!?!?]
சு என்ற முன் ஒட்டு சேர்ந்த பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில: சு பிரமன்= சுப்ரமன் -சுப்ரமண்யன்; சு தாசன்= சுதாசன்; சு வர்க்கம்= சுவர்க்கம்; சு தந்திரம்=சுதந்திரம்; சு குமார்= சுகுமர்; சு கன்யா= சுகன்யா; சு ப்ரபாதம்= சுப்ரபாதம்; சு மித்ரா= சுமித்ரா; சு மதி= சுமதி; சு மேரு= சுமேரு. இவற்றில் மேரு என்பதாக நமது புராண இதிகாச வேதங்களில் பல இடங்கள் குறிப்பிடப்படுகின்றன! அவற்றுள் நமது உத்தெரமேரு என்ற ஊரும் ஒன்று! திருநெல்வேலியிலும் ஆந்திரத்திலும்கூட மேரு இருந்துள்ளது! இவற்றுக்கெல்லாம் மேலானதாக அல்லது தலைமை இடமாக இருந்த பகுதியே சுமேரு; அதுவே அன்றைய அலெக்சாந்திரியா எனவும் துருவம் எனவும் நெற்றிக்கண் எனவும் குறிக்கப்பட்ட இமையமலையின் அடிவாரத்தில் மேற்கு எல்லையில் உள்ள பகுதி; சுமேரு எனப்பட்டது!
சுமேரியர் குறித்து சுமேரியநாட்டில் பல பழமையான புராணங்களும் உள்ளன! நமது நாட்டுக்கும் சுமேரியநாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படக்காரணமே பராசரன் எனப்பட்டவனே; ஆயினும் இந்தப்பராசரனை எவரும் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவனுக்கும் மச்சகந்தி - பரிமலகந்தி - சத்தியவதி எனப்பட்ட பெண்ணுக்கும் இலங்கைத்தீவில் புணர்ப்பு உண்டானதால் பிறந்தவனே மாபாரதத்தையு எழுதியதோடு அன்றைய வேதங்களையும் தொகுத்த வியாசன்! அடுத்து அலெக்சாந்தா என்ற பெயரில் மூவர் இங்குவந்துள்ளனர். நந்தர் எனப்பட்டனர் எனத்தெரிகிறது! மேலும் அவர்களுக்குத் தென்னகச்சோழருடன் ஏற்பட்ட உறவுக்குக் காரணமானவனே அல்லஃநந்தாவின் வளர்ப்புமகனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன்! பிம்பிசாரனே பலபெயர்களில் வேத இதிகாச புராணங்களிலும் இடம்பெற்றுள்ளான். அவனது மகனே சுப்ரமன்= சுப்ரமணி எனப்பட்ட செவ்வேல் செங்குட்டுவன் கந்தன்! ஆயினும் இவனே அஜாதச்சத்ரு எனவும் உள்ளான். அசோகன் சங்கரன் எனவும் காணப்படுகிறான்! குஜரத் முதல் வங்கத்தின் கிழக்குப்பகுதிவரை அடங்கியதே அன்றைய தமிழகமாகும். அன்றைய தென்னகம் என்பது தமிழைத்தாய்மொழியாகக்கொண்டது. அதன் வட எல்லையாக விந்தியமலையே இருந்தது. மதராஸ் ராஜதானி எனப்பட்டதும்; அன்றைய கலிங்கத்தின் காரவேலன் ஆட்சிசெய்த இன்றைய ஒடிஸ்சாவையும் உள்ளடக்கியதே! மேற்கண்ட அலெக்சாந்தருடன் வந்துசேர்ந்த ஆரியரும் திராவிடரும் வந்தபின்னரே வடவேங்கடம் தென்குமரி ஆகியவை தமிழகத்தின் எல்லைகளாகச் செங்குட்டுவனின் காலத்தில் அமைக்கப்பட்டன. எஞ்சிய பகுதிகள் திராவிடருக்கெனவும்; அதற்கும் வடக்கே உள்ள பகுதிகள் வடவர் எனப்பட்டோருக்கும் செங்குட்டுவனின் தந்தை சங்கரனைச்சார்ந்தோருக்கும் அன்றைய செங்குட்டுவன் - அசோகனாலேயே கொடுக்கப்பட்டன! ஆதிசங்கரன்- செங்குட்டுவன் தன்னைத் தந்தைவழியில் திராவிட சிசு எனக் குறிப்பிட்டிருந்தபோதிலும் தமிழனாகவே தனது தாயைச்சார்ந்து தாய்மாமன் கரிகால்சோழனுடன் நந்தர்களுக்கு எதிராக அநந்தனாக வாழ்ந்தவன் செங்குட்டுவ அசோக அஜாதச்சத்ரு. நமது தத்துவங்களின் முன்னோர் சங்கரனையும் ஆதிசங்கரனையும் பிரித்தறிய இயலாதபடி குழப்பி பெயர்களையும் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரிளபட்டர் என்பவரே செங்குட்டுவன் என்பதை நம்மால் நிறுவமுடியும்! செங்குட்டுவனது தந்தை சங்கரன்- பிம்பிசாரன் குறித்த வரலாற்றை அறிய; சுமேரியரின் வரலாற்றில் உள்ள நமது வரலாற்றைப் பிரித்தெடுத்தாலே பெறமுடியும்! காரணம் செங்குட்டுவனது தாய்; சுமேரியநாட்டுக்குச் சென்று; பிம்பிசாரனான - கில்காமேசின் மகனே செங்குட்டுவன் என்பதை நிறுவப் போராடிய தகவல்கள் அங்கு இருக்கக்கூடும். பல ஓவியங்களும் புடைப்புச்சிற்பங்களும் சிற்பங்களும் இதனை உறுதிப்படுத்துவனவாக அங்கு உள்ளன! கரிகால்சோழனின் தங்கை தனது சிலம்புபோன்ற ஒரு பொருளுடன் சில ஆட்சியாளரின் முன்நிலையில் தனது மகனுடன் இருப்பதாகவும் அவை உள்ளன. மகனை மடியில் வைத்திருப்பதுபோலவும் பல உள்ளன! எனவே மேரு எனப்பட்ட பகுதிகளுக்குத் தலைமை இடமாக சுமேரு- அன்றைய சுமேரியநாடு இருந்திருக்கக்கூடும் என்பதை நிறுவியாகவேண்டும்! இதுகுறித்துத் தகவல் அறிந்தோர அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்! வரலாறற்ற தமிழனுக்கு வரலாறு உள்ளது என்பதை நிறுவியாகவேண்டும்!
Friday, 10 October 2014
உலகப்படைப்பு வளர்ச்சி கபிலர் சாங்கியம்
உலகப்படைப்பும் வளர்ச்சியும் - கபிலர் சம்கியம் - சாங்கியம்!
இந்திய- உலகத்தமிழரின்ரலாறு மிகநீண்டது!
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திரகுலப் பாரதர்க்கும் வசிட்டகுலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனவும்;(இந்தத் திரித்சூக்களே சேரலத்தின் திருசூரில் பரசுராமனால் குடியமர்த்தப்பட்டவர்கள்) 8.96.13-14: "கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி(?) ஆற்றங்கரையில் இந்திரனோடு போரிட்டான்" எனவும்; காண்கிறோம். ஒடிஸ்ஸா=கலிங்கத்தில் இந்திர பரசுராம- பீஷ்மனுடன் போரிட்டதே காலிங்கனோடு கரவேல்= கண்ணன் போரிட்டதாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
கரவேலனின் [அ]ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிந்தோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது.
1. [அசோகன் பிறக்கக்காரணமான பரசுராமனால் கைப்பற்றப் பட்ட நகரைக் கைப்பற்ற] கலிங்கநாட்டுக்குச் சென்றான்;
2. [பரசுராமனை] சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படை கொண்டு தாக்கினான்;
3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று [முகரி]'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. [ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது.]
4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன;
5. [செல்யுக்கஸ்நிகந்தனின் ஆரியர் மற்றும் கோசர்] ராச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்;
6. [கங்கைநதி நீர் தெற்கே கலிங்கத்துக்குச் செல்ல] நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன;
7. [ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்] பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப் பட்டன; [கரவேலனின் அத்தையான பிருந்தாவின் மகளும் கரிகால்சோழனின் தங்கையுமான நல்லியற்பாவையை வஜ்ஜிரகன் எனப்படும் வச்சிரத்தடக்கையன் இந்திரன்- பரசுராமன் புணர்ந்து கெடுத்ததோடு அக்குழந்தையைக் கொலைசெய்யவும் முயன்றதால் குழந்தை செங்குட்டுன் கரவேலனால் பாதுகாக்கப்பட்டான்] கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது.
8. மகதம் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் [அலெக்சாந்தன்] நந்தனும் [துர்யோதன- பரசுராம] சதகர்னியரும் கைப்பற்றிச்சென்ற [சந்திரகொற்ற] தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத[அலெக்சாந்தன்?] மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சி செய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்;
9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்;
10. வட இந்திய[சிந்து]ப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்;
11. [இராவணன் மற்றும் அவனுக்கு ஆதரவான கேரள மற்றும் சிங்கள் மன்னர்கள் பத்துப்பேரான] தமிழ் மன்னர்களை வென்று [மற்றொரு அமண தீர்த்தங்கரர்] கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்;
12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை[இராவணனை] வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன;
13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI [குடதிசை மேற்குத் திசை - குடநாட்டு] குடபஸ்ரீயான செங்குட்டுவன் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துப் பாதுகாவலனாக சேனாபதியாக] உள்ளான்.
பிரகிருதியும் புருசனும்:- பிரகிருதியைச்சடப்பொருளாகவும் புருசனை முழுமுதற்பொருளாக - ஆண்டவனாகவும் கொண்டு அனைத்து உலகத்தத்துவங்களுக்கும் முதன்மையானதாகவும் அடிப்படையாகவும் விளங்கிய கபிலரின் சம்கிய - சாங்கிய தத்துவநூல் சிதைத்து அழிக்கப்பட்டுவிட்டது. அனுமுதற்கொண்டு அவற்றின் சேர்க்கைகளும் அதன் விளைவுகளும் குறித்த; மற்றும் ஆண் பெண் சேர்க்கை அதன் விளைவுகள் என அனைத்தையும் விவரிக்கும் நூலாக இருந்ததெனப் பலரது பிந்தைய நூல்களில் அறிய, உணர முடிகிறது.
கரிகால்சோழனின் தங்கையே பிரகிருதியாகவும் அப்பெண்ணைக் கெடுத்துக் கருவுறச்செய்து; அக்குழந்தையின் தந்தை தானே என அறிவிக்க மறுத்து ஓடிவிட்ட ஒருவனைப் புருசனாகவும் உருவகித்து உலகத்தோற்றமும் மனித இனமும் அப்போதுதான் துவங்கியது என்ற கட்டுமானத்தை நிறுவியுள்ளனர். காரணம் அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அந்தப் புருசனின் முக அமைப்பையும் பொன்னார் மேனி நிறத்தையும் கொண்டிருந்ததாகும். புருசன் ஒரு அந்நியன்; ஆனால் அப்பெண்ணோ ஒரு தமிழச்சி 'கானக்காக்கையின் கடும்சிறகு ஏய்க்கும்' நிறத்தவள்.
அப்பெண்ணே விவிலியத்தில்; கடவுள் அருளால் கருவுற்றுக் கர்த்தனை ஈன்றதாகக் காண்கிறோம்!
இறையனாரால் படைத்தளிக்கப்பட்ட இறையனார் களவியல் நூலும் இதனையே வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தவே அந்நூல் இறைவனால் படைக்கப்பட்டது என்றனர்! முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம்.
வஜ்ரநந்தி - வஜ்ரகரனின் காலத்தில் கூடலில் அமைக்கப்பட்ட சங்கத்தில் இயற்றப்பட்டதே அந்நூல்; வஜ்ரகரனே இறையனாராகவும் அவரே படைத்ததாகவும் குறிப்பிட்டு; அவருக்காகப் படைத்த நக்கீரரும் முக்கண்ணானால் எறிந்து சாம்பலாகிவிட்டார் கடவுள் தனது சொந்த விருப்பை நிறைவுசெய்ய விரும்பியதை மறைக்க; உலகத்தோற்றத்தின் கதை புகுத்தப்பட்டுவிட்டது.
கபிலரின் பாடல்களில் அப்பெண்ணின் துயரங்களே வெளிப்படுகின்றன. பரணரும் சலைத்தவரல்ல. இறையனாரின் இருப்பிட்த்துக்கே சென்று அப்பெண்ணுக்காக வாதாடிய பாடல்களும் பல உள்ளன. அப்பெண்ணின் துயரை எடுத்துரைக்கும் மேலும்பலபாடல்கள் காணாமைல் போய்விட்டன; ஆயிரத்துமேற்பட்ட பால்ல்களே எஞ்சி யுள்ளன. நற்றிணைப்பாடல்களில் காணாமல்போனதாகக் குறிக்கப்படும் வரலாற்றுடன்கூடிய சிதைத்துநீக்கப்பட்ட-234ல்:
.. .. .. .. ..சான்றோர் வருந்திய வருத்தமும், நுமது
வான்தோய் வன்ன குடிமையும், நோக்கி,
திருமு/மனி/ணிவ ரன்றும் குன்றம் கொண்டிவள்
வரும/முலை ஆகம் வழங்கினோ நன்றே: அஃதுஆன்று
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல்தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே." எனக்காட்டப்பட்டுள்ளது; இப்பாடலில் முதலில் 1(அ)2 அடிகளை நீக்கி; பிறகு பாடலையே நீக்கிவிட்டார்களோ? களவியல் காரிகை பதிப்பித்த வையாபுரிப்பிள்ளை அவர்களும் இதனை நற்றிணைப் பாடலாகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நச்சினார்க்கினியரால் இறையனார் அகப்பொருள் நூலுக்கு உரைசெய்ததில் களவியல் 23ஆம் பாடலுக்கு விளக்கமாக:
"நீர்நலும்முன்னாள் எல்லையும் ஒருசிறை
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர்இறை வளைத்தோள் நின்தோழி செய்த
ஆர்உயிர் வருத்தம் களையாயோ என
எற்குறை உறுதிர் ஆயின் சொற்குறை
எம்பதத்து எளியள் அல்லள் எமக்குஓர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும
ஆய்கொள் மிளகின் அமலைஅம் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புற நாநூறு தைவரும்
மாஞ்சுசூழ் மணிவரை மன்னநன் மகளே" எனக்காட்டப்பட்டுள்ளது!
Sunday, 5 October 2014
குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!
குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!
வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது.
பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர்.
அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள்.
ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது"
சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான்.
பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.
"ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன.
ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர்.
சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது.
கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்!
கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை.
விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர் http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!
Wednesday, 30 April 2014
பரசுராமன்
பரசுராமன்
Thursday, 13 February 2014
பாண்டியர் இருந்தனரா? கல்வெட்டுக்களில் பாண்டியர் இல்லை!
Chandrasekaran Arumugam
பெண்ணே பெண்ணே வரலாற்றை நம்பாதே!
பாண்டியர் இருந்தனரா? கல்வெட்டுக்களில் பாண்டியர் இல்லை!கரவேலனின் கல்வெட்டு புவனேஸ்வரில் உதகிரிமலையில் காதிகும்பா [காதி என்போரே கரவேலனின் முன்னோர்; காதியின் மகனே விசுவாமித்திரர் எனப்பட்ட பத்ரபாகு முனிவர்; வசிட்ட அலெக்சாந்தனுக்கு எதிரானவர்= சானக்கியர்= கவுடல்யர் எனப்பட்டவரும் அவரே. சந்திரகொற்றனையும் கரவேலனையும் வசிட்ட அலெக்சாந்தன் தண்டனைவிதித்து நாடுகடத்தியபோது பாதுகாத்தவர்; கரவேலனுக்கு முன்னர் அகத்தியனாக இருந்தவர். அகத்தியர் குகை]யில் உள்ளது. அதில் 7ஆம் ஆன்டு கரவேலனின் செயலாக: கரவேலனின் ஒரு உறவுப்பெண்; வஜ்ரகனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது என உள்ளது. 8ஆம் ஆண்டில் [காஞ்சியிலும் ஒரு பாடலிபுத்தரம் உண்டு, அதனைப் பரசுராம முசுகுந்தன் கைப்பற்றி விதுரனையும் அவனது மகன் நகுஷ செழியனையும் அரசராக்கி ஆட்சிசெய்ய முயன்றான்] பாடலிபுத்தரத்தைத் தாக்கிக் கலிங்கப்போரில் கைப்பற்றிச் செல்லப்பட்ட தீர்த்தங்கரரின் உருவையும் அங்கம் மகதம் ஆகியவற்றின் செல்வங்களையும் உத்தரபத [விதுரனின் மகன் செழிய]மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சிசெய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான். 11ஆம் ஆண்டில் கேரள சிங்கள தாம்ரவர்ணர்களை வென்று தீர்த்தங்கரர்- [சேத்சென்னியின் மகன் கரிகால்சோழன்] சேதுபுத்ரரின் உருவை மீட்டான்.13ஆம் ஆண்டில் மகதத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளன. மேலும் கரவேலனுக்குப் பிறகு KUDAPASRI [குடதிசை மேற்குத்திசையின் குடப ஸ்ரீ குட்டுவன் அனைத்து நாடுகளையும் இணைத்துப் பாதுகாவலனாக இருப்பது குறிப்பிடப்படுகிறது.
கரவேலனின் கல்வெட்டிலோ; கரவேலனுக்குப் பிறகு குடபஸ்ரீ= செங்குட்டுவனால் பொறிக்கப்பட்ட [அசோகனால் பொறிக்கப்பட்டதாகக் கட்டமைக்கப்பட்ட] கல்வெட்டுக்களிலோ பாண்டியர் என்ற சொல் இடம்பெறவே இல்லை. அப்போது பாண்டியரோ பாண்டியநாடோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழுதி என்போரே விதுரனின் சந்திரகுல்த்தைச் சேர்ந்தவர்கள்; தாம்ரவர்ணர் எனக் குறிக்கப்பட்டனர்.
விதுரன் மற்றும் செழியனிடம் சோழநாட்டை ஒப்படைக்கக் காரணம் மிக நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் மிக முக்கியமான காரணம் வசிட்ட அலெக்சாந்தனுக்கு எதிராக விசுவாமித்திரனைக் கொண்டு குருதிப்பலியற்ற வேள்வியைச் செய்ததும், முசுகுந்த பரசுராமனால் கெடுத்துக் கருவுற்றா கரிகாலின் தங்கை பாவையையும் கருவில் உள்ள குழந்தையையும் அழிக்கவேண்டும் என்பதே.
கரிகால்சோழனுக்கு விதிக்கப்பட் தண்டனையை மணிமேகலை 20/22-25:
"மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்து;
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான்
மாதவன் மாற்கு இட்ட சாபம்
ஈர்ஆறு ஆண்டு வந்தது.."எனக் காவிரியின் இருகரைகளையும் சேர்ந்த பிளவுபடாத வலிமைமிக்க நாடுகளுக்கு இந்திரனாக முயன்ற கரிகால்சோழன் செய்த வேள்வியை உறுதிசெய்கிறது. நாட்டை ஆளும் உரிமையைச் சேது மன்னர்களிடமிருந்து பறிக்கும் எண்ணம் கொண்ட முசுகுந்த பரசுராமனின் செயல்களையும் உறுதிப்படுத்த மணிமேகலை சிறைசெய்காதை. முனிவன்மன்னனை வாழ்த்தல்:
"உயர்ந்தோங் குச்சி உவாகதி போல
நிலந்தோங்கு வெண்குடை மன்னகம் நிழல்செய
வேலுங் கோலும் அருற்கண் விழிக்க
தீதின் அருள்க நீ யேந்திய திகிரி
நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கினிதாக வாழிய வேந்தே!..........
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதொழி* நீயெனக்
கன்னி ஏவலின், காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யாரென நினை இ
நாவலந் தன்பொழில் நண்ணார் நடுக்குறக்.........
அரசாளுரிமை நின்பா லின்மையின்
பரசுராம நின்பால்வந் தனுகான்
அமரமுனிவன் அகத்தியன் தனாது
துயர்நீங்கு கிளவியின் யான் தோன்றளவும்
சுகந்தன் காத்தல் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பத்திக் கிட்டீங்
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள்" எனக் குறிப்பிடுகிறது.
இதில்,ஆட்சியில் இருந்த 'காந்தமன் [கரிகால்சோழன்] சத்திரியன் என்பதால் அவனை, பரசுராமன் அழிக்க முற்படக்கூடும், அதனால் ககந்தன் [விதுரன் அல்லது அவனது மகன் செழியன்] சத்திரியன்அல்ல என்பதால் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு நீங்கி பொதியைமலையில், தண்டனைபெற்று துயருற்று இருக்கும்,'மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்' கரிகால்சோழன்முன் தோன்றாமல் மறைந்து சென்றுவிடு,அங்கு பொதியைமலையில் வீற்றிருக்கும் [கரவேலன்] அகத்தியனின் துயரமான தண்டனைக் காலம் முடியும்வரை, நான் மீண்டும் இங்கு தோன்றும்வரை காத்திரு. அதுவரை இந்நகர் காகந்தி [கன்னிவனம்] என இருக்கட்டும்', என்று கூறுவதாக உள்ளது. நிறைகருவுற்ற கரிகாலின் தங்கை முசுகுந்த பரசுராமனால் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டாள். பெருமளவில் பாதிக்கப்பட்ட கரிகால்சோழனின் தங்கை பாவை தீர்த்தங்கரியானதாகப் பல பாடல்கள் உணர்த்துகின்றன.
சோழநாட்டைப்பெற்ற செழியனின் ஆட்சி குறித்த தகவல்கள் சிலப்பதிகாரத்தில் விரிவாக உள்ளன.
'கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பன்னின் பயன்களும்
காவலன் உள்ளம் கவர்ந்தன' என்று தன்
ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்து....... எனச் செழியனின் மனைவி வருந்துமளவுக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறது. மணிமேகலை 99- 104:
"எம்கோ வாழி என்சொல் கேண்மதி
நும்கோன் உன்னைப் பெறுவதன் முன்நாள்
பன்னீ ராண்டுஇப் பதிகெழு நல்நாடு
மன்னுயிர் மடிய மழைவள்ம் கரந்தீங்கு
ஈன்றாள் குழவிக்கு இறங்கா ளாகி
தான்தனி திண்ணும் தகைமையது ஆயது" எனக் குறிப்பிடுகிறது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதாகப் பல பாடல்கள் உள்ளன. கலித்தொகை 5 நெய்தல் கலி:
"வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்த
நல்ஆற்றின் உயிர்காத்து நடுக்குஅறத் தான்செய்
தொல்வினைப் பயன்துய்ப்ப துறக்கம்வேட்டு எழுந்தாற்போல்
பல்கதிர் ஞாயிறு பகல்ஆற்றி மலைசேர
ஆனாது கழுல்கொண்ட உலகத்து மற்றுஅவன்
ஏனையோன் அளிப்பான்போ லிகல்இருள் மதிசீய்ப்பக்
குடைநிழல் ஆண்டாற்க்கும் ஆளிய வருவாற்கு
இடைநின்ற காலம்போல்.. .. ..
மாலை என்மனார் மயங்கி யோரே" என வேள்வி விளைவுகளால்; ஞாயிறு-கரிகால் நாட்டைநீங்கினான்; பெற்ற அந்திரகுலச் செழியன்-'மதிசீய்ப்ப'; முசுகுந்த= பரசுராம பார்கவப் பார்ப்பனருடன் சேர்ந்து சதிசெய்ததையும் குறிப்பிடுகிறது. 'மாலை' என: முசுகுந்த= பரசுராம கூட்டம் நிகழ்த்திய போரில்; அந்தணரும் ஏழுமுனிவர்களும் தூயசித்தர்களும் மக்களும் உட்பட 88000ம்பேர்; தென்புலத்தார், பிதிர்கள், தேவர்கள், நல் ஒழுக்கங்காத்துக் கடைப்பிடிப்போர் இறந்ததாக; விஷ்ணுபுராணம் குறிப்பிடுகிறது. அகநாநூறு13: கரிகால்சோழன் செய்த வேள்வியின் விளைவுகளை:
"வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்விது ஆயினும் -தெற்குஏர்பு
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்
சாயல் இன்துணை இவற்பிரிந்து உறையின்
நோய்இன் றாக செய்பொருள்" என சூரியகுடிக் கோடைப்பொருநன்-சேத்சென்னி- தெக்கன் பண்ணிய வேள்வியின் விளைவுகளாலும் முசுகுந்த பரசுராமனின் சதியாலும் நிகழ்த்தப்பட்ட பலகொலைகளாலும் கரிகால்சோழனுக்கும் பாவைக்கும் அந்தணருக்கும்;12ஆண்டு தண்டனைவிதித்து நாடுகடத்தினர்(பரி-பா2/60-64,17/28-32,புறம்361, 366,400); நிறைகருவுற்ற பாவையைக் காக்கச் சென்றதால் கரிகாலும் பாவையும் காணாத நிலையில்; அகநாநூறு 13 பாடலின்படி:
" .. தெறல்அரு மரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும் .." என;
"இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன்" செழியனுக்குச் சோழநாட்டை ஆள்வதற்கான ஆரம் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. மேலும் இதனை மனிமேகலை- 165- 169:
மறயிருல் இரிய மன்னுயிர் ஏமுற
அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும் காறும்
செத்தும் பிறந்தும்செம்பொருள் காவா
இத்தலம் நீங்கேன் இளங்கொடி" என உணர்த்துகிறது. செழியனை அடக்கி நீக்கியபின்னர் சோழபாண்டியனாக அமர்த்தப்பட்டவனே வெற்றிவேற்செழியன்.
இராவண செழியனின் வரலாற்றை மேலும் விரிவாக அறிய விரும்புவோர் http://nhampikkai-kurudu,blogspot.com தளத்தில் காணலாம்.
Subscribe to:
Posts (Atom)